அம்மான்னா சும்மாவா?

Wednesday, October 17, 2007

அம்மாவை காத்த ஸ்ரீராமர்

பாரதத்தில் உள்ள ஹிந்துக்கள் மெய்னோவின் ஆட்சியால் கடும் துயருக்கு உள்ளாகின்றனர் என்ற உண்மை எல்லோரும் அறிந்ததே. தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் கொலைஞரின் கூலிபடை பல ஹிந்துக்களை நாள்தோறும் கொன்றுவருகின்றது. கொலையுண்ட ஹிந்துக்களின் பட்டியலைபோட பல பதிவுகள் தேவை. பாசிச முகவின் ரவுடிகள் உச்சகட்டமாக அம்மாவின் உயிரையே பறிக்க முயற்சி எடுத்து உள்ளனர்.

உலகமே வியந்து பாராட்டும் அளவிற்கு தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தியவர் தங்கதாரகையான அம்மா அவர்கள். எங்கே அவர் ஆட்சிக்கு வந்து விட்டால் தன் புத்திரனுக்கு அரசாளும் உரிமை கிடைக்காதே என்ற நினைப்பில் தன் கூலிபடையை அம்மாவின் மீது ஏவிவிட்டுள்ளார் இந்த திம்மி. அம்மாவின் அதிரடி அறிக்கை பாணங்களை தாங்க முடியாத திம்மி இப்படி ஒரு கேவலமான செய்கையை செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை.

இந்த படுகொலை முயற்சியில் இருந்து தப்பித்தது தெய்வ செயல் என்று அம்மா பேட்டி அளித்து உள்ளார். ஸ்ரீராம சேதுவை காப்பதில் முன் நிற்பவர் ஜான்சி ராணியாகிய அம்மாதான் என்பது பல கோடி ஹிந்துக்கள் அறிந்த உண்மை. தமிழர் திருமகனான ஸ்ரீராமர் திருவள்ளுவரின் குறள்களை நன்கு அறிந்தவர். செய்நன்றி அறிதல் என்ற அதிகாரத்தினை அவர் என்றுமே மறப்பதில்லை. தான் கட்டிய பாலத்தை காத்து நிற்கும் அம்மாவிற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று காத்திருந்தார். இப்படி ஒர் ஆபத்து எழுந்த போது அதை தன் திருவருளால் தடுத்து நிறுத்திவிட்டார்.

அம்மாவின் மீது ஏவி விடப்பட்ட இந்த படுகொலை முயற்சி 80 கோடி ஹிந்துக்களையும் கவலை அடைய வைத்து விட்டது. செய்தி அறிந்த முதல் என்னால் எந்த செயலையும் செய்ய முடியவில்லை. தலைமை அலுவலகம் சென்று அம்மாவை தரிசித்த பின்புதான் என் மனகவலை சற்று குறைந்துள்ளது. பதிவுலக நண்பர்களே ஸ்ரீராமருக்கு அம்மாவும், அம்மாவிற்கு ஸ்ரீராமரும் துணையாக இருக்கும் வரையில் எந்த சதிகாரனாலும் அம்மாவை நெருங்க முடியாது.

இந்த படுகொலை முயற்சிக்கு தார்மீக பொறுப்பு ஏற்று மைனாரிட்டி ஆட்சி புரியும் கயவனும் அவனுக்கு பக்க துணையாக விளங்கும் மெய்னோவும் மாநில, மத்திய ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என்று 80 கோடி ஹிந்துக்களின் சார்பாக கேட்டுகொள்கின்றேன். அவர்கள் ஆட்சியில் இருந்து தாமாக விலகாவிட்டால் சுப்ரீம் கோர்டில் முறையிட்டு ஹிந்துவிரோத அரசுகளை உடனடியாக கலைக்க முயற்சிகளை மேற்கொள்வோம்.

வாழ்க அம்மா. வீழ்க திம்மிகள்.

