அம்மான்னா சும்மாவா?

Monday, September 24, 2007

அடிமுட்டாள் பாலு

பாலு என்கிற திம்மி ஸ்ரீராமசேதுவை அழிக்கும் முயற்சியில் முழு மூச்சாய் ஈடுபட்டு வருகின்றான். ஏற்கனவே அவன் தஞ்சை சரஸ்வதி மகாலில் இருந்த ஆதாரங்களை கொளுத்திவிட்டான் என்பது உங்களுக்கு நினைவில் இருக்கும். அதை பற்றி நான் எழுதிய பதிவு இது.


இப்போது இந்த கயவன் புது கதையை அவிழ்த்து விடுகின்றான். மெய்னோவின் அரசு முழு பாலத்தையும் இடிக்காதாம். சுமார் 300 மீட்டர்தான் இடிக்க போகின்றார்களாம். நண்பர்களே கடலின் மீது ஒரு பாலம் கட்டுவது என்பது எவ்வளவு பெரிய சாதனை என்பது அனைவருக்கும் தெரிந்து இருக்கும். அதுவும் 17,50,000 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீராமர் கட்டிய பாலம் இது. எந்த ஒரு கட்டிடமும் காலத்தினால் பழுதாகும். ஸ்ரீராமர் எழுப்பிய பாலமானாலும் அவருக்கும் வருண பகவானுக்கும் இருந்த மன வருத்தத்தினால் இப்பாலம் சிறிது சிறிதாக பழுதடைந்து வந்துள்ளது.

எந்த பாலத்திலும் ஒரு பகுதி இடிந்தால் முழு பாலமுமே கீழே விழுந்துவிடும் என்பது உங்களுக்கு தெரியும். சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு பாலம் அவ்வாறு இடிந்து விழுந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

ஆகவே நண்பர்களே 17,50,000 ஆண்டுகளுக்கு முன் கட்டிய ஒரு பழமை வாய்ந்த சரித்திர பாலத்தில் 300 மீட்டர்களை இடித்தால் அந்த பாலம் என்னவாகும் என்று யோசியுங்கள். ஒரு பகுதியை இடிக்கும்போது மொத்த பாலமே இடிந்து விழும் அபாயம் உள்ளது. பல கிலோமீட்டர் நீளம் உள்ள பாலம் இடிந்து விழுந்தால் கண்டிப்பாக சுனாமி ஏற்படும். தென் இந்தியாவே அந்த சுனாமியில் மூழ்கும் வாய்ப்பு உள்ளதாக NASA செய்திகள் தெரிவிக்கின்றன.

முதலில் 300 மீட்டர் என்பார்கள். பிறகு 3000 மீட்டர் இடித்தாலும் ஆச்சர்யப்பட வேண்டாம். அரசியல் திம்மிகளின் நிலை பற்றி நம் எல்லோருக்குமே தெரியும். ஆகவே ஸ்ரீராம சேதுவில் இருந்து ஒரு இஞ்சை கூட இடிக்க விடமாட்டோம் என்று 80 கோடி இந்துக்களும் உறுதி எடுப்போம். மேலும் மைனாரிட்டி ஆட்சி புரியும் கொலைஞரின் ஆட்களால் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிவரும் தமிழக பா.ஜ.கவின் தலைவர்களில் ஒருவரான தமிழிசைக்கு நம் ஆதரவை தெரிவிக்கும் விதமாக பிரார்த்தனை செய்வோம்.

ஜெய் ஸ்ரீராம்.

