அம்மான்னா சும்மாவா?

Tuesday, September 05, 2006

கருணாநிதியின் சின்ன புத்தி

நமது புண்ணிய பூமியான பாரதத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். "சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடுமா". அதை போல தமிழ்நாட்டில் மைனாரிட்டி ஆட்சி புரியும் திம்மி நடந்து கொண்டுள்ளார்.

நமது பாரதத்தில் உள்ளோர் அனைவரும் சாஸ்திரங்களையும், வேதங்களையும் தம் உயிர் போல நினைத்து போற்றி வருபவர். அனைத்து மக்களும் நேரம் தவறாமை என்ற கொள்கையை கடைபிடித்து வருபவர். இதன் காரணமாக நாட்டில் உள்ள பொது போக்குவரத்து சாதனங்கள் அனைத்தும் அறிவித்த நேரத்தில் சரியாக வரும்/போகும். பாரதத்தில் பொது போக்குவரத்து வரும்/போகும் நேரத்தினை கொண்டு மணியை தெரிந்து கொள்ளலாம் என்ற நிலையில் பலர் கை கெடிகாரம் அணியும் பழக்கத்தினை விட்டு விட்டார்கள். கை கெடிகாரம் விற்பனை குறைந்த காரணத்தை ஆராய வந்த ஜப்பானியர் இதனால் வாய் பிளந்து நின்றனர். அவர்களது நாட்டில் இது நடக்குமா, செய்ய முடியுமா என்று ஆலோசித்து வருகின்றனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அம்மா தலைமையின் கீழ் உள்ள அ.இ.அ.தி.மு.க பெரும் வெற்றி பெற்றது உங்கள் அனைவருக்கும் நினைவில் இருக்கும். "பரம்பரை யுத்தம்" என்று பிரகடனம் செய்து பல எதிரிகளை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் அடைக்கலம் புக வைத்தவர் அம்மா. சரித்திரத்தில் இடம் பிடிக்கும் அளவுக்கு பெற்ற வெற்றியினை கண்டு எரிச்சல் அடைவோர் பலர் இங்கு உண்டு. அம்மாவின் வெற்றி நமது நாட்டு மக்களின் வெற்றி. எனவே அவர் மக்களுக்கு தன் ஆசியினை வழங்க முடிவு செய்து தனது தொகுதியான ஆண்டிப்பட்டிக்கு செல்ல முடிவு செய்தார். அதை தடுக்கும் விதமாக திம்மியின் அரசு நடந்து கொண்டுள்ளது.

அம்மா மதுரை செல்ல நேற்று விமான நிலையம் வந்தார். 11:45 மணிக்கு புறப்பட வேண்டிய விமானத்தை கருணாநிதி முடிந்த வரை தாமதப்படுத்த உத்தரவிட்டார். விமானம் 1 மணிக்கு தான் வரும் என்று சொல்லிவிட்டனர். பொதுவாக பயணம் தடை பட்டால் சாஸ்திர சம்பிரதாயங்களின் காரணத்தால் பயணத்தினை தவிர்த்து விடுவர். ஆனால் இது போன்ற சாஸ்திர சம்பிரதாயங்களை விட மக்களை விரும்பும் அம்மா அவருக்கே உரிய தகுதி மற்றும் திறமையினால் வேறு ஒரு விமானத்தின் மூலம் மதுரை செல்ல திட்டமிட்டார். இந்த சமயோசித முடிவினை சற்றும் எதிர்பார்க்காத திம்மிகள் அடுத்து என்ன செய்யலாம் என்று திட்டமிட்டனர்.

ஏதேதோ பொய்யான காரணங்களை சொல்லி சுமார் 30 நிமிடங்கள் விமானம் பறப்பதை தடுத்து வைத்தனர். அதற்கு மேல் தடுத்தால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும் என்ற காரணத்தால் விமானத்தினை போக அனுமதித்து உள்ளனர். அம்மா ஆட்சியில் அவர் பயணம் செய்யும் போது எப்போதும் மக்களுக்கு இடையூறு செய்ய மாட்டார். மக்கள் அனைவரும் அவரவர் கடமையினை செய்து கொண்டு இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவரை விமானத்தில் சுமார் 18 லட்சம் (1800000) மில்லி செகண்டுகள் அடைத்து வைத்து இருந்தது எவ்வளவு பெரிய பாதகமான செயல்.

