அம்மான்னா சும்மாவா?

Monday, July 24, 2006

கம்யூனிஸ்டுகளின் அராஜகம்

நமது புண்ணிய பூமியை அழிப்பதே தலையாய செயல் என்று கருதும் கம்யூனிஸ்டுகள் கேரள மாநிலத்தை முஸ்லிம்கள்+கிருத்துவர்கள் துணையுடன் கைப்பற்றியது அனைவருக்கும் நினைவில் இருக்கும். ஆட்சிக்கு வந்தவுடன் கோவையில் உடல் இளைத்த முஸ்லிம் தீவிரவாதிக்காக சென்னைக்கு காவடி எடுத்தனர். சென்னையில் உள்ள திம்மியும் உதவி செய்வதாக வாக்கு அளித்தது.

பிறகு கோடிக்கணக்கான இந்துக்களின் நெஞ்சில் குடியிருக்கும் ஐயப்பன் கோவிலில் புகுந்து குழப்பம் விளைவித்தனர். ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்த கதை போல இப்போது ஐயப்பன் கோவில் தலைமை பூசாரி மீது அபாண்ட பழி போட்டுள்ளனர். தயவு செய்து இந்த சுட்டியினை பாருங்கள்.

கோவில் பூசாரிகள் கடவுளுக்கு சமமானவர் என்று ஆத்திகர் அனைவரும் அறிந்ததே. அப்படி பட்ட ஒரு பூசாரியை, அதுவும் பல கோடி பேர் வணங்கும் ஐயப்பன் கோவில் பூசாரியை இப்படி கேவலப்படுத்தலாமா.

"உங்கள் விருப்பங்களை, வேண்டுதல்களை உங்களுக்காக செய்து கொடுப்பப்பவன் அர்ச்சகன், பூசாரி. உமக்காக மெய்யுருகி, நும் நலம் வேண்டி பூசை செய்பவனை இகழுதல், தெய்வத்தை இகழுதலுக்குச் சமம். கடவுளை இகழுதலும் அவர் அடியாரை இகழுதலும் ஒன்றே!" - (நன்றி ஆத்திகர் SK அய்யா அவர்கள்).

இவ்வாறாக கடவுளை நிந்திக்கும் இந்த திம்மிக்களிடம் இருந்து நாட்டை காப்பாற்றுவோம்.

சுவாமியே சரணம் ஐயப்பா. ஜெய்ஹிந்த்.

4 Comments:

  • பேயரசு செய்தால்
    பிணம் தின்னும் சாத்திரங்கள்!

    பாரதியைத் துணைக்கழைக்காமல்
    வேறென்ன செய்ய?

    வல்லான் வகுத்ததே
    வாழ்வெனப் போகையிலே

    தாழாத நம் வாழ்வும்
    பாழாகிப் போகாதோ?

    சுவாமியே சரணம் ஐயப்பா. ஜெய்ஹிந்த்.

    By at 7/24/2006 9:16 PM  

  • விபச்சாரிகளுடன் தொடர்பு: சபரிமலை தந்திரி நீக்கம்!
    ஜூலை 25, 2006

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் தந்திரி கண்டரரு மோகனரு திடீரென அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கும் விபச்சாரப் பெண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக திருவாங்கூர் தேவசம் போர்டு குற்றம் சாட்டியுள்ளது.


    ஐயப்பன் கோவில் கருவறைக்குள் நடிகை ஜெயமாலா நுழைந்தது தொடர்பாக உன்னி கிருஷ்ண பணிக்கர் கிளப்பிய சர்ச்சைக்கு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தீர்வு ஏற்பட்டு வருகிறது.

    அதற்காக தென் கேரளா முழுவதும் பரிகார பூஜைகளை கோவில் நிர்வாகம் தொடங்கியுள்ளது. இந் நிலையில் சபரிமலை கோவில் தந்திரி கண்டரரு மோகனரு மீது புதிய புகார் எழுந்துள்ளது.

    விபச்சார அழகிகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் கண்டரரு மோகனரு கொச்சி மற்றும் செங்கன்னூர் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார்.

    அதில், கடந்த 23ம் தேதி சில மர்ம மனிதர்கள் என்னை வீடு புகுந்து தாக்கியதுடன், காரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக் கடத்திச் சென்ற மோசமான பெண்களுடன் சேர்த்து அமர வைத்து புகைப்படம் எடுத்தனர்.

    என்னிடமிருந்த 18 பவுன் தங்கச் செயின், 15 பவுன் பிரேஸ்லெட், 5 மோதிரங்கள், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டனர்.

    இதை வெளியே சொல்லாமல் இருக்க பணம் தர வேண்டும் என்று மிரட்டினார்கள். நான் ரூ. 30 லட்சம் தர ஒப்புக் கொண்டதால் என்னை விடுவித்தனர் என்று கூறியிருந்தார். இந்தப் புகாரை கொச்சி போலீஸார் விசாரித்தனர்.

