அம்மான்னா சும்மாவா?

Wednesday, October 24, 2007

அம்மாவை அவமதிக்கும் மைனாரிட்டி அரசு

தமிழகத்தில் தலையாய திம்மியான கொலைஞரின் தலைமையில் ஒரு மைனாரிட்டி அரசு தற்போது ஆட்சி புரிவது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் அம்மாவின் மீது ஒரு கொலையாளியை இந்த கயவர்கள் ஏவிவிட்டதையும் நீங்கள் அறிவீர்கள். ஸ்ரீராமரின் அருளாள் இந்த படுகொலை முயற்சியில் இருந்து அம்மா தப்பிவிட்டார். இருந்தாலும் விடாபிடியாக திம்மிகள் தொடர்ந்து கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக உள்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படுகொலை முயற்சிகளை தடுத்து நிறுத்த தமக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் முறையிட்டார் அம்மா. நீதிமன்றத்தின் கிடுக்குபுடி கேள்விகளால் அதிர்ந்து போய்விட்டனர் திம்மியின் அல்லக்கைகள். ஏன் அம்மாவிற்கு பாதுகாப்பு வழங்கபடவில்லை, ஏன் குண்டு துளைக்காத வாகனம் வழங்கவில்லை என்று அரசு வக்கீலை துளைத்து எடுத்துவிட்டார் நீதிபதி.

அதற்கு இப்படி ஒரு பதிலை அளித்துள்ளான் அரசு வக்கீல். அம்மாவிற்கு குண்டு துளைக்காத அம்பாசிட்டர் கார் கொடுத்தார்களாம். அதை அம்மா ஏற்கவில்லையாம். அடி முட்டாள்களே அம்மா என்றால் சும்மாவா? அவர்களின் தகுதி என்ன, திறமை என்ன, பாரம்பரியம் என்ன, கடந்து வந்த பாதை என்ன. உலகின் ஒரே தங்கதாரகையான நம் அம்மா ஒரு அம்பாசிட்டர் காரில் ஏறுவதா. வேண்டும் என்றே அம்மாவை அவமதித்து உள்ளது இந்த மைனாரிட்டி அரசு.

அம்மாவின் தகுதிக்கு ஏற்ப ஒரு ரோல்ஸ்ராய்ஸ், மெர்ஸிடிஸ் பென்ஸ், லிங்கன், கெடிலாக், வோல்வோ போன்ற கார்களை அளிக்காமல் பழமையான அம்பாசிட்டர் காரை அளித்த கொலைஞரின் மைனாரிட்டி அரசை 80 கோடி ஹிந்துக்களின் சார்பாக கடுமையாக கண்டிக்கின்றேன். இந்த செய்தியை கேட்டு வேதனை அடைந்த அமெரிக்க ஹிந்துக்கள் அம்மாவிற்காக ஒரு உலக தரமான கார் ஒன்றை பரிசளிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். விரைவில் இந்த கார் அம்மாவிடம் அளிக்கபடும் என்று அமெரிக்க பதிவர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

வாழ்க அம்மா. வீழ்க திம்மி.

14 Comments:

  • அவாள்கள் மத்தியில் புகழ்பெற்ற ப்ரிமியர் பத்மினி கார் தான் சிறந்தது. எப்புடி இவர்கள் கம்யூனிஸ்டு ஸ்டேட் கம்பெனி காரைக் குடுக்கலாம் ?

    By at 10/24/2007 9:55 PM  

  • இலைக்காரரே நீங்கள் இவ்வாறு அம்மாவை அவமதிப்பீர்கள் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அம்மாவை இந்த திம்மிகள் தான் பாதுகாக்க வேண்டுமா? அவருக்கு எதற்கு குண்டு துளைக்காத கார்? அம்மாவின் மகிமை தெரியாமல் எழுதி உள்ளீர்கள். யோசித்துப் பாருங்கள்... அம்மவை ஸ்ரீராமரும் ஸ்ரீராமரை அம்மாவும் காப்பாற்றி வரும் இக்கால கட்டத்தில் நீங்கள் இவ்வாறு எழுதுவது எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

    By at 10/24/2007 10:39 PM  

  • மைனாரிட்டி அரசு மட்டும் அல்ல. இந்த மூன்றாவது அணி அல்லகைகளும் அம்மாவை அவமதித்து விட்டனர். அவர்களுக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும். அம்மாவுக்கு வெறும் காரா? குண்டு துளைக்காத எலிகாப்டர் அல்லவா கொடுக்க வேண்டும்

    By at 10/24/2007 11:41 PM  

  • m அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    By at 10/25/2007 12:49 AM  

  • great அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    அம்மாவை நான் அவமதிப்பதா!!! அம்மாவின் புகழ் பாட நேற்று முளைத்த சிற்றிலை நான். பெரும் தெய்வமான அம்மா இப்போது மனித உருவில் இருக்கின்றார். அதனால் அவருக்கு திம்மிகளால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.