45 Comments:

 • இலைக்காரரே,

  ஒருவாரம் பிசி...பின்னூட்ட கயமைத்தனம் பண்ண நேரம் கிடைக்கவில்லை. கோவிச்சிக்காதிங்கோ !
  :)

  By at 10/17/2007 8:40 PM  

 • கோவி.கண்ணன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  இந்த படுகொலை முயற்சியை கண்டித்து சிங்கப்பூர் பதிவர்கள் சார்பாக ஒரு கண்டன கூட்டம் நடத்துங்கள். ஸ்ரீராமரின் அருள் உங்களுக்கு எப்போதும் கிடைக்கும்.

  By at 10/17/2007 8:51 PM  

 • பின்னுட்ட கயமை 2

  By at 10/17/2007 8:54 PM  

 • முரளி கண்ணன் அவர்களே,

  வருகைக்கும், ஆதரவிற்கும் நன்றி.

  By at 10/17/2007 8:56 PM  

 • அம்மா சிலருடைய சூழ்நிலைக் கைதியாக அங்கே மாட்டிக் கொண்டு தவிக்கிறார் என்று கேள்விப்பட்டு தூது வந்த அனுமனை அவசரப்பட்டுப் பிடித்து ராவணர்கள் கையில் ஒப்படைத்து விட்டாரே. இனி ராவண யுத்தம் எங்கே நடக்க?

  By at 10/17/2007 9:08 PM  

 • //
  இந்த படுகொலை முயற்சியை கண்டித்து சிங்கப்பூர் பதிவர்கள் சார்பாக ஒரு கண்டன கூட்டம் நடத்துங்கள். ஸ்ரீராமரின் அருள் உங்களுக்கு எப்போதும் கிடைக்கும்.
  //
  இது வேறயா?
  :)

  By at 10/17/2007 9:11 PM  

 • //கோவி.கண்ணன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  இந்த படுகொலை முயற்சியை கண்டித்து சிங்கப்பூர் பதிவர்கள் சார்பாக ஒரு கண்டன கூட்டம் நடத்துங்கள். ஸ்ரீராமரின் அருள் உங்களுக்கு எப்போதும் கிடைக்கும்.//

  ம் கவலைப்படாதீர்கள், நம்ம ஜெகதீசன் தலைமையில் தூள் பண்ணிடுவோம் !
  :)

  By at 10/17/2007 9:13 PM  

 • ஜெயலலிதாவை நேருக்கு நேர் நின்றோ, நீதிமன்றம் மூலமாகவோ மோத முடியாத கலைஞர் அரசு அவரை கொலை செய்ய முயற்சி செய்தி உலக அரங்கையே உலுக்குகிறது. இதற்க்கெல்லாம் அன்னை ஜெயலலிதா பயப்பட மாட்டார். சென்னா ரெட்டியின் 70 வது வயதில் சென்னாரெட்டி, அன்னையை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்ற போதே பயப்படாதவர் அன்னை ஜெயலலிதா.
  ஜெயலலிதாவை கொல்ல முயற்சி செய்தது கூட எங்களை பாதிக்கவில்லை. அவரை ஒரே ஒரு நபர் விட்டு அதுவும் அவர் கையில் ஒரு ஆயுதம் கூட கொடுக்காமல், கொன்ற பிறகு தப்பிப்பதற்கு ஒரு ஏற்பாடு கூட செய்யாமல், ஏதொ ஒரு தினகரன் பணியாளரை கொலை செய்வது போல் அவரை கொல்ல முயற்சி செய்து அவரது பெருமைக்கே கலங்கம் ஏற்படுத்தி விட்டனர்


  http://newaryan.blogspot.com/2007/10/blog-post_17.html

  By at 10/17/2007 9:20 PM  

 • தட்ஸ் தமிழ் செய்தி:
  சில நாட்களுக்கு முன்பு முதல்வர் கருணாநிதி தனது மகன் மு.க.ஸ்டாலினுக்கு அறிவுரை கூறியதாக அந்தத் தகவல் கூறுகிறது. அப்போது கருணாநிதி சொன்னாராம், தமிழ்நாட்டில் அடுத்து தேர்தல் வரும்போது நான் இருப்பேனோ, இல்லையோ, நீ எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

  இப்போதுள்ள திமுக கூட்டணியை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதில் கவனக்குறைவாக இருந்து விட்டால், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து விட்டால், நீ பெரும் இன்னல்களையும், துயரங்களையும் சந்திக்க வேண்டும் என்றாராம்.

