அம்மான்னா சும்மாவா?

Monday, September 18, 2006

தமிழகத்தை சீரழிக்கும் கருணாநிதி

நமது புண்ணிய பூமியான பாரதத்தில் பிறந்த அனைத்து புத்திரர்களும் புத்திரிகளும் கலாசாரத்தையும், ஒழுக்கத்தையும் இரு கண்களாக பாவித்து வருபவர்கள். பாரதம் என்றாலே ஒழுக்கம் என்பதை தாங்கி கொள்ள முடியாத மேலை நாட்டினர் அவர்களது கலாசாரத்தினை படிப்படியாக நம்மிடையே பரப்பி வருகின்றனர். இந்த பாதக செயலுக்கு நமது நாட்டில் உள்ள திம்மிக்களும் உடன்பட்டு தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் பாரதத்தில் புகழ் பெற்ற ஒரு நாளேட்டில் வந்த செய்தியினை சற்று பார்ப்போம். இந்த நாளேடு மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலோடு நடை போட்டு வரும் ஒரு நிறுவனம் ஆகும். எந்த ஒரு அரசியல் கட்சியினையும் சாராமல், நடுநிலையோடு ஜாதி மற்றும் மதம் பாராமல் தேச சேவை ஆற்றி வரும் ஒரு செய்தி ஸ்தாபனம் இது. இதில் அந்துமணி என்பவர் நாட்டிற்கும், நமக்கும் பெரும் பயன் அளிக்கும் பல நல்ல, அரிய கருத்துக்களை வாரந்தோரும் வழங்கி வருகின்றார். ஒரு சனிக்கிழமை மாலை அவருக்கு கடற்கரையில் ஏற்பட்ட அனுபவத்தினை இங்கு விளக்கி இருக்கின்றார்.

"ஏய்... அங்க பாரு...' என ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டினார். அவர் காட்டிய திசையில் "பைக்' மீது இரண்டு இளைஞர்கள் அமர்ந்து இருப்பது, சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சத்தில் தெரிந்தது... "ரெண்டு பசங்க உக்காந்து இருக்காங்க... அதுக்கு என்ன?' எனக் கேட்கவும், எரிச்சலான லென்ஸ் மாமா, தன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி, "வர, வர உனக்கு கண்ணே தெரியல... இதப் போட்டுக் கிட்டு பாரு...' எனக் கூறினார்.

இடது கையால் கண்ணாடியை ஒதுக்கி, மாமா சுட்டிக் காட்டிய திசையை இன்னும் கூர்ந்து நோக்கினேன்... அவர்களை நாங்கள் இருவரும் கூர்ந்து நோக்குவதை அறிந்துகொண்ட அவ்விளைஞர்களில் ஒருவன், தன் இரு கைகளையும் துாக்கி, பின் பக்கக் கழுத்தில் முட்டுக்கொடுத்து, நெஞ்சை நிமிர்த்தவும், "அய்யயோ... அது இளைஞன் அல்ல... இளைஞி!' என்பதை உணர்ந்தேன். அவர்கள் இருவரிடையே என்ன ஊடலோ தெரியவில்லை...

திடீரென "பைக்'கில் இருந்து இறங்கி, வேக, வேகமாக கடலை நோக்கி நடந்தாள் அந்த இளம் பெண்... "பைக்'கில் அசையாமல் அமர்ந்து இருந்தான் இளைஞன்! கடலை நோக்கி நடந்த இளம் பெண், அங்கிருந்த சிறுவர் விளையாடும் சறுக்கு மரத்தில் சாய்ந்து கொண்டாள்...

சிறிது நேரத்திற்கு பின், அவளை நோக்கி இளைஞன் செல்ல, அவனை, "அவாய்ட்' செய்து வேறு திசை நோக்கி சென்று மறைந்தாள் அப்பெண். "இவங்களுக்குள்ளே என்ன பிரச்னையா இருக்கும் மாமா? "கல்யாணம் செஞ்சுக்க'ன்னு அவள் கேட்க, இவன் "டபாய்'க்கிறானோ... இல்ல, வேறு ஏதும் பிரச்னை இருக்குமா?' எனக் கேட்டேன்...

