அம்மான்னா சும்மாவா?

Sunday, October 08, 2006

புதிய திராவிட நஞ்சு

நமது பாரதம் பழம் பெரும் நாடு. பாரம்பரியத்தில், கலாச்சாரத்தில் யாரும் அண்ட முடியாத தொலைவில் நிமிர்ந்து நடை போடுபவர் நம்மவர். இந்த உலகில் வல்லரசாக நடை போடும் போது ஆங்காங்கே திம்மிக்களின் மூலம் தடை வருவது இயற்கையே. பாரத மாதாவிற்கு பல பக்கங்களில் இருந்து சோதனைகள்.

முக்கியமாக தமிழகம் அவ்வப்போது திம்மிக்களின் பிடியில் மாட்டிக்கொள்ளும். என்ன செய்வது. இங்கு வாழும் மக்கள் இறைவனை நிந்தனை செய்தால் வேறு என்ன நடக்கும். இருக்கும் திம்மி பத்தாது என புதிய திம்மி ஒன்று அவதாரம் எடுத்து உள்ளது. நல்லதை செய்வேன் என்று அரிதாரம் பூசிய திம்மி இப்போது நானும் "திராவிடன்" என்று கூப்பாடு போடுகின்றது.

கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்ய ஆண்டவனால் படைக்கப்பட்டவர் அம்மா. அம்மாவின் வழி தனி வழி (ஜால்ரா அடிக்கும் தைரியலட்சுமி வழி அல்ல). நடக்கப்போகும் தேர்தலில் கருணாநிதி கும்பலை நரகாசூர வதம் செய்ய போகிறார் அம்மா. அதனை உணர்ந்து கொண்ட புதிய திராவிட குஞ்சு தானும் அம்மாவின் வழி என்று பகிரங்கமாக சொல்லாமல் கருணாநிதியை திட்ட துவங்கி இருக்கிறது. அவ்வப்போது அம்மாவையும் சீண்டுகிறது.

அம்மாவிற்கு இருக்கும் தகுதி, திறமை சிறிதேனும் இல்லாத இந்த புதிய திம்மி ஒரே வருடத்தில் நாட்டை சொர்க்கபுரியாக மாற்றுமாம். சொந்த புத்தி இல்லாத அரை வேக்காடு என்பதை அது நிரூபித்துள்ளது. இது என்ன அது கூத்தாடும் சினிமா கனவு காட்சியா? அம்மா தனக்கு வேண்டாம் என்று கட்சியை விட்டு தூக்கி எறிந்த கறிவேப்பிலைகளை சேர்த்துக் கொண்டால் இவர் பெரிய ஆள் ஆகிவிடுவாரா. அய்யோ பாவம். ஏதோ புரட்சி செய்ய போகின்றது என்று பார்த்தால் இதுவும் இப்படி அடாவடி செய்கின்றதே. நம் இனத்திற்கு என்று விடிவுகாலம் பிறக்குமோ.

எனவே 80 கோடி இந்துக்களும் வரும் தேர்தலில் தேச நலனை மனத்தில் கொண்டு அம்மாவிற்கே வாக்கு அளிக்க வேண்டுகிறேன். அம்மாவின் சீடர்கள் போட்டி இடாவிட்டால் ஸ்ரீமான் கணேசனாரின் பா.ஜ.கவிற்கு வாக்கு அளியுங்கள். நாட்டை ஆபத்து சூழ்ந்திருக்கும் போது, நமது ஒற்றுமை மிக அவசியமானது. நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் அப்ஸல்கள் போன்ற தீவிரவாதிகளிடம் இருந்து நமது தாயை காப்பாற்ற முடியும்.

வாக்கு போடு. தூக்கு போடு.

0 Comments:

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za