  அதற்கு ஸ்டாலின் பதிலளிக்கையில் அடுத்த தேர்தல் வரும் வரை ஜெயலலிதா உயிரோடு இருந்தால்தானே என்றாராம்.


  http://thatstamil.oneindia.in/news/2007/10/17/tn-jaya-allegations-against-stalin.html

  By at 10/17/2007 9:28 PM  

 • rathnesh அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  உங்களின் பார்வை வித்தியாசமாக இருக்கின்றது. ராவண யுத்தம் அவன் வசிக்கும் கோபாலபுரத்தில் நடக்கலாம் அல்லது மைனாரிட்டி ஆட்சி புரியும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடக்கலாம். எல்லாம் ஸ்ரீராமர் கையில் இருக்கிறது.

  By at 10/17/2007 9:43 PM  

 • கோவி.கண்ணன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  கண்டன கூட்டம் பற்றிய செய்தியை நமது எம்.ஜி.ஆரில் வெளியிட ஏற்பாடு செய்கின்றேன்.

  By at 10/17/2007 9:44 PM  

 • சாணக்கியன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  ஸ்ரீராமர் துணை இருக்கும் வரை அம்மாவை யாராலும் அசைக்க முடியாது. ஜெய் ஸ்ரீராம்.

  By at 10/17/2007 9:45 PM  

 • ஜெகதீசன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  உங்கள் தலைமையில் நடைபெறும் கண்டன கூட்டதிற்கு வாழ்த்துக்கள். கூட்டம் சிறப்பாக நடைபெற ஸ்ரீராமரை வேண்டுவோம்.

  By at 10/17/2007 9:46 PM  

 • இலைக்காரன் அவர்களே, திராவிட திம்மி, தி.மு.க பூத் ஏஜெண்ட் லுக்கிலுக் என்னும் பதிவரிடம் ஜாக்கிரதையாக இருங்கள். அவருடைய சொந்த கருத்துகளை comments ஆக வெளியிட்டு அதை தங்கள் கருத்தாக பதிவிட சொல்லி பதிவர்கலை மிரட்டுவதாக செய்திகள் வருகிறது.

  By at 10/17/2007 9:57 PM  

 • சாணக்கியன் அவர்களே,

  வருகைக்கும், தகவலுக்கும் நன்றி.

  இப்போது இருக்கும் பதிவர்கள் புத்திசாலிகள். எலிக்குட்டி சோதனை செய்தால் யார் உண்மையான இலைக்காரன் என்று தெரிந்து விடுமே. ஸ்ரீராமர் துணையுடன் இருக்கும் என்னை அந்த பூத் ஏஜண்டால் ஒன்றும் செய்ய முடியாது.

  By at 10/17/2007 10:04 PM  

 • // ஸ்ரீராமர் துணை இருக்கும் வரை அம்மாவை யாராலும் அசைக்க முடியாது//

  அம்மாவைப் பற்றி யார் குறைத்து மதிப்பிடுவது? அம்மா இருக்கும் சைஸுக்கு ஸ்ரீராமராலேயே கூட அசைக்க முடியாது என்பது தானே நிஜம்?

  By at 10/17/2007 10:07 PM  

 • பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் திரேதா யுகத்தில், சிங்கையிலும் ஸ்ரீராமரின் ஆட்சி நடைபெற்றதாகத் தகவல் வந்துள்ளது. அப்போது அவர் பாரதத்திற்கும் சிங்கைக்கும் இடையில் கட்டிய சேது கடலுக்குள் மூழ்கியிருப்பதாகவும் அறிகிறேன்.

