அம்மான்னா சும்மாவா?

Friday, November 17, 2006

சபாஷ் தினமலர் சபாஷ்

பாரதத்தினை காக்கும் நான்கு தூண்களில் முக்கியமானது ஊடகங்கள் ஆகும். நாட்டின் கவசமாக விளங்கும் முக்கிய ஊடகம் தினமலர். இதை பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டு உள்ளேன். இந்த நாளேடு மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலோடு நடை போட்டு வரும் ஒரு நிறுவனம். எந்த ஒரு அரசியல் கட்சியினையும் சாராமல், நடுநிலையோடு ஜாதி மற்றும் மதம் பாராமல் தேச சேவை ஆற்றி வரும் ஒரு செய்தி ஸ்தாபனம் இது. நாட்டில் நடக்கும் பயங்கரத்தினை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு சர்ச் லைட்டாக இந்த நாளேடு விளங்குகின்றது.

சமீபத்தில் நடந்த தேர்தலில் கலவரத்தின் மூலம் ஆட்சி பொறுப்பில் கருணாநிதி அமர்ந்தவுடன் தமிழகத்தில் வன்முறை பல்கி பெருகி ஆறாக ஓடுகின்றது. உலகின் பல பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகளுக்கு தமிழகத்தில் இருந்து ஆயுத சப்ளை நடைபெறுகின்றது. சமீபத்தில் ஆந்திராவில் பிடிபட்ட ராக்கெட் குண்டுகள் பற்றி அனைவருக்கும் தெரியும். அதே போல அல்கொயிதாவிற்கும் ஆயுதங்கள் தமிழகத்தில் இருந்து கடத்தப்படுவதாக அமெரிக்க உளவு ஸ்தாபனம் ஒன்று சந்தேகப்படுகின்றது.

ஆந்திராவில் நக்ஸல்களுக்கு தொல்லை ஏற்பட்டால் அவர்கள் தமிழகம் பக்கம் பார்வையை திருப்புவர். அம்மாவின் ஆட்சி நடைபெற்றால் ஆந்திராவிலேயே தங்கி விடுவர். திம்மியின் மைனாரிட்டி ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பை பற்றி அவர் கவலைபடுவதில்லை. எனவே நக்ஸல்கள் மாமியார் வீட்டிற்கு ஜம்பமாக வருவது போல் தங்கள் இஷ்டத்திற்கு வந்து போவர். அப்படி திருட்டுத்தன்மாக உள்ளே நுழையும் தீவிரவாதிகளை அடையாளம் கண்டு காட்டிக்கொடுப்பது தினமலர் போன்ற தேசபக்தி உள்ள ஸ்தாபனங்களே.


ஆந்திராவை ஒட்டிய மேட்டூர் மலையில் நக்ஸல்கள் கூடாரம் அடித்து தங்கியுள்ளதை படத்தோடு வெளியிட்டது தினமலர். மலையில் 600 மீட்டர் உயரத்தில் தீவிரவாதிகள் டெண்ட் அமைத்துள்ளதை வெளியிட்டது தினமலர். மேலும் பயங்கரவாதிகள் 3000 சதுர அடி நிலத்தினை சமப்படுத்தி ஆயுத பயிற்சியில் ஈடுபட போவதாக எச்சரித்தது. செய்திதாளை வாங்கி படித்ததும் இனிமேல் சும்மா இருக்க முடியாது என்று திம்மி டம்மி போலீஸிடம் சொல்ல, அவர்களோ அங்கே இருப்பவர்கள் கிழங்கு பொறுக்க வந்தவர் என்று கதை விடுகின்றது. இவர்களிடம் சிக்கி பாரதமாதா சித்திரவதை படலாமா? சிந்திப்பீர் இந்தியர்களே. 80 கோடி இந்துக்களும் ஒன்று பட்டு இந்த திம்மியை ஆட்சியை விட்டு விரட்டுவோம்.


கோடி கொடுத்தாலும் தோடி பாடாத இசைஞானி வாழ்க.

17 Comments:

 • உம்ம நக்கலுக்கு அளவேயில்லையாப்பா?! ஹா ஹா :-))

  By at 11/17/2006 12:41 AM  

 • //கோடி கொடுத்தாலும் தோடி பாடாத இசைஞானி வாழ்க.//

  என்னாது இது?..

  By at 11/17/2006 12:57 AM  

 • கலக்கல் இலைக்காரரே... ஜார்ஜ் புஸ்க்கு கூட தமிழ்நாடு தான் ஆயுதம் சப்ளை செய்யுதாம். :)

  By at 11/17/2006 1:05 AM  

 • இலைக்காரன்!

  அருமையான பதிவு. திம்மியின் டம்மி போலிஸ் 10 மரக்கிழங்கு பிடுங்குகிறவர்களை சுற்றி வளைத்து விட்டு உண்மையான நக்சலைட்டுகளை கோட்டை விட்டு விட்டதாம்.

  By at 11/17/2006 1:05 AM  

 • இன்றைக்கு நேரம் சரியில்லை போல் இருக்கின்றது. இப்படி ஒரே நேரத்தில் திராவிட பதிவர்கள் வந்தால் நான் என்ன ஆவேன் என்று சிந்தித்து பாருங்கள். நான் ஒரு சிற்றிலை. ஆளை விட்டுவிடுங்கள்.

