அம்மான்னா சும்மாவா?

Tuesday, October 30, 2007

தேசதுரோகிகளை என்ன செய்யலாம்?

ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படும் தேசவிரோதிகளின் பட்டியல் கீழே உள்ளது.

Admiral R.H.Tahiliani (Former Navy Chief, Chairman Transparency International, India)
S.P. Shukla (Former Finance Secy, GOI)
Shanti Bhushan (Former Law Minister)
Muchkund Dubey (Former Foreign Secretary, GOI)
Ramaswamy Iyer (Former Water Resources Secy, GOI)
E.A.S. Sarma (Former Power Secretary, GOI)
B.George Verghese (Senior Journalist)
Madhu Bhaduri (Former Ambassador, GOI)
Medha Patkar (Social Activist)
Aruna Roy (Social Activist, Former member NAC)
Arundhati Roy (Writer, Social Activist)
Arvind Kejriwal (RTI Activist, Magsaysay awardee)
Sandeep Pande (Social Activist, Magsaysay awardee)
Major Gen. S.G. Vombatkere (Retd. Mysore)
Prof. Amit Bhaduri (Former Professor of Economics, JNU)
Prof. K.M.Shrimali (Department of History, Delhi University)
Arun Kumar (Professor Economics, JNU)
Prof. Girijesh Pant (School of International Studies, JNU)
Prof. Pramod Yadava (Professor, Dean, School of Life Sciences JNU)
Prof. Sujata Patel (Dept. of Sociology, University of Pune)
Prof. Achin Vinayak (Professor, Third World Academy)
Nasir Tayabji (Director, Centre for Jawaharlal Nehru Studies, JamiaMilia Islamia)
Jean Dreze (Visiting Professor, Allahabad University)
Arshad Alam (Centre for Jawaharlal Nehru Studies, Jamia Milia Islamia)
Shailesh Gandhi (Convenor, NCPRI)
Vikram Lal (Director, Common Cause)
Shabnam Hashmi (Social Activist, ANHAD)
Dunu Roy (Social Activist and Director, Hazard Centre)
Ravi Chopra (Director, People's Science Institute)
N. Bhaskar Rao (Director, Centre for media studies)
Dr. Ajay Mehra (Director, Centre for public affairs)
Manoj Mitta (Journalist)
Sundeep Dougal (Journalist)
Ajit Bhattacharjee (Journalist)
Sudhirendra Sharma (Journalist)
Smitu Kothari (Dir. Centre for Intercultural Resources, Co-Founder Lokayan)
Himanshu Thakkar (Centre for Water Policy)
Nandini Oza (Social Activist, M.P.)
Ashish Kothari (Founder Member Kalpavriksh)
Vinod Raina (Founder Eklavya)
Rohit Prajapati (Social Activist, Baroda)
Trupti Shah (Social Activist, Baroda)
S. Srinivasan (Baroda)
Sanjay Kak (Filmmaker)
Arshad Amanullah (Documentary Filmmaker)
Nikhil Dey (Social Activist)
Ashok Rao (Secy. National Confederation of Officers Association)
Kamini Jaiswal (Lawyer)
Prashant Bhushan (Public Interest Lawyer)

ஹிந்துஸ்தானத்தை கூறு போட்டு விற்க தயங்காத இந்த தேசதுரோக சக்திகளை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மேலும் இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கபட வேண்டும் என்று 80 கோடி ஹிந்துக்களின் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

வாழ்க ஹிந்துக்கள். வீழ்க தேசதுரோகிகள்.

Monday, October 29, 2007

ஹிந்துக்களை விரட்டும் சாமுவேல்

ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களின் நிலை பரிதாபமாக உள்ளது. பாரதத்தின் ஆதி குடிமக்களாகிய ஹிந்துக்கள் கிருத்துவ மிஷினரிகளாலும், ஜிகாதிகளாலும், திராவிட திம்மிகளாலும் நாள் தோறும் பல தொல்லைகளுக்கு ஆளாகி உயிர் இழந்து வருகின்றார்கள்.

மைனாரிட்டி ஆட்சி நடக்கும் தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்றால், சாமுவேல் ஆட்சி செய்யும் ஆந்திராவில் இதை விட கொடுமையான காட்சிகள் நடை பெறுகின்றன. ஆந்திர மாநிலத்தின் பெரும் நடிகர்களில் ஸ்ரீமான் சிரஞ்சீவியும் ஒருவர். அவரின் இளைய மகள் ஒருவரை காதலித்து மணந்து கொண்டார். காதல் மணம் செய்து கொண்ட திருமகளை மிரட்டி இருக்கின்றனர் சாமுவேலின் அடியாட்கள். பயந்து நடுங்கிய அப்பாவி பெண் தன் காதல் கணவரோடு உயிர் பிழைத்து புதுதில்லிக்கு சென்றார். அங்கும் துரத்தி வந்தனர் திம்மிக்கள்.

கடைசி முயற்சியாக தங்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர். நீதிமன்றமும் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. பாதுகாப்புடன் தங்களின் வீடு திரும்பலாம் என்று இருந்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஆந்திராவில் பாதுகாப்பு வழங்க சாமுவேல் அரசு மறுத்து விட்டது. கடும் அதிர்ச்சிக்கு உள்ளான தம்பதிகள் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டனர். மேலும் இரண்டு வாரங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

ஆந்திராவில், நாடறிந்த ஒரு பெரிய நடிகரின் மகளே பாதுகாப்பாக வாழ முடியவில்லை என்கிற போது அப்பாவி பொது மக்கள் எவ்வளவு கஷ்டபடுவார்கள் என்று யோசியுங்கள். ஹிந்து விரோத கொள்கையை கடைபிடிக்கும் சாமுவேலையும் அவனின் தலைவியான மெய்னோவையும் உடனே ஆட்சியை விட்டு விரட்ட ஏற்பாடு செய்வோம். 80 கோடி ஹிந்துக்களும் இது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கை பதிவு செய்வோம்.

வாழ்க புதுமண தம்பதிகள். வீழ்க சாமுவேல்.

Friday, October 26, 2007

மாவீரன் மோடியும் அவரின் தளபதிகளும்

ஹிந்துஸ்தானத்தின் மாவீரர்களில் ஸ்ரீமான் மோடி முக்கியமான ஒருவர் என்பதை இந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். கிருத்துவ மிஷினரிகளிடம் இருந்தும், முகமதியர்களிடம் இருந்தும் ஹிந்து மதத்தை காப்பாற்ற அவரை போன்ற வீர புருஷர்கள் தேவை.

தெகல்காவாம், மறைந்து படம் பிடித்தார்களாம், எல்லோரும் சதி செய்தார்களாம். என்ன கொடுமையடா இது. ஒரு ஹிந்து ரத்தம் சிந்தினால் என்ன நடக்கும் என்று உலகிற்கு உணர்த்திய ஸ்ரீமான் மோடி மோசமானவரா?. கண்டிப்பாக இல்லை. ஹிந்துக்கள் என்றால் அடங்கி போகின்றவர்கள் என்ற கருத்தை மாற்றி எழுதிய மாவீரர் அவர். கலவரம் ஏன் ஏற்பட்டது, பிறகு என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். இவர்கள் புதிதாக எதை கண்டு பிடித்துவிட்டோம் என்று முழங்குகின்றனர் என்பது புரியவில்லை.

மாவீரன் ஸ்ரீமான் மோடியையும் அவருக்கு உற்ற தளபதிகளாக களத்தில் இறங்கி போராடிய ஸ்ரீமான் பாபு பஜ்ரங்கி, ஸ்ரீமான் மதன் சாவல். ஸ்ரீமான் மாங்கிலால் ஜெயின், ஸ்ரீமான் ஹரேஷ் பட் போன்றவர்களை நாம் ஒரு போதும் மறக்க கூடாது. 80 கோடி ஹிந்துக்களும் பெருமை அடையும் வகையில் களப்பணி ஆற்றிய மாவீரர்களை பற்றி காவியம் இயற்றுங்கள். கவிதைகள் எழுதுங்கள்.

வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.

பதிவுலக அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்: தயவுசெய்து போலி பதிவுகளை கண்டு ஏமாறவேண்டாம்.

Wednesday, October 24, 2007

அம்மாவை அவமதிக்கும் மைனாரிட்டி அரசு

தமிழகத்தில் தலையாய திம்மியான கொலைஞரின் தலைமையில் ஒரு மைனாரிட்டி அரசு தற்போது ஆட்சி புரிவது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் அம்மாவின் மீது ஒரு கொலையாளியை இந்த கயவர்கள் ஏவிவிட்டதையும் நீங்கள் அறிவீர்கள். ஸ்ரீராமரின் அருளாள் இந்த படுகொலை முயற்சியில் இருந்து அம்மா தப்பிவிட்டார். இருந்தாலும் விடாபிடியாக திம்மிகள் தொடர்ந்து கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக உள்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படுகொலை முயற்சிகளை தடுத்து நிறுத்த தமக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் முறையிட்டார் அம்மா. நீதிமன்றத்தின் கிடுக்குபுடி கேள்விகளால் அதிர்ந்து போய்விட்டனர் திம்மியின் அல்லக்கைகள். ஏன் அம்மாவிற்கு பாதுகாப்பு வழங்கபடவில்லை, ஏன் குண்டு துளைக்காத வாகனம் வழங்கவில்லை என்று அரசு வக்கீலை துளைத்து எடுத்துவிட்டார் நீதிபதி.