  இது குறித்த ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறேன். எனவே சிங்கையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் என்னால் கலந்துகொள்ள முடியாது. என் சார்பில் கோவி.கண்ணன் அவர்கள் தலைமை தாங்குவார். ஆர்ப்பாட்டம் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்

  By at 10/17/2007 10:23 PM  

 • நீங்கள் இலைகாரனா? இல்லை கொலைகாரனா? பதிவில் கொலைவெறி எக்கசக்க சக்கம்...

  By at 10/17/2007 10:33 PM  

 • rathnesh அவர்களே,

  வருகைக்கு நன்றி. அம்மாவின் உடல் நிலையை கேலி செய்ய வேண்டாம். என்னை போன்ற கோடானுகோடி தொண்டர்களுக்கு தாயுள்ளத்தோடு சேவை செய்யும் பெருமாட்டி அவர்.

  By at 10/17/2007 10:48 PM  

 • ஜெகதீசன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டாம். சிங்கப்பூர் போலீசார் உங்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்குவார்கள். வெற்றி செய்தியினை விரைவில் அறிவியுங்கள்.

  By at 10/17/2007 10:49 PM  

 • podakkudian அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  நான் அம்மாவின் புகழ் பாடும் ஒரு சிற்றிலை. ஆனால தங்கதாரகையான எங்கள் அம்மாவிற்கு ஆபத்து எனில் என்னை போன்ற அனைவரும் கொலையாளிகளாக மாறவும் தயங்க மாட்டோம்.

  By at 10/17/2007 10:50 PM  

 • தற்போதய நிலையில் எனக்கு ஆர்ப்பாட்டத்தை விட ஸ்ரீராமரின் ஆட்சி சிங்கையில் நடந்ததை நிரூபிப்பதே முக்கியமாகத் தெரிகிறது..அதற்கான ஆதாரங்களைத் தேடும் பணியில் நான் மும்மரமாக இருப்பதால் என்னால் ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற முடியாது...

  அம்மாவா ஸ்ரீராமரா என்று பார்க்கும்போது ஸ்ரீராமர் தான் என்க்கு முக்கியமாகப் படுகிறார்...

  ஆதாரங்களைத் தேடும் வேலைப்பளு அதிகமாக இருப்பதால் இனி சிறிது காலம் உங்கள் பதிவுகளில் கூட பின்னூட்டமிட முடியாமல் போகலாம். ஆனால் என் ஆதரவு உங்களுக்கு என்றும் உண்டு....

  நன்றி.

  By at 10/17/2007 11:01 PM  

 • ஜெகதீசன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  உங்களின் நிலையை புரிந்து கொண்டேன். ஸ்ரீராமருக்கு புகழ் சேர்க்கும் கரசேவையில் ஈடுபட்டு உள்ளீர்கள். ஸ்ரீராமர் உங்களின் காரியங்களுக்கு என்றும் துணை இருப்பார். ஜெய் ஸ்ரீராம்.

  By at 10/17/2007 11:13 PM  

 • //தலைமை அலுவலகம் சென்று அம்மாவை தரிசித்த பின்புதான் என் மனகவலை சற்று குறைந்துள்ளது//

  யாரு ... நீயி ?

  சும்மா ஊத்தாதே ல.லு!

  By at 10/17/2007 11:55 PM  

 • புரிந்து கொண்டதற்கு நன்றி...
  அம்மா பிரதமர் ஆகும் முன் முழுமையான ஆதாரங்களைக் கண்டு பிடித்துவிடலாம் என நம்புகிறேன். அப்படி கண்டுபிடித்துவிட்டால் அம்மா பிரதமராகப் பதவியேற்கும் போது சிங்கைக்கும் சேர்த்து முடிசூட்டிவிடலாம்...