"இந்த கால மெட்ராஸ் பொண்ணுங்களைப் பத்தி இன்னும் புரிஞ்சுக்கலை நீ... கல்யாணம் செஞ்சுக்கச் சொல்லி இப்பல்லாம் பையன்கள்தாம் பொண்ணுங்கள கெஞ்சிக்கிட்டு பின்னாலே அலையறானுங்க... பொண்ணுங்க இப்ப விபரமாயிட்டாளுக... இவன விட பெட்டரா சம்பாதிக்கிறவன... பைக் மட்டும் வச்சிருந்தா கார் வச்சிருக்கிறவன... குட்டிக் கார் வச்சிருந்தா, பெரிய கார் வச்சிருக்கிறவன... அதிலேயே விலை கூடின கார் வச்சிருக்கிறவனத் தேடிப் போறாளுகப்பா... இப்பல்லாம் பொண்ணுக ரொம்ப விபரம்...' என பெரிய, "லெக்சர்' ஒன்று கொடுத்தார்.

அந்த நேரம், அப்பெண் மட்டும் தனியே நடந்து வந்து, மாமாவின் வண்டி எதிரே உள்ள பிளாட்பாரத்தின் கட்டை சுவரில் அமர்ந்தாள்... கருப்பு டெனிம் பேன்ட், லுாசான ஆண்கள் அணியும் மேல்சட்டை, "செக்டு' டிசைன்... ஆண்களைப் போலவே சிகை அலங்காரம் செய்திருந்தால், மாமாவையே உற்று நோக்கிக் கொண்டிருந்தவள், திடீரென எழுந்து, மாமா, அருகே வந்து, "உட் யூ மைன்ட் டான்சிங் வித் மீ அட் அம்பாசிடர் பல்லவா?' என கேட்டாள்...

அதாவது, அம்பாசிடர் பல்லவா என்ற ஹோட்டலில் டிஸ்கோ டான்ஸ் பார்ட்டியில் கலந்துகொண்டு, என்னோடு டான்ஸ் ஆட வருகிறீர்களா எனக் கேட்டாள்... எனக்கு ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சி... நைசாக மாமாவின் தொடையில் கிள்ளி "கட்' பண்ணி விடுங்க... என குறிப்பு கொடுத்தேன்... ம்... ஹும்... மாமா லேசுப்பட்டவரா... விடவில்லை. "ஐ ஸா யூ யலாங் வித் யுவர் கம்பானியன் சம் டைம் பேக்...' என்றார். உன் கூட ஒரு பையனை கொஞ்ச நேரம் முன்னாலே பாத்தேனே என்பது அதன் பொருள்.

அவள் உடனே, "புல் ஷிட்' என வெறுப்புடன் கூறினாள். மாட்டுச் சாணி என்பது அதன் பொருள். தொடர்ந்து, அந்த பெண்ணின் குலம், கோத்ரம், சொந்த ஊர், அப்பா, அம்மா, உடன் பிறப்பு, படிக்கிறாளா, வேலை செய்கிறாளா என விலாவாரியாக பழங்காலப் பாணியில் மாமா கேட்க, அவள், "ஆர் யூ கோயிங் டு மேரி மீ ஓல்ட் மேன்... ஷûயர் வேஸ்ட் ஆப் டைம் டாக்கிங் அண்ட் இன்வைட்டிங் யூ' என கூறி, விடு, விடுவென நடந்து சென்று, தன் யமஹா பைக்கை ஒரு மிதி மிதித்து பறந்து சென்று விட்டாள்... மூக்கு உடைபட்ட மாமா, "என்னைக் கிழவன்னு சொல்லிட்டாப்பா... கல்யாணமா பண்ணிக்கப் போறன்னு கேட்டுட்டாப்பா... எங்கூடப் பேசுன டைம் வேஸ்ட்ன்னு சொல்லிட்டுப் போறாப்பா... அவள... அவள...' என்றபடியே வண்டியை கிளப்ப முயன்றவரை அமைதிப்படுத்தினேன்.


