அம்மான்னா சும்மாவா?

Sunday, November 19, 2006

well done கலாநிதி

பாரதத்தின் செல்வந்தர்களை பற்றிய ஒரு செய்தி சமீபத்தில் வெளியானது. அதில் 20ஆவது இடத்தினை பிடித்திருப்பவர் கலாநிதி ஆகும். அவரின் சொத்து மதிப்பு சுமார் 1.9 பில்லியன் என மதிப்பிட படுகிறது. என்னடா இலைக்காரன் கலாநிதியை வாழ்த்துகின்றானே என நீங்கள் புருவங்களை உயர்த்தலாம். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என சி.என்.அண்ணாதுரை சொல்லியுள்ளார். சிற்றிலையான எனக்கு தோன்றிய சில காரணங்களை பார்ப்போம்.

முதலில் அவர் ஒர் இந்து. எனவே 80 கோடி இந்துக்களும் இந்த செய்தியில் நிச்சயம் பெருமை பட வேண்டும். அது மட்டும் இல்லாமல் நமது சமயத்திற்கு அரும் பாடுபடும் ஒர் இளைஞர் அவர். திருப்பதி முதல் சபரிமலை வரை அனைத்து கோயில் திருவிழாக்களையும் நேரடியாக ஒளிபரப்பி உலகம் முழுவதும் இருக்கும் இந்துக்களுக்கு தெய்வ தரிசனத்தை அவர்கள் வீட்டு வரவேற்பறைக்கே கொண்டு வரும் ஒரு உன்னதமான மனிதர் அவர். மேலும் அவரின் தொலைக்காட்சியில் இந்து சமயத்தினை போற்றும் பல நல்ல, பயனுள்ள தொடர்களை ஒளிபரப்பி வருகின்றார். உதாரணமாக வேலன், வேப்பிலைக்காரி, மை டியர் பூதம், ராஜராஜேஸ்வரி போன்ற தொடர்களை சொல்லலாம். இப்படியான தொடர்கள் மூலம் நம் மதம் உலகம் முழுவதும் பல்கி பெருகும்.

அடுத்ததாக அவர் ஆற்றும் பெரும் பணி நமது பாரம்பரியத்தின் அருமை பெருமைகளை எடுத்து உரைப்பதாகும். சாஸ்திரங்களிலும், வேதங்களிலும் மக்களுக்கு பயன்படும் பல நல்ல குறிப்புகள் உள்ளன. அவைகளை மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு புனித காரியத்தினை அவர் செய்து வருகின்றார். உதாரணமாக அது மட்டும் ரகசியம், சிவமயம் போன்ற தொடர்களை சொல்லலாம். ரசவாதம், மூலிகைகள், மூச்சடைப்பு, தியானம் போன்ற நற் கலைகள் மக்களிடையே பரவி வருகின்றது ஒரு நல்ல செய்தியே. நமது பாரம்பரிய சர்வ நோய் நிவாரணியான திருநீரானது அவர் வெளியிடும் பல தொடர்களில் பல்வகையான நோய்களை தீர்த்து இருப்பதை கண்கூடாக பார்த்து இருக்கின்றேன்.

பெண்களை பெருமை படுத்தும் பல நல்ல கதாபாத்திரங்கள் அவரின் தொலைக்காட்சியில் பவனி வருவர். சூர்ப்பனகை, கூனி, கைகேயி போன்ற நம் முன்னோர்களின் குண நலன்களை அடிக்கடி காட்டி மக்களை நல்வழிப்படுத்தும் ஒர் அரிய செயலை அவர் செய்து வருகின்றார். இது போன்ற கதாபாத்திரங்கள் நம் இளையோரின் வாழ்க்கைக்கு மிகவும் வேண்டிய ஒன்றாகும்.