  By at 10/18/2007 12:03 AM  

 • ╬அதி. அழகு╬ அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  நீங்களும் என்னை லக்கிலுக் என்று நினைத்து இருக்கின்றீர்கள். மீண்டும் ஒரு முறை சொல்ல வேண்டிய நிலையில் நான் உள்ளேன். நான் மைனாரிட்டி ஆட்சி புரியும் திம்மியின் பூத் ஏஜண்ட் ஆன லக்கிலுக் இல்லை.

  By at 10/18/2007 12:38 AM  

 • ஜெகதீசன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  அம்மாவின் பொற்கால ஆட்சியில் உங்களுக்கு சிறப்பான பதவிகள் கிடைக்க வாழ்த்துகின்றேன்.

  By at 10/18/2007 12:40 AM  

 • //தமிழர் திருமகனான ஸ்ரீராமர் திருவள்ளுவரின் குறள்களை நன்கு அறிந்தவர். செய்நன்றி அறிதல் என்ற அதிகாரத்தினை அவர் என்றுமே மறப்பதில்லை//

  ராமர் எப்போது திருக்குறள் படித்தார்? த்ரேத யுகத்திலா? அல்லது திருவள்ளுவர் திருக்குறள் எழுதிய பிறகா?

  By at 10/18/2007 2:17 AM  

 • great அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  தெய்வத்திற்கு தெரியாமல் எந்த செயலும் உலகில் நடப்பது இல்லை. எனவே ஸ்ரீராமருக்கு அனைத்தும் தெரியும்.

  By at 10/18/2007 2:40 AM  

 • பின்னூட்ட அம்மாத்தனம்.

  டிரைலர் : இலைக்காரனின் அடுத்த பதிவை காணத்தவறாதீர்கள்.

  கயவனின் அல்லக்கையான சபாநாயகர் 60 அதிமுக எம்.எல்.ஏ.க்களை புரட்டி புரட்டி எடுத்து ரவுடித்தனம் செய்தார். இதையெல்லாம் ஸ்ரீராமர் காரணத்தோடு தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

  தர்மத்தாயின் வாழ்வுதனை திம்மி கவ்வும்
  மீண்டும் தர்மத்தாயே வெல்லும்

  By at 10/18/2007 2:49 AM  

 • அம்மா மனம் கொதித்தால் பூமியைத் தூக்கி கடலில் எறியவும் தயங்கமாட்டேன் என எச்சரிக்கின்றேன்.

  உலகத்தில் ஊழலை ஒழிக்க வந்த மா மலை.


  புள்ளிராஜா

  By at 10/18/2007 4:47 AM  

 • லக்கிலுக் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  By at 10/18/2007 5:51 AM  

 • pulliraja அவர்களே,

  வருகைக்கு நன்றி. அம்மாவின் மீது இவ்வளவு பக்தியா. மெய் சிலிர்கின்றது.

  By at 10/18/2007 5:53 AM  

 • //
  //தமிழர் திருமகனான ஸ்ரீராமர் திருவள்ளுவரின் குறள்களை நன்கு அறிந்தவர். செய்நன்றி அறிதல் என்ற அதிகாரத்தினை அவர் என்றுமே மறப்பதில்லை//

  ராமர் எப்போது திருக்குறள் படித்தார்? த்ரேத யுகத்திலா? அல்லது திருவள்ளுவர் திருக்குறள் எழுதிய பிறகா?

  By Great at 10/18/2007 2:17 AM

  //
  Great அவர்களே,
  ஸ்ரீராமரைப் பற்றி இப்படியெல்லாம் கேள்வி எழுப்பக்கூடாது... அப்புறம் ஸ்ரீவேதாந்தியிடம் சொல்லி உங்கள் தலைக்கு விலை வைக்கச் சொல்ல வேண்டியது வரும்.

  எல்லாம் தெரிந்த ஸ்ரீராமருக்கு 14லட்சத்து சொச்சம் ஆண்டுகளுக்குப் பின், திருவள்ளுவர் செய்நன்றி அறிதல் பற்றி எழுதுவார் என்று தெரியாமலா இருக்கும்?

