அம்மான்னா சும்மாவா?

Monday, May 21, 2007

டி.ஆர். பாலுவே ராஜினாமா செய்

திராவிட நஞ்சான மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு வழக்கம் போல வாய் சவடால் விட்டு இருக்கின்றார். ராமர் பாலம் பற்றிய ஆதாரம் இருந்தால் தன் பதவியை ராஜினாமா செய்வேன் என்று சவால் விட்டு இருக்கின்றார்.

ராமர் பாலம் பற்றிய ஆதாரங்களை, வரைபடங்களை தஞ்சை சரஸ்வதி மகாலில் புகுந்து அங்குள்ள அரசு ஊழியர்களை தாக்கி தீயிட்டு கொளுத்தி விட்டால் எங்களுக்கு வேறு ஆதாரமே கிடைக்காதா. புராண ஆதாரம் என்ன, எங்களால் திரைப்பட ஆதாரமே காட்ட முடியும்.

நாடு போற்றும் நல்ல நடிகரான சிவாஜி கணேசன், ஒரு படத்தில் நமது பெரியாரான பாரதி வேடமிட்டு பாட்டு பாடுவார் (படத்தின் பெயர் நினைவில் இல்லை). அதில் பாரதத்திற்கும், ஸ்ரீலங்காவிற்கும் ஒரு பாலம் இருப்பதையும், அதில் வாகனங்கள் செல்வதையும் காட்டி இருப்பார்கள். இப்படிப்பட்ட ஆதாரம் இருக்கும் போது உனக்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்.

எனவே மத்திய அமைச்சர் பதவியில் இருந்து உடனே விலகுமாறு டி.ஆர்.பாலுவை 80 கோடி இந்துக்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றேன். இந்த விஷயம் தொடர்பாக நடந்து வரும் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள் என்று நம்புவோம்.

வாழ்க ராமர் சேது. வீழ்க டி.ஆர். பாலு.

12 Comments:

 • அதில் பாரதத்திற்கும், ஸ்ரீலங்காவிற்கும் ஒரு பாலம் இருப்பதையும், அதில் வாகனங்கள் செல்வதையும் காட்டி இருப்பார்கள்

  :-))))))))))))))))))))))))))))))

  By at 5/22/2007 11:09 AM  

 • நல்ல நகைசுவை பதிவு எல்லாரும் வந்து பார்த்து படித்து சிரித்து மகிழும்படி கேட்டுக்கொள்கிறேன்.

  By at 5/22/2007 10:35 PM  

 • பிரபு ராஜதுரை அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  jeyaganapathi அவர்களே,

  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  By at 5/23/2007 3:00 AM  

 • ராமர் பாலம் வழியே ஈழத்துக்கு பைக்கில் செல்லவேண்டும் என்பது என் லட்சியம். என் லட்சியம் ஈடேறுமா?

  By at 5/25/2007 3:08 AM  

 • //நமது பெரியாரான பாரதி வேடமிட்டு//
  ஓஹோ, இம்மாங் காலமா பாரதியைத்தான் எல்லாரும் பெரியார்னு சொல்லினு வர்ராங்களா?

  ராமர் பாலத்தில வண்டிங்க ஓடின காலத்தில பெட்ரோல் வெல இன்னாங்க. ச்சும்மா ஒரு பேச்சிக்குதான் கேக்கறேன்.

  வேனும்னா அதே சிவாஜிய அதே பெரியார் வேஷத்துல வந்து சாட்சி சொல்ல சொல்லுங்க. நாங்க ஒத்துக்கறோம். இல்லன்னா எல்லாமே பூட்ட கேசுங்க.

  By at 5/25/2007 5:38 AM  

 • லக்கிலுக் அவர்களே,
  வருகைக்கு நன்றி. பாலத்தில் நேராக சென்றால் ஸ்ரீலங்காவிற்கு செல்லலாம். கீழே விழுந்தால் ஆழத்திற்கு செல்லலாம். அது என்ன ஈழம் - அது எங்கே இருக்கிறது?

  மாசிலா அவர்களே,
  வருகைக்கு நன்றி. மதிப்புக்குரிய பெரியவர் மலர்மன்னன் சொன்னதில் இருந்து உலகம் முழுவதும் பாரதியைதான் பெரியார் என்று அழைக்கின்றனர். பெட்ரோலின் விலை பற்றி எனக்கு தெரியவில்லை. ஆர்.எஸ்.எஸ் நண்பர்களிடம் கேட்டு சொல்கின்றேன்.

  By at 5/25/2007 6:54 AM  

 • ரூட் சொன்னதுக்கு நன்றி இலைக்காரன் அவர்களே!

  வலையில் திம்மிகள் ஈழம், ஈழம் என்று சொல்கிறார்களே, அது எங்கே இருக்கிறது என்று தேடிப் பார்க்க ஆசைப்பட்டே. அப்படி ஒன்று மெய்யாலுமே இல்லையா?

  By at 5/25/2007 7:08 AM  

 • ஆதிபராசக்தி அம்மாவின் புகழ் ஓங்க ஒரு பின்னூட்ட கயமைத்தனம்!

  By at 5/26/2007 4:52 AM  

 • போடுங்கய்யா ஓட்டு
  அம்மா எலைய பாத்து.

  பாத்துத்தேன் டா. அய்யோ சாமி, என்ன விட்டுடுங்கடா டேய். பயமா இருக்குதுடா!

  By at 5/28/2007 11:12 AM  

 • சிறந்த மொக்கைப் பதிவுக்கான பரிசு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
  போட்டியில் கலந்து கொள்ளவும்.

  By at 7/24/2007 9:35 PM  

 • வாழ்க அம்மா புகழ்...வீழ்க மைனாரிட்டி தி.மு.க அரசு...!!!

  By at 7/24/2007 9:42 PM  

 • //மாசிலா said...
  போடுங்கய்யா ஓட்டு
  அம்மா எலைய பாத்து.
  //

  மாசிலா அவர்களே!

  உங்கள் கோஷம் டபுள் மீனிங்காக இருக்கிறதே?

  By at 7/24/2007 10:26 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za