    By at 10/25/2007 12:49 AM  

  • சாணக்கியன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    அம்மா சொந்த விமானமே வைத்து இருந்தார்கள். ஆனால் மெய்னோவும், கொலைஞரும் அதை அபகரித்து விட்டனர்.

    By at 10/25/2007 12:51 AM  

  • ஜெகதீசன் இந்த இடுகையை புறக்கணித்து அம்மாவுக்கு அவமானம் செய்துவிட்டார். அவருக்கு என் கண்டனம்.
    :)

    By at 10/25/2007 1:13 AM  

  • கோவி.கண்ணன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    அகில உலக தலைவராக நியமிக்கபட்டதற்கு வாழ்த்துக்கள். ஜெகதீசன் அவர்கள் TBCD அவர்கள் ஆரம்பித்த கட்சியை எப்படி வளைப்பது என்ற யோசனையில் இருக்கலாம்.

    By at 10/25/2007 2:23 AM  

  • ஏன் இப்படி எல்லாம் ஆளளுக்கு குழம்பிறீங்க அம்மாவுக்கு குண்டுத்துளைக்காத ரோடுபோட்டு குண்டுத்துளைக்கமுடியாத குண்டுவெடிக்கமுடியாத ஒரு நாட்டையே தரவேண்டும் அதை நீங்கதானய்யா செய்யனும் எல்லாம் இப்பை அல்ப்பத்தனமா காரு ஹெலிகாப்ற்ற்னு கேட்டுக்குனு இருக்கீங்க அம்மானா சும்மாவா

    By at 10/25/2007 2:41 AM  

  • குண்டு உள்ளே புக முடியாத கார் வேண்டும் என்று கேட்டதை தவறாக புரிந்து கொண்டு அம்மாவும் சின்னம்மாவும் புக முடியாத படி அம்பாசிடர் கார் கொடுத்த கயவர்கள் ஒழிக. அம்மா வாழ்க!

    By at 10/25/2007 3:28 AM  

  • கலைஞரே!!

    உங்கள் பாதுகாப்பு அம்மாவிற்கு வேண்டாம்.!

    ராமரின் படையான வானரப்படை அ.தி.மு.க வில் உள்ளது என்பதை

    கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.


    அம்மா தொண்டன்

    By at 10/25/2007 4:17 AM  

  • அம்பாசிடர் கார் அளவிற்கு இருக்கும் அம்மாவிற்கு ஒரு அம்பாசிடர் கார் தருகிறோம் என்கிற நையாண்டித்தன கொலைஞர் அரசியல் சூழ்ச்சிக்கு இரையாகாமல் அம்மா விழித்துக்கொண்டார்.

    அம்மாவிற்கே ஒரு அம்மாவா?

    குண்டு துளைக்காத ஒரு யானை அல்லவா கொடுத்திருக்கவேண்டும். அம்மாவை காக்க குண்டுகள் துளைக்காத யானைகளை அல்லது வேண்டுமென்றால், லாரிகளை கொடுத்திருக்கலாம்.

    திம்மிகள் கொட்டத்தை அடக்குவார் அம்மா.

    By at 10/25/2007 4:53 AM  

  • உங்களுக்கு மட்டும் பின்னூட்டம் போடும் ஃப்ரொபைல்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறதே.. அது எப்படி....
    :)
    (ஏய் யாருப்பா அங்க,இதுக்குப் பெயர் தான் "நமக்கு நாமே"ன்னு சொல்லுறது. இலைக்காரன் நல்லவர். அப்படியெல்லாம் செய்ய மாட்டார்...)

    By at 10/25/2007 6:45 AM  

  • //உங்களுக்கு மட்டும் பின்னூட்டம் போடும் ஃப்ரொபைல்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறதே.. அது எப்படி....
    :)//

    ஜெகதீசனாரே இது எல்லாம் அம்மாவுக்காக தானா சேர்ந்த கூட்டம். அம்மாவுக்காக 80 கோடி இந்துக்களும் எப்படி கொதித்து எழுவார்கள் அப்படிங்குறதுக்கு நீங்க சொன்ன ஃப்ரொபைல்களின் எண்ணிக்கையே சாட்சி.

    வாழ்க அம்மா. வீழ்க திம்மி.

    By at 10/26/2007 7:32 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za