  By at 10/18/2007 6:04 AM  

 • அம்மாவுக்கு சிறப்பான பெயர் கிடைக்கவேண்டும் என்று போராடுகிறேன். நமது எம்ஜிஆரில் செய்தியாக போட்டுவிடுங்கோ !

  By at 10/18/2007 6:06 AM  

 • லக்கிலுக் : //டிரைலர் : இலைக்காரனின் அடுத்த பதிவை காணத்தவறாதீர்கள்.

  கயவனின் அல்லக்கையான சபாநாயகர் 60 அதிமுக எம்.எல்.ஏ.க்களை புரட்டி புரட்டி எடுத்து ரவுடித்தனம் செய்தார். இதையெல்லாம் ஸ்ரீராமர் காரணத்தோடு தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

  தர்மத்தாயின் வாழ்வுதனை திம்மி கவ்வும் மீண்டும் தர்மத்தாயே வெல்லும்//

  யோவ்! எங்க இலைக்காரன் மனசுல ஓடறத இவரு எப்படி படிச்சாரு. வரவர ராமபிரான் செய்யறது கொஞ்சம் கூட சரியில்ல. ஹிந்துக்கள் மனசுல ஓடறத திராவிட திம்மிகள் படிக்கிற அளவுக்கு தவறிப்போய் சக்தி கொடுத்துட்டாரு.

  அட ராமா!

  By at 10/18/2007 7:09 AM  

 • இலைக்காறரே! என்ன கேள்வி கேட்டிட்டிங்க!!!


  கண்ணகிக்கு பின்பு உலகம் காணும் மாதரசி அம்மா தான்.
  பூமிக்குள்ளே பொன் விளைகிறது என்றால் என்ன? அம்மாவின் பாதங்கள் பூமியில் படுகிறது. பாருங்கள் இந்தியக் கண்டமே பொன்னாக மாறப்போகிறது. இது நடக்கல்லயா, நான் தீக்குளிக்க மாட்டேன்.
  சவுதியில இருக்கிற எண்ணைக் கிணறுகளுக்கு தீ மூட்டிவிட்டு இலைக்காறருடன் சேர்ந்து குதிப்பேன்.  புள்ளிராஜா

  By at 10/18/2007 10:02 AM  

 • ஜெகதீசன் அவர்களே,

  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  By at 10/18/2007 10:32 PM  

 • மாசிலா அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  அம்மா என்றுமே அழகுதான். உங்களின் பதிவில் இருந்து உடனடியாக அம்மாவின் படத்தை நீக்கவும்.

  By at 10/18/2007 10:33 PM  

 • கோவி.கண்ணன் அவர்களே,

  வருகைக்கு நன்றி. பதிவினை பார்த்தேன்.
  திருவாட்டி, செல்வி, அம்மையார் என்பதை விட "புரட்சி தலைவி"/"அம்மா" என்பது சரியாக இருக்கும்.

  By at 10/18/2007 10:34 PM  

 • pulliraja அவர்களே,

  வருகைக்கும், ஆதரவிற்கும் நன்றி. வாழ்க அம்மா.

  By at 10/18/2007 10:34 PM  

 • ஸ்ரீராமரின் அருளுடன் 40 பின்னூட்டங்களைத் தாண்டியதற்கு வாழ்த்துக்கள்!!!!!!
  :)

  By at 10/18/2007 11:15 PM  

 • luusu koottamuda samy.................

  By at 10/19/2007 8:02 AM  

 • ஜெகதீசன் அவர்களே,

  வாழ்த்துகளுக்கு நன்றி. எல்லாம் ஸ்ரீராமரின் அனுக்கிரகம். ஜெய் ஸ்ரீராம்.

  By at 10/19/2007 8:53 PM  

 • yazh அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  By at 10/19/2007 8:53 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za