அம்மான்னா சும்மாவா?

Tuesday, October 31, 2006

நாட்டை கெடுக்கும் நயவஞ்சகன்

பாரதத்தின் மக்கள் அனைவரும் அன்பே உருவானவர்கள். இந்து மதத்தில் அஹிம்சை என்பது முக்கியமான ஒன்றாகும். நமது தெய்வங்களும், முன்னோர்களும் நல்ல கருத்துகளை கூறி நம்மை பக்குவப்படுத்தி உள்ளார்கள். பாரத மாதாவின் புதல்வர்கள் ஒரு காலத்திலும் கலவரம் போன்ற ஈன செயல்களில் இறங்கமாட்டார்கள்.

இப்போது நாட்டில் கல் எறிந்து போராட்டம் நடத்தும் பழக்கம் முகமதியர்களின் காலத்தில்தான் ஏற்பட்டது. புனித கீதை, வேதங்கள், தொல்காப்பியம் போன்றவற்றில் இந்த போராட்ட முறைகளை பற்றி குறிப்பிடவில்லை என்பதை சற்று கவனியுங்கள். தமிழ்நாட்டில் மைனாரிட்டி ஆட்சி செய்யும் திம்மி தேர்தல் காலத்தில் பெரிய கலவரத்தினை ஏற்படுத்தினார். அதை கண்டு ஈரேழு லோகத்தில் உள்ள அனைவரும் வெட்கத்தில் தலை குனிந்தனர்.

நமது புண்ணிய பூமி இதுவரை பல தேர்தல்களை சந்தித்துள்ளது. எங்குமே இது போல நடந்தது இல்லை. ஒன்றிரண்டு சிறிய சம்பவங்கள் நடந்து இருக்கலாம், ஆனால் நாடு முழுக்க பற்றி எரியும் அளவிற்கு கலவரம் நடந்தது இல்லை. திராவிட நஞ்சுதான் இதற்கு எல்லாம் காரணம். இப்படியும் கலவரம் செய்யலாம் என்று திராவிட நஞ்சு காட்டிவிட்டதால், பல மாநிலங்களிலும் இது போல நடக்க ஆரம்பித்துவிட்டது.

புனித கங்கை பாயும் உத்திரபிரதேசம் அமைதியான மாநிலம். நாட்டின் மத ஒற்றுமைக்கு முன்மாதிரியாக விளங்கும் மாநிலம் அது. இந்துக்களும், காபிர்களும் ஒன்றாக வாழும் இடம் அது. திராவிட நஞ்சுக்கள் செய்த கலவரத்தினை தொலைக்காட்சி மூலம் பார்த்த அம்மக்கள் மனதில் திராவிட நஞ்சு புகுந்து விட்டது. அதனால் அங்கு நடந்த தேர்தலில் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் இன்னொரு மாநிலத்திலும் திராவிட நஞ்சு பரவியுள்ளது.

பாரத புத்திரியான செல்வி உமாபாரதி பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். காவி உடை அணிந்து நமது மதத்தின் அருமைகளை உலகமெங்கும் பரப்பும் அன்பாளர் அவர். ராமபிரான் அவதரித்த இடத்தை காபிர்களிடம் இருந்து காத்தவர்களில் இவர் முக்கியமானவர். முகமதியர் கலவரம் செய்த போதும் நம்மிடையே அஹிம்சையை போதித்த சாத்வி இவர். அப்படிப்பட்ட இவரை சமீபத்தில் (2006ல்) நடந்த இடை தேர்தலில் கல்வீசி தாக்கியுள்ளனர் சில காலிகள். அவர்களை பிடித்து விசாரித்ததில் தொலைக்காட்சியினை பார்த்து தேர்தலில் இப்படி செய்யலாம் என அறிந்து கொண்டதாக தெரிவித்தனர்.

இதை இப்படியே விட்டோம் எனில் திராவிட நஞ்சு பாரதம் எங்கும் பரவும் அபாயம் உள்ளது. இதை உணர்ந்து விட்டார் மருத்துவர். அதனால்தான் திம்மியை எதிர்க்க ஆரம்பித்துவிட்டார். நாமும் நம் பங்கினை செய்வோம். 80 கோடி இந்துக்களும் அம்மாவின் பின் திரள்வோம் என சபதம் எடுப்போம். திராவிட நஞ்சை நாட்டில் இருந்து நீக்குவோம்.

வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.

2 Comments:

  • உள்குத்துனா உள்குத்து அப்படி ஒரு உள்குத்து டா சாமி, இலைக்காரன் = உள்குத்துகாரன்

    By at 10/31/2006 8:14 PM  

  • குழலி,

    வருகைக்கு நன்றி. மருத்துவரை பற்றி எழுதியதால் உள்குத்து என்று கருதுகின்றீர்களா?

    By at 10/31/2006 10:24 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za