அம்மான்னா சும்மாவா?

Tuesday, March 06, 2007

நாராயண மூர்த்தியும் போதை மருந்தும்

காந்திஜியின் வழியில் பீடு நடை போடும் இந்தியாவின் ஒரே நடுநிலை நாளிதழான ஒரு பத்திரிக்கையில் வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றது. எப்போது உண்மையே பேசும் அந்த பத்திரிக்கை எப்போதும் ஜாதி, மதம் பார்க்காத பத்திரிக்கை. எனவே அந்த செய்தி உண்மையாக இருக்கும் என சந்தேகம் எழுந்துள்ளது.

"சாப்ட்வேர்' நிறுவனங்களில் பணியாற்றும் இளம் இன்ஜினியர்களால் நாட்டில் பெரும் கலாசார சீரழிவு ஏற்பட்டு வருகிறது. புனே அருகே நடத்தப்பட்ட போதை விருந்து போல நாடு முழுவதும் நடந்து வருகிறது. இந்த போதை விருந்துகளை, "சாப்ட்வேர்' நிறுவனங்களே நடத்துவதும் அம்பலமாகியுள்ளது.

இதே போல போதை விருந்து சென்னையிலும் நடந்திருக்கிறது. இதில், 25 ஆண்களை கைது செய்து, விடுவித்ததும் தெரியவந்துள்ளது. இந்த தகவல்களால் பெற்றோர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இந்தியாவில் கம்ப்யூட்டர் புரட்சி வெடித்து, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வருவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஐந்தாறு ஆண்டுகளாக, "சாப்ட்வேர்' இன்ஜினியர்களுக்கு தாறுமாறான சம்பளம் உயர்ந்துவிட்டது. இதையடுத்து "பி.பி.ஓ.,' என்று அழைக்கப்படும், "கால்சென்டர்களும்' நாடு முழுவதும் தொடங்கப்பட்டன.

இதில், பணியாற்றும் இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் கைநிறைய சம்பளம் கிடைக்கிறது.இந்தியாவில் கிடைக்கும் தாராளமான சம்பளத்தை எப்படி செலவழிப்பது என்று தெரியாமல், பல்வேறு ஆடம்பர வாழ்க்கைக்கு தயாராகி விடுகின்றனர். கட்டுப்பாடின்றி சுற்றித் திரியும் இன்ஜினியர்கள் ஓரிரு ஆண்டுகளில் தங்களது நிறுவனம் சார்பில் வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர். அங்கே உள்ள கலாசாரம் இன்னும் அவர்களை கெடுத்து அனுப்பி வைக்கிறது.

வெளிநாட்டில் இருந்து இங்கே வந்ததும், மீண்டும் சம்பளம் எகிறுகிறது. அப்பணத்தையும் வெளிநாட்டு கலாசாரத்தையும் இணைத்துக் கொண்டு வாழ்வதால், இந்தியாவின் கலாசாரம் பெரிதும் சீரழிகிறது. இந்த கலாசார சீரழிவுக்கு காரணம், "சாப்ட்வேர்' நிறுவனங்களே என்று குற்றம் சாட்டப்படுகின்றன.கம்ப்யூட்டரில் பணியாற்றுபவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது என்பதால் தான் வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. மன அழுத்தத்தை போக்கிக் கொள்ள அந்தந்த, "சாப்ட்வேர்' நிறுவனங்களே பலவித பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கிறது.இப்படி ஆரம்பிக்கும் நிகழ்ச்சிகளில் கொஞ்சம் கொஞ்சமாக பீர், பிராந்தி, விஸ்கி என்று தொடங்கும்.

பிறகு, போதைப் பொருள் பழக்கத்தையும் உருவாக்கி விடுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் தங்கள் விருப்பப்படி பெண்களை கட்டியணைத்து நடனமாடுவார்கள். அதன் பிறகு அவர்களுக்கு இடையே நெருக்கம் அதிகமாகி, "செக்ஸ்' வரை சென்று விடுகிறது.இது போன்ற போதை விருந்துகள் நாடு முழுவதும் நடக்கிறது. அப்படி நடந்த விருந்து தான் புனே சம்பவம். இச்சம்பவம் தமிழகத்தில் உள்ள பெற்றோர்களையும் கவலை அடையச் செய்துள்ளது. "சாப்ட்வேர்' நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்களையும், இளம் பெண்களையும் வைத்து பெரும் கும்பல் போதை விருந்துகளை ஏற்பாடு செய்கிறது.

இந்தியாவின் எல்லா நகரங்களிலும் இது போன்ற போதை விருந்து நடத்தப்பட்டு வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் உள்ள குலுமனாலியில் தான் அதிக அளவில் போதை விருந்து நடத்தப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சென்னையிலும் இது போன்ற போதை விருந்து நடத்தப்பட்டு வந்தது.சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், இப்படி போதை விருந்து நடத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் 25 ஆண்களை மட்டும் போலீசார் கைது செய்து, விடுதலை செய்து விட்டனர். அந்த விருந்துக்கு 500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். உள்ளே சென்று எதை வாங்கி சாப்பிட்டாலும், பணம் தர வேண்டும். அதில் கலந்து கொள்பவர்கள் குறைந்தது இரண்டாயிரம் ரூபாய் வரை செலவு செய்ய நேரிடும் என்று கூறப்படுகிறது. சென்னையில் நடந்த போதை விருந்தில் பெண்களும் பங்கேற்றுக் கொண்டனர். ஆனால், போலீசார் இளம் பெண்களை மட்டும் கைது செய்யாமல் எச்சரிக்கை செய்து வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.மத்திய, மாநில அரசுகளின் கடும் சட்ட திட்டமும், போலீசாரின் கடுமையான நடவடிக்கைகளும் தான் இதுபோன்ற கலாசார சீரழிவுகளை தடுக்க முடியும் என்பதே கவலை அடைந்துள்ள பெற்றோர்களின் கருத்து.

செய்தி கிடைத்த இடம்

மேலே குறிப்பிட்டுள்ள செய்தி உண்மையா? ஆம் எனில், நாட்டை கெடுக்கும் நாராயண மூர்த்தி, பிரேம்ஜி மற்றும் முண்ணனி சாப்ட்வேர் நிறுவனங்களின் தலைவர்களை என்ன செய்யலாம்? இது நம் பாரத தேசத்திற்கு விடப்பட்டுள்ள ஒரு அறைகூவல். தேசப்பற்றுள்ள பதிவர்கள் இதை பற்றி விரிவாக விவாதிப்பார்கள் என்று நம்புகின்றேன்.

வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.

