அம்மான்னா சும்மாவா?

Tuesday, March 13, 2007

மத (ஏ)மாற்றும் கருணாநிதி

பாரத தாயின் குழந்தைகளை கிருத்துவ மெஷினரிகளும், முகமதியர்களும் வெளிநாட்டில் இருந்து வெள்ளமென பாயும் பணத்தை கொண்டு மத மாற்றம் செய்து வந்தனர். அந்த கொடுஞ்செயலை பார்த்து மனம பதறிய அம்மா மதமாற்று தடை சட்டத்தை கொண்டு வந்தார். ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி காமகோடி பெரியவா அதற்கு தன் முழு ஆசியினை வழங்கினார்.

இலவசம் மூலம் மக்களை ஏமாற்றி மைனாரிட்டியாக ஆட்சி புரியும் கருணாநிதி இப்போது என்ன செய்கின்றார் என்று பாருங்கள். சங்கம் வளர்த்த மதுரை கருணாநிதியின் புதல்வனால் நாள்தோறும் பின்னேற்றம் அடைந்து கொண்டே வருகின்றது. மதுரையை அழகிரிபுரம் என்று பெயர் மாற்றம் செய்ய இந்த சட்டசபை கூட்டத்தொடரில் ஒரு தீர்மானம் எழுப்ப முடிவு செய்ய பட்டுள்ளதாக ஒரு பறவை தெரிவிக்கின்றது.

மேலும் கிருத்துவ, முகமதிய தீவிரவாதிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு இந்து என்று ஒரு பத்திரம் தருவதாக தகவல்கள் வந்துள்ளன. அப்படி பெயர் மாற்றம் செய்து கொண்ட தீவிரவாதிகள் காவிரி அன்னை நடனமிடும் டெல்டா பகுதிகளில் அந்தனர் வசித்த குடியிருப்புகளை மிரட்டல் மூலம் ஆக்கிரமித்து வருவதாக இணைய பெரியவர் ஒருவர் தெரிவிக்கின்றார். அதை நினைத்து நெஞ்சம் பதறுகின்றது.

தீவிரவாதிகளை மறைக்க வளைகுடா நாடுகளில் இருந்து பெட்ரோல் டாலர் பாய்ந்தோடி வருவதை கண்டு கொண்ட கருணாநிதியின் மகன் ஒரு பினாமி மூலம் இந்த மத மாற்றம் செய்யும் ஈன செயலை செய்து வருவதாக தெரிகின்றது. அவரை பிடித்து விசாரித்தால் எத்தனை கோடி இதன் மூலம் சேர்த்தார் என்ற விபரம் தெரியும். அது போன்ற தைரியமான செயலை "தைரியலட்சுமி" என்று சூப்பர் ஸ்டாரால் பாராட்டப்பட்ட அம்மா ஒருவரினால்தான் முடியும். எனவே பாரதத்தில் உள்ள இந்துக்கள் அனைவரும் அம்மாவின் ஆட்சி மீண்டும் மலர ஆங்காங்கே தேவ மந்திரங்களை முழங்குங்கள்.

இந்துவாக இரு. ஜெய்ஹிந்த்.

16 Comments:

 • //ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ//

  ஏன் இலைக்கார்ரன்? என்னாச்சு உங்களுக்கு? இந்த துப்பு துப்பறீங்க?

  //காஞ்சி காமகோடி பெரியவா அதற்கு தன் முழு ஆசியினை வழங்கினார்.//

  எந்த பெரியவா? காஞ்சி காமகேடி பீடையாதிபதி சுப்ரமணியா?

  By at 3/13/2007 11:20 PM  

 • ஏம்பா...

  கமெடி பண்றதுக்கு ஒரு அளவே இல்லையா...:))

  கதிரவன்

  By at 3/13/2007 11:23 PM  

 • விடாது கருப்பு அவர்களே,

  வருகைக்கு நன்றி. மகா பெரியவர்களை பற்றி குறிப்பிடும்போது மரியாதைக்கு உரிய வார்த்தைகளை போடுவது என் பழக்கம். ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜி அவர்களே இரண்டு "ஸ்ரீ" போடும்போது காமகோடி பீடாதிபதிக்கு ஏழு "ஸ்ரீ" போடுவது தவறல்ல என்று நினைக்கின்றேன். ஏன் ஏழு என்பீர்கள். வேத, சாஸ்திரங்களில் உள்ளதை குறிப்பிட்டால் உங்களை போன்றவர்களுக்கு புரியாது.