அதற்கு இப்படி ஒரு பதிலை அளித்துள்ளான் அரசு வக்கீல். அம்மாவிற்கு குண்டு துளைக்காத அம்பாசிட்டர் கார் கொடுத்தார்களாம். அதை அம்மா ஏற்கவில்லையாம். அடி முட்டாள்களே அம்மா என்றால் சும்மாவா? அவர்களின் தகுதி என்ன, திறமை என்ன, பாரம்பரியம் என்ன, கடந்து வந்த பாதை என்ன. உலகின் ஒரே தங்கதாரகையான நம் அம்மா ஒரு அம்பாசிட்டர் காரில் ஏறுவதா. வேண்டும் என்றே அம்மாவை அவமதித்து உள்ளது இந்த மைனாரிட்டி அரசு.

அம்மாவின் தகுதிக்கு ஏற்ப ஒரு ரோல்ஸ்ராய்ஸ், மெர்ஸிடிஸ் பென்ஸ், லிங்கன், கெடிலாக், வோல்வோ போன்ற கார்களை அளிக்காமல் பழமையான அம்பாசிட்டர் காரை அளித்த கொலைஞரின் மைனாரிட்டி அரசை 80 கோடி ஹிந்துக்களின் சார்பாக கடுமையாக கண்டிக்கின்றேன். இந்த செய்தியை கேட்டு வேதனை அடைந்த அமெரிக்க ஹிந்துக்கள் அம்மாவிற்காக ஒரு உலக தரமான கார் ஒன்றை பரிசளிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். விரைவில் இந்த கார் அம்மாவிடம் அளிக்கபடும் என்று அமெரிக்க பதிவர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

வாழ்க அம்மா. வீழ்க திம்மி.

Monday, October 22, 2007

அம்மாவின் கரத்துடன் புதிய 2 ரூபாய் நாணயம்

மத்திய அரசால் இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள புதிய 2 ரூபாய் நாணயத்தில் வளைக் கரத்தோடு இரட்டை விரல்கள் காணப்படுவதால் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். 2 ரூபாய் நாணயத்தை சேகரித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு 1 ரூபாய் நாணய அளவிலேயே 2 ரூபாய் நாணயத்தையும் மத்திய அரசு வெளியிட்டது. இதனால் வியாபாரிகள், பஸ் கண்டக்டர்கள், பொதுமக்களுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது. இரு நாணயங்களுக்கும் இடையில் வித்தியாசம் இல்லாததால் இந்தக் குழப்பம்.

இதையடுத்து இந்த இரண்டு நாணயங்களுக்கும் வித்தியாசம் இருக்கும் வகையில் புதிய நாணயங்களை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய இரண்டு ரூபாய் நாணயம் தற்போது புழக்கத்தில் வந்துள்ளது. இதில் ஒரு பக்கம் ரூ.2 என்ற எழுத்து பெரிதாக பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பக்கத்தில் ஒரு பெண் இரட்டை விரல்களைக் காட்டுவது போல உள்ளது.

இந்த நாணயங்கள் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகம் முழுவதும் அதிக அளவில் புழக்கத்திற்கு வந்துள்ளது. இதைப் பார்த்து பொதுமக்களுக்கு வித்தியாசம் தெரிகிறதோ இல்லையோ, அதிமுகவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

'அம்மா'வே இரட்டை விரல்களைக் காட்டுவது போல இருப்பதாக அவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அந்த நாணயங்களை வாங்கிக் குவிக்க ஆரம்பித்துள்ளனர். செலவழிக்காமல் வீடுகளில் பத்திரப்படுத்தியும் வருகின்றனர்.
(நன்றி - தட்ஸ்தமிழ்) நாணயத்தின் படத்தை பார்க்க இங்கே செல்லவும்.

வாழ்க அம்மா.

Sunday, October 21, 2007

இளம் ஹிந்து பிரியங்காவை விதவை ஆக்கிய சீன ஏஜண்டுகள்

பல லட்சம் வருடங்களாக பாரத மக்கள் ஒற்றுமையுடன் இருந்து வருவது சில வெளிநாடுகளுக்கு பிடிப்பதில்லை. ஹிந்துஸ்தானத்தை கூறு போட அந்த நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. அவற்றில் இருந்து பல லட்சம் கோடி ரூபாய்கள் ஆண்டுதோறும் பாரதத்திற்கு பாய்கின்றது. அந்த பணத்தை வைத்துகொண்டு கிருத்துவ மிஷினரிகளும், ஜிகாதிகளும், கம்யூனிஸ்டுகளும், திராவிட நஞ்சுக்களும் ஆங்காங்கே பிரச்சனைகளை கிளப்பி நாள்தோறும் ஹிந்துக்களுக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். தினமும் பல ஹிந்துக்கள் இவர்களின் கொடுமையால் தங்கள் உயிரை இழக்கும் பரிதாப நிலைக்கு தள்ளபடுகின்றனர்.

சீன ஏஜண்டுகளான கம்யூனிஸ்டுகள் மேற்கு வங்காளத்தில் காட்டாட்சி நடத்தி வருகின்றனர். மைனாரிட்டி ஆட்சி நடக்கும் தமிழகம் போலவே அங்கும் ஹிந்துக்கள் மீது அடக்குமுறை ஏவி விடப்படுகிறது. இளம் ஹிந்து பெண்கள் காதலிப்பதே பெரும் குற்றமாக அங்கே கருதப்படுகிறது. அதையும் மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டால், அவர்கள் அநியாயமாக பழிவாங்க படுகின்றனர்.

கொல்கத்தா நகரில் வசிந்து வந்த ஒரு இளம் ஹிந்துவான பிரியங்கா காதல் வயப்பட்டார். ஒரு ஹிந்து பெண் காதலிக்கலாமா என்று அவரை சீன ஏஜண்டுகளின் கைகூலிகள் மிரட்டினர். அந்த எதிர்ப்புகளை மீறி தன் காதலனின் கரம் பிடித்தார். அதன் பிறகாவது வாழ விட்டார்களா பிரியங்காவை? அநியாயமாக அந்த இளம் ஹிந்துவை விதவை ஆக்கிவிட்டனர் கம்யூனிஸ்ட்டுகளின் அல்லக்கைகள். கைபிடித்த கணவன் படுகொலை செய்யபட்டதை கண்டு அலறினார் பிரியங்கா, துடித்தார், வேதனையில் மூழ்கினார். என்ன செய்வது என்று தெரியாத நிலையில் பித்து பிடித்தவர் போல் ஆனார்.

இறைவன் இந்த இழிசெயலை பார்த்து கொண்டு சும்மா இருப்பாரா?. சீன ஏஜண்டுகளின் அடக்குமுறையால் துவண்டு இருந்த ஹிந்து இளையர் துள்ளி எழுந்தனர். ஆங்காங்கே "ரங் தே பஸந்தி" பாணியில் தீபங்களை ஏற்றி வழிபட்டனர். நாள் தோறும் போராடும் ஹிந்துக்களின் எண்ணிக்கை கூடியது. அதை மறைக்க கம்யூனிஸ்டுகள் எதை எதையோ செய்து பார்த்தனர். ஹிந்து மக்கள் சக்தியின் முன் அரிவாள், சுத்தியல்கள் மண்டியிடும் நிலைக்கு தள்ளபட்டன.

ஹிந்து மக்களின் எழுச்சி நீதிமன்றத்தை எட்டியது. விரைந்து செயல்பட்ட நீதிமன்றம் கம்யூனிஸ்டுகளின் கீழ் இயங்கும் காவல் துறையினரால் இந்த ஹிந்து பெண்மணிக்கு நியாயம் கிடைகாது என்று அறிந்து கொண்டது. எனவே இந்த படுகொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தது. சீன ஏஜண்டுகள் இந்த அதிரடி செயலால் கதி கலங்கி நிற்கின்றனர். காரியத்தில் இறங்கிய சிபிஐ அணி துரித விசாரணை நடத்தி வருகின்றது. இந்த படுகொலையில் சம்பந்தபட்ட அல்லக்கைகள் உடனடியாக வேறு பதவிகளுக்கு மாற்றபட்டனர். முக்கிய நிகழ்வாக இளம் ஹிந்துவான பிரியங்காவின் காதல் கணவரின் மாமனாரை ஒரு குற்றவாளியாக சேர்த்து இருக்கின்றனர்.

சீன ஏஜண்டுகளால் விதவை ஆக்கபட்ட இளம் ஹிந்துவான பிரியங்காவிற்கு நியாயம் கிடைக்க 80 கோடி ஹிந்துக்களும் துர்கா தேவியிடம் வேண்டுவோம்.

ஜெய் துர்காதேவி. ஜெய் ஸ்ரீராம்.