  By at 11/17/2006 1:37 AM  

 • // என்னாது இது?.. //

  நாடோடி,

  வருகைக்கு நன்றி. இசைஞானி "ஒரு கோடி கொடுத்தாலும் ஒரு படத்திற்கு இசை அமைக்க மாட்டேன்" என்று சொன்ன செய்தியை சற்று ரைமிங் ஆக இருக்கும் என மாற்றி போட்டுள்ளேன்.

  By at 11/17/2006 1:42 AM  

 • Doondu,

  வருகைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டம் வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன். அங்கே ஒருவர் பின்னூட்டம் வெளியிட்டாலும் சைபர் கிரைம் ஆகும் என சொல்கிறார். எனக்கு பயமாக இருக்கின்றது. ஏற்கனவே சொன்னது போல நான் ஒரு சிற்றிலை. இந்த ஆட்டத்திற்கு நான் வரவில்லை.

  By at 11/17/2006 1:46 AM  

 • //எந்த ஒரு அரசியல் கட்சியினையும் சாராமல், நடுநிலையோடு ஜாதி மற்றும் மதம் பாராமல் தேச சேவை ஆற்றி வரும் ஒரு செய்தி ஸ்தாபனம் இது. //

  சொல்லவே இல்ல...

  //கோடி கொடுத்தாலும் தோடி பாடாத இசைஞானி வாழ்க.//
  ஹலோ...அவர் பேட்டியை படிகலையா???

  By at 11/17/2006 7:14 AM  

 • கருப்பன் உங்களைப் போட்டு பின்னி பெடல் எடுத்து இருக்கிறான் இலைக்காரன் அவர்களே.

  By at 11/17/2006 6:52 PM  

 • //ஹலோ...அவர் பேட்டியை படிகலையா??? //

  சீனு அவர்களே,

  வருகைக்கு நன்றி. இசைஞானி முதலில் கொடுத்த பேட்டிதான் சரியானது. மேலும் அந்த பேட்டியை ஸ்ரீமான் இல.கணேசன் அவர்கள் மேற்கோள் காட்டி பேசியுள்ளார். பெரும் தேசபக்தர் பொய் சொல்ல மாட்டார். எனவே அந்த வார்த்தைகளே சத்தியமானவை. இப்போது இசைஞானி கொடுத்திருக்கும் பேட்டி அவர் மிரட்டப்பட்டதால் வந்திருக்கும் என நம்புகின்றேன்.

  By at 11/17/2006 7:41 PM  

 • உனக்கு அதிக நகைச்சுவை உணர்வுய்யா........
  கலக்கு!

  By at 11/17/2006 8:07 PM  

 • ஒண்டிபுலி அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  doondu அவர்களே,

  வருகைக்கு நன்றி. கருப்பு பதிவு போட்டு உள்ளாரா?. நான் பார்க்கவில்லையே. ராவணன் சும்மா என்று ஒரு பதிவு போட்டுள்ளார். அதை சொல்கிறீர்களா?. அப்ப கருப்பும், ராவணனும் ஒன்றா? தலை சுத்துகின்றது. எப்படியோ அவர்களால் விளம்பரம் கிடைத்தால் நல்லதுதானே.

  By at 11/17/2006 9:10 PM  

 • "Doondu,

  வருகைக்கு நன்றி. "

  நான் இதுவரை டூண்டுவும் இலையும் ஒன்றுதான் என்று நினைத்து வந்தேன். தலை சுத்துது:-))

  By at 11/18/2006 7:24 PM  

 • //நான் இதுவரை டூண்டுவும் இலையும் ஒன்றுதான் என்று நினைத்து வந்தேன்.//

  பிரபு ராஜதுரை அவர்களே,

  வருகைக்கு நன்றி. I strongly object this your honour. என் பதிவுகளை கிண்டல் செய்து மாயவரத்தானின் பெயரில் இருக்கும் இன்னொரு பிளாகில் பதிவுகள் வெளியாகி உள்ளன. அப்படி இருக்கையில் எப்படி நானும் அவரும் ஒன்று என நினைக்கலாம். அவர் எங்கே, நான் எங்கே. நான் ஒரு சிற்றிலை.

  By at 11/19/2006 6:02 PM  

 • Noolaip pugalum noolae!
  Remove your glasses and come to reality.Start reading Vivekananda and correct your"nool hinduism"and dont claim 80 cr.

  By at 11/19/2006 10:25 PM  

 • Noolaip pugalum noolae!First read Vivekananda on what he says about"nool hinduism" before claiming 80 cr.Nool days are numbered,sorry no more divide and rule.

  By at 11/19/2006 10:51 PM  

 • Thamizhan அவர்களே,

  வருகைக்கு நன்றி. விவேகானந்தர் அந்தனர் அறவோர், எனவே அவர்களை நாள் தோறும் தொழ வேண்டும் என்றுதானே சொல்லியுள்ளார். நீங்கள் குறிப்பிடும் "nool hinduism" என்ன என்பதை சற்று விளக்கமாக சொல்லுங்கள்.

  நாம் அனைவரும் இந்துவே. நம்மில் வேற்றுமை வேண்டாம் என எஸ்.கே அய்யா அவர்கள் சொல்லியுள்ளார்.அப்படி இருக்கையில் நான் ஏன் "divide and rule" செய்ய போகிறேன்.

  By at 11/19/2006 11:49 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za