அம்மான்னா சும்மாவா?

Friday, April 20, 2007

தமிழ்மணத்தின் தேச விரோத போக்கு

முதலாவதாக எனது பதிவை உங்கள் திரட்டியிலிருந்து தயவு செய்து நீக்காதீர்கள் என்று கடுமையாக எச்சரிக்கின்றேன். அப்படி நீக்கினால் அம்மாவின் தொண்டர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்வார்கள் என நம்புகின்றேன். முடிந்தால் அமெரிக்காவிற்கு ஆட்டோ வரும் என்றும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கின்றேன்.

சமீபத்தில் உங்களுடைய நடவடிக்கை இந்திய இறையான்மையை கீழறுக்கும் விதமாக நடைபெறுகின்றது. உங்களை கேள்வி கேட்ட காரணத்தினால் இரண்டு பதிவர்களின் குடும்பங்கள் கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறது என அம்மாவின் சீடர்கள் தகவல் அனுப்பி உள்ளனர். உடனே என்னிடம் ஆதாரம் எல்லாம் கேட்காதீர்கள். அதெல்லாம் என்னால் கொடுக்க முடியாது என்பதை இங்கே பதிவு செய்கின்றேன். எனக்கு வந்த தகவல்களை மனதில் பூட்டி வைக்காமல் வெளிப்படையாக உங்களிடம் கேட்கின்றேன்.

சென்னை நகரில் வசிக்கும் ஒரு பதிவர் தமிழ்மணத்தின் பாசிச போக்கை கண்டித்ததால் அவரின் ஐ.பி முகவரியை பேட்டை ரவுடிகளிடம் நீங்கள் அளித்துள்ளதாக தெரிகின்றது. அதை வாங்கிய வலை உலக தாதாக்கள், ஆட்சியில் உள்ள கட்சியின் அடிவருடிகள் மூலம் அவர் வீட்டின் தண்ணீர் இணைப்பை துண்டித்து உள்ளார்கள். கடந்த இரண்டு, மூன்று நாட்களாக அவரின் குடும்பம் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றது. இந்த கொடுமைக்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

அடுத்ததாக ஒரு பதிவரின் உறவினருக்கு ஏற்பட்ட தொல்லையினை சற்று கவனிப்போம். புகழ் பெற்ற அந்த பதிவரின் ஐ.பி முகவரியும் தமிழக முசோலினியின் சீடர்களிடம் அளித்து உள்ளதாக தெரிகிறது. ஐ.பி முகவரியை ட்ரேஸ் செய்து அவருடைய உறவினர் யார் யார் என்ற விபரங்களை அந்த அடிவருடிகள் தெரிந்து கொண்டனர். இப்படி இவர்கள் கையில் கிடைத்த அந்த விபரங்கள் இந்திய திருநாட்டின் விரோதிகளான ஜிகாதி ஆதரவாளர்கள், பிராமண வெறுப்பாளர்கள், இந்துமத வெறுப்பாளர்கள், நக்ஸல் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தனித்தமிழ்நாடு கேட்கும் தீவிரவாதிகள் ஆகியோரிடம் சென்று சேர்ந்துள்ளது. அந்த தேசவிரோத கும்பல் ஆட்டையாம்பட்டியில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இந்து சகோதரரை மிரட்டி பதிவரின் உறவினர் வீட்டில் இரண்டு, மூன்று நாட்களாக மலம் சுத்தம் செய்ய விடவில்லை. இதனால் அந்த தெருவே மணத்தில் மிதக்கிறது என்ற கொடுமையான செய்தியினை அறிய நேர்ந்தது.

இதெற்கெல்லாம் மகுடம் சூட்டும் விதமாக வர்ஜீனியா டெக்கில் பணிபுரிந்த இந்திய பேராசிரியரின் ஐ.பி முகவரி வெளியிடப்பட்டதால்தான் அவரை சுட்டு கொன்றார்கள் என்ற விபரம் இப்போது வெளிவந்து உள்ளது. ஏற்கனவே ஒருவர் நீங்கள் களி சாப்பிடுவீர்கள் என்று ஆருடம் சொல்லியுள்ளார். அமெரிக்க சிறையில் களி கிடைக்குமா என்ன? எனவே நீங்கள் எல்லாம் அமெரிக்க ஜெயிலில் சான்ட்விச் சாப்பிடும் காலம் விரைவில் வர எல்லாம் வல்ல அந்த வடிவேலனிடம் வேண்டி கேட்டுக்கொள்கின்றேன். அடுத்த முறை அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் ஹில்லாரியிடம் சொல்லி உங்கள் கைகளில் விலங்கு மாட்டப்படும்.