Saturday, October 20, 2007

மாவீரன் மோடியும் பயந்தான்கொள்ளி கருணாநிதியும்

பாரத மாதா பல மாவீரர்களயும் வீராங்கனைகளையும் பெற்று எடுத்து இருக்கின்றாள். பல லட்சம் ஆண்டு கால வரலாற்றில் ஹிந்துக்களை காக்க பல மாவீரர்கள் அவதாரம் எடுத்து உள்ளனர். அவ்வீரர்களில் முக்கியமானவர் ஸ்ரீமான் மோடி ஆவார். ஹிந்துக்களை ஜிகாதிகளிடம் இருந்து காப்பதை தன் தலையாய கடமையாக கொண்டு மோடிஸ்தானத்தில் ராஜதர்ம ஆட்சி புரிபவர் அவர்.

ஐபின் தொலைகாட்சியில் டெவில்ஸ் அட்வகேட் என்று ஒரு கேள்வி பதில் அங்கம் உள்ளது. பிரபலங்களை பேட்டி எடுத்து மடக்குவது பேட்டியாளரான கரண் தாப்பருக்கு வாடிக்கை. குதர்கமான கேள்வி கேட்பதில் அவர் மன்னர். அவரிடம் மாட்டி தவித்தவர் ஏராளம். அந்த மனிதரை சந்தித்ததில் தான் பெருமை அடையவில்லை என்று அவரின் மூக்கை முதன் முதலில் உடைத்தவர் அம்மா தான் என்பது உங்களின் நினைவில் இருக்கும் என நம்புகின்றேன்.

சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீமான் மோடி அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இசைவு தந்தார். பேட்டி துவங்கியது. கரண் தாப்பர் ஸ்ரீமான் மோடியை நோக்கி இந்த கேள்விகளை வீசினார்.

கரண் தாப்பர் : சுப்ரீம் கோர்ட் 2003ல் குஜராத் அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றது. பிறகு 2004ல் உங்களை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டு பேசியது. உங்களுக்கு கோர்ட்டிற்கும் பிரச்சனை உள்ளது போல தெரிகின்றதே?

அதற்கு சரியான பதிலடி கொடுத்தார் ஸ்ரீமான் மோடி அவர்கள். "சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் ஏதாவது குறிப்பிடபட்டு உள்ளதா" என்ற வெடியை வீசினார்.

கரண் தாப்பர்: அப்படி எதுவும் குறிப்பிடபடவில்லை. நீங்கள் சொல்வது சரிதான்.

"தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தால் அதற்கு நான் பதில் அளிப்பேன்" என்றார் மோடி.

கரண் தாப்பர்: சுப்ரீம் கோர்ட்டின் கண்டனம் ஒரு பெரிய விஷயம் இல்லையா?

யுவராஜ் சிங் மிட் விக்கெட்டில் ஸிக்சர் அடிப்பது போன்று "தீர்ப்பில் இப்படி ஏதாவது குறிப்பிடபட்டு உள்ளதா என்று சொல்லுங்கள். மக்கள் தெரிந்து கொள்ளட்டும்" என்ற ஸிக்சரை அடித்தார் ஸ்ரீமான் மோடி. அந்த அடியில் நிலை குலைந்து போனார் கரண் தாப்பர்.

உடனே பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு சிறு கலவரத்தை பற்றி கேள்விகளை வீச துவங்கினார். அந்த விஷயத்தை பற்றி நாம் எல்லோரும் அலசி, துவைத்து, காய வைத்து, அயர்ன் செய்யும் அளவிற்கு பேசி விட்டோம். அதற்கும் ஸ்ரீமான் மோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நிரூபணம் ஆகிவிட்டது. அதே நிகழ்வை பற்றி மாற்றி மாற்றி கேள்வி எழுப்பினார் கரண் தாப்பர். போடா ஜாட்டான், நீ என்ன என்னை கேள்வி கேட்பது என அரங்கத்தை விட்டு எழுந்து வீர நடை போட்டார் ஸ்ரீமான் மோடி. நாடே அதிர்ந்து விட்டது. இவ்வீர புருஷர் வாழும் காலத்தில் நாம் வாழ்கின்றோமே என்று 80 கோடி ஹிந்துக்களும் மனம் நெகிழ்ந்து போயினர்.

இந்த விஷயத்தில் கருணாநிதிக்கு என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கலாம். சமீபத்தில் மைனாரிட்டி ஆட்சி நடக்கும் தமிழகத்தில் சட்ட விரோத பந்த் ஏற்பாடு செய்யபட்டது. கயவன் கருணாநிதியும் அவனின் அல்லகைகளும் இதில் ஈடுபட்டனர். கொதித்து எழுந்த அம்மாவின் முயற்சியால் இது சட்ட விரோதம் என்று சுப்ரீம் கோர்ட் மீண்டும் ஒரு முறை அறிவித்தது. இந்த நிகழ்வுக்காக ஏன் மைனாரிட்டி அரசை கலைக்க கூடாது என்று கேள்வி எழுப்பியது. உடனே நடுங்கிய கருணாநிதி, அய்யோ நான் நீதிபதிகளை மதிப்பவன், நீதியை மதிப்பவன் என்று அலறி அடித்து கொண்டு தலைமை செயலகத்தை நோக்கி ஓடினான்.

இந்த இரு நிகழ்வுகளையும் ஒப்பிட்டு பாருங்கள். சுப்ரீம் கோர்ட் வாய் வழியே சொல்லும் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை என்று முழங்கிய வீர புருஷர் ஸ்ரீமான் மோடி எங்கே, வாய் வழி சொல்லை கேட்டு பயந்து ஓடிய கருணாநிதி எங்கே. மாவீரன் ஸ்ரீமான் மோடி மீண்டும் மோடிஸ்தானத்தின் முதல்வர் பதவியில் அமரவேண்டி 80 கோடி ஹிந்துக்களும் ஸ்ரீராமரிடம் வேண்டுவோம்.

வாழ்க மாவீரன் மோடி. வீழ்க பயந்தான்கொள்ளி திம்மி.

Friday, October 19, 2007

அம்மாவின் தீர்க்கதரிசனம்

ஹிந்துஸ்தானத்தின் பல லட்சம் ஆண்டு கால வரலாற்றில் பல ஆண்டுகள் பொற்கால ஆட்சி என்று குறிப்பிடபடுகின்றது. அவற்றில் வாழும் வரலாறாய் நம் முன்னே காட்சி அளித்தவை ஸ்ரீமான் மோடி அவர்களின் ராஜதர்ம ஆட்சியும், புரட்சிதலைவி அம்மாவின் தாயுள்ள ஆட்சியும் ஆகும்.

அம்மா அவர்கள் நாட்டு மக்களின் நலன் கருதி தாயுள்ளத்தோடு பொது நல சேவை ஆற்றி வந்தார். அவரின் ஆட்சிக்கு இடர் விளைவிக்க எண்ணிய சிலரை செலக்டிவ் அம்னீசியா என்ற வார்த்தையின் மூலம் தாக்கி அழித்தார் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இந்த அஸ்திரத்தை பாரத சரித்திரத்தில் முதன் முதலாக பிரயோகித்தவர் அம்மாதான். அவருக்கு எத்தகயை தீர்க்கதரிசனம் இருந்தது என்று நேற்று நடந்த நிகழ்வுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ரோம ராஜ்ஜியம் நடத்தி வரும் மெய்னோவின் முக்கிய தலையாட்டி பொம்மையான மன்மோகன் சிங்கை ஹிந்துஸ்தானத்தின் பாரம்பரிய கட்சியான பா.ஜ.க கடுமையாக தாக்கி உள்ளது. அதற்கு அவர்கள் பயன்படுத்திய அஸ்திரம் செலக்டிவ் அம்னீசியா. அம்மா அவர்கள் எடுத்தாண்ட அந்த அஸ்திரத்தை இன்று பா.ஜ.கவும் உபயோகபடுத்தி உள்ளதன் மூலம் அம்மாவின் பெருமையை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

வாழ்க அம்மா. வீழ்க திம்மிக்கள்.

Wednesday, October 17, 2007

அம்மாவை காத்த ஸ்ரீராமர்

பாரதத்தில் உள்ள ஹிந்துக்கள் மெய்னோவின் ஆட்சியால் கடும் துயருக்கு உள்ளாகின்றனர் என்ற உண்மை எல்லோரும் அறிந்ததே. தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் கொலைஞரின் கூலிபடை பல ஹிந்துக்களை நாள்தோறும் கொன்றுவருகின்றது. கொலையுண்ட ஹிந்துக்களின் பட்டியலைபோட பல பதிவுகள் தேவை. பாசிச முகவின் ரவுடிகள் உச்சகட்டமாக அம்மாவின் உயிரையே பறிக்க முயற்சி எடுத்து உள்ளனர்.

உலகமே வியந்து பாராட்டும் அளவிற்கு தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தியவர் தங்கதாரகையான அம்மா அவர்கள். எங்கே அவர் ஆட்சிக்கு வந்து விட்டால் தன் புத்திரனுக்கு அரசாளும் உரிமை கிடைக்காதே என்ற நினைப்பில் தன் கூலிபடையை அம்மாவின் மீது ஏவிவிட்டுள்ளார் இந்த திம்மி. அம்மாவின் அதிரடி அறிக்கை பாணங்களை தாங்க முடியாத திம்மி இப்படி ஒரு கேவலமான செய்கையை செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை.

