சோவா? சோமாறியா?
எனது அருமை பதிவர்களே, நான் ஸ்ரீமான் சோ அவர்களை பற்றி இப்படி ஒரு பதிவை எழுதும் நிலைக்கு தள்ளபட்டுவிட்டேன். அதற்காக வேதனைபடுகின்றேன். அதற்கு முழு காரணம் ஸ்ரீமான் சோ அவர்கள்தான்.
ஹிந்துஸ்தானம் காலம் காலமாய் பல படை எடுப்புகளை சந்தித்து வந்துள்ளது. அலக்ஸாண்டர் பாரதத்திற்குள் நுழைய எண்ணி படை எடுத்து தோல்விகண்டு புறமுதுகிட்டு ஓடியது நாம் அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் கிருத்துவ மிஷினரிகள் அதை அப்படியே மாற்றி எழுதிவிட்டனர். பிறகு வடமேற்கில் இருந்து பல பிரிவினர் நம் மீது படை எடுத்தனர். சில காலம் அவர்களிடம் அடிமைபட்டு கிடந்த நம் தாயை சத்திரபதி சிவாஜி போன்ற வீர புருஷர்கள் மீட்டனர் என்பது வரலாறு.
பாரதத்தை சில ஆண்டுகள் ஆட்சி செய்த முகமதியர்கள் நம் பாரம்பரிய சின்னங்களை பல இடங்களில் அபகரித்து விட்டனர். நம் வழிபாட்டு தலமான தாஜ்மகால் அவர்களின் சமாதியாக மாற்றபட்டது. ஸ்ரீராமர் பிறந்த இடமான அயோத்தியில் அவரின் கோவில் ஒரு மசூதியாக மாறியது. அதுபோல் காசியிலும், மதுராவிலும் கோவில்கள் மசூதிகளாக மாறின. அந்த இடங்களை மீட்டு எடுக்கும் ஒரு புனித காரியத்தை இந்தியாவின் இரும்பு மனிதர் என்று எல்லோராலும் அழைக்கபடும் ஸ்ரீமான் அத்வானி அவர்கள் ஆரம்பித்து வைத்தார். நம் இனத்தின் மீது, நம் தாயின் மீது, நம் மதத்தின் மீது ஏற்படுத்தபட்ட கறையினை போக்கும் இப்புனித பணியில் பல கோடி ஹிந்துக்கள் பங்கு பெற்றனர்.
நாடு முழுவதும் பெரிய புரட்சி வெடித்தது. பல ஆண்டு காலமாய் ஒரு களங்க சின்னமாய் விளங்கிய மசூதி இடித்து தரைமட்டமாய் ஆனது. அந்த கரசேவையில் பல்லாயிரம் வீர ஹிந்துக்கள் தங்களின் இன்னுயிரை இழந்தனர். பல லட்சம் ஹிந்துக்கள் காயம் அடைந்தனர். ஒரு வழியாக நம் பாரதத்தாயின் மீது விழுந்த ஒரு சிறு கறை அகற்றபட்டது. உலகம் முழுவதும் பரவி இருக்கும் பல்லாயிரம் கோடி ஹிந்துக்கள் டிசம்பர் ஆறாம் நாளை ஒரு புனித நாளாக எண்ணி ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
அப்படி பட்ட ஒரு புனித சேவையை நிகழ்த்திய பல வீர ஹிந்துக்களை "அராஜக கூட்டம்" என்று சொல்கிறார் ஸ்ரீமான் சோ அவர்கள். ஹிந்துக்கள் என்றாலே அடங்கி போகின்றவர் என்று இருந்த நிலை மாறி எங்களால் அடக்கவும் முடியும் என்று நிரூபித்த நிகழ்வு அது. அவ்வீர ஹிந்துக்களை பற்றி நாடு முழுவதும் பல காவியங்கள் இயற்றபட்டன. நம் தாயின் மீது விழுந்த கறையை துடைத்து எறிந்த அவ்வீர புருஷர்களின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு வைத்து மகிழ்ந்தனர் நம் தாய்மார்கள். அப்படிபட்ட வீரர்கள் உங்களுக்கு ஒரு அராஜக கூட்டமா சோ அவர்களே?
தன் உயிரை துச்சமென மதித்து அந்த கரசேவையில் ஈடுபட்ட ஸ்ரீமான் அத்வானி யார். அதன் முன் வரிசையில் இருந்து ஊக்கபடுத்திய ஸ்ரீமான் ஜோஷி யார். மத்திய மாநில அரசுகளின் அடக்குமுறையில் சோர்ந்து விழுந்த வீரர்களை தன் கர்ஜனை குரலால் தட்டி எழுப்பிய வீரசாதுவான ஸ்ரீ உமா பாரதி யார். கரசேவையை வரவேற்று பேசிய உலகின் ஒரே தங்கதாரகையான எங்கள் அம்மா யார். இவர்கள் எல்லாம் அராஜக கூட்டமா? சொல்லுங்கள் சோ அவர்களே. உங்களுக்கு மத்திய நாடாளமன்றத்தில் ஒரு எம்.பி பதவியை கொடுத்து அழகு பார்த்த இவர்கள் அராஜக கூட்டமா?