11 Comments:

  • //17,50,000 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீராமர் கட்டிய பாலம் இது. எந்த ஒரு கட்டிடமும் காலத்தினால் பழுதாகும். ஸ்ரீராமர் எழுப்பிய பாலமானாலும் அவருக்கும் வருண பகவானுக்கும் இருந்த மன வருத்தத்தினால் இப்பாலம் சிறிது சிறிதாக பழுதடைந்து வந்துள்ளது. //

    அவிங்களே ஆண்டு கணக்கு 15,00,000 /- உங்க கணக்கு அதிகமாக இருக்கே ? வருணபகவானுக்கும் இராமனுக்கும் 17,50,000 வருசமாக பிணக்கு தீரலையா ? வருண பகவான் மனசு வச்சாதான் இராமர் பாலம் காணாமல் போகும் என்று சொல்கிறீர்கள்.
    :)

    //தென் இந்தியாவே அந்த சுனாமியில் மூழ்கும் வாய்ப்பு உள்ளதாக NASA செய்திகள் தெரிவிக்கின்றன.//

    NASAMமா போச்சு !

    By at 9/24/2007 12:32 AM  

  • கோவி.கண்ணன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    ஸ்ரீராமர் வாழ்ந்தது திரேதா யுகத்தில். அது 17,50,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது வரலாற்று நிபுணர்களின் கருத்து. அதை NASA உறுதி செய்துள்ளது.

    By at 9/24/2007 12:49 AM  

  • NASA மா போனவரே!
    GUM னு கெடையேம்பா!

    இட்டது
    பட்டானா
    தட்டது
    வாட்டென்னெ?

    இதுக்கு விடை தெரியுமா?

    By at 9/24/2007 1:33 AM  

  • அதென்ன நண்பா தமிழிசை மீது மட்டும் இவ்வளவு கரிசனம்?

    By at 9/24/2007 3:27 AM  

  • //17,50,000 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீராமர் கட்டிய பாலம் இது. எந்த ஒரு கட்டிடமும் காலத்தினால் பழுதாகும். ஸ்ரீராமர் எழுப்பிய பாலமானாலும் அவருக்கும் வருண பகவானுக்கும் இருந்த மன வருத்தத்தினால் இப்பாலம் சிறிது சிறிதாக பழுதடைந்து வந்துள்ளது//

    கப்ஸாவிற்கு அள்வே இல்லையா... 17,50,000 ஆண்டுகளுக்கு எவனும் இந்த பூமியில் வாழவில்லை, பின் பாலம் எப்படி வந்தது,

    சரி பாலம் இருப்பதாக சொன்னால் நீர்தான் அதில் பயணம் செய்ய வேண்டும்.

    சங்கராச்சாரியை கைது செய்ததால் சுனாமி வந்தது என்றீர்கள் இப்போ ஆதாம் பாலம்... உங்களுக்கெல்லாம் எங்கே மூளை இருக்கப் போகிறது?

    ராமன் கடவுளாக வந்து இந்த அரசை தடுக்க சொல்லுங்கள் பார்களாம்

    By at 9/24/2007 3:32 AM  

  • //"அடிமுட்டாள் பாலு"//
    இலைக்காரரே!!!
    இதைப் பாம்பின் கால் பாம்பறியுமெனக் கொள்ளலாமா???

    By at 9/24/2007 3:39 AM  

  • மாசிலா அவர்களே,

    வருகைக்கு நன்றி.உங்கள் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.

    By at 9/24/2007 7:09 AM  

  • சுகுணாதிவாகர் அவர்களே,

    வருகைக்கு நன்றி. ஸ்ரீமான் இட்லிவடை அவர்கள் பதிவில் தமிழிசை படுகாயம் அடைந்தார் என படித்தேன். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடும் அவர் சன் டிவிக்கு அளித்த பேட்டி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

    By at 9/24/2007 7:12 AM  

  • soft touch அவர்களே,

    வருகைக்கு நன்றி. ஸ்ரீராமர் மீது கைவைத்ததால் என்ன நடக்கும் என்று பாருங்கள்.

    By at 9/24/2007 7:13 AM  

  • யோகன் பாரிஸ்(johan-paris)அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    By at 9/24/2007 7:14 AM  

  • //இட்டது
    பட்டானா
    தட்டது
    வாட்டென்னெ?//

    IT = அது
    BUT = ஆனால்
    THAT = அது
    WHAT = என்ன.

    இதுகூடா உங்களுக்கு தெருயாதா?

    :-(

    By at 9/24/2007 8:40 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za