அம்மான்னா சும்மாவா?

Wednesday, October 11, 2006

தேசிய முற்போக்கு திருடர்கள் கழகம்

நான் புதிதாக அவதாரம் எடுத்து இருக்கும் திராவிட நஞ்சை பற்றி சென்ற பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். அவரை பற்றி ஜூனியர் விகடனில் வந்திருக்கும் செய்தியை பாருங்கள்.


முதலாவதாக குடும்ப அரசியல். புதிய திம்மியின் குடும்பத்தினர் கட்சியில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். முக்கியமாக குடியாத்தத்தில் ஏராளமான பணத்தை செலவு செய்தும் டெபாசிட் இழந்த மச்சான். இவரை போன்றுதான் மரம்வெட்டி முதலில் தன் குடும்பத்தார் அரசியலில் ஈடுபட மாட்டார்கள் என்றார். ஆனால் இப்போது நடப்பது என்ன. அந்த மதிமூடரால் நாட்டின் எல்லா பக்கங்களிலும் சிக்குன் குனியாவும், டெங்கியும் பரவி மக்களை கொல்லுகின்றது. அதை போலவே இந்த திம்மியும் நடந்து கொள்கிறது. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.

இந்த மாதிரி பிரச்சனைகள் வரும் என தன் சமயோசியத புத்தியினால் அறிந்த அம்மா திருமணம் செய்து கொள்ளாமல் இந்த நாட்டின் மக்கள் அனைவரையும் தன் குடும்பத்தவராக கருதி தாயுள்ளத்தோடு சேவை செய்து வருகின்றார்.

அடுத்ததாக பணம் வாங்கிக் கொண்டு ஊழல் பேர்வழிகளை கட்சியில் சேர்ப்பது. தாயுள்ளத்தோடு ஒரு ரூபாய் சம்பளத்தில் ஆட்சி செய்த அம்மா ஊழல் செய்தவர்களை கட்சியில் இருந்து அவ்வப்போது நீக்கிவிடுவார். அளவுக்கு மீறி சொத்து சேர்த்ததால் தன் வளர்ப்பு மகனையே தூக்கி வீசியவர் அம்மா. அப்படி அம்மா வீசியெறிந்த குப்பைகளை இப்போது இந்த திம்மி கட்சியில் சேர்த்து வருகிறது. திலகரே, வீர சாவர்க்கரே இதற்காகவா பெரும் கஷ்டப்பட்டு எமக்கு சுதந்திரம் வாங்கி தந்தீர்?.

அடுத்தது, ஜாதி அரசியல். கட்சியில் உள்ள தலித்துகளை கட்டம் கட்டி விட்டு தன் ஜாதியினரான நாயக்கர்களை கட்சி பொறுப்பில் அமர்த்தி அழகு பார்க்கின்றார் இவர். ராமசாமி நாயக்கன் படத்தை போட்டு விளம்பரம் செய்யும் திம்மியிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். தன் இனத்தவராயினும் கொலை வழக்கில் சம்பந்தம் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர பெரியவரை சிறையில் இட்டவர் அம்மா.

இது போதாது என்று திராவிட நஞ்சுக்கள் போல மைக்கை பிடித்தால் என்ன பேசுவது என்று தெரியாமல் உளறிக்கொண்டு இருக்கிறது இந்த திம்மி. ஒரு நாள் நாட்டை சொர்க்கபுரி ஆக்குவேன் என்கிறது. இப்போது தெரு கூட்டுவேன், மலம் அள்ளுவேன் என்கிறது. அரிதாரம் பூசும் மாக்களுக்கு எல்லாம் இதே வியாதிதான். தாத்தா கூட இப்படித்தான் இடம், பொருள் தெரியாமல் உளறுவார். பிறகு தைரியலட்சுமி என்று காலில் விழுவார். என்று நம் மக்கள் இந்த மாயலோகத்தில் இருந்து விடுபடுவார்களோ.

நாட்டில் படமெடுத்தாடும் வியாதிகளை குணப்படுத்த தகுதியும், திறமையும் பெற்ற ஸ்ரீமான் வேணுகோபாலை உடனடியாக மத்திய சுகாதார அமைச்சராக நியமிக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்.

வாக்கு போடு. தூக்கு போடு.

8 Comments:

 • //இந்த மாதிரி பிரச்சனைகள் வரும் என தன் சமயோசியத புத்தியினால் அறிந்த அம்மா திருமணம் செய்து கொள்ளாமல் இந்த நாட்டின் மக்கள் அனைவரையும் தன் குடும்பத்தவராக கருதி தாயுள்ளத்தோடு சேவை செய்து வருகின்றார்.//
  அவ்வாறு உண்மையிலே செய்தவர் பெருந்தலைவர் காமராஜ் தான்.

  By at 10/11/2006 2:52 AM  

 • :))))))))))))))))))))))

  By at 10/11/2006 3:07 AM  

 • என்னார் அவர்களே,

  வருகைக்கு நன்றி. கர்மவீரரை பற்றி இந்த வார திண்ணையில் சில விபரங்களை சொல்லி இருக்கின்றார் பெரியவர் மலர் மன்னன். அதை பற்றி தங்கள் கருத்து என்ன?

  By at 10/11/2006 3:10 AM  

 • //
  வாக்கு போடு. தூக்கு போடு.
  //

  என்னது இது..?

  அவுத்து போடு, ஆட்டம் போடு ன்னு, லிவிங் ஸ்மைல் சொன்ன மாதிரி இருக்கு..!

  By at 10/11/2006 4:41 AM  

 • செந்தழல் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  திராவிடவெறியன் அவர்களே,

  வருகைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டம் என்னார் அவர்களுக்கு தனிப்பட்ட கேள்வியாக அமைவதால் வெளியிடவில்லை. மன்னிக்கவும். அவரிடமே நேரடியாக கேட்டுக் கொள்ளுங்கள்.

  வஜ்ரா அவர்களே,

  வருகைக்கு நன்றி. என்ன இப்படி தவறாக நினைத்துவிட்டீர்கள். தேச நலனை முன்னிட்டு அனைவரும் வாக்கு அளிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கின்றேன். நாட்டின் ஒற்றுமையை முன்னிட்டு தீவிரவாதியை தூக்கில் போடுங்கள் என்று சொல்லி இருக்கின்றேன்.

  By at 10/11/2006 5:27 AM  

 • ஐயா தப்பா நெனச்சிக்காதீங்க...

  அப்புடிச் சொன்னதுக்கு அந்த அம்மாவ ரவுண்டுல வுட்டு அடிச்சாங்க இத்தே தமிழ்(கோ)மணத்துல..!

  உங்கள ஏற்கனவே இன்னேறம் முத்திரை குத்திருப்பாங்க...

  By at 10/11/2006 5:42 AM  

 • மிகவும் ரசிக்கத்தகுந்த எழுத்து நடை, உள்ளார்ந்த நகைச்சுவை (அல்லது இல்லையா?) தங்களுடையது...

  By at 10/11/2006 5:43 AM  

 • ராஜதுரை அவர்களே,

  வருகைக்கு நன்றி. பெரியவர்களின் பாராட்டு கிடைப்பதே பெரும் பாக்கியம். மிக்க நன்றி.

  வஜ்ரா அவர்களே,

  முத்திரையா. என் பதிவுகளுக்கு எதிர் பதிவாக இதுவரை நான்கு பதிவுகள் வந்து விட்டது. என் மனதில் தோன்றியதை எழுதுகிறேன்.

  By at 10/11/2006 6:03 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za