46 Comments:

  • லூசுத்தனமா பேசக்கூடாது அவங்க என்ன போதையை போட்டுட்டு ஆடுன்னா சொல்லி விட்டாங்க. நாட்டை முன்னேற்ற அவங்க தன்னால ஆன பங்கை செய்து கொண்டு இருக்காங்க. அவங்க கம்பெனி ஆரம்பிக்காவிட்டால் இந்தியாவூல பாதி பேர் இப்பொழுது TNPC , Bank தேர்வுகளுக்காக தேவுடு காத்துகிட்டு வேலை இல்லாம வெட்டி ஆபிசராகத்தான் சுத்திகிட்டு இருந்து இருப்பாங்க. இவனுங்க கொழுப்பேறி ஆட்டம் போட்ட அவங்க என்ன பண்ணுவாங்க. அப்ப பார்த்தா காந்தி வாங்குன சுதந்திரத்தினால் தான் இவங்க கம்பெனி ஆரம்பிச்சாங்க அதானால் காந்திதான் இதுக்கு காரணம் அப்படின்னு அவரை உள்ள வெப்போமா?

    By at 3/06/2007 8:03 PM  

  • சந்தோஷ் அவர்களே,

    வருகைக்கு நன்றி. செய்தியை நீங்கள் சரியாக படிக்கவில்லை என்று நினைக்கின்றேன்.

    போதை புழக்கத்தினை சாப்டுவேர் நிறுவனங்கள் உருவாக்குகிறது என செய்தி சொல்கின்றது.

    By at 3/06/2007 10:05 PM  

  • //நாட்டை கெடுக்கும் நாராயண மூர்த்தி, பிரேம்ஜி மற்றும் முண்ணனி சாப்ட்வேர் நிறுவனங்களின் தலைவர்களை //

    இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
    சும்மா, கூட்டம் கூட எதையாவ‌து சொல்ல‌க் கூடாது இலைக்கார‌ரே.
    ந‌ம்ம‌ ஊர்ல‌ ஒரு தொழில் தொட‌ங்க‌ணும்னா எவ்ளோ பெரிய‌ க‌ஷ்ட‌ம்னு ப‌ண்ணிப்பாத்தாதான் தெரியும்.

    நீங்க‌ சொன்ன‌ நாராய‌ண‌மூரத்தியும், ப்ரேம்ஜியும், தொழில் தொட‌ங்கி 1பில்லிய‌ன் டால‌ர் அள‌வுக்கு வ‌ள‌ர்ச்சிய‌ குடுத்து, ந‌ம் பொருளாதார‌த்துக்கும், ப‌ல‌ ஆயிர‌ம் இளைஞ‌ர்/இளைஞிக‌ளுக்கு பெரிய‌ வாழ்க்கை அமைச்சுக் கொடுத்திருக்காங்க.

    படித்தவன் கேளிக்கை விருந்தில் குடிப்பதை ப்ரேம்ஜி ஊரைக் கெடுக்கிறார் என்பதை போல் திரித்துக் கூறுவது கேவலம்.


    உண்மையிலேயே போதைப் பொருள் ஊடுருவி இருந்தா, அது இலையும், சூரியனும், கையும், தாமரையும் செய்த குற்றம் ‍. அதை எல்லாம் வெட்டினால் தானாய் சரியாகும்.

    By at 3/06/2007 10:29 PM  

  • ஆமா ! நாராயண மூர்த்தி தான் இவனுங்க கிட்ட வந்து போதைப் பொருள் எடுத்துக்கோ -ன்னு சொன்னாராக்கும் .அப்படியே சொன்னாலும் உனக்கு சுய புத்தி எங்கே போச்சு.

    வெளிநாட்டுக்கு போய் அங்கவுள்ள கலாச்சாடத்தால கெட்டு போறாங்களாம் .ஆமய்யா .உள்நாட்டுல எல்லோரும் யோக்கிய சிகா மணிகள் ..உளறலுக்கு ஒரு அளவு இல்லியா!

    By at 3/06/2007 10:40 PM  

  • மென்பொருள் துறை வரதுக்கு முன்னாடி இந்தியால போதை பழக்கமே இல்லையா இல்லை கலாசார சீரழிவு இல்லையா. அப்ப எந்த நாராயணமூர்த்தி வந்து கத்துக் குடுத்தாருங்க?

    By at 3/06/2007 11:05 PM  

  • badnewsindia அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    "கூட்டம் கூட எதையாவ‌து சொல்ல‌க் கூடாது இலைக்கார‌ரே"

    நாட்டின் ஒரே நடுநிலை பத்திரிக்கையில் வந்திருப்பதை எடுத்து போட்டதற்கு என் மீது ஏன் பாய்கின்றீர்கள் என புரியவில்லை. அந்த செய்தி உண்மையாக இருந்தால் அவர்களை என்ன செய்யலாம் என்ற கேள்வியினைதான் நான் கேட்டேன்.

    மீண்டும் ஒரு முறை அந்த செய்தியினை படியுங்கள். முக்கியமாக "இந்த போதை விருந்துகளை, 'சாப்ட்வேர்' நிறுவனங்களே நடத்துவதும் அம்பலமாகியுள்ளது" என்று எழுதியுள்ளனர். நாட்டின் நலனுக்காக உழைக்கும் தாங்கள் இந்த செய்தி மெய் எனில் என்ன செய்ய போகின்றீர்கள்? பொய் என்றால் என்ன செய்ய போகின்றீர்கள்?

    By at 3/06/2007 11:12 PM  

  • ஜோ அவர்களே,

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    By at 3/06/2007 11:12 PM  

  • மணிகண்டன் அவர்களே,

    வருகைக்கு நன்றி. இந்த கேள்வியை அந்த நாளிதழிடம்தான் கேட்க வேண்டும்.

    By at 3/06/2007 11:51 PM  

  • நெடுங்குழைகாதன் அவர்களே,

    வருகைக்கு நன்றி. நான் உண்மையிலேயே மனம் நொந்துதான் இப்பதிவை இட்டேன்.

    By at 3/06/2007 11:52 PM  

  • //அது புரியாம சந்தோஷ், ஜோ, பேட்நியூஉஸ் இவுங்கல்லாம் டென்சன் வேற ஆகுறாங்க..//

    இங்கே அந்த பத்திரிகை உளறுவதாகத் தான் சொன்னேன் .இலைக்காரனை அல்ல .இலைக்காரன் தெளிவாத்தான் இருக்காரு ,நம்மை குழப்புவதில்..ஹி.ஹி

    By at 3/07/2007 12:05 AM  

  • சாப்ட்வேர் காரங்க ஜட்டிய கழட்டிபோட்டுட்டு ஆடறதுக்கும் குண்டி காய வேல செய்யறதுக்கும் நெறைய கம்பெனிங்க கூட்டி கூட குடுப்பானுங்க...ஒரே கம்பெனில வேல செய்யற ஆணும் பெண்ணும் கல்யாணம் பண்ணிகிட்டா தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து ஒஃப்பிஷியல் மாமா வேல பாத்ததும் நாராயணமூர்த்தி தானே?

    இது பத்தி பார்க் ஹொட்டேல்ல நடந்த கூத்து தான் தினமலத்துல ஏற்கனவே பப்லிஷ் ஆய்டுச்சே...அப்புறமென்ன...

    வேலை பார்ப்பவர்களை வேறு கம்பெனிக்கு தாவாத வண்ணம் கட்டிப்போடுவதற்காக கம்பெனிகள் எதையும் செய்யும்...அதில் சிலது தான் இது!

