அம்மான்னா சும்மாவா?

Thursday, July 13, 2006

இந்துக்களை நிந்திக்கும் கருணாநிதி

நமது புண்ணிய பூமியில் ஏராளமான ஆன்மீகசெம்மல்கள் அவதரித்துள்ளனர். அவர்கள் தங்களுடைய இஷ்டதெய்வங்களை போற்றி பல அறிய பாடல்களை விட்டு சென்றுள்ளனர். தமிழகத்தில் தேவாரம், திருவாசகம் போன்ற திருமறைகள் ஏராளம். அவற்றை தினமும் பாடி கடவுளை சேவிக்கும் பழக்கம் கோடானுகோடி பக்தர்களுக்கு உண்டு. "திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்" என்பதை அனைவரும் அறிவர். அப்படிப்பட்ட திருவாசகத்தை தமிழகத்தின் ஒரு கோயிலுக்குள் பாடமுடியவில்லை இப்போது.

இந்துக்களை நிந்திப்பதையே தொழிலாக கொண்டுள்ளார் கருணாநிதி. ஏற்கனவே எல்லா ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஒரு உதவாத சட்டம் கொண்டுவந்து இந்துக்கள் மனம் நோகசெய்தவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மையே. சரி போகட்டும் என்று விட்டால் இப்போது அடிமடியிலேயே கை வைக்கிறார்.

நம் கடவுளை நம் கோவிலுக்குள் சென்று சேவிக்க முடியவில்லை தமிழகத்தில். இதுபோல் ஒரு தடையை வேறு மதத்தினருக்கு விதிக்க தைரியம் உண்டா? இந்துக்களே விழித்தெழுங்கள். நாம் ஒன்று சேர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம்.

இதை பற்றி மேல்விபரம் வேண்டுவோர், இங்கு பாருங்கள்.

ஓம் சிவாய நமஹ. ஜெய் ஹிந்த்.

1 Comments:

  • மேலே உள்ள பின்னூட்டத்தை முழுதாக நீக்குங்கள் இலைக்காரரே. இல்லாவிட்டால் அந்த சுட்டியின் மூலமாக அந்த அசிங்கப் பதிவுகளுக்கு வழி இருக்கும். அழியாது.

    By at 7/13/2006 8:19 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za