அம்மான்னா சும்மாவா?

Tuesday, March 20, 2007

சென்னை கூத்து (அ) சங்கமம்

பாரதத்தின் கலைகளும், கலாச்சாரமும் உலகப் பிரசித்தி பெற்றது. அவைகள் நம் வாழ்க்கை முறையோடு ஒன்றிப் பிணைந்து வருபவை. அவற்றில் முக்கியமானது கர்நாடக சங்கீதம். மும்மூர்த்திகள் கொண்ட அக்கலை உலகம் முழுவதும் பல்கி பெருகி வருகின்றது. சென்னையில் வருடா வருடம் ஆண்டு இறுதியில் பல சபைகளில் சாஸ்திரீய சங்கீதமானது படைக்கப்பட்டு வருகின்றது. சங்கீத மழையில் நனைந்த மக்கள் நோய் நொடிகள் குறைந்து அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். சங்கீத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து பல லட்சம் பேர் சென்னைக்கு வருகின்றனர். திருவையாறு பகுதியில் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் ஆராதனை விழாவின் மூலம் எழும் சங்கீத மழையில் நனைந்து நம் தேவர்கள் உதிர்க்கும் ஆனந்த கண்ணீர்தான் காவிரி டெல்டா பகுதியில் மழையாக பொழிந்து நம் உழவர்களின் பசியினை போக்குகிறது.

கர்நாடக சங்கீதம் புகழ் பெற்று வளர்ந்து வருவதை கண்டு வயிறெரிந்த திராவிட நஞ்சுக்கள் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியின் காலில் விழுந்து அழுதது. அந்த திம்மியும் தன் மகளை அரசியல் ஏணியில் ஏற்றி விடலாம் என்ற நினைப்பில் சென்னை சங்கமம் என்ற கூத்திற்கு ஏற்பாடு செய்தது. இது போன்ற ஒரு நிகழ்ச்சி தேவைதானா. நாட்டுப்புற கூத்துக்களினால் என்ன நன்மை? அவற்றை யார் தம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பார்கள்? இதையெல்லாம் சற்று சிந்தித்து பாருங்கள். குடிசைகளில் வசிக்கும் குழந்தை கூட தொலைகாட்சிகளில் அழகாக கர்நாடக சங்கீதம் பாடுகின்றது. அடுக்கு மாடமாளிகைகளில் வசிக்கும் நம் குழந்தைகள் பறை அடித்து பாடினால் என்ன அபஸ்வரமாக இருக்கும் என்று யோசியுங்கள்.

நம் கலைமகள் என்ன செய்கின்றாள்? சாஸ்திரீய சங்கீதம் வாசிக்கின்றாளா அல்லது கரகம் எடுத்து ஆடுகின்றாளா. யோசியுங்கள் இந்துக்களே. கலைமகள் ஆசீர்வதித்து மும்மூர்த்திகள் வளர்த்த நம் பாரம்பரிய கலையினை நசுக்க இந்த சங்கமம் ஆரம்பித்து வைக்கப்பட்டு இருக்கின்றது. இது இப்படியே வளர்ந்தால் சங்கீத சபைகளில் கரகமும், காவடியும்தான் கடைசியில் மிஞ்சும். கலைவாணிக்கு உரிய மரியாதை கொடுத்து சபையில் தன் குரல் வளத்தால் நம்மை கட்டிப்போட்ட பெரும் பாடகர்களை மிரட்டி, வெட்ட வெளியில் பூங்காக்களில் தெருவில் வருவோருக்கும் போவோருக்கும் பாடி காண்பிக்க செய்தது சரியா? கலைமகள் கோபம் கொண்டு நம்மை சபித்தால் என்ன நடக்கும் என்று சிந்தியுங்கள்.