    சூப்பர் பதிவு எலக்காரன் அவர்களே...

    பாத்து இருந்துக்கப்பு...ரீட் நோட்டிஃபை அனுப்பிடப் போறாங்க?
    எனக்கேவாங்கறீங்களா? அதுவும் சரி தான் ;)

    By at 3/07/2007 12:06 AM  

  • சில பின்னூட்டங்கள படிக்கும் போது எனக்கு செம சிரிப்பு...எதுத்தாப்புல பவுல் ஒரு மாதிரி பாக்குறான்.

    அவன் கொடுத்தா இவன் ஏன் எடுக்கறான்னு கேக்கும் அறிவுக்கொழுந்துகளே...இங்கு கொடுப்பதும் எடுப்பதும் பெரிய மேட்டர் இல்ல.

    வருங்கால வல்லரசு இந்தியாவை தாங்கப்போகும் ஜட்டி பனியன் (சாப்ட்)வேர் கம்பெனிகள் எப்புடி மனிதனின் சபலத்தை மேனிப்புலேட் பண்ணுறானுங்க என்பது தான்.

    இல்ல..அவங்க மேனிபுலேட் பண்ண இவனுங்க என்ன கைப்புள்ளையான்னு எங்கிட்ட கேக்காதீங்கபா.

    By at 3/07/2007 12:11 AM  

  • pot"tea"kadai அவர்களே,

    வருகைக்கு நன்றி. சாப்டுவேர் ஆசாமிகள் மேல் செம காட்டமாக இருப்பதாக தெரிகிறது. எனக்கு சென்ற ஆண்டே ரீட் நோட்டிஃபை அனுப்பிவிட்டார்கள்.

    By at 3/07/2007 12:21 AM  

  • யப்பா எலை,

    நீ நாந்தான்னு எல்லாரும் கிசுகிசு பேசிக்கிறாங்க. அப்படி எல்லாம் இல்லைன்னு க்ளியரா சொல்லிடு

    By at 3/07/2007 12:58 AM  

  • யோவ் அந்த பத்திரிக்கை விற்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவார்கள் . சொல்ல முடியாது நீங்களே ஒரு மென்பொருளாலர் என்ற ஐயம் எழுகிறது?

    By at 3/07/2007 2:06 AM  

  • For your kind information, drinks parties are not allowed in Infosys parties (even at onsite)...

    Sathya anna,
    //ஒரே கம்பெனில வேல செய்யற ஆணும் பெண்ணும் கல்யாணம் பண்ணிகிட்டா தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து ஒஃப்பிஷியல் மாமா வேல பாத்ததும் நாராயணமூர்த்தி தானே?//
    Even this is not true... This is not in Infosys policy... These are all just some rumors abt S/W industries...

    -Vetti Balaji

    By at 3/07/2007 8:14 AM  

  • //இதே போல போதை விருந்து சென்னையிலும் நடந்திருக்கிறது.//

    அண்ணே அந்த விலாசம்...

    //கம்ப்யூட்டரில் பணியாற்றுபவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது என்பதால் தான் வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. மன அழுத்தத்தை போக்கிக் கொள்ள அந்தந்த, "சாப்ட்வேர்' நிறுவனங்களே பலவித பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கிறது.இப்படி ஆரம்பிக்கும் நிகழ்ச்சிகளில் கொஞ்சம் கொஞ்சமாக பீர், பிராந்தி, விஸ்கி என்று தொடங்கும்.//

    இது உண்மை தான். பெங்களூருவில் ஒரு நிறுவனத்தில் நான் வேலை பார்க்கும் பொழுது, எந்த வியாபார மீட்டிங் என்றாலும் கட்டாயம் பீர், ஹாட் உண்டு. ஒரு முறை சரியாக சரக்கடித்து 'பகவத் கீதை'யின் அருமை பெருமைகளை பேசியிருகிறோம்...

    //இமாச்சல பிரதேசத்தில் உள்ள குலுமனாலியில் தான் அதிக அளவில் போதை விருந்து நடத்தப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.//

    போட்றா குலுமனாலிக்கு ஒரு டிக்கெட்டை...

    //நாட்டை கெடுக்கும் நாராயண மூர்த்தி, பிரேம்ஜி மற்றும் முண்ணனி சாப்ட்வேர் நிறுவனங்களின் தலைவர்களை என்ன செய்யலாம்//

    இதில் இவர்கள் பங்கு என்ன என்று தெரியவில்லை. இன்ஃபோஸிஸ், விப்ரோவில் இப்படிப்பட்ட பார்ட்டிகள் உண்டா என்று தெரியவில்லை (அதாவது அஃபீஷியல் மீட்டிங்கில்...), ஆனால் நிச்சயமாக வெளிநாட்டை மையமாக கொண்டுள்ள நிறுவனங்களில் உண்டு (ஐ.பி.எம், ஜீ.ஈ, ஐ.சாஃப்ட்).

    //மென்பொருள் துறை வரதுக்கு முன்னாடி இந்தியால போதை பழக்கமே இல்லையா இல்லை கலாசார சீரழிவு இல்லையா. அப்ப எந்த நாராயணமூர்த்தி வந்து கத்துக் குடுத்தாருங்க?//

    இப்போ அதிகமாகியிருக்குன்னு சொல்லுறாரு.

    //வேல செய்யறதுக்கும் நெறைய கம்பெனிங்க கூட்டி கூட குடுப்பானுங்க...//

    இது உண்மை தான்.

    //ஒரே கம்பெனில வேல செய்யற ஆணும் பெண்ணும் கல்யாணம் பண்ணிகிட்டா தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து ஒஃப்பிஷியல் மாமா வேல பாத்ததும் நாராயணமூர்த்தி தானே?//

    இதுவும் உண்மை. ஆனால், இது முற்றிலும் வியாபார நோக்கோடு செய்யப்பட்டது. ஒரே அலுவலகத்தில் கணாவன் மனைவியாக இருந்தால் சீக்கிரம் கம்பெனியை விட்டு ராஜினாமா செய்யமாட்டார்கள் என்ற நோக்கம்.

    //(சாப்ட்)வேர் கம்பெனிகள் எப்புடி மனிதனின் சபலத்தை மேனிப்புலேட் பண்ணுறானுங்க என்பது தான்.//

    இது தான் காப்பரேட் கல்ச்சர். என்ன செய்ய?

    //சாப்டுவேர் ஆசாமிகள் மேல் செம காட்டமாக இருப்பதாக தெரிகிறது.//

    கவலையேபடாதீங்க. நானும் சாஃப்ட்வேர் ஆசாமி தான்.

    By at 3/07/2007 9:58 AM  

  • லக்கிலுக் அவர்களே,
    நீங்களோ கருணாநிதியின் கட்சி. நான் அம்மாவின் புகழ் பரப்ப முளைத்திருக்கும் சிற்றிலை. அப்புறம் நான் தான் நீங்கள் என்றால்.... மண்டை குழம்புகின்றதே?.

    kumaran அவர்களே,
    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    வெட்டிப்பயல் அவர்களே,
    நீங்கள் infosys இல் வேலை செய்கின்றீர்களா?

