அம்மான்னா சும்மாவா?

Sunday, August 20, 2006

"டாக்டர்" அம்மா

பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே பல சாதனைகள் செய்து வருபவர் அம்மா. அவர் படிக்கும் காலத்திலேயே மாநிலத்தில் முதலாவதாக இருந்ததை கண்டு வயிறு எரிந்த மைனாரிட்டி ஆட்சி புரியும் திம்மி ஏதோ ஒரு காகிதத்தை எடுத்து அம்மாவின் மதிப்பெண் பட்டியல் என்று வெளியிட்டு உள்ளார். தமிழகத்தில் அதை யாரும் நம்ப போவதில்லை.

படிப்பிற்கு பின் நடிப்பிலும் பல சாதனைகளை புரிந்தவர் அம்மா. அதற்கு பின் ஆட்சியில் அமர்ந்து ஒரு ரூபாய் ஊதியத்தில் தாயுள்ளத்தோடு தன்னலமில்லா சேவை ஆற்றியவர் அவர். அவருக்கு உலகத்தின் பல பகுதிகளில் இருக்கும் புகழ் பெற்ற பல்கலைகழகங்கள் "டாக்டர்" பட்டம் வழங்கி உள்ளன. அம்மாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கிய ஒரே காரணத்தினால் அந்த பல்கலைகழகங்களின் மதிப்பு வெகுவாக உயர்ந்து உள்ளது. மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் அந்த பல்கலைகழகங்களில் சேர்ந்து படிக்க விரும்புகின்றனர்.

டாக்டர் பட்டம் வழங்கியதால் பொறாமை தீயினால் வயிறு எரிந்து கொண்டு இருந்தவர்களின் முகத்தில் கரி பூசிவிட்டார் அம்மா. உலகின் பல மருத்துவர்களும், ஆராய்சியாளர்களும் ஒரு குறிப்பிட்ட நோய் எதனால் உண்டாகிறது என்று மண்டையை உடைத்து கொள்வர். பெரும் ஆற்றல் பெற்ற நமது அம்மா சில நாட்களிள் பல மக்கள் நோய்வாய் படும் காரணத்தை கண்டு பிடித்துவிட்டார்.

திம்மியின் ஆட்சியில் ரேசன் அரிசி 2 ரூபாய்களுக்கு வழங்கப்படுகிறது. மனிதர்கள் உண்ண முடியாத நிலையில் இருக்கும் அரிசியை கோழிகளுக்கும், மாடுகளுக்கும் போட்டு வருகின்றனர். அந்த அரிசியை உண்ட கோழிகளின் முட்டையாலும், கறியினாலும் பலர் நோய்வாய் பட்டுள்ளனர் என்ற அறிய உண்மையை கண்டு பிடித்து வெளியிட்டுள்ளார் அம்மா. இதன் மூலம் தனக்கு வழங்கிய டாக்டர் பட்டங்களுக்கு முற்றிலும் தகுதியானவர் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளார்.

இந்த செய்தியை அறிந்த உலக ஆராய்சியாளர்கள், அம்மாவின் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்ய முடிவு எடுத்து உள்ளனர். மேலும் உலக புகழ் பெற்ற பெரும் டாக்டர் ஆன ஸ்ரீமான். வேணுகோபால் AIIMS தலைவராக அம்மாவை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தலைநகரில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.

0 Comments:

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za