அம்மான்னா சும்மாவா?

Tuesday, March 06, 2007

நாட்டை துண்டாடும் திராவிடம்

பாரத தேசத்தில் 80 கோடி இந்துக்களும் வேதங்கள் சொல்லியபடி ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. கிருத்துவ மிசநரிகளிடம் பெட்டி வாங்கிய திராவிட நஞ்சுக்கள் நாட்டை துண்டாட அவ்வப்போது சில காரியம் செய்வார்கள். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டை மைனாரிட்டி ஆட்சி செய்யும் திம்மி தண்ணீர் பிரச்சனையை கிளப்பி விட்டது. திராவிட கொள்ளைக்காரர்கள் வருவதற்கு முன்பு புரண்டு ஓடிய காவிரி, முல்லை பெரியார் மற்றும் பாலாற்றில் இப்போது தண்ணீர் இல்லை. ஏன் இப்படி நடக்கின்றது. இதெற்கெல்லாம் ஈ.வெ.ராவும் அவனின் சிஷ்ய கோடிகளுமே காரணம் என்கிறார் வளைகுடா நாட்டில் வசிக்கும் ஒர் அறிஞர்.

ஆகண்ட பாரதமாக இருந்த நம் தேசத்தை மொழியின் பெயரால் துண்டாக்கினான் கிருத்துவன். மிசநரிகள் என்ன செய்தாலும் தங்கள் ஒற்றுமையை எப்போதும் வெளிக்காட்டும் குணம் கொண்டவர் நம் மக்கள். நம் தேசத்தில் தண்ணீர் பங்கீட்டு பிரச்சனை என்பது கருணாநிதி பிறக்கும் வரை கேள்வி படாத ஒன்றாகும். சரி தமிழ்நாட்டோடு போய்விடும் என்று பார்த்தால் இப்போது முதலுக்கே மோசம் வந்துவிடும் போல் இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள திம்மி இங்கே உள்ள இன்னொரு திம்மியிடம் சொல்லி பஞ்சாப், அரியானா இடையே தண்ணீர் பிரச்சனையை கிளப்பி விடுகின்றது. இதை பற்றி விரிவான செய்தியை இங்கே படியுங்கள்.

இது போல நம் நாட்டை துண்டாட திட்டமிடும் திம்மிக்களிடம் இருந்து 80 கோடி இந்துக்களும் ஒன்று சேர்ந்து போராடுவோம். இதற்காக நாம் அனைவரும் ஆங்காங்கே அசுவமேத யாகம் செய்வோம்.

வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.

2 Comments:

  • இலைக்காரரே,

    அங்கதமெல்லாம் சரி.

    நதியை தேவதை, தெய்வம் என்று வழிபட்டு இருந்ததால் கிடைத்த நன்மையை தெய்வமே இல்லை என்பதைக் கொள்கையாகக் கொண்ட பகுத்தறிவுகள் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்ற பின்பே தமிழகத் தலை நகரத்தில் ஓடும் நதிகளில் நீருக்கு பதிலாக் மலம், கழிவு, இதர சாக்கடைகளின் சங்கமமாக கூவம் ஆறும், அடையாறு நதியும் ஆனது.

    சனாதனத்தில் தெய்வ நம்பிக்கை, பஞ்சபூத வழிபாடுகள் என்பது வாழ்வியல் நெறி அது வலிந்து உடைக்கப்பட்டதால் நதிகளைச் சாக்கடைகளாக்கிய பெருமை பகுத்தறிவுகளின் 100% சாதனை!

    தமிழகத்து நதிநீர்ப் பிரச்சினைக்கு தலையாய சிங்கிள் சோர்ஸ் பிரச்சனை கருணாநிதியின் சுயநலம் + இதர திராவிடக் கட்சிகளின் செயல்பாடு என்பதே!

    அசுவமேத யாகம் செய்யுமுன் வேத தர்மத்தை, சனாதனத்தை அல்லது பகுத்தறிவு முறையில் இயற்கை எனும் சுற்றுச்சூழலைப் பேணுங்கள்!

    பகுத்தறிவு உருவாக்கிய கூவச் சாக்கடை உலக அளவில் கோரமான இயற்கை அவமதிப்பு என்பதை உணராமல் பகுத்தறிவு, சீர்திருத்தம், எனப் பேசுவது வெட்கக்கேடு.

    சுயமரியாதை :-)))

    By at 3/07/2007 1:55 AM  

  • hariharan #26491540 அவர்களே,

    வருகைக்கும், ஆலோசனைகளுக்கும் மிக்க நன்றி.

    By at 3/07/2007 7:35 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za