    சீனு அவர்களே,
    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. உங்களின் கருத்து ஒரு பதிவு போல இருக்கின்றது.

    By at 3/07/2007 7:31 PM  

  • அடடே! எதுங்க அது காந்திஜி வழியில் பீடு நடை போடும் பத்திரிகை? அதுக்குப் பேரு கெடையாதா? இவ்வளவு மிகைப்படுத்தி எழுதியிருக்காங்களே. அதுக்கு நீங்க வெச்ச தலைப்பு இன்னமும் சிரிப்புத்தான் போங்க.

    கம்பெனிகள் இப்படிப்பட்ட பார்ட்டிகள நடத்துனா அப்புறம் ஏன் ஐநூறு ரூவா நுழைவுக்கட்டணம் வாங்குறாங்க? கம்பெனி பார்ட்டிகள்ல தண்ணிப் பழக்கம் இருக்கும். உண்மைதான். ஆனால் எல்லா நிறுவனங்களிலும் அப்படி அல்ல என்பதே உண்மை. அது சரி? இந்தக் கம்பெனியில வேலை செய்றவங்க மட்டுந்தான் குடிக்கிறாங்களோ? தெரிஞ்சுக்கக் கேக்குறேனய்யா.

    வெளிநாட்டுக்குப் போனா கெட்டுப் போயிருவாங்களா? ஆகா. என்ன ஒரு கருத்து. என்ன ஒரு கருத்து. அப்ப இந்தியாவுல இருக்குறவங்கள்ள இதுவரைக்கும் வெளிநாட்டுக்கே போகாதவங்கள்ளாம் உத்தம சிகாமணிகள். வாழ்க உங்கள் புகழ். அப்ப பட்டிக்காட்டுல இருந்து சென்னைக்கு வர்ரவனும்...சென்னைல இருந்து பம்பாய்க்குப் போறவனும் கூட கெட்டுத்தான போகனும். என்னவோ போங்கய்யா.

    நாராயணமூர்த்தி என்ன செய்ய வேண்டும் என்றா கேட்கின்றீர்கள்? நான் இரண்டு முறை மென்பொருள் நிறுவனம் மாறியவன். ஏழு ஆண்டுகள் பணியனுபவம். இப்பொழுது இன்போசிஸ்சில் பணி. ஆகையால் பொதுவாக எந்த நிறுவனங்களில் என்ன நடக்கிறது என்று ஓரளவு தெரியும். என்னுடைய பழைய நிறுவனத்தில் புதுக்கட்டிடம் கட்டித் திறந்ததற்கு பார்ட்டி நடந்தது. அதில் தண்ணீரும் ஒரு பகுதி. ஆனால் இன்போசிஸ் நிறுவனத்துக்குள் தண்ணி மட்டுமல்ல எந்த போதைப் பொருளுக்கும் அனுமதி இல்லை. அதுவுமில்லாமல் அவர்களது அலுவலகப் பார்ட்டிகளிலும் அவைகளுக்குத் தடை. இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொருத்தராகச் சென்று குடிக்காதே குடிக்காதே என்று சொல்ல வேண்டுமா? அதுவும் நடக்கிறது. அதற்கென்றே ஹெல்ப்லைன்களும் இருக்கின்றன. அவைகளைப் பற்றிய விளம்பரமும் செய்தியும் நிறுவனத்தில் சேரும் அனைவருக்கும் கொடுக்கப்படும்.

    அதுவுமில்லாமல் நீர்நிலைப் பகுதிகளிலும் அபாயகரமான பகுதிகளிலும் பார்ட்டி நடத்தக் கூடாது. அது பணியாளர்களின் பாதுகாப்பு கருதி.

    ஒரே அலுவலகத்தார் திருமணம் செய்தால் ஒரு லட்சம். அப்படி ஒரு திட்டம் இன்போசிஸ்சில் கிடையாது. எனக்குத் தெரிந்த பல கம்பெனிகளில் கிடையாது. பொத்தாம் பொதுவாகக் குறை சொல்வதை விடுத்து முறையான தகவல்களைச் சொன்னால் அவைகளுக்கு பதில் சொல்ல முடியும். தவறுதான் என்றால்...அதை ஒப்புக் கொள்ளவாவது முடியும்.

    By at 3/07/2007 10:02 PM  

  • g.ragavan அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    "கம்பெனிகள் இப்படிப்பட்ட பார்ட்டிகள நடத்துனா அப்புறம் ஏன் ஐநூறு ரூவா நுழைவுக்கட்டணம் வாங்குறாங்க? ..."

    எனக்குள் எழுந்த கேள்விகளில் இதுவும் ஒன்று. ஆனால் பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் செய்தி வெளியாகி உள்ளது. தினகரன், நமது எம்.ஜி.ஆர், முரசொலி போன்ற மூன்றாம் தர பத்திரிக்கை என்றால் விட்டுவிடலாம். ஆனால் ....

    By at 3/07/2007 10:24 PM  

  • ilaikkaran, please add the URL of the 'gandhian' newspaper please.

    nanri.

    By at 3/07/2007 11:11 PM  

  • எனக்குள் எழுந்த கேள்விகளில் இதுவும் ஒன்று. ஆனால் பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் செய்தி வெளியாகி உள்ளது. தினகரன், நமது எம்.ஜி.ஆர், முரசொலி போன்ற மூன்றாம் தர பத்திரிக்கை என்றால் விட்டுவிடலாம். ஆனால் ....
    //

    enna annal nonnalnu endha magzine nu perai solluyA!!!

    By at 3/08/2007 12:29 AM  

  • //நாட்டை கெடுக்கும் நாராயண மூர்த்தி, பிரேம்ஜி மற்றும் முண்ணனி சாப்ட்வேர் நிறுவனங்களின் தலைவர்களை என்ன செய்யலாம்//

    இதை வன்மையாக கண்டிக்கிறேன். லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கும் இவர்கள் மேல் உங்களுக்கு என்ன கோபம். பொதுவாக software மக்களை பார்த்தால் மற்ற துறையினருக்கு எரிச்சல் தான். கொஞ்சம் பொறுங்கள் மற்ற துறையில் உள்ளவர்களின் சம்பளமும் software மக்கள் வாங்கும் அளவுக்கு உயரபோகிறது.

    By at 3/08/2007 12:52 AM  

  • //நாட்டின் ஒரே நடுநிலை பத்திரிக்கையில் வந்திருப்பதை எடுத்து போட்டதற்கு என் மீது ஏன் பாய்கின்றீர்கள் என புரியவில்லை. அந்த செய்தி உண்மையாக இருந்தால் அவர்களை என்ன செய்யலாம் என்ற கேள்வியினைதான் நான் கேட்டேன்.
    //

    யோவ் இலை,

    அந்த நடுநிலை நாளேடு தினமலம் தானே?

    By at 3/08/2007 12:55 AM  

  • // இலைக்காரன் said...
    g.ragavan அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    "கம்பெனிகள் இப்படிப்பட்ட பார்ட்டிகள நடத்துனா அப்புறம் ஏன் ஐநூறு ரூவா நுழைவுக்கட்டணம் வாங்குறாங்க? ..."