மேலே குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும் விட நான் முக்கியமாக கருதுவது அவரின் தமிழ் மொழி பற்றுத்தான். தமிழ் மொழியின் பழக்கம் நம்மிடையே அழிந்து வரும் இக்காலத்தில் சன் ம்யுசிக், சூரியன் எப்.எம் போன்ற தலை சிறந்த நிறுவனங்கள் மூலம் தமிழை வாழ வைக்கின்றார். நக்கீரரும், திருஞானசம்பந்தரும் பாடி வளர்த்த நல்ல தமிழை நம்மிடையே அழியாமல் காப்பாற்றுபவர் அவரே.

எனவே அவருக்கு வலைபதிவர்கள் சார்பாக "ஆன்மீக பெரியார்" என்னும் பட்டத்தினை அளிக்கலாம் என நினைக்கின்றேன். அடுத்த சென்னை வலைபதிவர் கூட்டத்தில் இந்த கருத்தினை முன் மொழிய எண்ணியுள்ளேன்.

வாழ்க கலாநிதி. வளர்க அவர் செல்வம்.

15 Comments:

  • :)))))))))))))))))

    சென்னை மாவட்ட செயலாளர் லக்கியார் வருவார்...எப்படி தப்பிக்கபோறீங்களோ...

    By at 11/19/2006 10:35 PM  

  • முளைச்சு மூணு இலை விட்டாச்சு போலிருக்கு!

    By at 11/19/2006 11:30 PM  

  • //சென்னை மாவட்ட செயலாளர் லக்கியார் வருவார்...எப்படி தப்பிக்கபோறீங்களோ...//

    குசும்புதானே..
    என்ன வலையுலநாரதரா நீங்கள்?..

    By at 11/19/2006 11:41 PM  

  • //எனவே அவருக்கு வலைபதிவர்கள் சார்பாக "ஆன்மீக பெரியார்" என்னும் பட்டத்தினை அளிக்கலாம் //

    இலைக்காரன் அய்யா,

    கண்டிப்பாக அளிக்கவேண்டியது தான்.
    ஆனால் பட்டப் பிரியரான கலைஞர் இந்த பட்டத்தையையும் தனக்கே தர வேண்டும் என கோரினால் கொஞ்சம் இசகு பிசகாக போய்விடுவதற்க்கு வாய்ப்பு உண்டு.ரகசியமா இதை செய்யலாம் என்பது என் அபிப்ராயம்.ஆனா லக்கி அய்யா ஒத்துப்பாரான்னு தெரியல.

    பாலா

    By at 11/19/2006 11:50 PM  

  • ரவி அவர்களே,

    வருகைக்கு நன்றி. நான் ஒரு சிறு இலை. காற்றடித்தால் பறந்து விடுவேன். அதனால் லக்கியார் கண்டிப்பாக எனக்கு ஆட்டோ அனுப்ப மாட்டார்.

    By at 11/19/2006 11:52 PM  

  • Hariharan # 26491540 அவர்களே,

    வருகைக்கு நன்றி. எல்லாம் தாங்கள் கொடுக்கும் ஊக்கம்தான் காரணம். உங்கள் அளவிற்கு இல்லையென்றாலும் எதோ என்னால் முடிந்தவரை திராவிட நஞ்சுகளை பற்றி எழுதி வருகின்றேன்.

    ஆமாம் "முளைச்சு மூணு இலை விட்டாச்சு" என்று சொன்னது என்னையா அல்லது கலாநிதியையா?

    By at 11/19/2006 11:54 PM  

  • //ஆனால் பட்டப் பிரியரான கலைஞர் இந்த பட்டத்தையையும் தனக்கே தர வேண்டும் என கோரினால் கொஞ்சம் இசகு பிசகாக போய்விடுவதற்க்கு வாய்ப்பு உண்டு.//

    பாலா அவர்களே,

    வருகைக்கு நன்றி. இதில் இப்படி ஒரு சிக்கல் இருக்கிறதா. அதற்குத்தான் தங்களை போல பெரியவர்களின் ஆசீர்வாதம் என்றும் எனக்கு தேவை. ஒன்று செய்யலாமா.
    கருணாநிதிக்கு "ஆன்மீக பெரியார்". கலாநிதிக்கு "பால ஆன்மீக பெரியார்" என்று பட்டம் கொடுத்துவிடலாமா?

