அம்மான்னா சும்மாவா?

Monday, September 25, 2006

திராவிட விஷங்களை வேர் அறுப்போம்.

நமது பாரதம் ஒரு புண்ணிய பூமி. அதில் அவதரித்தவர் அனைவரும் மகான்களே. பலர் நமது பாரம்பரியத்தின் பெருமை தெரியாது திம்மிக்களாக மாறிவிட்டனர். மகான்களாக இருந்தவர்களை திம்மியாக மாற்றும் செயலை செய்தவர்களில் முக்கியமானவர் ஈ.வே.ராமசாமி. அவரின் பக்தர்கள் இந்த தீய மற்றும் தேசவிரோத செயல்களை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

திம்மிக்களின் பிடியில் இருந்து பாரதத்தை விடுவிக்க தேசத்தின் தியாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பா.ஜ.க என்று ஒரு உன்னதமான கட்சியினை அமைத்தனர். கட்சியின் பெரும் தூண்களாக ஸ்ரீமான் வாஜ்பேயி, நவீன இந்தியாவின் இரும்பு மனிதரான ஸ்ரீமான் அத்வானி. கிருத்துவ மெஷினரிகளின் போதனைகளில் இருந்து நமது இளைய சமுதாயத்தினை மீட்க பெரும் பாடுபடும் மகா பேராசிரியர் ஸ்ரீமான் ஜோஷி ஆகியோர் பாடுபட்டு வருகின்றனர். இவர்களின் தேசபற்றை கண்டு பாரத மக்கள் நாட்டை ஆட்சி செய்யும் பொறுப்பினை அவர்களுக்கு அளித்தனர். அவர்களும் நீதி வழுவாது குற்றம் குறை காண முடியாத ஒரு சிறப்பான ஆட்சியை நமக்கு அளித்தனர். அதனை கண்டு வயிறு எரிந்த கிருத்துவர்களும், முஸ்லிம்களும் நாட்டினை தற்போது ரோம அரசாங்கத்திடம் அடகு வைத்து விட்டனர்.

நமது பூமியின் மூன்றாம் விடுதலை போரினை குமரி முனையில் இருந்து துவங்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது. அதற்கு பொறுத்தமான ஸ்ரீமான் கணேசனார் அவர்களை தமிழக தலைவராக நியமித்து உள்ளது. ஸ்ரீமான் கணேசனார் கண்ணியவாதி. பெரும் தியாகி. அன்பானவர். பண்பானவர். எளிமையானவர். அனைவரிடமும் ஜாதி, மதம் பாராமல் பழகும் ஒரு மகான். நிதி என்று பெயரில் வருவதால் திராவிட அரசியல்வாதி போல நடந்து கொண்டார் ஒரு பா.ஜ.க தலைவர். அவரை அன்போடு அழைத்து அவரின் குல பெருமைகளை விளக்கி அவரை நல்வழிப்படுத்திய பெருமகனார் இவர்.

ஸ்ரீமான் கணேசனாரின் பட்டாபிஷேக படத்தினை கீழே காணலாம்.

அவரின் தலைமையில் இந்துக்கள் அனைவரும் ஒன்று பட்டு திராவிட விஷங்களை அடியோடு வேர் அறுப்போம்.

வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.

12 Comments:

  • நீங்கள் இலைக்காரனா, தாமரைப்பூக்காரனா?

    சும்மா நக்கலாக எழுதினீர்களா, அல்லது உண்மையாகவேதன் எழுதினீர்களா? அண்ணா "திராவிட" முன்னேற்ற கழகம் என்ற கட்சிக்கு நீங்கள் சார்பானவர் இல்லையா? அல்லாவிட்டால் சார்பானவர்தானா?

    சார்பானவர் என்றால் உங்கள் கட்சி ஏன் இன்னும் பெயர் மாற்றவில்லை?


    அதிமுக ஆதரவாளர்களின் நிலைப்பாடு இந்த பதிவை போன்றதுதானா/


    ஆமெனில், தம்ழிஅக அரசியலை புரிந்துகொள்ள சிறிதளவேனும் உதவிய உங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி.

    தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    By at 9/25/2006 10:14 AM  

  • ஏய்...யாருய்யா நீ?

    ரெட்டை இலைக்காரன்னு நெனச்சா, தாமரை இலைக்காரனா இருக்கெ...!

    திராவிடம் போகுது கழுதை...

    கைகளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்...

    விரிந்த கை, முஷ்டியை மடித்து ஓங்கிய கை...அதை எல்லாம் என்ன செய்வது?