    எனக்குள் எழுந்த கேள்விகளில் இதுவும் ஒன்று. ஆனால் பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் செய்தி வெளியாகி உள்ளது. தினகரன், நமது எம்.ஜி.ஆர், முரசொலி போன்ற மூன்றாம் தர பத்திரிக்கை என்றால் விட்டுவிடலாம். ஆனால் .... //

    இலைக்காரரே....அவ்வளவு பெரிய பின்னூட்டத்த அவ்வளவு செய்திகளோட போட்டிருக்கேன். ஒங்களுக்குப் அந்த ஒரு வரி மட்டுந்தான் கண்ணுல பட்டதா? அதென்ன பத்திரிகைன்னு சஸ்பென்ஸ் வச்சிக்கிட்டேயிருங்க....எங்களுக்கு வேலையிருக்கு.

    By at 3/08/2007 1:12 AM  

  • பின்னூட்டம் இட்டவர்கள் URL கொடுக்குமாறு கூறியதால், பதிவினை சற்று மாற்றி இருக்கின்றேன். நேற்று இது முதல் செய்தியாக வந்தது.

    By at 3/08/2007 6:04 AM  

  • g. ragavan அவர்களே,

    மன்னிக்கவும். என் கருத்தோடு ஒட்டிப் போன வாக்கியத்தினை மட்டும் மேற்கோள் காட்டி இருந்தேன்.

    By at 3/08/2007 6:05 AM  

  • // நாட்டை கெடுக்கும் நாராயண மூர்த்தி, பிரேம்ஜி மற்றும் முண்ணனி சாப்ட்வேர் நிறுவனங்களின் தலைவர்களை என்ன செய்யலாம்
    //

    என்னமோ நாராயணமூர்த்தி வந்து எல்லாருக்கும் ஊத்தி ஊத்தி குடுத்த மாதிரி பேசறீங்க...

    Infyல 60000க்கும் அதிகம் பேர் வேலை செய்யராங்க. அவங்க ஒவ்வொருத்தரையும் என்ன பண்றாங்க ஏது பண்றாங்கன்னு பாக்கறதுதான் அவருக்கு வேலையா??? கெட்டு போகனும்னு நினைக்கறவன் எங்க இருந்தாலும் கெட்டு போகதான் செய்வான்...

    Vijay TVல ஒரு programmeல எடுத்த சர்வேல 80%க்கும் அதிகம் பேர் சாஃப்ட்வேர் மக்கள் அதிக சம்பளம் வாங்கறதால அவங்க மேல பொறாமை இருக்குனு open statementஆ சொல்லியிருந்தாங்க. எல்லாம் இந்த மாதிரி பொறாமையால வந்த வினை.

    சும்மா வாய் இருக்கறதுன்றதுக்காக இஷ்டத்துக்கு பேசக் கூடாது...

    By at 3/08/2007 7:16 AM  

  • //ஒரே கம்பெனில வேல செய்யற ஆணும் பெண்ணும் கல்யாணம் பண்ணிகிட்டா தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து ஒஃப்பிஷியல் மாமா வேல பாத்ததும் நாராயணமூர்த்தி தானே?//

    அண்ணாச்சி....
    அறுபதாயிரம் இந்தியர்களுக்கு சாப்பாடு போடுற ஒரு நல்ல மனுசனுக்கு நல்லப் பட்டம் கொடுத்திருக்கீங்கைய்யா???

    நல்லா இருங்கப்பு...

    நீங்க குரைச்சு அந்த சூரியன் மறையாதப்பு... கொஞ்சம் தண்ணி குடிங்க.. ஏன் இப்படி வவுறு எறியிறீங்க???

    By at 3/08/2007 8:34 PM  

  • //காந்திஜியின் வழியில் பீடு நடை போடும் இந்தியாவின் ஒரே நடுநிலை நாளிதழான ஒரு பத்திரிக்கையில் வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றது.//

    தினமலரா???

    ஐயோ!!! தலை சுத்துதே!!! யாராவது கைத்தாங்களா பிடிச்சி என்னை இந்த பதிவ விட்டு வெளிய கூப்பிட்டு போங்கப்பா!!!

    நான் நீங்க சீரியஸா பேசறீங்கனு இல்லை நினைச்சி பதிவெல்லாம் போட்டேன்...

    By at 3/08/2007 9:46 PM  

  • வெட்டிப்பயல் அவர்களே,

    வருகைக்கு நன்றி. ஏன் உங்களுக்கு தினமலர் மீது இப்படி ஒரு எண்ணம். அவர்கள் என்ன நினைத்து வெளியிட்டார்களோ தெரியவில்லை, நான் மனம் நொந்துதான் இப்பதிவினை இட்டேன். "இது உண்மையா? ஆம் எனில்" என்று சொன்னதை வைத்து நான் தான் ஏதோ வயித்தெரிச்சலில் விளம்பரம் தேடுவதாக அனைவரும் என்னை தாளித்து எடுக்கின்றனர்.

    By at 3/08/2007 11:51 PM  

  • //காந்திஜியின் வழியில் பீடு நடை போடும் இந்தியாவின் ஒரே நடுநிலை நாளிதழான ஒரு பத்திரிக்கையில் //
    //செய்தி கிடைக்கும் இடம்: தினமலர்//

    இதுக்குப் பிறகும் நீங்க அம்மாவின் புகழ்பரப்ப முளைத்திருப்பவர்னு சொன்னா.. சந்தேகமா இருக்கே!!!

    எப்படியோ நாராயண மூர்த்திக்கும் தமிழ்வலைப்பதிவுகளில் எத்தனை செல்வாக்கு இருக்குங்கிறது தெரிஞ்சிது இந்தப் பதிவால.. :)

    By at 3/08/2007 11:57 PM  

  • //அண்ணாச்சி....
    அறுபதாயிரம் இந்தியர்களுக்கு சாப்பாடு போடுற ஒரு நல்ல மனுசனுக்கு நல்லப் பட்டம் கொடுத்திருக்கீங்கைய்யா???

    நல்லா இருங்கப்பு...

    நீங்க குரைச்சு அந்த சூரியன் மறையாதப்பு... கொஞ்சம் தண்ணி குடிங்க.. ஏன் இப்படி வவுறு எறியிறீங்க???//

    நா குரைப்பது இருக்கட்டும் ...எவனையோ பாத்து நான் குரைத்தால் உனக்கு ஏன் புடுங்குது.
    அதிகமா சரக்கடிச்சிட்டியோ?

    நல்லது பண்ணால் மாமா வேல பாக்குறது தப்பில்லையோ. நான் சொன்னது அவர்கள் மனிதர்களின் பணத்தாசையை எப்படியெல்லாம் கம்பெனிக்காக மேனிபுலேட் பண்றாங்க என்பது தான்.

    இன்ஃபி வண்டவாளங்கள் பலநூறு இருக்கிறது.
    அமுக்கி வாசிங்கோ.