இப்படியாக பாசிச சிந்தனையுடன் செயல்படும் உங்களை கண்டித்து, இந்திய தேசீயத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் "தலை முதல் வால்வரை புரையோடிக்கிடக்கிற முள்காட்டில்" என் பதிவுகளை இணைக்குமாறு வன்மையாக கண்டிக்கின்றேன்.

வாழ்க பாரதம். வீழ்க தமிழ்மணம்.

9 Comments:

 • சிரிக்காமல், சீரியஸாய் ஒரு நகைச்சுவை பதிவிடுவது எப்படின்னு ஒரு பதிவு போடலாம்ல....

  அசத்தறீங்க...இலைய பத்திரமா பாத்துக்கங்க...இல்லாங்காட்டி யாராவது மேஞ்சிற போறாங்க...ஹி..ஹி...

  By at 4/20/2007 8:38 PM  

 • பங்காளி அவர்களே,

  வருகைக்கு நன்றி. நான் ஒரு சிற்றிலை. இருந்தாலும் இந்த தேசவிரோதிகளிடம் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

  By at 4/20/2007 9:22 PM  

 • பதிவுக்கு நன்றி அய்யா...

  இந்த பாசிச திராவிடத் திம்மிக்களின் தொல்லை தாங்க முடியவில்லை. இவர்களால் வலையுலகம் இந்து நேச சக்திகளை இழந்து சகதியாக காட்சியளிக்கிறது.

  அமெரிக்க டெக்ஸஸ் மாகாண பல்கலைக்கழக மாணவரின் அய் பி தானே வெளியிடப்பட்டது? அதுவும் ஒரு கேஸ் ஸ்டேசனில் பார்ட் டைம் வேளை செய்கிற போது தானே அவர் ஆபாச பதிவுகளை வெளியிட்டார்.

  அதற்கு ஏன் வெர்ஜீனியா பல்கலைக்கழக ஆசிரியரை சோவை வைத்து சுட்டுக் கொன்றனர்?

  அமெரிக்கா சிறையில் வெறும் சீஸ் பர்கர் தான் கிடைக்குமாம்...இந்த மாட்டுக்கறி பார்ட்டிகளுக்கு அது ஓகேவா?

  நீங்கள் தான் அம்மாவிடம் சொல்லி ஆவண செய்ய வேண்டும்

  By at 4/20/2007 9:25 PM  

 • //அடுத்த முறை அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் ஹில்லாரியிடம் சொல்லி உங்கள் கைகளில் விலங்கு மாட்டப்படும்.//

  இதன் மூலம் நீங்கள் ஒரு பெண்ணாதிக்கவாதி என்பதும், பராக் ஓபாமா ஒரு சிறுபான்மை கருப்பினத்தவர் என்பதால் அவரை வெறுக்கிறீர்கள் என்பதும், நீங்கள் ஒரு ஒயிட் சுப்ரிமஸிட் என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.

  By at 4/20/2007 9:42 PM  

 • pot"tea"kadai அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  டெக்ஸஸ், பகுதி நேர வேலை..... இந்த சிற்றிலைக்கு ஒன்றும் புரியவில்லை.

  //இதன் மூலம் நீங்கள் ஒரு பெண்ணாதிக்கவாதி என்பதும், பராக் ஓபாமா ஒரு சிறுபான்மை கருப்பினத்தவர் என்பதால் அவரை வெறுக்கிறீர்கள் என்பதும், நீங்கள் ஒரு ஒயிட் சுப்ரிமஸிட் என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.//

  அம்மாவின் புகழ் பாடும் சிற்றிலைக்கு அமெரிக்காவிலும் ஒரு அம்மா பதவிக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றியது அவ்வளவுதான்.

  By at 4/20/2007 11:06 PM  

 • பின்னூட்ட கயமைத்தனம்

  By at 4/23/2007 9:58 PM  

 • லக்கிலுக் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  நீங்களும், முத்துவும் இலைக்காரன் இல்லை என்று சொல்லியுள்ளது மகிழ்ச்சி தரும் செய்தி.

  By at 4/23/2007 10:11 PM  

 • i would like to put it on record that in my opinion that your have exceptional skill in writing political satire...far far better than many political analysts in tamil media!

  By at 5/03/2007 7:03 AM  

 • பிரபு ராஜதுரை அவர்களே,

  வருகைக்கு நன்றி. தங்களின் பாராட்டிற்கு மிகவும் நன்றி.

  By at 5/03/2007 6:46 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za