    அப்போது கண்டரரு சொன்னது அத்தனையும் பொய் எனத் தெரிய வந்தது. இதுகுறித்து டிஐஜி பத்மகுமார் கூறுகையில்,

    கொச்சியில் விபச்சாரிகள் இருக்கும் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அடிக்கடி போகும் பழக்கம் உடையவர் கண்டரரு. இதுவரை 20க்கும் மேற்பட்ட முறை அவர் சென்றுள்ளதை கண்டுபிடித்துள்ளோம். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்களுக்கு, அதை மறைக்க தலா ரூ. 20,000 வரை பணத்தைக் கொடுத்துள்ளார் கண்டரரு.

    அவர் கொடுத்த புகாரின் பேரில் நாங்கள் அங்கே போய் விசாரித்தபோது, அடுக்குமாடிக் குடியிருப்பின் காவலாளி உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார்.

    கண்டரரு பலமுறை இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வந்துள்ளதாகவும், விபச்சாரப் பெண்களின் வீட்டுக்குப் போய் வந்ததாகவும் கூறினார்.

    மேலும் கண்டரருவின் கார் நம்பரையும் கொடுத்தார். கண்டரருவுடன் புகைப்படத்தில் இருக்கும் பெண் விபச்சாரம் செய்ததற்காக ஏற்கனவே தண்டனை பெற்றவர் என்றார் பத்மகுமார்.

    கண்டரரு மோகனரு மீதான இந்தப் புகார் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஐயப்பன் கோவில் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கண்டரரு மீதான புகாரைத் தொடர்ந்து அவரை உடனடியாக தந்திரி பொறுப்பிலிருந்து நீக்கி திருவாங்கூர் தேவசம் போர்டு உத்தரவிட்டது. அவர் கோவிலுக்குள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    புதிய தந்திரியாக மோகனருவின் தந்தை கண்டரரு மகேஸ்வரரை நியமித்துள்ளது. அவர் உடனடியாக பொறுப்பேற்க மறுத்துள்ளார். மோகனரு மீதான விவகாரத்தில் முடிவு தெரிந்த பின்னரே தந்திரியாக பொறுப்பேற்பேன் என்று கூறிவிட்டார்.

    இதற்கிடையே தன்னை தந்திரி பொறுப்பிலிருந்து நீக்கியது செல்லாது என்று மோகனரு கூறியுள்ளார். கொச்சி காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட அவரிடம் போலீஸார் வாக்குமூலம் பெற்றனர்.

    அப்போது அவர் கூறுகையில், எனக்கு எதிராக சதி நடக்கிறது. பாரம்பரியமாக வகித்து வரும் பதவி தந்திரி பதவி. அந்த உரிமையைப் பறிக்க தேவசம் போர்டால் முடியாது என்றார்.

    ஜெயமாலா விவகாரத்தில் உன்னி கிருஷ்ண பணிக்கருடன் தந்திரி மோகனரு கடுமையாக மோதியது குறிப்பிடத்தக்கது. பணிக்கரும் ஜெயமாலாவும் சேர்ந்து கோவில் பூசாரிகள், நிர்வாகத்துக்கு எதிராக நாடாகமாடுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

    இந் நிலையில் விபச்சார சிக்கலில் மாட்டியுள்ளார் மோகனரு.

    Thankyou : www.thatstamil.com

    By at 7/24/2006 10:51 PM  

  • ரோம் பாப்பரசர் அறிவித்த "ஆத்மா அறுவடை"க்கு இத்தாலிய சோனியா அன்னை மறைமுகப் பிரதமராயிருக்கையில் அஸ்திவாரம் இந்துக்கள் புண்யதலங்களில் அவதூறு முழு அளவில் கிளப்புகின்றனர்.

    நம் நடராஜனுக்கு "நல்ல மேய்ப்பன்",
    திருப்பதி ஏழுமலை "திருப்பலி ஏசுமலை",
    சபரிமலை அய்யப்பனை "சவரியார் மலை ஆயப்பர்"
    அமர்நாத் பனிலிங்கம் "அந்தோணியார் பனிச்சிலுவை"

    என்றாக்கி ஆத்மா அறுவடை செய்வது தான் இவர்களின் மெகா பிளான்.

    முக்கண்ணன் தான் இமயத்திலிருந்து இறங்கி வர வேண்டும்.

    By at 7/24/2006 11:52 PM  

  • இந்திய கம்யூனிஸ்டுகள் மத்திய கிழக்கு மதங்களின் கூலிப்படைகள். அவற்றுள் நல்லெண்ணம் கொண்டு இருப்பவர்கள் தற்போது இல்லை. என்றுமே இருந்ததும் இல்லை.

    அல்லது, வெளி நாட்டு "முதலாளிகளிகளிடம்" கூலிக்கு மாரடிக்கும் உள் நாட்டு முதலாளித்துவ எதிர்ப்பு வாதிகள்..

    மொத்தத்தில்
    जिस थाली मेँ खाते है उसि पे छेद करने वाले लोग है।
    சாப்பிடும் தட்டிலேயே அசிங்கம் செய்யும் மூடர்கள்.

    By at 7/25/2006 3:51 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za