    By at 3/09/2007 12:06 AM  

  • வவுறு ஏன் எறியனும்

    15 ரூபாய்க்கு இருந்த மசாலா தோச 50 ரூபாய ஆனது ஏன்?

    3,500 ரூ இருந்த மாத வாடகை 7,000 ரூ ஆனதேன்?

    ஏன் ஏன் ஏன்?

    வெறும் சாப்ட்வேர் பயலுங்களுங்களுக்கு 50,000ஆயிரம் சம்பளம் கொடுத்துட்டா இண்டியன் எகானமி ஏறுதோ இல்லியோ ஒக்காமக்கா வெலவாசி மட்டும் பட்ஜெட் போடாம ஏறும்.

    நா ஏன் வவுறு எரியனும்?

    ஜிரா...அந்த ஒரு லட்ச ரூ மேட்டர் பதிவு கூட யாரோ போட்டிருந்தாங்க.(ஒரு வேள் புரளியோ)
    அது பொய் கிடையாது. கம்பெனி பேர் வேனா மாரியிருக்கலாம்.

    By at 3/09/2007 12:19 AM  

  • பொன்ஸ் அவர்களே,

    வருகைக்கு நன்றி. நான் அம்மாவின் புகழ் பரப்ப வந்திருக்கும் சிற்றிலை. தினமலர் எப்போதும் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியை சாடிக்கொண்டு இருக்கும். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் நான் அவ்வப்போது தினமலரை துணைக்கு அழைத்துக் கொள்வேன்.

    pot"tea"kadai அவர்களே,

    ரொம்ப சூடாக இருக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். கடையில் ஏதேனும் குளிர்பானம் மன்னிக்கவும் இளநீர் இருந்தால் குடியுங்கள்.

    By at 3/09/2007 12:46 AM  

  • :-))

    :-P
    :-O

    By at 3/09/2007 12:57 AM  

  • // Pot"tea" kadai said...
    வவுறு ஏன் எறியனும்

    15 ரூபாய்க்கு இருந்த மசாலா தோச 50 ரூபாய ஆனது ஏன்?

    3,500 ரூ இருந்த மாத வாடகை 7,000 ரூ ஆனதேன்?

    ஏன் ஏன் ஏன்? //

    பொட்டீக்கடை. இது கண்டிப்பாக விவாதத்திற்கு உரியது. ஆனால் இதில் மற்றொரு உண்மையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விலையேற்றம் ஏன் வருகிறது? வழக்கமாக வாடகை ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டிருந்தவர்....சாப்ட்வேர்காரன் நிறைய சம்பளம் வாங்குவதால் ஐந்தாயிரமாகக் கேட்கலாம் என்ற பேராசைதானே. அது சரியா தவறா என்பது வேறொரு விவாதம். ஆனால் இங்கே நாம் போதைப் பழக்கத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக சாஃப்ட்வேர் துறை உயருவது இந்தியா உயர்வதாக ஆகாது. அது மறுக்க முடியாத உண்மை.

    // வெறும் சாப்ட்வேர் பயலுங்களுங்களுக்கு 50,000ஆயிரம் சம்பளம் கொடுத்துட்டா இண்டியன் எகானமி ஏறுதோ இல்லியோ ஒக்காமக்கா வெலவாசி மட்டும் பட்ஜெட் போடாம ஏறும்.

    நா ஏன் வவுறு எரியனும்?

    ஜிரா...அந்த ஒரு லட்ச ரூ மேட்டர் பதிவு கூட யாரோ போட்டிருந்தாங்க.(ஒரு வேள் புரளியோ)
    அது பொய் கிடையாது. கம்பெனி பேர் வேனா மாரியிருக்கலாம். //

    பாத்தீங்களா? கம்பெனி பேரு மாறியிருக்கலாம்னு சொல்றீங்க. அப்படி அடிப்படை தெரியாத விஷயத்தை வெச்சு ஒருவரை மாமா வேலை பாக்குறவர் என்று சொல்வதற்குதான் எதிர்ப்பு. இது போல நிறைய மித்ஸ் மென்பொருள் துறை பற்றி இருக்கிறது. என்னவோ புனே பற்றிச் சொல்கின்றீர்கள். எனக்குத் தெரிந்து பெங்களூரில் சென்னையில் பல பார்ட்டிகள் நடக்கின்றன. ஒரு பார்ட்டிக்குத் தெரியாத்தனமா போய் ஃப்ரூட் பஞ்ச் கிளாசை கையில் வைத்துக் கொண்டு ஓரமாக உட்கார்ந்த அனுபவமும் எனக்குண்டு. அப்படி உட்கார்ந்திருந்ததற்காகக் கிண்டல் செய்யப்பட்டது வேறொரு சோகம். :-( ஆனால் கம்பெனிகளே போதைப் பொருள் நடத்துகிறதா என்பது ஆராய்ச்சிக்கு உரியது. அதற்கான வாய்ப்பு மிகமிக அரிது என்றே நான் நினைக்கிறேன். தண்ணி பார்ட்டிகளே எல்லா நிறுவனத்திலும் கிடையாது.

    எங்க வேலை நீங்க நெனைக்கிற மாதிரி சொகுசு வேலை இல்லீங்க. இன்னைக்கும் நான் நெனைப்பேன். மாசம் பதினஞ்சாயிரம் குடுத்தா பேசாம வாத்தியார் வேலைக்குப் போயிரலாம்னு. ஆனா முடியுதா! இக்கரைக்கு அக்கரைப் பச்சை.

    By at 3/09/2007 1:03 AM  

  • // ஜிரா...அந்த ஒரு லட்ச ரூ மேட்டர் பதிவு கூட யாரோ போட்டிருந்தாங்க.(ஒரு வேள் புரளியோ)
    அது பொய் கிடையாது. கம்பெனி பேர் வேனா மாரியிருக்கலாம்.//

    இதத்தான் அப்பு... நாங்களும் சொல்லுதோம்... யாருன்னே தெரியாம மாமான்னு சொல்லுதியல, அதுக்குத்தான் தான் அப்பு நாங்களும் கொதிச்சுட்டோம்... இனியாவது கொஞ்சம் விசாரிச்சிட்டு அப்புறமா பின்னூட்டம் போடும்... அத வுட்டுப்புட்டு எவன் மேலயோ உள்ள கோவத்த ஒரு நல்லவரு மேல காட்டாதீயும்...

    By at 3/09/2007 4:03 AM  

  • //நா குரைப்பது இருக்கட்டும் ...எவனையோ பாத்து நான் குரைத்தால் உனக்கு ஏன் புடுங்குது.
    அதிகமா சரக்கடிச்சிட்டியோ?//

    இங்க பாருங்கைய்யா சரக்கடிக்கிறதுல இவரு பெரிய ரிசர்ச் பண்ணிருக்காரு... ஒரு நல்லவரப் பத்தி சொன்னா யாரு வேணும்னாலும் வருவாங்க அப்பு... அதுவும் பல பேருக்கு ஆதர்ச நாயகனா இருக்கும் அவரப் பத்தி சொன்னா கண்டிப்பா என்ன மாதிரி ஆளுங்க வருவாங்கய்யா... அதுவுமில்லாம நானும் அவரு கொடுத்த வேலைல சாப்டுட்டு இருக்குற ஆள்... வேற என்னய்யா வேணும்??