இந்த படுகொலை முயற்சியில் இருந்து தப்பித்தது தெய்வ செயல் என்று அம்மா பேட்டி அளித்து உள்ளார். ஸ்ரீராம சேதுவை காப்பதில் முன் நிற்பவர் ஜான்சி ராணியாகிய அம்மாதான் என்பது பல கோடி ஹிந்துக்கள் அறிந்த உண்மை. தமிழர் திருமகனான ஸ்ரீராமர் திருவள்ளுவரின் குறள்களை நன்கு அறிந்தவர். செய்நன்றி அறிதல் என்ற அதிகாரத்தினை அவர் என்றுமே மறப்பதில்லை. தான் கட்டிய பாலத்தை காத்து நிற்கும் அம்மாவிற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று காத்திருந்தார். இப்படி ஒர் ஆபத்து எழுந்த போது அதை தன் திருவருளால் தடுத்து நிறுத்திவிட்டார்.

அம்மாவின் மீது ஏவி விடப்பட்ட இந்த படுகொலை முயற்சி 80 கோடி ஹிந்துக்களையும் கவலை அடைய வைத்து விட்டது. செய்தி அறிந்த முதல் என்னால் எந்த செயலையும் செய்ய முடியவில்லை. தலைமை அலுவலகம் சென்று அம்மாவை தரிசித்த பின்புதான் என் மனகவலை சற்று குறைந்துள்ளது. பதிவுலக நண்பர்களே ஸ்ரீராமருக்கு அம்மாவும், அம்மாவிற்கு ஸ்ரீராமரும் துணையாக இருக்கும் வரையில் எந்த சதிகாரனாலும் அம்மாவை நெருங்க முடியாது.

இந்த படுகொலை முயற்சிக்கு தார்மீக பொறுப்பு ஏற்று மைனாரிட்டி ஆட்சி புரியும் கயவனும் அவனுக்கு பக்க துணையாக விளங்கும் மெய்னோவும் மாநில, மத்திய ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என்று 80 கோடி ஹிந்துக்களின் சார்பாக கேட்டுகொள்கின்றேன். அவர்கள் ஆட்சியில் இருந்து தாமாக விலகாவிட்டால் சுப்ரீம் கோர்டில் முறையிட்டு ஹிந்துவிரோத அரசுகளை உடனடியாக கலைக்க முயற்சிகளை மேற்கொள்வோம்.

வாழ்க அம்மா. வீழ்க திம்மிகள்.

Tuesday, October 16, 2007

5 பவுனுக்கு விலைபோன சூப்பர் ஸ்டார்

ஹிந்துஸ்தானத்தில் பலவிதமான கலைதுறை வல்லுனர்கள் இருக்கின்றனர். அவர்களை பாராட்டி ஊக்கபடுத்துவதற்காக அரசாங்கம் பல விருதுகளை அவர்களுக்கு வழங்கி கவுரவிக்கும். நல்ல பயிர்களின் இடையே சில சமயம் மோசமான புற்களும் முளைப்பது போல தகுதி இல்லா சிலருக்கு நல்ல நடிகர் விருது கிடைப்பது உண்டு. அதுபோல இம்முறை போர்வைக்குள் புகுந்து கொண்டு இரட்டை அர்த்த வசனம் பேசியவருக்கு சிறந்த நடிகர் பட்டம் கொலைஞரால் அளிக்கபட்டு உள்ளது.

விருது வழங்கும் விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் உதித்த வார்த்தைகளை பாருங்கள்.

ஒரு இந்திய குடிமகன் என்ற முறையில் நான் இங்கே ஒரு விஷயத்தை பேச விரும்புகிறேன். யாரும் தப்பாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

சேது சமுத்திர திட்டம் பற்றி பலவிதமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அதனால் லாபமாக இருக்குமா, ஆழம் இருக்குமா? என்றெல்லாம் கேட்கிறார்கள். செண்டிமெண்ட் ஆக ஒரு விஷயம் பூதாகரமாக பேசப்படுகிறது. அதன் சீரியஸ்னஸ் இன்னும் தமிழ்நாட்டுக்கு தெரியவில்லை. வட மாநிலங்களில் உள்ளவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த விஷயத்தை ஊதி, நெருப்பு மூட்டி, குளிர்காயப்பார்க்கிறார்கள். நமக்கு காரியம் நடக்கணும். வட இந்தியாவில் உள்ள தலைவர்கள் எல்லோரும் கலைஞரின் நண்பர்கள்தான். அவர்களிடம் பேசி, கலைஞர் இதற்கு ஒரு நல்ல தீர்வுகாண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


இந்த நடிகர் ஒரு சிறந்த ஆன்மீகவாதியாக கருதபடுபவர். 2000 ஆண்டுகளுக்கு முன் பிறந்த ஸ்ரீ பாபாஜியை இமயமலையில் சந்திப்பவர், அவருடன் நடந்து செல்பவர் என்று பல்வேறு செய்திகள் பத்திரிக்கைகளில் வந்துள்ளது. இப்படி ஆன்மீகவாதியாக விளங்கும் ஒருவர் சேதுசமுத்திர திட்டம் என்று சொல்லலாமா. ஸ்ரீராம சேது என்று சொல்வதில் என்ன தயக்கம்?

இந்த விஷயத்தை ஊதி, குளிர் காய நினைக்கின்றார்களாம். என்ன ஆணவம் பிடித்த பேச்சு. உலகம் எங்கும் நிறைந்து இருக்கும் ஸ்ரீராம பக்தர்கள் ஸ்ரீராம சேதுவை காப்பதற்காக தங்கள் உயிரையும் கொடுக்க இருக்கின்றனர். அப்படி இருக்கையில் இவர் இப்படி பேசலாமா?. மேலும் நமக்கு காரியம் நடக்கணும் என்று உளறி உள்ளார். காரியம் நடக்கணும் என்றால் ஸ்ரீராம சேதுவை இடிக்க வேண்டுமே. இடித்து விடலாமா?

இவர் அரசியல் தெரியாத சூன்யம் என்று ஏற்கனவே நிரூபணம் ஆகிவிட்டது. இப்போது ஆன்மீகமும் தெரியாத முழு ஞானசூன்யம் என்பதை இவர் வாயாலே நிரூபித்து விட்டார். ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் கொடுத்த ரசிகனை பற்றி பாடிய ரஜினி கேவலம் 5 பவுனுக்காக ஸ்ரீராம சேதுவை இடிக்கலாம் என்று பேசி இருப்பது 80 கோடி ஹிந்துக்களின் மனத்தை புண்படுத்திவிட்டது. உலகம் எங்கும் இருக்கும் ஹிந்துக்கள் அனைவரும் இந்த போலி ஆன்மீகவாதிக்கு நல்ல புத்தியை அளிக்க ஸ்ரீராமரிடம் வேண்டுவோம்.

ஸ்ரீராம சேதுவை காப்போம். போலி ஆன்மீகவாதிகளை களை எடுப்போம்.

Sunday, October 14, 2007

ஒர் அவசர வேண்டுகோள்

வடோடராவில் ஸ்ரீமான் சைமண்ட்ஸுக்கு ஏற்பட்ட நிகழ்வுகளுக்கு காரணம் என்ன என்பதை இங்கே விளக்கியுள்ளேன். ஆனால் அவுஸ்திரேலிய பத்திரிக்கைகள் அதை ஒரு நிறவெறி நிகழ்வு என்று கூப்பாடு போடுகின்றன. ஸ்ரீஆஞ்சநேயரை தொழும் பக்தர்கள் இதனால் மனம் புண்பட்டு உள்ளனர். ஸ்ரீஆஞ்சநேயரை அவுஸ்திரேலிய அணியினர் புரிந்து கொள்ளவில்லையே என்ற கோபத்தால் ஸ்ரீஜடாயு அவர்கள் அவுஸ்திரேலிய அணியினர் பயணம் செய்த விமானத்தை தாக்கியுள்ளதாக சற்றுமுன் தகவல் வந்துள்ளது.

என்ன இருந்தாலும் அவுஸ்திரேலிய அணியினர் நம் விருந்தினர். அவர்களை பாதுகாப்போடு திருப்பி அனுப்புவது நம் பண்பாடு. எனவே 80 கோடி ஹிந்துக்களும் ஸ்ரீஜடாயு அவர்களின் கோபத்தை தணிக்கும் வகையில் அங்காங்கே அவருக்கு படையல் வையுங்கள்.

ஜெய் ஸ்ரீஜடாயு. ஜெய் ஸ்ரீராம்.

அப்பாவி ஹிந்துக்களை வேட்டையாடும் மெய்னோ

ஹிந்துஸ்தானத்தில் நாள்தோறும் பல இடங்களில் அப்பாவி ஹிந்துக்கள் கொலை செய்யபட்டு வருவது உங்களுக்கு தெரியும். ஹிந்துக்களின் மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்பதற்காக கிருத்துவ மிஷினரிகளும், ஜிகாதிகளும், முகமதியர்களும் நாள் தோறும் ஹிந்துக்களை படுகொலை செய்கின்றனர். இந்த கொலையாளிகளுக்கு பக்க பலமாக இருப்பது மொம்மை பிரதமரை வைத்து விளையாடும் ரோம ராணி மெய்னோவும் தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் கொலைஞரும் ஆவர்.

