அம்மான்னா சும்மாவா?

Friday, November 24, 2006

கருணாநிதி அரசை நீக்க வேண்டும்

பாரதம் ஒற்றுமைக்கு புகழ் பெற்ற நாடு. இங்கு உள்ள மக்கள் அனைவரும் சாஸ்திரங்களிலும், வேதங்களிலும் சொல்லியபடி அவரவர் கடமைகளை செய்து கொண்டு வருபவர். ஜாதி, மத வித்தியாசங்கள் இன்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருபவர். அதை கண்டு பொறுக்க முடியாத கிருத்துவ மெஷினரிகள் நம்மிடையே ஏற்றத்தாழ்வு உண்டு என்று ஒரு வெடியை கொளுத்தி போட்டு விட்டனர். அப்பாவி மக்களும் அதை நம்பி கோவில போன்ற சில இடங்களில் வேற்றுமையை காட்டி வருகின்றனர். அது காலப்போக்கில் மறைந்து நாம் அனைவரும் ஒன்றே என்று கூடி மகிழும் காலம் விரைவில் வரும்.

பாரதம் அரசாட்சி முறைகளுக்காக பல்வேறு மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. எல்லா மாநில மக்களும் பாரதத்தாயின் குழந்தைகளே. அதைதான் நம் முன்னோர் அடிக்கடி கூறி வந்தனர். இப்படி பல உடல் ஓர் உயிராக வாழ்ந்து வரும் மக்களிடையே கலவரத்தை உருவாக்குகிறான் மைனாரிட்டி ஆட்சி புரியும் திம்மி. கேரள மாநில மக்கள் 100% படித்த மக்கள். அவர்களின் மதிப்பு படிக்காத திம்மிக்கு எப்படி புரியும். கேரளாவிற்கு செல்லும் வண்டிகளை மறிக்கின்றனர் திம்மியின் வானரங்கள்.

இது எப்படி முறையாகும். பாரதத்தின் ஒரு பகுதியில் இருந்து வண்டியில் வேறு பகுதிக்கு செல்ல முடியவில்லை. இது சரியா?. தேசப்பற்று உள்ளோர் இதை கடுமையாக எதிர்க்கவேண்டும். இந்த மறியல்களின் மூலம் கிருத்துவ மெஷினரிகளின் மனத்தை குளிர்விக்க என்னுகிறார் மஞ்சள் துண்டார். என்னடா கிருத்துவ மெஷினரிகள் இதில் எங்கே வந்தனர் என்று நினைக்கின்றீர்களா. தொடர்ந்து படியுங்கள் உங்களுக்கே புரியும். சமீபத்தில் சாஸ்தாவின் புகழ் உலகமெங்கும் பரவி வருகின்றது. அதை அப்படியே விட்டால் ஆல்ப்ஸ் மலையிலும் 18 படி வந்து விடும் என வாடிகன் நம்புகிறது. அன்டோனியோ மெய்னோவின் ஆசியுடன் மெஷினரிகள் ஜெயமாலா என்ற நடிகையை தூண்டிவிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தினர். அது மக்களிடையே எடுபடாத காரணத்தினால் தமிழக திம்மி மூலம் தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களை தடுக்க இப்படி ஒர் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

பாரத ஒற்றுமைக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் இந்துக்களை அவர்கள் விரும்பும் ஆலயத்திற்கு செல்ல முடியாமல் தடுக்கும் இந்த மைனாரிட்டி ஆட்சியை 356ஆது விதியின் கீழ் ஆட்சி பொறுப்பில் இருந்து நீக்க 80 கோடி இந்துக்களும் ஒன்று பட்டு போராடுவோம். திம்மியின் பிடியில் இருந்து பாரத மாதாவை காப்பாற்றுவோம்.

வந்தே மாதரம்.
வந்தே மாதரம்.
வந்தே மாதரம்.
அனைவரும் வந்தே மாதரம் எனும் மந்திரத்தை 108 முறை ஓங்கி ஒலிப்போம்.

பாரத ஒற்றுமை ஓங்குக. வாழ்க பாரதம். வீழ்க திம்மி.

7 Comments:

 • :) வந்தே ஏமாத்திறோம்! வராம? :))

  பதிவை ரசிச்த்து சிரிக்கிறேன்!

  By at 11/24/2006 1:17 AM  

 • திம்மி தொல்லை தாங்கலேப்பா :-)

  BTW, தமிழ்நாடு.காமிலும் கொலைகுத்து குத்தறீங்களே?

  By at 11/24/2006 1:40 AM  

 • அரசியல்வாதிகளாவது தேர்தல் சமயத்தில் மட்டும் பொது இடங்களில் மக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் மைக் செட் கட்டி காட்டுக்கத்து கத்தி பள்ளி மாணவர்களின் படிப்பையும், அந்த இடந்தின் அமைதியையும் கெடுக்கின்றனர். ஆனால் இந்த "அலேலூயா" கோஷ்டி ஆண்டு முழுவதும் தெருவுக்குத் தெரு மைக் செட் கட்டி "அற்புத சுகமளிக்கும்" கூட்டம் என்கிற பெயரில் காட்டுக்கத்து கத்தி பொதுமக்களை அவதிக்குள்ளாக்குகின்றனர். வெளிநாட்டில் இருந்து வரும் பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கள் தாய்நாட்டிற்கு மறைமுகமாக துரோகம் இழைக்கின்றனர். இவர்கள் நடத்தும் கல்லூரிகளில் வேலை செய்பவர்களுக்கு பெரும் தொகை சம்பளமாக தருவதாக கணக்கு காட்டி வெறும் எலும்புத்துணை தூக்கிப் போட்டுவிட்டு மொத்தமாக சுருட்டி சுகபோக வாழ்க்கை அனுபவிக்கின்றனர். இவர்களை என்ன செய்வது. இவர்களுக்கு எதிராக யாராவது நடவடிக்கை எடுத்தால் சிறுபான்மை மக்களை துன்புறுத்துகின்றனர் என்று ஒரு கூட்டம் வரிந்துகட்டிக்கொண்டு வரும்.
  இது இந்த நாட்டின் தலைவிதி என்ன செய்வது.

  By at 11/24/2006 1:50 AM  

 • You are 100% Right. But JJ is a Anti Tamil Lady. Pls. say Which Party is best to rule Tamilnadu?.
  karunanithi is Anti Hindu. JJ is ANTI TAMIL.

  By at 11/24/2006 3:00 AM  

 • திரு அவர்களே,

  வருகைக்கு நன்றி.


  சினேகிதன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  By at 11/24/2006 5:03 AM  

 • //BTW, தமிழ்நாடு.காமிலும் கொலைகுத்து குத்தறீங்களே? //

  luckylook அவர்களே,

  வருகைக்கு நன்றி. தமிழ்நாடு.காம்? இதுவரைக்கும் அங்கு சென்றதில்லை.

  By at 11/24/2006 5:05 AM  

 • kulakkodan அவர்களே,

  வருகைக்கு நன்றி. Anti Tamil = Nationalist. So Amma is a 100% Nationalist like Veer Savarkar, Bal Gangadhara Tilak & Advaniji.

  By at 11/24/2006 5:07 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za