எனவே 80 கோடி இந்துக்களும் ஒன்று சேர்ந்து இந்த கூத்தினை புறக்கணிப்போம். நம் வாழ்விற்கும், வளத்திற்கும் ஏற்ற நம் பாரம்பரிய கலையான கர்நாடக சங்கீதத்தை மட்டும் ஆதரிப்போம் என்று உறுதி எடுங்கள். எல்லோரும் அவரவர் குழந்தைகளை பாட்டு வகுப்பிற்கு அனுப்பி நம் கலையினை வளருங்கள்.

வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.

இந்த கூத்தில் ஸ்ரீலங்காவில் இயங்கும் தீவிரவாதிகளை இணைத்து நமது தொலைக்காட்சி செய்தி வெளியிட்டு உள்ளது. சிலரை நேரடியாக குறிப்பிட வேண்டிவரும் என்பதால் அதை பற்றி இங்கே நான் எழுதப்போவதில்லை.

18 Comments:

 • டெஸ்ட் மெசேஜ் :-)))

  By at 3/20/2007 2:23 AM  

 • அடேங்கப்பா!!!

  இத்தனை உள்குத்தா. நோகுதுடா சாமி.

  கரகம் ஆடினாலும், கச்சேரி பாடினாலும் பார்க்கில் க்க்கூஸ் மேல மேட போட்டு வேண்டாமே. பார்க்கில் வாடிக்கையாக படுக்கும் பிச்சைக்காரர்களும், நாய்களும் ஒரு வாரம் பட்ட பாடு அப்பப்பா. இதை ப்ளூக்ராஸ் கேக்க மாட்டீங்குறாங்க. சென்ன சங்கமம் ஒரு ப்ராடு..

  By at 3/20/2007 2:36 AM  

 • ஜெயலலிதா அம்மான்னா உன்னை பெத்த நிஜ அம்மாவை என்ன சொல்லுவே மிஸ்டர் இலை?

  By at 3/20/2007 2:37 AM  

 • பின்னூட்ட மொள்ளமாரித்தனம்

  By at 3/20/2007 2:47 AM  

 • summa irukaa mateere neeru

  By at 3/20/2007 2:59 AM  

 • ஏமாறாதவன் said...
  //பார்க்கில் வாடிக்கையாக படுக்கும் பிச்சைக்காரர்களும், நாய்களும் ஒரு வாரம் பட்ட பாடு அப்பப்பா.
  //
  ஏமாறாதவன் ரொம்ப சிரமப்பட்டுட்டிங்க போலிருக்கு :-))))

  By at 3/20/2007 4:50 AM  

 • லக்கிலுக் அவர்களே,

  என்ன நடக்கிறது இங்கே??.

  By at 3/20/2007 5:32 AM  

 • ஏமாறாதவன் அவர்களே,

  வருகைக்கு நன்றி. சென்னை பூங்காக்களை நன்றாக தெரிந்து வைத்து இருக்கின்றீர்கள்.

  By at 3/20/2007 5:32 AM  

 • விடாதுகருப்பு அவர்களே,

  என் தாயை நான் "அம்மா" என்றுதான் அழைப்பேன். தமிழக மக்களுக்கு தாயுள்ளத்தோடு சேவை செய்ய பிறந்த ஒரு பெண்மணியை "அம்மா" என்று அழைப்பது தவறா?

  By at 3/20/2007 5:32 AM  

 • செந்தழல் ரவி அவர்களே,
  வருகைக்கு நன்றி.

  குழலி அவர்களே,
  வருகைக்கு நன்றி.

  By at 3/20/2007 5:33 AM  

 • இலைக்காரன்!