  கதிரவன் அவர்களே,

  வருகைக்கு நன்றி. கதிரவன் என்று பெயர் இருப்பதால் கருணாநிதியை குற்றம் சொல்வது பிடிக்கவில்லையா?

  By at 3/14/2007 12:40 AM  

 • பின்னூட்ட கயமைத்தனம்

  By at 3/14/2007 12:45 AM  

 • ஆரிய சமாஜத்தை கண்டிக்க துப்பு இல்லையா உங்களுக்கு?

  By at 3/14/2007 12:53 AM  

 • இலைக்காரன் அவர்களே,

  உங்க வேதங்கள் பற்றி இன்றைக்கு நான் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். படிச்சு பாருங்க.

  By at 3/14/2007 1:28 AM  

 • லக்கிலுக் அவர்களே,

  வருகைக்கும், பின்னூட்ட கயமைதனத்திற்கும் நன்றி.

  ஜாலிஜம்பர் அவர்களே,

  வருகைக்கு நன்றி. உண்மையான ஆரிய சமாஜம் பாரத தேசத்தின் நலனை மனத்தில் கொண்டு இந்து சமய வழியில் பீடு நடை போடும் ஒரு ஸ்தாபனம். மதுரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிளை அழகிரியின் பினாமியின் பெயரில் செயல்படும் ஒரு போலி நிறுவனம். அதற்கும் பாரம்பரிய மிக்க ஆரிய சமாஜத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

  விடாதுகருப்பு அவர்களே,

  உங்கள் வழி தனி. என் வழி அது அல்ல.

  By at 3/14/2007 1:44 AM  

 • மறுபடியும் பின்னூட்ட கயமைத்தனம்

  By at 3/14/2007 2:41 AM  

 • ஒரு அரை ஸ்ரீ குறையுதே?

  மத்ததெல்லாம் புரியலை :-)

  By at 3/14/2007 2:45 AM  

 • லக்கிலுக் அவர்களே,

  நீங்கள் இங்கே பின்னூட்ட கயமை செய்து கொண்டு இருக்கின்றீர்கள். அங்கே கழுகார் நீங்கள்தான் இலைக்காரன் என்று பதிவு போடுகின்றார். என்ன நடக்கின்றது இங்கே?.

  pot"tea"kadai அவர்களே,

  வருகைக்கு நன்றி. அரை "ஸ்ரீ" எப்படி போடுவது?

  By at 3/14/2007 7:03 AM  

 • கொஞ்சம் எதைப்பற்றி எழுதுகிறீர்கள் என்பதற்கு ஏதாவது லிங்க்
  கொடுத்தால் கொஞ்சம் போல புரியும்.

  By at 3/14/2007 8:48 AM  

 • "ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி காமகோடி பெரியவா"

  இது ஏதோ வஞ்சப்புகழ்ச்சி அணி மாதிரி இருக்குதே :-)

  By at 3/14/2007 9:33 AM  

 • நீங்க உண்மையான அரசியல் வாதின்னு நிரூப்பிச்சிட்டீங்கப்பா! நல்ல நகைச்சுவை பதிவு!

  By at 3/14/2007 10:17 AM  

 • aathirai அவர்களே,

  வருகைக்கு நன்றி. ஆரிய சமாஜம் என்ற ஸ்தாபனம் பணம் வாங்கிக் கொண்டு கிருத்துவர்களையும், முகமதியர்களையும் இந்துக்களாக மாற்றுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விகடன், மாலைமலர் போன்ற பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகி உள்ளன.

  வெட்டிப்பயல் அவர்களே,

  நான் எப்போதும் அவரை அப்படி அழைப்பதுதான் வழக்கம்.

  jafar ali அவர்களே,

  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  By at 3/14/2007 8:24 PM  

 • டெஸ்ட் பின்னூட்ட கயமைத்தனம்

  By at 3/14/2007 9:25 PM  

 • லக்கிலுக் அவர்களே,

  என்னை வைத்து காமெடி எதுவும் செய்யவில்லையே?. தினமும் இப்படி பின்னூட்ட கயமை செய்தால் என்னை தோட்டத்தில் தாளித்துவிடுவார்கள். இந்த சிற்றிலைக்கு சிறிது கருணை காட்டுங்கள்.

  By at 3/14/2007 10:41 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za