    By at 9/25/2006 12:57 PM  

  • மயூரன்,

    உங்கள் வருகைக்கு நன்றி. மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன். ஏற்கனவே பல முறை சொன்னது போல் நான் ஒரு சிற்றிலை. நான் அ.இ.அ.தி.மு.க உறுப்பினர் இல்லை. அதே சமயம் அம்மாவின் பக்தன். அம்மாவின் தன்னலமில்லா சேவையை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க நினைக்கின்றேன். அவ்வப்போது மற்றவர்களை பற்றியும் எழுதுவேன்.

    வஜ்ரா,

    உங்கள் வருகைக்கு நன்றி. கையை பற்றி பேசினால் என் கையை யாராவது முறுக்கி விட போகிறார்கள். ஆகவே ஜாக்கிரதையாக 'கை'யாள வேண்டிய விஷயம் அது.

    By at 9/25/2006 7:32 PM  

  • //நிதி என்று பெயரில் வருவதால் திராவிட அரசியல்வாதி போல நடந்து கொண்டார் ஒரு பா.ஜ.க தலைவர். அவரை அன்போடு அழைத்து அவரின் குல பெருமைகளை விளக்கி அவரை நல்வழிப்படுத்திய பெருமகனார் இவர்.//


    ha ha ha...

    By at 9/25/2006 11:51 PM  

  • என் வீட்டுக்காரர் மாதிரியே ஜோக்கெல்லாம் அடிக்கிறியே?

    By at 9/26/2006 1:17 AM  

  • நல்ல காமெடிங்க குரங்கு கையில் பூ மாலை கொடுத்தது போல் உள்ளது

    By at 9/26/2006 1:42 AM  

  • ஏறிவந்த ஏணியையே எட்டி உதைக்கும் கும்பலைய்யா நீர். திராவிட நாட்டில் இருந்துகொண்டு, திராவிட மொழி உபயோகித்து திரவிடர்களையே திராவிடர்களுக்கு எதிராக கிண்டிவிடுகிறீர். அண்ட இடம் கொடுத்தால், இரண்டகம் பண்ணுகிறீர். பயங்கரவாதியோ? ஒட்டரா? துரோகியோ? கலகம் செய்கிறீர்!பாக்கிஸ்தான் ஒட்டரா? ஆம். துரோகிதான். கூட இருந்தே குழி பறிப்பவர்களை வேறு எப்படி கூறுவது. இப்போதுதான் உமக்கு நீயே சவக்குழி தோண்ட ஆரம்பித்து இருக்கிறீர். தேதியையும் குறித்துவிட்டீரா என்ன? உடனடியாக நிறுத்திவிடும்!

    By at 9/26/2006 2:10 AM  

  • "திராவிட விஷமா!!" இதில் இரட்டை இலையும் அடங்குமா? அடங்கும் என்றால் நீங்கள் இலைக்காரன் என்பது தவறு. அடங்காது என்றால் தங்கள் இந்த பதிவு தவறு.

    நன்றி

    By at 9/26/2006 2:11 AM  

  • மாசிலா,

    வருகைக்கு நன்றி. சிற்றிலை நான். இப்படி சாபம் விடலாமா.

    ஜயராமன்,

    வருகைக்கு நன்றி. நான் சரி, தவறு பார்ப்பதில்லை. மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன். அப்படியே பார்த்தாலும் 'அம்மா' திராவிடர் இல்லையே.

    By at 9/26/2006 6:08 PM  

  • எம் ஜீ யாருக்கு துணை(வி)யாக இருந்ததினால் அம்மாவும் திரவிடர் தான்..ஆனால் தூய திராவிடரா என்று தூய திராவிடத் தமிழர்களான லக்கி லுக்,திரு,குழலி போன்றவர்கள் தான் தீர்ப்பளிக்க வேண்டும்.

    பாலா

    By at 9/27/2006 8:23 AM  

  • பாலா,

    வருகைக்கு நன்றி. எம்.ஜி.ஆருக்கு துணைவி என்று சொன்னீர்கள். சற்று திருத்தம் தேவை.

    எப்பொழுதும் அம்மாதான் தனக்கு துணைவரை தேர்வு செய்வார்கள். அப்படி 80களில் தேர்வு செய்யப்பட்டவர்தான் எம்.ஜி.ஆர்.

    By at 9/27/2006 11:44 PM  

  • நிறைய பின்னூட்டங்களை பார்க்கும் போது தமிழ் வகுப்பில் 'வஞ்சப் புகழ்ச்சி அணி' பாடம் எடுத்த அன்று பள்ளிக்கு கட் அடித்து விட்டார்கள் போல் தெரிகிறது .ரொம்பவும் தான் சீரியஸா வந்து பின்னூட்டம் இடுகிறார்கள் .மயூரனும் கட் அடித்தது தான் ஆச்சரியம்.

    By at 9/28/2006 12:14 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za