சமீபத்தில் பாசிச முகவின் ரவுடிகள் முருகபெருமானின் திருதலங்களில் ஒன்றான பழனியின் உச்சிக்கு செல்ல பயன்படுத்தும் ரோப் காரின் கம்பி வடத்தை அறுத்து பல பக்தர்களை பரலோகம் அனுப்பினர். அந்த கொடுமையான படுகொலையின் விளைவாக தமிழகத்தில் பக்தர்கள் கோவிலுக்கு செல்லவே பயபடும் நிலை உருவாகி உள்ளது. கயவன் கருணாநிதி போட்டு கொடுத்த பாதையில் ரோம ராணி மெய்னோ பீடு நடை போட துவங்கிவிட்டார்.

பாரதத்தில் உள்ள குஜராத் மாநிலமானது ஸ்ரீமான் மோடியின் ராஜதர்ம ஆட்சியின் காரணமாக மோடிஸ்தானம் என்று அழைக்கபடுவது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஸ்ரீமான் மோடியை மட்டுமே முதல்வராக தேர்வு செய்வோம் என்று அம்மாநில ஹிந்துக்கள் சபதம் எடுத்து உள்ளனர். மோடிஸ்தானத்தில் வரும் டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெற இருக்கின்றது. தேர்தலில் தன் கட்சி படுதோல்வி அடையும் என்று தெரிந்து கொண்ட மெய்னோ அப்பாவி ஹிந்துக்களின் மீது தன் வேட்டையை ஆரம்பித்து விட்டார்.

மோடிஸ்தானத்தின் பவகத் மலையின் மீது இருக்கும் மகாகாளியின் கோவில் திருவிழாவிற்கு வந்த அப்பாவி ஹிந்துக்கள் 11 பேர் படுகொலை செய்யபட்டு இருக்கின்றனர். மேலும் பல ஆயிரம் ஹிந்துக்கள் படுகாயம் அடைந்து உள்ளனர். எப்படியாவது தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக இப்படி நடந்து கொண்ட மத்திய அரசை 80 கோடி ஹிந்துக்களின் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன்.

வாழ்க ஹிந்துக்கள். வீழ்க மெய்னோ.

Friday, October 12, 2007

ராமாயணம் தெரியாத அவுஸ்திரேலியர்கள்

பாரதத்தின் கல்வி முறை பல லட்சம் ஆண்டுகள் பழமையானது. ஹிந்துஸ்தானத்தில் உள்ள மாணவர்கள் நம் நாட்டின் வரலாற்றை நல்ல முறையில் கற்பதோடு பிற நாட்டு வரலாற்றையும் கற்று வருகின்றனர். அதனால்தான் உலக நாடுகளில் இருந்து மேல்படிப்பிற்காக பல கோடி மாணவர்கள் நம் நாட்டிற்கு ஆண்டுதோறும் வருகை தருகின்றனர்.

பாரதத்தின் வரலாற்றில் பல முக்கிய காலங்கள் உள்ளன. அவற்றில் அதிமுக்கியமான ஒன்று திரேதா யுகத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள். தமிழர்கள் தன் வரலாற்றை பதிவு செய்வதில்லை என்று பதிவுலகில் பலர் கூறி வருகின்றனர். ஆனால் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வசித்து வந்த தமிழர் திருமகனான ஸ்ரீராமரின் வரலாறு ஆதாரபூர்வமாக பதிவு செய்யபட்டு இருக்கிறது. அந்த நிகழ்வுகளை பற்றி பாரதத்தில் மட்டும் அல்லாமல் கிழக்கு திசைகளில் உள்ள பல நாடுகளிலும் ஆய்வுகள் செய்யபட்டு ஆதாரபூர்வமாக நிரூபிக்கபட்டுவிட்டன. அதன் பிறகு விழித்துகொண்ட மேற்கு நாடுகளும் ராமாயண காலத்தை ஆய்வு செய்தன. பல ஆய்வுகளை மேற்கொண்ட நாஸாவும் ஸ்ரீராமர் எழுப்பிய ஸ்ரீராம சேதுவை உலகின் பழமையான கடல் பாலம் என்று ஒப்புகொண்டுவிட்டது.

இவ்வாறாக எட்டு திக்குகளிலும் பரவி வரும் வரலாறு ஒரு சிறு தீவாக இருக்கும் அவுஸ்திரேலியாவை அடையாதது பெரும் வியப்பான செய்தி. ஸ்ரீராமரின் வரலாற்றை அவுஸ்திரேலியர்கள் அறிந்திருப்பின் அவர்கள் கீழ்கண்ட புகாரை அளித்திருக்கமாட்டார்கள் என்பது திண்ணம்.

வடோடராவில் நேற்று நடந்த இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 5வது ஒரு நாள் போட்டியின்போது இந்தியா பேட்டிங் செய்தபோது, சைமண்ட்ஸ் பவுண்டரி பகுதியில் பீல்டிங் செய்தார். அப்போது ரசிகர்களில் சிலர் சைமண்ட்ஸைப் பார்த்து குரங்கு போல பாவனை செய்து கிண்டலடித்ததாக ஆஸ்திரேலிய அணியின் மீடியா மேலாளர் பிலிப் போப் குற்றம் சாட்டியுள்ளார்.


இது ஒரு தவறான செய்கை அல்ல என்பது அனைவரும் அறிந்த உண்மை. ராமாயணத்தை அறியாத காரணத்தினால் இந்த புகார் எழுந்துள்ளது என்பது 80 கோடி ஹிந்துக்களுக்கும் தெரியும். உலகில் இருக்கும் சில திம்மிக்களுக்கு இதை பற்றிய ஒரு விளக்கத்தை கொடுக்க நினைக்கின்றேன்.

முதலாவதாக ஆட்டம் நிகழ்ந்த இடம் ஸ்ரீமான் மோடி அவர்கள் ராஜதர்மத்துடன் நீதி பரிபாலிக்கும் ஹிந்துஸ்தானத்தின் புண்ணிய இடங்களில் ஒன்றான மோடிஸ்தானம் ஆகும். அவரின் நீதி வழுவா ஆட்சியில் மகிழ்ந்து இருக்கும் ஹிந்துக்கள் அனைவரும் எல்லா நேரங்களிலும் ஸ்ரீராமரையும், அவருக்கு பிரதம சீடராக விளங்கி வந்த ஸ்ரீஆஞ்சநேயரை பற்றியும் நினைவில் வைத்து இருப்பவர். சில நேரங்களில் அவர்கள் ஸ்ரீராமரை மறந்து இருப்பது உண்டு. தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் திம்மியின் நாவில் இருந்து வெளிபடும் விஷவார்த்தைகளால் அந்த மயக்கம் தெளிந்து எல்லா ஹிந்துக்களும் மீண்டும் ஸ்ரீராமரை வணங்க தொடங்கி விடுவார்கள். இப்போது அகில உலகமே பற்றி எரியும் விஷயமான ஸ்ரீராம சேதுவின் விளைவாக 80 கோடி ஹிந்துக்களும் சதா சர்வ காலமும் ஸ்ரீராமரை பற்றியே யோசித்து வருகின்றனர்.

அடுத்ததாக ஸ்ரீமான் சைமண்ட்ஸ் அவர்களை பற்றி பார்போம். ஸ்ரீமான் சைமண்ட்ஸ் அவர்கள் அவுஸ்திரேலிய அணியின் முக்கிய ஆட்டகாரர். அணியின் தலைவராக விளங்கும் ஸ்ரீமான் பாண்டிங் அவர்களின் பிரதம சீடராகவும் இருந்து வருகின்றார். ஸ்ரீமான் சைமண்ட்ஸ் அவர்களின் செய்கைகள் அனைத்தும் ஹிந்துக்களின் மனத்தில் ஸ்ரீஆஞ்சநேயரின் உருவத்தையும் செய்கைகளையும் நினைவு படுத்துவதாக இருக்கின்றது என்று நான் நினைக்கின்றேன்.

ஸ்ரீஆஞ்சநேயர் இக்கட்டான சூழ்நிலையில் சஞ்சீவி பர்வதத்தினை எடுத்து வந்து ஸ்ரீராமரையும் அவரின் சேனையையும் காப்பாற்றியதை போல அவுஸ்திரேலிய அணி இக்கட்டில் மாட்டிகொள்ளும் போது ஸ்ரீமான் சைமண்ட்ஸ் அவர்கள் தன் பிரமாதமான ஆட்டத்தின் மூலம் அணிக்கு வெற்றி வாகையை அளித்து வருபவர். மேலும் ஸ்ரீமான் சைமண்ட்ஸ் அவர்கள் எப்போதும் தன் முகத்தில் வெள்ளை நிறத்தில் பூச்சு வேலை செய்து இருப்பார். அது ஹிந்துக்களின் கண்களுக்கு நாமகட்டியினை குழைத்து தடவியது போல் தெரிந்து இருக்கின்றது. எனவே அவர் ஸ்ரீஆஞ்சநேயரின் மறுபிறப்பு என்று நினைத்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

எனவே ஆட்டம் நடைபெற்ற திடலில் இருந்தவர்களின் செய்கைகள் அனைத்தும் அவரை போற்றும் விதமாகதான் செய்யபட்டது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இந்த குழப்பத்தினை தீர்த்து வைக்க டாக்டர் ஸ்ரீவேதாந்தி அவர்கள் அவுஸ்திரேலிய அணியை சந்தித்து ராமாயணத்தை பற்றி ஒரு விளக்க உரை ஆற்ற இருப்பதாக புதுதில்லி தகவல்கள் கூறுகின்றன.