    By at 3/09/2007 4:44 AM  

  • //இங்க பாருங்கைய்யா சரக்கடிக்கிறதுல இவரு பெரிய ரிசர்ச் பண்ணிருக்காரு... //

    ஆமா தம்பி...நா ரிசர்ச் பண்ணியிருக்கேன் தான். ரிசர்ச் பேப்பர உங்கிட்டயும் சப்மிட் பண்ணனுமா ராசா?

    //ஒரு நல்லவரப் பத்தி சொன்னா யாரு வேணும்னாலும் வருவாங்க அப்பு... அதுவும் பல பேருக்கு ஆதர்ச நாயகனா இருக்கும் அவரப் பத்தி சொன்னா கண்டிப்பா என்ன மாதிரி ஆளுங்க வருவாங்கய்யா... அதுவுமில்லாம நானும் அவரு கொடுத்த வேலைல சாப்டுட்டு இருக்குற ஆள்... வேற என்னய்யா வேணும்?? //

    அதுசரி...ஒருத்தன் அமெரிக்காவுல தடவுனானே...முன்னாள் டைரக்டரு...பனீசு மூர்த்தி...அவனும் நாராயணமூர்த்தி பாசறைல வளந்தவன் தானே?

    இப்பவும் மேட்டரு சாப்ட்வேர் நிறுவனங்கள் எப்புடி மேனிபுலேட் பண்ணுறானுவங்கறது தான்.

    அவன் நாராயணமூர்த்தியா இருந்தா என்ன? இல்லா திருபாய் அம்பானியா இருந்தா என்னா?

    ஒங்க கம்பெனி மேனிபுலேட் பண்ணலன்னா ரெம்ப நல்லது...ஆனா எல்லா பருப்பும் உத்தம பருப்பு கெடையாது...உனக்கு சோறு போடறான்னா போட்டுட்டு போவட்டும் எனக்கா போடறான்...நா அப்படி தான் பேசுவேன்.

    By at 3/09/2007 10:22 AM  

  • //பொட்டீக்கடை. இது கண்டிப்பாக விவாதத்திற்கு உரியது. ஆனால் இதில் மற்றொரு உண்மையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விலையேற்றம் ஏன் வருகிறது? வழக்கமாக வாடகை ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டிருந்தவர்....சாப்ட்வேர்காரன் நிறைய சம்பளம் வாங்குவதால் ஐந்தாயிரமாகக் கேட்கலாம் என்ற பேராசைதானே. அது சரியா தவறா என்பது வேறொரு விவாதம்.//

    ஜிரா அய்யா...நல்லா பேசறீங்க
    சாப்ட்வேர் காரன் அதிகமா சம்பாதிக்கறான் அதனால் வீட்டுக்கு சொந்தக்காரன் வாடகை அதிகமா கேக்கறதில்ல...வீட்டுக்கு சொந்தக்காரு 4,000 ரூ தான் கேக்கறாரு...நானும் தகுதிக்கு மீறனாலும் ஓகே தான்னு சொல்லறேன்...அங்கர்ந்து குதிச்சி ஓடியாராரு ஒரு சாப்ட்வேர் ஆளூ நா 5,000 கொடுக்கறேன் சார் 10 மாச வாடகையில்ல 12 மாச வாடகை அட்வான்ஸ் தர்ரனு சொல்லறாரு. சோ, ஆசைய மூட்டனுது யாருங்கய்யா?

    By at 3/09/2007 10:28 AM  

  • // நாராயண மூர்த்தியும் போதை மருந்தும் //

    ilaikkararae... title-layae ungaloda veriya kaamikkareengalae... naranyanamoorthy ponnukku route-ttu vittu antha kolaverila ithai solreengalo... neenga sonna antha nambagathanamana newspaper-la narayanamoorthy apdi panrarunnu engayachum pottiruntha enakku anuppunga... naanga legal-a oru case-ae podarom... narayanamoorthy ithai ellae masurae pochunnu irukkarathanalathan neenga ellam ippadi avarai pathi eluthikittu irukeenga... avarai vechukittu inimael ippadi comedy keemadi ethuvum pannatheenga... naanum software boom-nala podhunalam baathikkappadarangannu varuthapadaravanthan... aana sila peru bodhai palakkathukku adimai aayi ippadi tharikettu aattam podarathukku narayanamoorthy-than kaaranamnu solrathu ellam muttalthanam.. ithai vida comedy ennanna, ungalukku oru nallavaru oththu ootharathuthan...

    // சாப்ட்வேர் காரங்க ஜட்டிய கழட்டிபோட்டுட்டு ஆடறதுக்கும் குண்டி காய வேல செய்யறதுக்கும் நெறைய கம்பெனிங்க கூட்டி கூட குடுப்பானுங்க...ஒரே கம்பெனில வேல செய்யற ஆணும் பெண்ணும் கல்யாணம் பண்ணிகிட்டா தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து ஒஃப்பிஷியல் மாமா வேல பாத்ததும் நாராயணமூர்த்தி தானே? //

    Mr. Pot"tea" kadai Sir... vanakkam sir... neenga ippo ilaikkararukku mama velai paakkara maathiri irukku... ungalai ellam blog elutha allow panranga paarunga avangalai ethala adikkarathunnu theriyala... ungalukku naattu mela avvalavu akkarai iruntha pesama narayanamoorthy-a paakka appointment vaangittu poyee nerla paathu kelum... avaru ungalai maathiri cheap-a pesura aalungalai kooda meet panna time spend pannuvaaru... summa oruthan elutha idam tharan, oruthan athai approve panrangarathukku ippadi ellamae eluthuveenga... apdi paatha unga kudumbathai pathi evanavathu ippadi pesina neengalum ippadithan blog-la reply kuduthukittu irupeengala... neenga solrathanala onnum naranyanamoorthy oru peru kettu poga porathillai... ungalaithan cheap-a elutharannu nenaippanga.. athanala konjam adakki vaasinga...

    By at 3/09/2007 8:26 PM  

  • // Pot"tea" kadai said...
    //பொட்டீக்கடை. இது கண்டிப்பாக விவாதத்திற்கு உரியது. ஆனால் இதில் மற்றொரு உண்மையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விலையேற்றம் ஏன் வருகிறது? வழக்கமாக வாடகை ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டிருந்தவர்....சாப்ட்வேர்காரன் நிறைய சம்பளம் வாங்குவதால் ஐந்தாயிரமாகக் கேட்கலாம் என்ற பேராசைதானே. அது சரியா தவறா என்பது வேறொரு விவாதம்.//

    ஜிரா அய்யா...நல்லா பேசறீங்க
    சாப்ட்வேர் காரன் அதிகமா சம்பாதிக்கறான் அதனால் வீட்டுக்கு சொந்தக்காரன் வாடகை அதிகமா கேக்கறதில்ல...வீட்டுக்கு சொந்தக்காரு 4,000 ரூ தான் கேக்கறாரு...நானும் தகுதிக்கு மீறனாலும் ஓகே தான்னு சொல்லறேன்...அங்கர்ந்து குதிச்சி ஓடியாராரு ஒரு சாப்ட்வேர் ஆளூ நா 5,000 கொடுக்கறேன் சார் 10 மாச வாடகையில்ல 12 மாச வாடகை அட்வான்ஸ் தர்ரனு சொல்லறாரு. சோ, ஆசைய மூட்டனுது யாருங்கய்யா? //

    நல்லாப் பேசுறேன்னு சொன்னதுக்கு நன்றி பொட்டீக்கடை.

