அம்மான்னா சும்மாவா?

Tuesday, November 21, 2006

கொடுஞ்செயல்

பாரத தேசத்தின் பாரம்பரியத்தினை அடியோடு அழிக்க கிருத்துவ மெஷினரிகளும், முகமதியர்களும் ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே. ராம ராஜ்ஜியத்தினை ரோம ராஜ்ஜியமாக மாற்ற வாடிகன் உத்தரவின் படி அன்டோனியோ மெய்னோ செயல்பட்டு வருகின்றார். நம் முன்னோர் செய்த பாவ காரியங்களின் பலனாக தமிழகமும் இப்போது திம்மியின் பிடியில் இருக்கின்றது. திம்மி ஆட்சியில் இருப்பதால் தமிழகத்தில் ஆங்காங்கே மதமாற்ற சடங்குகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் தமிழகத்தில் ஒரு இந்து கூட இல்லாத நிலை ஏற்பட்டுவிடும்.

மனிதனை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்த கூட்டம், கோயிலையும் வளைக்க ஆரம்பித்துவிட்டது. நெல்லையப்பர் கோயில் உலக பிரசத்தி பெற்றது. நெல்லையப்பர் கோயிலை மொத்தமாக வளைத்து சூசையப்பர் தேவாலயம் அமைக்க வாடிகன் முடிவு செய்துவிட்டது. அதன் தொடக்கமாக சிலரை இங்கு அனுப்பி கோயிலை எப்படி தேவாலயமாக மாற்றலாம் என ஆராய்ந்து உள்ளது. அதை கீழே உள்ள படத்தினில் காணலாம். அது மட்டும் அல்லாமல் கோயில் யானையையும் மதம் மாற்ற ஆரம்பகட்ட முயற்சிகள் நடை பெற்று வருவதாக பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.


செய்தி அறிந்ததும் தேச பற்றையும், இந்து மதத்தையும் இரு கண்களாக பாவிக்கும் பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியினர் கோயிலுக்கு விரைந்து இந்த கொடுஞ்செயலை தடுக்க முற்பட்டனர். ஆனால் கருணாநிதியின் நேரடி உத்தரவின்படி போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தி படுகாயப்படுத்தி விட்டனர். பொது மக்கள் கையாலாகாத மைனாரிட்டி அரசு மீது கடும் கோபம் கொண்டுள்ளனர். தென் தமிழகம் பதற்ற நிலையில் உள்ளது. பதற்றத்தை தணிக்க மூத்த பத்திரிக்கையாளரான பெரியவர் மலர்மன்னன் அங்கு விரைந்துள்ளார். அவர் வருகையால் பதற்றம் குறைந்து அமைதி விரைவில் திரும்பும் என நடுநிலையாளர்கள் நம்புகின்றனர்.



இதுபோன்ற இந்து விரோத செயல்களை தொடர்ந்து செய்யும் மத்திய, மாநில அரசுகளை ஆட்சி பொறுப்பில் இருந்து வெளியேற்ற 80 கோடி இந்துக்களும் ஒன்றுபட்டு போராடுவோம். அனைவரும் எல்லா கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்து பொது மக்களுக்கு இதை பற்றி தெளிவுபடுத்துவோம்.

வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.

1 Comments:

  • Parama Pitha அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    By at 11/22/2006 7:39 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za