இதற்கு இடையே கேன்பராவில் இருக்கும் அவுஸ்திரேலிய கேப்பிடல் டெரிடரியின் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கினை பதிவு செய்ய போவதாக ஸ்ரீமான் சுப்பிரமணிய சுவாமி அவர்கள் பேட்டி அளித்துள்ளார். ஸ்ரீராமர் சீதாதேவியுடன் வனவாசம் சென்ற இடம் அவுஸ்திரேலியாதான் என்று தம்மிடம் அசைக்க முடியாத ஆதாரம் இருப்பதாக அவர் தெரிவித்து உள்ளார். துள்ளி குதித்து ஓடும் கங்காரு என்ற விலங்கினத்தைதான் ஸ்ரீவால்மீகி அவர்கள் மாயமான் என்று குறிப்பிட்டதாக அவர் கூறினார். ஸ்ரீராமர் அவுஸ்திரேலியாவிற்கு வனவாசம் செல்லும் வழியில் குறுக்கிட்ட சமுத்திரங்களை கடக்க அமைத்த பாலம்தான் அவுஸ்திரேலிய கடற்கரை ஓரம் தென்படும் கிரேட் பேரியர் ரீப் என்பதாகும் என்றும் அவர் சொல்லி உள்ளார்.

ஜெய் ஸ்ரீஆஞ்சநேயர். ஜெய் ஸ்ரீராம்.

Wednesday, October 10, 2007

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்

ஹிந்துஸ்தானத்தின் நீதி பரிபாலிக்கும் தன்மை உலக புகழ் வாய்ந்தது. தீர்ப்புகள் எப்படி வழங்கபட வேண்டும் என்று அகில உலகிற்கும் அறிவுரை கூறும் உன்னத நூல் மனு நீதி சாஸ்திரம் ஆகும். நமது புராணங்களிலும், வேதங்களிலும் நம் நீதிமான்கள் நீதி வழங்கும் காட்சிகள் பல இடம் பெற்று உள்ளன.

பாரதத்தில் பல் வகையான நீதிமன்றங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு எல்லாம் தலையாய அமைப்பு உச்ச நீதிமன்றம் என்று சொல்லபடும் சுப்ரீம் கோர்ட் ஆகும். இந்த நீதிமன்றத்தில் பணி ஆற்ற நமது நாட்டின் தலை சிறந்த நீதிபதிகளை அவர்களின் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்து வருகின்றனர். இந்த வழக்கத்தில் கிருத்துவ மிஷினரிகள் புகுத்திய ஜாதி என்ற ஒன்றை புகுத்த வேண்டும் என்று தமிழக திம்மிக்கள் கூப்பாடு போட்டு வருகின்றனர்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கடமை தவறாதவர்கள். தம் நண்பர்கள் மற்றும் சுற்றத்தார் மீது குற்றம் சாட்டபடினும் அதை விசாரித்து நீதி வழுவாமல் தீர்ப்பு வழங்கும் பெருமகன்கள். தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் கொலைஞர் சுப்ரீம் கோர்ட் ஆணையை மீறியதற்காக சமீபத்தில் கடுமையாக கண்டிக்கபட்டார். ஸ்ரீமான் அரவிந்தன் அவர்கள் கூட இதை பற்றி ஒரு அழகான கருத்துபடம் வெளியிட்டு உள்ளார். வழக்கம் போல திம்மிக்கள் இந்த கண்டனத்தை வேறு விதமாக சித்தரிக்கின்றனர். கருணாநிதி சூத்திரன், அதனால்தான் நீதிபதி இப்படி கருத்து சொல்லி உள்ளார் என்று பொய் பிரச்சாரம் செய்கின்றனர். சில பதிவர்கள் உடனே சட்டை, பூணூல், நெளியுது, தெரியுது என்று வாய்க்கு வந்தபடி எழுதி வருகின்றனர். இந்த பதிவுகள் எல்லாம் பிரதி எடுக்கபட்டு ஸ்ரீமான் டிராபிக் ராமசாமியிடம் சேர்க்கபட்டு விட்டது. விரைவில் அவர் இந்த பதிவர்களின் மீது வழக்கு ஒன்றை தொடர இருக்கிறார் என்று கழுகார் தகவல் அளித்து உள்ளார்.

இந்த திம்மிக்களின் வாயை அடைக்க ஒரு செய்தி வந்துள்ளது. இதை சற்று படியுங்கள்.

மாயாவதியை விசாரிக்கும் படி கவர்னருக்கு உத்தரவிட எங்களுக்கு அதிகார வரம்பு இல்லை. இதுவரை நடந்த விசாரணை அறிக்கையை சி.பி.ஐ.,யின் விசாரணை கோர்ட்டில் தாக்கல் செய்யட்டும். மாயாவதி மீது குற்றம் இருக்கிறதா என்பது குறித்து விசாரணை கோர்ட் முடிவு செய்யட்டும்' என்று கூறி, இவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. (நன்றி - தினமலர்)


செல்வி மாயாவதியும் ஒரு மாநில முதல்வர். அவர் தாழ்த்தபட்ட இனத்தை சேர்ந்தவர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அப்படிபட்ட ஒருவர் மீது வந்த வழக்கை தீர விசாரித்து கவர்னருக்கு உத்தரவிட எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று இந்த நீதிபதிகள் சொல்லி விட்டார்கள். எனவே நீதி "ஜாதி" பார்த்து வருவது இல்லை என்பது நன்றாக விளங்குகிறது. இனிமேலாவது இந்த திம்மிக்கள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை பற்றி விமர்சனம் செய்யாமல் இருப்பார்கள் என நம்புவோம்.

வாழ்க ஸ்ரீமான் அகர்வால். ஜெய் ஸ்ரீராம்.

Saturday, October 06, 2007

சோவா? சோமாறியா?

எனது அருமை பதிவர்களே, நான் ஸ்ரீமான் சோ அவர்களை பற்றி இப்படி ஒரு பதிவை எழுதும் நிலைக்கு தள்ளபட்டுவிட்டேன். அதற்காக வேதனைபடுகின்றேன். அதற்கு முழு காரணம் ஸ்ரீமான் சோ அவர்கள்தான்.

ஹிந்துஸ்தானம் காலம் காலமாய் பல படை எடுப்புகளை சந்தித்து வந்துள்ளது. அலக்ஸாண்டர் பாரதத்திற்குள் நுழைய எண்ணி படை எடுத்து தோல்விகண்டு புறமுதுகிட்டு ஓடியது நாம் அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் கிருத்துவ மிஷினரிகள் அதை அப்படியே மாற்றி எழுதிவிட்டனர். பிறகு வடமேற்கில் இருந்து பல பிரிவினர் நம் மீது படை எடுத்தனர். சில காலம் அவர்களிடம் அடிமைபட்டு கிடந்த நம் தாயை சத்திரபதி சிவாஜி போன்ற வீர புருஷர்கள் மீட்டனர் என்பது வரலாறு.

பாரதத்தை சில ஆண்டுகள் ஆட்சி செய்த முகமதியர்கள் நம் பாரம்பரிய சின்னங்களை பல இடங்களில் அபகரித்து விட்டனர். நம் வழிபாட்டு தலமான தாஜ்மகால் அவர்களின் சமாதியாக மாற்றபட்டது. ஸ்ரீராமர் பிறந்த இடமான அயோத்தியில் அவரின் கோவில் ஒரு மசூதியாக மாறியது. அதுபோல் காசியிலும், மதுராவிலும் கோவில்கள் மசூதிகளாக மாறின. அந்த இடங்களை மீட்டு எடுக்கும் ஒரு புனித காரியத்தை இந்தியாவின் இரும்பு மனிதர் என்று எல்லோராலும் அழைக்கபடும் ஸ்ரீமான் அத்வானி அவர்கள் ஆரம்பித்து வைத்தார். நம் இனத்தின் மீது, நம் தாயின் மீது, நம் மதத்தின் மீது ஏற்படுத்தபட்ட கறையினை போக்கும் இப்புனித பணியில் பல கோடி ஹிந்துக்கள் பங்கு பெற்றனர்.

நாடு முழுவதும் பெரிய புரட்சி வெடித்தது. பல ஆண்டு காலமாய் ஒரு களங்க சின்னமாய் விளங்கிய மசூதி இடித்து தரைமட்டமாய் ஆனது. அந்த கரசேவையில் பல்லாயிரம் வீர ஹிந்துக்கள் தங்களின் இன்னுயிரை இழந்தனர். பல லட்சம் ஹிந்துக்கள் காயம் அடைந்தனர். ஒரு வழியாக நம் பாரதத்தாயின் மீது விழுந்த ஒரு சிறு கறை அகற்றபட்டது. உலகம் முழுவதும் பரவி இருக்கும் பல்லாயிரம் கோடி ஹிந்துக்கள் டிசம்பர் ஆறாம் நாளை ஒரு புனித நாளாக எண்ணி ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

அப்படி பட்ட ஒரு புனித சேவையை நிகழ்த்திய பல வீர ஹிந்துக்களை "அராஜக கூட்டம்" என்று சொல்கிறார் ஸ்ரீமான் சோ அவர்கள். ஹிந்துக்கள் என்றாலே அடங்கி போகின்றவர் என்று இருந்த நிலை மாறி எங்களால் அடக்கவும் முடியும் என்று நிரூபித்த நிகழ்வு அது. அவ்வீர ஹிந்துக்களை பற்றி நாடு முழுவதும் பல காவியங்கள் இயற்றபட்டன. நம் தாயின் மீது விழுந்த கறையை துடைத்து எறிந்த அவ்வீர புருஷர்களின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு வைத்து மகிழ்ந்தனர் நம் தாய்மார்கள். அப்படிபட்ட வீரர்கள் உங்களுக்கு ஒரு அராஜக கூட்டமா சோ அவர்களே?