    எனக்குத் தெரிஞ்ச சாப்ட்வேர்காரங்க யாரும் அப்படிச் சொல்லலை. ஆனா எனக்குத் தெரிஞ்சு வருசம் தவறாம வீட்டு வாடகைய ஏத்துறவங்க நெறைய உண்டு. கோழி எது முட்டை எதுன்னு கண்டுபிடிக்கிறது இதுல ரொம்பக் கஷ்டம். அதுனாலதான் இது வேறொரு விவாதம். இந்தப் பதிவுக்குத் தொடர்பில்லாததுன்னு சொன்னேன்.

    By at 3/09/2007 9:17 PM  

  • //அதுசரி...ஒருத்தன் அமெரிக்காவுல தடவுனானே...முன்னாள் டைரக்டரு...பனீசு மூர்த்தி...அவனும் நாராயணமூர்த்தி பாசறைல வளந்தவன் தானே?//

    ஏன் அப்பு அதோட நிறுத்திட்டீங்க??? அதுக்கப்புறம் என்ன ஆச்சுன்னும் கொஞ்சம் சொல்றது??

    டைரக்டரே ஆனாலும், தப்பு பண்ணினான்ங்ற ஒரே காரணத்துக்காக அவரையே வேலைய விட்டு தூக்குன ஆளுதானய்யா எங்காளு...

    பனீஷ் மூர்த்தி பண்ணின தனிமனித ஒழுக்க முறைக்கேட்டுக்கு இவரு நாராயண மூர்த்தியக் கேள்வி கேக்குறாரு. நல்லா வருவீங்க அண்ணாச்சி... நல்லா வருவீங்க...

    By at 3/10/2007 7:23 AM  

  • //தினமலர் எப்போதும் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியை சாடிக்கொண்டு இருக்கும். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் நான் அவ்வப்போது தினமலரை துணைக்கு அழைத்துக் கொள்வேன்.
    //

    இதனால தான் நான் நடுநிலை இல்லைனு சொன்னேன் :-))

    அப்பறம் பொட்டிக்கடை அண்ணே! நீங்க சொன்னதுல எதுவுமே மூர்த்திய தப்பா சொல்ல முடியாது...

    நாட்டுல தப்பு பண்றவங்க கோடி கணக்குல இருக்கும் போது அவுங்க மேல உங்க கோபத்தை காண்பித்தால் ஏதாவது பயனுள்ளதா இருக்கும்...

    ஃபனீஷ் மூர்த்திய வேலைய விட்டு தூக்கினப்ப அவர் கூட அமெரிக்காவில இருக்குற முக்கியமான ஆளுங்க எல்லாமே வெளியே போய் iGateல சேர்ந்துட்டாங்க.

    அது Infosysக்கு பெரிய அடியா இருந்தாலும் அந்த முடிவை எந்த விதத்திலும் அவர்கள் மாற்றி கொள்ளவில்லை.

    iGate க்கு நக்கலா சொல்றது என்ன தெரியுமா? Infosys Gives us All The Employees...

    நான் வேலை செய்யறதால சப்போர்ட்டா பேசறேனு நினைக்க வேண்டாம். நான் இன்னும் எவ்வளவு நாள் இங்க இருப்பேனு நிச்சயமில்லை.

    இவ்வளவு பேசறீங்களே இலைக்காரரே, முதல் முறையா CM ஆனப்ப உங்க அம்மா என்ன சொன்னாங்க? தமிழ்நாட்டில சாராயக்கடைய ஒழிப்போம்னு தானே!
    அதுக்கு சினிமா எல்லாம் எடுத்துவிட்டாங்களே.

    அப்பறம் எதுக்கு TASMAC ஆரம்பிச்சாங்க? அரசுக்கு வருவாய் வரும்னு மொக்கைத்தனமா பதில் சொல்லாதீங்க.

    அவுங்க இதை லீகலா ஆக்கலைனா தமிழ்நாட்ல எவனாவது குடிக்க முடியுமா???

    சம்பந்தமே இல்லாத மூர்த்தியையும், பிரேம்ஜியையும் பிடிச்சிக்கிட்டீங்களே!
    நாளைக்கு சாப்ட்வேர் இஞ்சினியர் எவனாவது கொலை பண்ணிட்டா அவுங்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க சொன்னாலும் சொல்வீங்க.

    இலைக்காரரே,
    இப்பவும் நீங்க ரொம்ப அக்கரையா விசாரிக்கறீங்களேனு தான் சொல்றேன். தினமலர்ல இருந்த நியூஸ்ல எங்கயாவது மூர்த்தி பேரோ, ப்ரேம்ஜி பேரோ இருக்கா?

    அப்படி இருந்தா சொல்லுங்க. இல்லைனா நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க. உண்மையாலும் இந்த கம்பெனில ட்ரிங்க்ஸ் பார்ட்டி இருந்தா அத மாத்தி சொல்ல மாட்டோம்.

    நான் சொல்லி குடுத்து வேலை வாங்கன பசங்கக்கிட்ட நான் வாங்கின தட்சினையே தண்ணி, தம்மை விடனும்ன்றதுதான்.

    காலேஜ்லயே 50%க்கு மேல அடிக்க ஆரம்பிச்சிடறானுங்க. தப்பு எங்கனு இன்னும் ஆராயனும்.

    By at 3/11/2007 2:23 PM  

  • வெட்டிப்பயல் அவர்களே,

    வருகைக்கு நன்றி. தங்களின் நீண்ட விளக்கத்தினை படித்தேன். இப்போது நடப்பது மைனாரிட்டி கருணாநிதி ஆட்சி. எனவே அதை பற்றி மட்டும் பேசுங்கள். திராவிட நஞ்சுக்கள் போல் இதில் அம்மாவை இழுத்து திசை திருப்பவேண்டாம்.

    பாரதத்தில் "சாப்டுவேர்" என்றால் infosys, wipro, tcs போன்ற நிறுவனங்களே பெரும்பாலோருக்கு நினைவில் வரும். தெரு முனையில் நடக்கும் கம்பெனிகளை பற்றி தெரியாது. எனவே தான் அப்பெயர்களை நான் உபயோகப்படுத்தினேன். மேலும் இப்படி எல்லாம் நடக்கின்றதா என்பதே என் கேள்வி. சற்று உணர்ச்சிவசப்படாமல் சிந்தியுங்கள்.

    By at 3/12/2007 5:51 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za