அடைபட்டு கிடந்த அந்த 18 லட்சம் மில்லி செகண்டுகளில் அவர் நாட்டின் முன்னேற்றத்திற்காக எவ்வளவு பாடுபட்டு இருக்க முடியும் என்று தயவு செய்து யோசித்து பாருங்கள். இந்த பாதக செயலை செய்த திம்மியின் ஆட்சியை அகற்ற 80 கோடி இந்துக்களும் தொடர்ந்து போராடுவோம்.

வந்தே மாதரம். வந்தே மாதரம். வந்தே மாதரம்.

8 Comments:

 • நீங்க உண்மையில் அந்த கட்சியா, இல்லை காமெடி செய்வதற்க்காக இப்படி ஒரு பதிவா ?

  ஆட்சியில் இல்லாதப்ப 18 லட்சம் செக்கண்டு விமானத்தில ( விமான நிலையத்துல ?? ) அடைச்சி வச்சதால என்ன பெரிய பிரச்சினை ?

  கொஞ்சம் அடக்கி வாசிச்சா நல்லா இருக்காது ??

  By at 9/05/2006 10:20 PM  

 • ம்ம்ம்... நடத்துங்க...

  :-))

  என்ன ரவி, வஞ்கப்புகழ்ச்சி புரியலையா?

  By at 9/05/2006 10:48 PM  

 • ரவி அவர்களே,

  நான் எந்த கட்சி உறுப்பினரும் இல்லை. அம்மாவின் புகழ் பரப்புவதே என் தலையாய செயல். நான் பெட்டி எதையும் வாங்கவில்லை. சிதம்பரம் கோவில் திருச்சிற்றம்பலம் ஏறி சத்தியம் செய்ய தயார். அம்மாவை பற்றி எழுதும் போது பரம்பரை எதிரியான திம்மி பற்றியும் எழுத வேண்டி உள்ளது.

  By at 9/05/2006 11:53 PM  

 • //அம்மாவின் புகழ் பரப்புவதே என் தலையாய செயல். நான் பெட்டி எதையும் வாங்கவில்லை. //
  இலைக்காரன்,

  நல்லா பரப்புங்க 'அம்மா புகழை'. என்ன, இதுக்கு அம்மாகிட்டேருந்து பொட்டி வராது. அம்மாவின் அடிப்பொடிகளோட ஆட்டோ தான் வரும். :-)

  By at 9/06/2006 12:41 AM  

 • கருணாநிதிக்கு எது சிறுசுன்னு அடையாளம் சொன்னாமாரி ஜெயாக்கு எது பெருசுன்னும் அடயாலம் சொல்ல முடியுமா?

  By at 9/06/2006 12:58 AM  

 • சூப்பரப்பூ...அப்டியே போயஸ்கார்டனுக்கு ஒரு காப்பி போடுங்க..உள்ளாட்சி தேர்தல்ல சீட் நிச்சயம்..!

  By at 9/06/2006 1:13 AM  

 • //ஷோக்காளி said...
  கருணாநிதிக்கு எது சிறுசுன்னு அடையாளம் சொன்னாமாரி ஜெயாக்கு எது பெருசுன்னும் அடயாலம் சொல்ல முடியுமா? //

  ஷோக்காளி அவர்களே,
  அம்மாவின் தகுதிகள் பல. சொல்ல ஆரம்பித்தால் பல நாட்கள் போதாது. என்னுடைய பதிவுகளை படித்து பாருங்கள். உங்களுக்கே தெரியும்.

  //வணக்கத்துடன் said...
  அம்மாவின் அடிப்பொடிகளோட ஆட்டோ தான் வரும். :-) //

  வணக்கத்துடன் அவர்களே,
  பலனை எதிர்பாராமல் கடமை ஆற்றும் சிற்றிலை நான். எது வரினும் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான்.

  //RAANA MONAA said...
  சூப்பரப்பூ...அப்டியே போயஸ்கார்டனுக்கு ஒரு காப்பி போடுங்க..உள்ளாட்சி தேர்தல்ல சீட் நிச்சயம்..! //

  RAANA MONAA அவர்களே,
  பதவி, பட்டம் தேடி பறக்காத ஒரு சிற்றிலை நான்.

  By at 9/06/2006 1:54 AM  

 • ////பாரதத்தில் பொது போக்குவரத்து வரும்/போகும் நேரத்தினை கொண்டு மணியை தெரிந்து கொள்ளலாம் என்ற நிலையில் பலர் கை கெடிகாரம் அணியும் பழக்கத்தினை விட்டு விட்டார்கள்......////

  யப்பா!!!! தாங்களடா சாமி!!!

  ஒரு விவகாரமாத்தான் வராய்ங்க!!

  By at 9/06/2006 2:20 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za