தன் உயிரை துச்சமென மதித்து அந்த கரசேவையில் ஈடுபட்ட ஸ்ரீமான் அத்வானி யார். அதன் முன் வரிசையில் இருந்து ஊக்கபடுத்திய ஸ்ரீமான் ஜோஷி யார். மத்திய மாநில அரசுகளின் அடக்குமுறையில் சோர்ந்து விழுந்த வீரர்களை தன் கர்ஜனை குரலால் தட்டி எழுப்பிய வீரசாதுவான ஸ்ரீ உமா பாரதி யார். கரசேவையை வரவேற்று பேசிய உலகின் ஒரே தங்கதாரகையான எங்கள் அம்மா யார். இவர்கள் எல்லாம் அராஜக கூட்டமா? சொல்லுங்கள் சோ அவர்களே. உங்களுக்கு மத்திய நாடாளமன்றத்தில் ஒரு எம்.பி பதவியை கொடுத்து அழகு பார்த்த இவர்கள் அராஜக கூட்டமா?

நீங்கள் ஸ்ரீராம சேதுவிற்காக போராடலாம. முழு துக்ளக் பத்திரிக்கையையும் அதற்கு பயன்படுத்தலாம். ஏன் சிறபபு இதழ்கள் கூட வெளியிடலாம். ஆனால் இப்படி உண்ட வீட்டிற்கு துரோகம் செய்ய வேண்டாம் என்று 80 கோடி ஹிந்துக்களின் சார்பாக வேண்டி கேட்டுகொள்கின்றேன். நம் தாயின் மீது விழுந்த கறையை போக்கிவிட்டோம் என்று முழங்கிய அந்த வீர ஹிந்துக்கள் எங்கே, அது ஒரு அராஜக கூட்டம் என்று சொல்லும் நீங்கள் எங்கே. அகில உலக வரலாற்றை மாற்றி எழுதிய ஒரு வீர செயலை தயவு செய்து கொச்சைபடுத்த வேண்டாம்.

ஹிந்துக்களை தினமும் தொல்லை படுத்தி வரும் மைனாரிட்டி ஆட்சி புரியும் கயவனை கூட ஒரு வகையில் மன்னிக்கலாம். உங்களை போன்ற சோமாறிகளை ஒரு போதும் மன்னிக்ககூடாது.

வாழ்க கரசேவையாளர்கள். வீழ்க சோமாறி.

குமுதம் இதழில் வந்த பேட்டியில் இருந்து

‘ராமர் பாலம் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் அதை இடிக்கக்கூடாது என்கிறீர்கள். நானூறு வருட புராதனச் சின்னமான பாபர் மசூதியை இடிக்கிறீர்கள்’ என்று எதிர்த்தரப்பு கேட்பதில் நியாயமிருக்கிறதே?
‘‘பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு நான் கடும் கண்டனம் தெரிவித்தேன். ஆனால் அந்த இடிப்பிற்கும், இப்போது ராமர் பாலத்தை இடிக்கத் திட்டமிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. பாபர் மசூதியை இடித்தது ஒரு அராஜக கூட்டம். ஆனால் ராமர் பாலத்தை இடிக்க முனைகிறது மத்திய அரசு. அந்தக் கூட்டம் செய்தது குற்றம். இந்த அரசு செய்ய முனைவது அரசியல் சட்டத்திற்கு விரோதமான, மதச் சார்பின்மைக்கு எதி ரான செயல்!’’

Thursday, October 04, 2007

ஊழலை ஒழிக்க வந்த உத்தமன்

தமிழகத்தில் அரிதாரம் பூசிய ஒரு புதிய திம்மி அவதாரம் எடுத்து இருப்பதை உங்களுக்கு பல முறை நினைவு படுத்தி இருக்கின்றேன். அந்த திருடனின் புதிய செயலை பாருங்கள். இவன் எல்லாம் ஊழலை ஒழிக்க பிறந்தவனாம். தெரு முனைகளில் பிதற்றி கொண்டு திரிகின்றான்.


கட்சி நடத்துறது எவ்வளவு கஷ்டம்ன்னு இப்ப தான் தெரிஞ்சிகிட்டாங்க வே...'' என்று அடுத்த தகவலை சொன்னார் அண்ணாச்சி."யாரு..." என்று கேட்டார் அன்வர்பாய். கேப்டன் கட்சியில தான்... இவ்வளவு நாளும் சொந்த பணத்த செலவு செஞ்சி கட்சிய நடத்திகிட்டு இருந்தாரு... யானைப் பசிக்கு சோளப் பொரி போட முடியுமா... அதனால, இப்ப கட்சிக்காரங்களும் அதுல பங்கெடுத்துக்கணும்ன்னு சொல்லிட்டாரு... பதவி வேணும்ன்னு சொல்றவங்க கட்சி நிதி கண்டிப்பா கொடுக்கணும்ன்னு சொல்லிட்டாங்க... மாவட்டச் செயலருக்கு அஞ்சு லட்சம், துணைச் செயலர்களுக்கு 25 ஆயிரம், அணித் தலைவருக்கு 20 ஆயிரம்ன்னு "ரேட்" நிர்ணயிச்சிட்டாங்க வே... என்றார் அண்ணாச்சி.

தன் கட்சியில் பதவி வேண்டும் என்பவரிடம் காசு வாங்கும் இந்த குடிகாரன் ஆட்சிக்கு வந்தால் நமது நாட்டின் நிலைமை என்ன ஆகும் என்று யோசியுங்கள். எனவே 80 கோடி ஹிந்துக்களும் அம்மாவை தமிழகத்தின் ஆட்சி பொறுப்பில் அமர்த்த சபதம் எடுப்போம். தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி மலர்ந்ததின் விளைவாக ஹிந்துஸ்தானத்தில் தாமரையின் ஒளி பரவும். அப்போது இந்த திம்மியின் நிலை என்னவாகும் என்று நாம் எல்லோரும் பார்க்கத்தான் போகின்றோம்.

வாழ்க டாக்டர் ஸ்ரீ வேதாந்தி. ஜெய் ஸ்ரீராம்.

ஸ்ரீராமர் சீடரிடம் வாலாட்டும் ராமசாமி சீடன்

தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் திம்மி ஹிந்துக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதை நாம் எல்லோரும் அறிவோம். நாள்தோறும் ஹிந்துக்கள் இந்த அரசால் தூக்கம் தொலைத்து வருகின்றனர். கருணாநிதியின் ரவுடிகள் ஆங்காங்கே கோவில் உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளை அடித்து வருகின்றனர். கடவுளே இல்லை என்று சொல்லி கொண்டு இரவில் இறைவனின் திருவுருவ சிலைகளை கோவில்களின் இருந்து பெயர்த்து எடுத்து வருகின்றனர். இந்த கொடுஞ்செயலுக்கு உடன்படாத நல்ல உள்ளங்களை கொலையும் செய்து வருகின்றனர் இந்த கயவர்கள்.

இப்படி எல்லா முறையிலும் ஹிந்துக்களுக்கு தொல்லை கொடுத்து வந்தவர்கள் இப்போது முக்காலமும் இறைவனை தொழுது வரும் அவரின் அடியார்களையும் விட்டு வைக்கவில்லை. வேலூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீஆஞ்சநேயரின் கோயிலில் இருக்கும் இறைஅடியாருக்கு ஏற்பட்ட துன்ப கதையினை இங்கே படியுங்கள். ஆந்திராவில் மெய்னோவின் சீடன் சாமுவேலால் திருமலைக்கு எப்போது ஆபத்து வருமோ என்று ஹிந்துக்கள் அனைவரும் அச்சம் கொண்டுள்ளனர். திருமலைக்கு சொந்தமான இக்கோயிலுக்கு தமிழ்நாட்டில் இப்படி ஒரு நிலைமை.

ஸ்ரீராமரை நிந்தித்து வந்த அரக்கர் கூட்டம் இப்போது ஸ்ரீராமரின் முதன்மை சீடரான ஸ்ரீஆஞ்சநேயரிடமும் வாலாட்ட ஆரம்பித்துவிட்டது. ஸ்ரீஆஞ்சநேயரிடம் வாலாட்டியவர் கதி என்ன ஆனது என்பது ராமாயணம் படித்த அனைவருக்கும் தெரியும். முக்கியமாக வால்மீகி ராமாயணம் படித்த கருணாநிதிக்கு தெரியும் என நம்புவோம். வாலாட்டும் கூட்டத்தின் வால் அறுக்க நாம் அனைவரும் ஸ்ரீராமரையும் ஸ்ரீஆஞ்சநேயரையும் வேண்டுவோம்.