நீங்கள் ஸ்ரீராம சேதுவிற்காக போராடலாம. முழு துக்ளக் பத்திரிக்கையையும் அதற்கு பயன்படுத்தலாம். ஏன் சிறபபு இதழ்கள் கூட வெளியிடலாம். ஆனால் இப்படி உண்ட வீட்டிற்கு துரோகம் செய்ய வேண்டாம் என்று 80 கோடி ஹிந்துக்களின் சார்பாக வேண்டி கேட்டுகொள்கின்றேன். நம் தாயின் மீது விழுந்த கறையை போக்கிவிட்டோம் என்று முழங்கிய அந்த வீர ஹிந்துக்கள் எங்கே, அது ஒரு அராஜக கூட்டம் என்று சொல்லும் நீங்கள் எங்கே. அகில உலக வரலாற்றை மாற்றி எழுதிய ஒரு வீர செயலை தயவு செய்து கொச்சைபடுத்த வேண்டாம்.
ஹிந்துக்களை தினமும் தொல்லை படுத்தி வரும் மைனாரிட்டி ஆட்சி புரியும் கயவனை கூட ஒரு வகையில் மன்னிக்கலாம். உங்களை போன்ற சோமாறிகளை ஒரு போதும் மன்னிக்ககூடாது.
வாழ்க கரசேவையாளர்கள். வீழ்க சோமாறி.
குமுதம் இதழில் வந்த பேட்டியில் இருந்து
‘ராமர் பாலம் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் அதை இடிக்கக்கூடாது என்கிறீர்கள். நானூறு வருட புராதனச் சின்னமான பாபர் மசூதியை இடிக்கிறீர்கள்’ என்று எதிர்த்தரப்பு கேட்பதில் நியாயமிருக்கிறதே?
‘‘பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு நான் கடும் கண்டனம் தெரிவித்தேன். ஆனால் அந்த இடிப்பிற்கும், இப்போது ராமர் பாலத்தை இடிக்கத் திட்டமிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. பாபர் மசூதியை இடித்தது ஒரு அராஜக கூட்டம். ஆனால் ராமர் பாலத்தை இடிக்க முனைகிறது மத்திய அரசு. அந்தக் கூட்டம் செய்தது குற்றம். இந்த அரசு செய்ய முனைவது அரசியல் சட்டத்திற்கு விரோதமான, மதச் சார்பின்மைக்கு எதி ரான செயல்!’’
10 Comments:
நட்சத்திர வாரம் நன்றாகவே போகிறது இலைக்காரரே!
By at 10/06/2007 1:37 AM
kasi arumugam - காசி அவர்களே,
உங்களின் வருகைக்கு நன்றி. தங்களின் வருகை தமிழ் பதிவுலகமே திரண்டு வந்ததை போல் இருக்கின்றது.
ஒரு சிறு செய்தி. இந்த வார நட்சத்திரம் கொலைஞரின் பூத் ஏஜண்ட் ஆன லக்கிலுக் என்பவர். நான் அவர் இல்லை. தவறுதலாக பின்னூட்டம் இட்டு விட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.
By at 10/06/2007 3:31 AM
நட்சத்திர வாழ்த்துக்கள் நன்பரே !!!
By at 10/06/2007 5:01 AM
அத்வானி வாழ்க!! சோமாறி சோ ஒழிக........
By at 10/06/2007 6:34 AM
அந்த சோமாறி அராஜகக்கூட்டம் என்று அகிம்சைக்கூட்டத்தைத் தவறுதலாக விமர்சித்த சுட்டியைத் தரமுடியுமா?
By at 10/06/2007 6:51 AM
அம்பி!மன்னிச்சுடேண்டா!
நம்ம சோமாரி அம்பி எப்படியெல்லாம் நெஜத்தை மறைச்சுப்,பூசி மெழுகி கலர் கலரா நம்க்காக மசுரைத்(சாரி உயிர்னு சொல்ல வந்தேன்,போட்டோ ஞாபகம் வ்ந்துடுத்து)தியாகம் பண்ணின்டு இருக்கார்.
ஏதோ தெரியாம ஒரே தரம் உண்மையைச் சொல்லிட்டா!
மன்னிச்சுடுங்கோ!பகிஷ்காரம் வேதாந்தி என்ன சொல்றாரோ அதச் செஞ்சிடுவா!
By at 10/06/2007 7:35 AM
செந்தழல் ரவி அவர்களே,
வருகைக்கு நன்றி. உங்களின் பின்னூட்டம் தவறுதலாக இந்த பதிவில் இட்டுவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.
By at 10/07/2007 6:48 AM
ஜெகதீசன் அவர்களே,
வருகைக்கு நன்றி.
By at 10/07/2007 6:48 AM
மிதக்கும்வெளி அவர்களே,
வருகைக்கு நன்றி. குமுதம் இதழின் சுட்டியை இணைத்து உள்ளேன்.
By at 10/07/2007 6:49 AM
thamizhan அவர்களே,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
By at 10/07/2007 6:49 AM
Post a Comment
<< Home