அம்மான்னா சும்மாவா?

Tuesday, November 07, 2006

அராஜகம் தொடர்கின்றது

இந்த உலகை காக்கும் ஒரே மதம் இந்து மதமாகும். இந்து மதம் தழைத்து இருப்பதால்தான் பாரதம் நாள்தோறும் வலிமை பெற்று வருகின்றது. நம்முடைய வேதங்களும், சாஸ்திரங்களும், பக்தியும் இல்லையெனில் பாரதம் ஆப்பிரிக்க நாடுகள் போல கற்காலத்திற்கு சென்று விடும். இதனை உணர்ந்துதான் இறைவன் மனித அவதாரம் எடுத்து வந்து நம்மிடையே நல்ல பழக்க வழக்கங்களை விட்டு செல்கின்றார். இவ்வாறாக பாரதத்தில் அவதரித்த ஒரு மகான் நம் வள்ளலார் ஆகும். இந்து மதத்தினை பாரதத்தில் பரப்பியவர்களில் அவர் முக்கிய பங்கு வகிக்கின்றார். நாள் தோறும் ஈசனுக்கும், கணபதிக்கும் பூசை செய்யாமல் அவர் இருந்ததே கிடையாது.

பாரத புதல்வர்களின் பாவச் செயலால் தமிழகத்தில் திம்மியின் மைனாரிட்டி ஆட்சி வந்துவிட்டது. ஆட்சி பொறுப்பில் அமர்ந்தவுடன் வழக்கம்போல இந்து மத விரோத செயல்களில் இறங்கிவிட்டது. இப்போது இந்து மதத்தின் முக்கிய தூணாக விளங்கிய வள்ளலாரின் இடத்தில் உருவ வழிபாடு நடத்த தடை விதித்து விட்டது. உருவ வழிபாட்டினை எதிர்க்கும் ஒரே ஜீவராசிகள் முகமதியர்கள் ஆவார்கள். அவர்கள் போடும் ஓட்டிற்காக திம்மி அரசாங்கம் நம் மதத்தினை அழிக்க துடிக்கின்றது.

இந்து மகான் வள்ளலார் ஈசனோடு இரண்டர கலந்து விட்டவர். அப்படிப்பட்டவரின் இடத்தில் சிவலிங்க வழிபாடு நடத்தக்கூடாதாம். என்ன வேதனை. பாரதத்தில் இந்து மகான் ஒருவருக்கு பூசைகள் செய்ய முடியவில்லை. 80 கோடி இந்துக்களும் ஒன்று பட்டு உச்ச நீதிமன்றத்திற்கு செல்வோம். அங்குதான் நமக்கு சரியான நீதி கிடைக்கும்.

வாழ்க வள்ளலார். வெல்க இந்து மதம்.

2 Comments:

  • அய்யோ... அய்யோ! நாங்க இதையெல்லாம் உண்மைன்னு நம்பிட்டோம்ல. கொஞ்சம் கூட இடை செருகல் இல்லாமல் எப்படிங்க இப்படி உண்மையை உரைக்கிறீங்க?

    By at 11/07/2006 10:01 PM  

  • அடி ஆத்தி,

    வருகைக்கு நன்றி. "பாயும் பிராமணர்" பா.முரளிதரன் இதை பற்றி ஒரு பதிவு எழுதியுள்ளார் (http://adhvaithi.blogspot.com/2006/11/blog-post_08.html). சென்று படித்து பாருங்கள். வள்ளலார் ஈசனோடு கலந்துவிட்டவர்.

    நாம் அனைவரும் இந்துவே. எனவே சாஸ்திரம், வேதங்களில் சொல்லியபடி நம் வாழ்க்கையில் நடை போடுவோம்.

    By at 11/08/2006 8:12 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za