ஜெய் ஸ்ரீஆஞ்சநேயா. ஜெய் ஸ்ரீராம்.

Wednesday, October 03, 2007

லக்கிலுக் அவர்களுக்கு

தமிழ்மணம் உங்களை நட்சத்திரமாக தேர்வு செய்து உள்ளது. அப்படி இருக்கும் நிலையில் என் பதிவினை ஹைஜாக் செய்ய நினைப்பது நியாயமா? ஏற்கனவே உங்களுக்கு பல பதிவுகள் இருக்கின்றன. எனக்கு இருப்பது ஒரே ஒர் பதிவுதான். மைனாரிட்டி ஆட்சி புரியும் திம்மி இருக்கிறார் என்ற நினைப்பில் என் பதிவினை அபகரிக்க வேண்டாம். உங்களுக்கு நல்ல புத்தியினை தர ஸ்ரீராமரை வேண்டுகின்றேன்.

பதிவுலக அன்பர்களே, இந்த ஆக்கிரமிப்பு முயற்சிகள் தொடர்ந்தால் என் பதிவினை மூடுவதை தவிர வேறு வழி தெரியவில்லை.

தமிழச்சி அவர்களுக்கு

நீங்கள் என்னை பற்றி பதிவு போட்டு இருப்பதாக நண்பர் மூலம் அறிந்தேன். முதலில் என் பதிவுகளுக்கு வந்து படித்தமைகாக நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன். இணையம் ஒரு கட்றற்ற உலகம் என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல. எல்லோருக்கும் ஒரே கருத்து இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லையே. நீங்கள் ஈ.வே.ராவின் மதத்தை சேர்ந்தவர். ஒரு வகையில் பார்த்தால் ஈ.வே.ராவும் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்தான். எனவே நீங்களும் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்தான்.


சாராரணமாக அரசியல் விவாதமாக இருந்தால் அவருடைய கருத்தை சொல்ல அவருக்கு உரிமை உண்டு என்று விட்டுவிடலாம். ஆனால் இவரோ 80 - கோடி இந்துக்களின் ஒட்டு மொத்த குரலாக
தன்னுடைய பதிவில் http://ilaikkaran.blogspot.com/2007/09/blog-post_30.html
எடுத்து விடுகிறார். தமிழக அரசியலையோ மக்களின் உணர்வுகளையோ நான்கு வரிகளில் எழுதிவிடும் விஷயங்கள் அல்ல. மதத்தை முன் வைத்து ஒரு நாடு இருக்குமானால் அந்நாடு எப்படி உருப்படும். அப்படியென்றால் இந்தியாவில் உள்ள மற்ற மதத்தினரைப் பற்றி என்ன சொல்ல வருகிறார்? அவர்கள் இந்தியர்களில்லையா? சரி கணக்கில் மற்ற மதத்தவரை சேர்க்க வேண்டாம். ஹிந்துஸ்தானிகளையே எடுத்துக் கொள்வோம்.

ஹிந்து ஹிந்து என்கிறீர்களே! ஆண்டாண்டு காலமாய் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டும், கல்வி அறிவு
கொடுக்கப்படாமல் அடக்கி வைக்கப்பட்டும், குலத்துக்கேற்ற தொழில் கற்பிதம் செய்யப்பட்டும், தீண்டத்தகாதவர்களாகவும் நடத்தப்பட்டு வந்த 100 - க்கு 99 - சதவீத ஹிந்துக்களை உங்களுக்கு ஆதரவாக சேர்த்துக் கொள்ள என்ன யோக்கியதை இருக்கிறது?

யார் ஹிந்துக்கள்? என்னை கேட்டால் ஹிந்துஸ்தானத்தில் வசிக்கும் எல்லோரையும் ஹிந்துக்கள் என்று சொல்லமுடியாது. கிருத்துவ மிஷினரிகளையும் அவர்களின் அடிவருடிகளையும், முகமதியர்களையும், ஜிகாதிகளையும் ஹிந்துக்களின் எண்ணிக்கையில் அடக்க முடியாது. அவர்களை தவிர எல்லோரும் ஹிந்துக்கள்தான்.

சமூதாயப்பிரச்சனைகளை ஏன்யா மதப்பிரச்சனையாக்குகிறீர்கள். உங்களின் சொந்த விருப்புகளை அலசி ஆராய்ந்து சமூதாய நோக்குடன் தொலைநோக்குப் பார்வையில் பார்க்கத் தெரியாதா? 80 - கோடி ஹிந்துக்களுக்கு இருக்கும் சக்தியை
காண்பிக்கும் நேரம் வந்துவிட்டதாக பிதற்றுகிறீர்களே அதே 80 - கோடி ஹிந்துக்களுக்கு அவர்கள் எந்த அளவில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சிறு
நெருப்பு பொறியாக பகுத்தறிவை அவர்களுக்குள் விதைத்தால் உங்கள் கதை கோவிந்தா தான்!

80கோடி ஹிந்துக்களும் ஒன்று பட்டால் உங்கள் கதை என்ன ஆகும். ஒற்றுமையாக இருந்த ஹிந்துக்கள் இடையே ஜாதி என்ற நோயை பரப்பி விட்டனர் கிருத்துவ மிஷினரிகள். பிறகு வந்த ஈரோட்டு கிழவன் வகுப்புரிமை, இட ஒதுக்கீடு என்று ஹிந்துக்களை பிளவு படுத்தி விட்டான். இப்போது ஆட்சி புரியும் மெய்னோவும், கொலைஞரும் இந்த வஞ்சக செயல்களை தொடர்ந்து வருகின்றனர். வேத காலத்தில் சொல்லியபடி அவரவர் தம் கடமைகளை செய்து வரும் நாள் விரைவில் மலரும்.


நியாயமான உணர்வுகளுடன் நான் எழுதுவதால் என் போட்டோவை போட்டு எழுதுகிறேன். இலைக்காரரே 80 - கோடி உணர்வுகளின் உணர்வாக பேசும் உங்களால் ஏன் முகத்தை காட்ட முடியாமல் இலையை போட்டு எழுதுகிறீர்கள். நீங்கள் அம்மா கட்சியாகவோ அல்லது ஏதாவது ஒரு கட்சியாகவோ இருக்கலாம். ஆனால் நியாயமான உணர்வுகள் என்பது ஒருதலைப்பட்சமாக இருக்கக்கூடாது. உண்மையின் முன்னால் நடுநிலை என்பது இல்லை என்பார்கள்.


போட்டோவை இணையத்தில் எப்படி எல்லாம் பயன் படுத்துகின்றனர் என்பது எல்லோருக்கும் தெரியும். என் பதிவுகளை காப்பி அடித்து சில பதிவுகள் ஒரு தளத்தில் தோன்றின. அவ்வளவு ஏன், இவ்வார தமிழ்மண நட்சத்திரம் என் பதிவினை ஆக்கிரமிக்க முயற்சி எடுக்கின்றார். போட்டோவை போட்டால் ஆட்டோ வரும் என்பதால்தான் நான் யார் என்பதை அறிவிக்கவில்லை. அம்மாவின் ஆட்சி விரைவில் தமிழகத்தில் மலரும். அப்போது என் பதிவுக்கு வந்து பாருங்கள்.

இதில் ஜெய் ஸ்ரீ ராம் வேறு. நீர் என்ன ஹிட்லரோ. ஆல்டாப் ஹிட்லர் சொல்லுவான். "எந்தப் பொய்யும் திரும்பத் திரும்ப சொல்லப்படும் போது அது
உண்மையாகிவிடுகிறது" என்று. அப்படி சொன்னவன் தான் கடைசியில் மண்ணையும் கவ்விக் கொண்டான்.
ஜெய் ஸ்ரீ ராம்! என்று கோஷம் போடுவதை நிறுத்திவிட்டு போய் வேறு வேலை பாரும்.


ஜெய் ஸ்ரீராம் என்ன அவ்வளவு கெட்ட வார்த்தையா. எம் குலம் வாழ என் கடவுளை நான் வேண்ட கூடாதா. புண்ணிய பாரதத்தில் தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த நிலை.

ஜெய் ஸ்ரீராம். ஜெய் ஸ்ரீராம். ஜெய் ஸ்ரீராம்.

Monday, October 01, 2007

மெய்னோவின் ஆட்சியும் கலைக்கபட வேண்டும்

ஹிந்துஸ்தானத்தின் பழம் பெரும் கட்டிடகலைக்கு ஆதாரமான ஸ்ரீராம சேதுவை இடிக்க முற்பட்ட கொலைஞரை வன்மையாக கண்டித்த உச்ச நீதிமன்றத்து நீதிமான்களை போற்றி பண்பாடுவோம். அதே நேரத்தில் உண்ணாவிரதத்தில் பங்கு பெற்றதற்காக காங்கிரஸாரின் மத்திய அரசும், கம்யூனிஸ்ட்களின் கேரளா, மேற்கு வங்க அரசுகளும் கலைக்கபடவேண்டும்.

இந்த காரணங்களுக்காக 80 கோடி ஹிந்துக்களும் நாளை ஒரு நாள் நாடு முழுவதும் அடையாள வேலை நிறுத்தம் செய்வோம்.

ஜெய் ஸ்ரீராம்.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za