  இந்தக் கலைகள் அழியாதிருக்க நடவடிக்கை எடுப்பது தவறா??; இதில் கலைஞர் மகளை நுளைத்தது தவறு எனக் கூறுங்கள் ஏற்றுக் கொள்கிறேன்.
  அடுத்து வெளிநாடுகளில் நம் பாரம்பரிய இசைகளுக்குரிய செல்வாக்குடன்; கிராமியக் கலைகளுக்கும் செல்வாக்குண்டு.மெள்ள மெள்ள அவையும் தலையெடுக்கின்றன. கலைக் காவேரியின் நிகழ்ச்சிகள்
  நீங்கள் பார்த்திருக்கலாம்.அதில் கரகம் காவடியுண்டு. பிரான்சில் மிக ரசித்ததைக் கண்கூடாகக் கண்டேன்.
  எனவே!!இவை தேவையற்றவை என உங்களைப் போன்றோர் கூறுவது நன்றல்ல!
  அத்துடன் இவற்றின் வளர்ச்சியால் நம் பாரம்பரிய இசை படுத்துவிடுமென்பது; வீண் பிரமை!!
  அப்படியான நோஞ்சான் கலையெனில் அது அழிவதில் ஆட்சேபனையில்லை. (அக் கலையை நான் ரசிப்பவன் - அப்படியிருந்தும் கூறுகிறேன்.)
  இக் கிராமியக் கலைகள் மேடையேறுவதால் இக்கலைஞர்களும் கஞ்சி குடிக்க வாய்ப்புண்டு. அதை ஏன் தடுக்கிறீர்கள்.மக்கள் வரவேற்பிருந்தால் எதுவும் பிழைக்கும்.
  சரஸ்வதி பறையடிக்கவில்லை ஆனால் சிவன் உடுக்கடிக்கிறாரே!!!
  நாம் காழ்புணர்ச்சியைத் தவிர்ப்போம். எல்லாம் கலையென உணர்வோம். வீண் அச்சத்தைத் தவிர்ப்போம்.

  By at 3/20/2007 6:23 AM  

 • யோகன் பாரிஸ் அவர்களே,

  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  எனக்கு நாட்டுப்புற கூத்தின் மேல் காழ்ப்புணர்ச்சி இல்லை. ஆனால் அதுதான் நம் பாரம்பரிய கலை என்றும் சாஸ்திரீய சங்கீதம் இடையில் வந்தது என்றும் கூறி கர்நாடக சங்கீதத்தின் புகழை குறைக்க திம்மிகள் ஆடும் கூத்தின் மேல்தான் வெறுப்பு.

  By at 3/20/2007 6:47 PM  

 • இலை நீ சொல்றது கரெக்ட்டு.என்னை மாதிரி வயலின் வாசிச்சே கண்ணீர் மழை வர வைக்க முடியுமா திம்மியோட ஆட்களால்?

  இப்படிக்கு
  அம்மாவின் அன்புத்தம்பி
  குன்னக்குடி வைத்தியநாதன்

  By at 3/20/2007 10:30 PM  

 • ஜாலிஜம்பர் அவர்களே,

  வருகைக்கு நன்றி. கருணாநிதி ஆட்சி செய்ததால் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தின் போது குன்னக்குடி அவர்கள் ஏரியில் இறங்கி தன் வயலின் மூலம் இசைத்த நாதத்தினை கேட்ட வருண பகவான் உடனே பெரு மழையினை அங்கே அனுப்பி வைத்தார் என நான் கேள்விப்பட்டு இருக்கின்றேன்.

  By at 3/21/2007 1:59 AM  

 • பின்னூட்ட முடிச்சவிக்கித் தனம்!

  By at 3/21/2007 2:38 AM  

 • //
  லக்கிலுக் said...
  பின்னூட்ட முடிச்சவிக்கித் தனம்! //

  இன்னும் மொள்ளமாறித்தனம் யாரும் போடலன்னா இது மொள்ளமாறித்தனம்.

  சென்ஷி

  By at 3/21/2007 5:45 AM  

 • பின்னூட்ட அடாவடி

  By at 3/23/2007 2:13 AM  

 • pinnoootta sOmARiththanam! ;)))

  ilaikkAran,

  thodarnthu 'amma' pugazhai parappunga! ;)

  By at 5/13/2007 1:11 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za