இதை படித்ததும் எனக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. கற்பினை போற்றும் கண்ணகிக்காக சிலை எழுப்பிய நாட்டில் இப்படி நடக்கலாமா? இப்படி நடந்து கொண்ட பெண் கண்டிப்பாக மூத்த வலைபதிவர்கள் சொன்னது போல கால் சென்டரில் பணிபுரியும் ஒரு பெண்மணியாக இருப்பார் என்பது எனது கருத்து. இதை போன்ற கால் சென்டர்களை நாடெங்கும் நடத்த அனுமதித்து வருகின்றார் கருணாநிதி என்ற திம்மி. மதறாஸ் சீரழிந்தது பத்தாது என்று திருச்சி, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் கணினி நிறுவனங்களை ஆரம்பிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

நமது கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் குலைக்க முயற்சி செய்யும் இந்த கருணாநிதி போன்றவர்களை ஆட்சியில் இருந்து விரட்ட இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்.

வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.

10 Comments:

  • :-))

    By at 9/18/2006 8:47 PM  

  • ஹி!!! ஹி!!!

    அந்த மாமா நீங்கதானா???

    By at 9/18/2006 10:13 PM  

  • //அந்த மாமா நீங்கதானா??? //

    அட நீங்க வேற. நான் ஏன் இப்படி கேள்வி எல்லாம் கேட்க போகின்றேன். உடனே பைக்கில் ஏறி பறந்திருப்பேன்.

    By at 9/18/2006 10:26 PM  

  • //
    இந்த நாளேடு மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலோடு நடை போட்டு வரும் ஒரு நிறுவனம் ஆகும். எந்த ஒரு அரசியல் கட்சியினையும் சாராமல், நடுநிலையோடு ஜாதி மற்றும் மதம் பாராமல் தேச சேவை ஆற்றி வரும் ஒரு செய்தி ஸ்தாபனம் இது
    //

    நம்பிட்டேன்...

    By at 9/18/2006 11:11 PM  

  • இலைக்காரண்ணே..
    ஆரம்பத்துல நான்கூட ஒங்கள தப்பா நெனச்சுட்டேன்..இப்பத்தான் புரியுது அம்மாவோட எந்தப் புகழ நீங்க பரப்புரீங்கன்னு..வாழ்க உங்கள் பணி...

    By at 9/19/2006 12:48 AM  

  • R u mad? or ADIMK MAN??

    By at 9/19/2006 2:11 AM  

  • உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் வாசகன் நான். இவ்வளவு நாட்களாக திம்மியின் மாயப்பிடியில் சிக்கி இருந்தேன். உங்கள் பதிவுகளை படித்து விழிப்புணர்வு பெற்றேன்.

    By at 9/19/2006 3:34 AM  

  • இந்துக்கள் ஒன்று சேர வேண்டியது தான் இந்து மதத்தைக் காக்க.
    தாங்கள் சொன்னதுதான் ஜனாநாயகத்திற்கு ஆபத்து என்று அன்று பெருந்தலைவர் சொன்னது.

    By at 9/19/2006 4:21 AM  

  • சும்மா நச் னு இருக்கு!

    By at 9/19/2006 4:36 AM  

  • நட்சத்திரத்தின் வருகை எனக்கு உவகை.
    நன்றி.

    லக்கி,
    ஏதோ ஒரு சிலரையாவது திம்மியின் பிடியில் இருந்து மீட்க முடிந்தால் மகிழ்ச்சிதான்.

    By at 9/19/2006 6:50 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za