அம்மான்னா சும்மாவா?

Wednesday, August 23, 2006

கருணாநிதியின் கபட திட்டம்

நமது புண்ணிய பூமியான பாரதத்தை அரசியல்வாதிகள் பல மாநிலங்களாக பிரித்து வைத்துள்ளனர். இந்துக்கள் அனைவரும் எங்கே ஒன்று பட்டு விடுவார்களோ என்ற நினைப்பில் ரோம ராஜ்ஜியம் நடத்தி வரும் சோனியாவும் அதையே செய்து வருகின்றார்.

பாரம்பரிய மிக்க தமிழ்நாட்டில் அம்மாவின் ஆட்சி நடந்த போது தாயுள்ளத்தோடு தமிழ்நாட்டை மட்டும் பார்க்காமல் அனைத்து இந்தியாவையும் தன் குழந்தை போல சீராட்டி வந்தார்கள். அதனால் தான் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வந்த பல தொழில் அதிபர்களிடம் அன்போடு பேசி தமிழ்நாட்டை மட்டும் பார்க்காதீர்கள், அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநில வளர்ச்சிக்கும் பாடுபடுங்கள் என்று அறிவுரை கூறினார்கள். அம்மாவின் தொலைநோக்கு பார்வையால் பக்கத்து மாநிலங்களும் பயன் பெற்றன.

அது மட்டும் இல்லாமல் ஆந்திர விவசாயிகள் வறுமையால் வாடியது தெரிந்தவுடன் மைசூர் மகாராஜா அளித்த பணத்தை கொண்டு ஆந்திராவில் பல நிலங்களை வாங்கி விவசாயிகளின் துயர் தீர்த்தவர் அம்மா. ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள். பணம் மைசூர் (கர்நாடகா) அரசர் கொடுத்தது. அம்மா நிலம் வாங்கியது ஆந்திரா. அம்மா ஆட்சி செய்தது தமிழ்நாடு. நமது இந்திய ஒற்றுமைக்கும் பாரம்பரியத்திற்கும் இதை விட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு உண்டா.

ஆனால் இப்போது என்ன நடக்கிறது. மைனாரிட்டி ஆட்சி புரியும் திம்மி இந்திய திருநாட்டில் முதலீடு செய்ய வரும் தொழில் அதிபர்களிடம் தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள் என்று ஒரு குறுகிய நோக்கோடு செயல்படுகிறார். அதற்கு கைமுறுக்கு புகழ் மத்திய மந்திரியும் உடந்தை. இன்று வந்த செய்தி பாருங்கள். தமிழ்நாட்டில் ஐந்து ஊர்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என்று சொல்லியுள்ளார்கள்.

தமிழ்நாட்டிற்கே பெரும்பான்மையான தகவல் தொழில்நுட்ப முதலீடுகளை திருப்பி விட்டால் மற்ற மாநிலங்கள் என்ன செய்யும். அதை பற்றி ஒரு நிமிடம் சிந்திப்பார்களா இந்த திம்மிகள். இப்படி இந்திய ஒற்றுமைக்கு எதிராக செயல்படும் திம்மியின் ஆட்சியை அகற்ற இந்துக்கள் அனைவரும் பாடுபடுவோம்.

வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.

3 Comments:

 • //அது மட்டும் இல்லாமல் ஆந்திர விவசாயிகள் வறுமையால் வாடியது தெரிந்தவுடன் மைசூர் மகாராஜா அளித்த பணத்தை கொண்டு ஆந்திராவில் பல நிலங்களை வாங்கி விவசாயிகளின் துயர் தீர்த்தவர் அம்மா
  தமிழ் நாடாக இருந்தால் நிலங்களை விலைகொடுத்து வாங்கமாட்டார்கள். மிரட்டியே பிடுங்கியிருப்பார்கள். நல்ல வேலை தமிழ் நாடு தப்பியது.. நாம் செய்த புண்ணியம்... :-)

  பாலு ஜுவல்லர்ஸ் கதைதான் தெரியுமே ......

  By at 8/23/2006 8:34 PM  

 • அப்பு! யாரப்பு இந்த இலைக்காரன்!! இந்த குத்து குத்துராரு!!!! ரணகளம்!!!!

  By at 8/23/2006 9:19 PM  

 • போட்டுத்தாக்குங்க :!)

  By at 8/23/2006 10:12 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za