    By at 11/20/2006 12:44 AM  

  • //கருணாநிதிக்கு "ஆன்மீக பெரியார்". கலாநிதிக்கு "பால ஆன்மீக பெரியார்" என்று பட்டம் கொடுத்துவிடலாமா?//

    இலைக்காரன் அய்யா,

    சூப்பர். எந்த பிரச்சனைக்கும் தீர்வு ஸ்டாக்லே வச்சிருக்கீங்க.சபாஷ்.நீங்க சொன்னபடியே செஞ்சிடலாம்.

    பாலா

    By at 11/20/2006 12:53 AM  

  • //எல்லாம் தாங்கள் கொடுக்கும் ஊக்கம்தான் காரணம். உங்கள் அளவிற்கு இல்லையென்றாலும் எதோ என்னால் முடிந்தவரை திராவிட நஞ்சுகளை பற்றி எழுதி வருகின்றேன்.//

    யாருங்க அங்கே! எனக்கு அனுப்புற ஆட்டோக்களில் சிலதை இலைக்காரருக்கு திருப்பி விடுங்கப்பா! :-)))

    //ஆமாம் "முளைச்சு மூணு இலை விட்டாச்சு" என்று சொன்னது என்னையா அல்லது கலாநிதியையா?//

    உம்மைத்தானய்யா இலைக்காரரே தைரியமான கருத்துக்கள் துளிர்விட்டு வருவதைச் சொன்னேன்!

    By at 11/20/2006 12:54 AM  

  • //சபாஷ்.நீங்க சொன்னபடியே செஞ்சிடலாம்.//

    நன்றி பாலா அவர்களே.

    //உம்மைத்தானய்யா இலைக்காரரே தைரியமான கருத்துக்கள் துளிர்விட்டு வருவதைச் சொன்னேன்! //

    நன்றி Hariharan # 26491540 அவர்களே. உண்மை பேசுவதற்கு எதற்கு பயப்பட வேண்டும். தன்னமில்லா இந்து சமய சேவை செய்யும் கலாநிதி பல்லாண்டு காலம் வாழ 80 கோடி இந்துக்களும் ஆங்காங்கே பூஜைகள் செய்வோம்.

    By at 11/20/2006 1:27 AM  

  • ;-))

    By at 11/20/2006 8:16 AM  

  • :)) kalakal

    By at 11/20/2006 7:07 PM  

  • சினேகன்,

    வருகைக்கு நன்றி.

    இன்னொரு பதிவில் இதை பற்றி குறிப்பிடலாம் என நினைத்து இருந்தேன். நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.

    By at 11/21/2006 6:21 PM  

  • //தாத்தாவிற்கு பாராட்டுவிழா, தம்பிக்கு பாராட்டுவிழா என்று சினிமா நடிகர்களின் குத்தாட்டத்தை மணிக்கணக்கில் காட்டுவதோடு மட்டுமல்லாமல், making of குத்தாட்டம் என்று குத்தாட்ட நிகழ்ச்சி உருவான விதம் என்று இளைஞர்களை வழிநடத்தும் நிகழ்ச்சிகளைக் காட்டி பல கோடி ரூபாய் சம்பாதிக்கும் திறமையை விட்டு விட்டீர்களே//

    நாற்பது ஆண்டுகால ஆட்சியில் திராவிடீயம் நம் சகோதரன் கையில் தந்திருப்பது மலம். ஆனால் தாத்தாவுக்கும்,சன் கோஷ்டிக்கும் திராவிடீயம், குத்தாட்டத்தின் மூலமாகமும்,பகற்க் கொள்ளை மூலமாகவும்,
    கோடி கோடியாக அள்ளிக் கொடுத்திருக்கிறது.இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    பாலா

    By at 11/22/2006 7:53 AM  

  • பாலா அவர்களே,

    வருகைக்கு நன்றி. பதிவு கலாநிதி பற்றியது. அதை பற்றி மட்டும் பேசுவோம். அசுரன், ராஜ்வனஜ் பற்றி இங்கே பேசவேண்டாம்.

    By at 11/22/2006 7:33 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za