அம்மான்னா சும்மாவா?

Monday, June 12, 2006

கிழவனின் களவானித்தனம்

பாரத தேசம் முஸ்லிம்களிடமும் பிறகு கிருத்துவர்களிடமும் அடிமை பட்டு கிடந்தது. மாதாவின் விலங்குகளை வீர சவர்கார், திலகர், வல்லபாய் படேல் போன்ற பெருந்தலைவர்கள் பாடுபட்டு உடைத்தனர். ஆனால் இப்போது மீண்டும் கிருத்துவர்களின் கைப்பிடியில் நசுங்கி கொண்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் திம்மிக்கள் வேறு ஆங்காங்கே மாதாவை சீரழிக்கிறார்கள். நமது பாரதம் இப்போது உள்ள ஆட்சியாளர்களால் படிப்படியாக துண்டாடப்படுகிறது.

நமது புண்ணிய பூமி ஏராளமான வளங்களை கொண்டது. அப்படி இருந்தும் நாட்டின் பல பகுதிகள் இன்னும் முன்னேறவில்லை. உதாரணத்திற்கு மாட்டுக்காரன் லல்லுவிடம் அகப்பட்ட பீகாரை பாருங்கள். முஸல்மான்களின் ஓட்டிற்காக ராமபிரான் அவதரித்த இடத்தை விட்டுக்கொடுக்காத திம்மி முலயமிடம் அகப்பட்ட உபியை பாருங்கள்.

ஒரு குடும்பத்திற்கு வரும் வருமானத்தை எல்லோருக்கும் சரியாக பகிர்ந்து அளிப்பது தானே குடும்பத்தலைவனுக்கு அழகு. அதுதானே நமது பாரத பண்பாடு. ஆனால் இப்போது என்ன நடக்கிறது. இதையெல்லாம் என்னித்தான் அன்றே எமது பெரியார் பாரதி பாடினான் "நெஞ்சு பொறுக்கவில்லையே இந்த ...."

இந்துக்களை இழிவுபடுத்துவதை குறிக்கோளாக கொண்ட மைனாரிட்டி அரசின் கிழவன் தலைநகர் தில்லி சென்று கிருத்துவரான சோனியாவிடம் முழங்காலிட்டு 12500 கோடி ரூபாய் கொண்டுவந்து விட்டான்.

இது யாருக்கு பயன்பட போகிறது? நமக்கா, இல்லவே இல்லை. முதலில் இந்த திம்மி எடை குறைந்து விட்ட முஸ்லிம்முக்கு பிரியாணி வாங்கி கொடுப்பான். பிறகு கிருத்துவர்கள் மனம் மகிழ சர்ச்சுகள் கட்டுவான். பிறகு தகுதி திறமை சற்றும் இல்லாத கூட்டத்திற்கு அரிசி போடுவான்.

இதனால் நமது இந்து சமுதாயம் எப்படி முன்னேற்றம் அடைய முடியும். இந்துக்களே ஒன்று படுங்கள். கருணாநிதி போன்ற களவானிகளிடம் இருந்து நம் பாரத மாதாவை காப்பாற்றுவோம்.

வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.

3 Comments:

  • இலைக்காரனை வலைக்குள் வரவேற்கிறேன். உம்முடைய வலைப்பூ தெள்ளத்தெளிவாக கலைஞரைத் திட்டமட்டுமே என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்தாலும்... கலைஞர் என்ன செய்தாலும் அதற்கு நோக்கம் கற்பிக்கப்போவது புரிந்தாலும் கூடியமட்டிலும் பின்னுட்டம் இடமுயல்கிறேன். உமது வலைப்பூ முலம் நீங்கள் பாரதநாட்டைப்பற்றி கவலைப்படுவதுபோல காட்டிக்கொண்டாலும் உங்கள் எண்ணம் தெள்ளத் தெளிவு. உமது மத துவேஷம் யாரையும் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது என்பதோடு இப்போதைக்கு நிறுத்திக்கொள்கிறேன்.

    By at 6/15/2006 5:45 PM  

  • இலைக்காரன் அவர்களே,

    உங்களது பதிப்புகளில் பெரும்பாலானவற்றைப் படித்ததில், உங்களது குசும்பு உண்மையில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது என்பதை அறிந்துகொண்டேன்.
    நீங்கள் ஜெயலலிதாவையோ அல்லது கருணாநிதியையோ மட்டும் கிண்டல் அடிக்கவில்லை. அவரவர்க்கு என்று கருத்து உண்டு, அதைச் சொல்வதில் அவரவர்க்கு உரிமையும் உண்டு என்பதை மிகுந்த நகைச்சுவையுடன் சொல்லி உள்ளீர்கள். பலே.
    அப்படிச் சொல்லும் போது வலைப் பதிவாளர்கள் பதிவு செய்யும் விதத்தையும் நக்கலடித்துள்ளீர்கள்.
    உங்களது நோக்கம் புரியாத சிலரது பின்னூட்டங்களை நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது, உங்களைப் புரிந்துகொள்ள நீங்கள் அவர்களுக்கு அவகாசம் கொடுத்திருப்பதைக் காட்டுகிறது.

    ஏதோ ஒரு வேகத்தில் பின்னூட்டமிட்டுவிட்டேன். நான் சொல்வது சரியா இலைக்காரரே?


    திருமொழியான்.

    By at 9/05/2006 9:21 PM  

  • திருமொழியான் அவர்களே,

    தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி. ஏற்கனவே சொன்னது போல நான் ஒரு சிறு இலை. பல பெரிய, மூத்த பதிவர்களின் பாதிப்பு என்னிடம் தெரிவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

    By at 9/05/2006 10:42 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za