அம்மான்னா சும்மாவா?

Tuesday, April 10, 2007

தேசிய கீதம் யாருக்காக?

பாரதத்தாயின் புதல்வர்களே, புதல்விகளே கீழ்க்காணும் செய்தியினை படிக்கும் போது என் ரத்தம் கொதிக்கின்றது.

National anthem could make foreigners at Infy uneasy: NRN

பெயரும், புகழும், பணமும் சம்பாதிக்க இந்தியா தேவை. ஆனால் வெளிநாட்டினர் சங்கடப்படுவார்கள் என்று தேசிய கீதத்தினை பாடாமல் விட்ட இந்த பெரிய மனிதரை என்ன செய்யலாம்? இதில் இந்த ஆளை அடுத்த ராஷ்ட்டிரபதியாக தேர்ந்து எடுக்க வேண்டுமாம். இந்த நேரத்தில் தேசிய உணர்வு கொண்ட கர்நாடக மாநில சட்டசபை அங்கத்தினர்களை பாராட்ட கடமைபட்டுள்ளேன்.

அவர் ஆகா, ஓஹோ, இந்திரன், சந்திரன் என்று ஜல்லியடிப்போர் உங்கள் வேலையை ஆரம்பிக்கலாம். தேசிய சிந்தனை கொண்ட பல பதிவர்கள் இருந்தும் ஒருவர் கூட இந்த நிகழ்ச்சியை பற்றி எழுதாதது வேதனை அளிக்கின்றது. 80 கோடி இந்துக்களும் நமது தேசிய கீதத்தினை உரக்க பாடி உங்களின் எதிர்ப்பை காட்டுங்கள்.

வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.

18 Comments:

  • நாராணய மூர்த்தி அவர்களின் இந்த செய்கை கண்டிக்கத்தக்கது.

    By at 4/10/2007 8:13 PM  

  • நல்ல் ஆளையா அந்த ஆளு... இப்படி வேற பேட்டி கொடுக்க வேண்டுமா?

    நான் இந்தியன் இல்லை. இருந்தாலும்...

    வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்

    காந்தி தாத்தா படம் பார்த்த effect.


    _______
    CAPitalZ
    அடடா

    By at 4/10/2007 9:04 PM  

  • its really bad on his part...

    By at 4/10/2007 9:35 PM  

  • அடி செருப்பால.....
    தாய் நாட்டை பிறருக்காக அவ மதிப்பதும் பெற்ற அன்னையை அவ மதிப்பதும் ஒன்றுதான்.

    By at 4/10/2007 10:56 PM  

  • இந்திய நாட்டில், இந்திய தேசிய கீதம் பாட வெட்கப்படுபவர் யாராக இருந்தாலும் அவர் தேசத் துரோகியே. நாட்டின் பெருமை தெரியாமல் எவ்வளவு சம்பாதித்து என்ன பிரயோசனம். நாளை இவர் குடியரசுத் தலைவர் ஆகி விட்டால், குடியரசு தின விழா கொடியேற்றத்தின் போது, வெளி நாட்டின் பிரதமர் அல்லது வேறு யாரையோ கௌரவ முன்னிலை என வைத்து விட்டால், இவர் உடனே அவங்க மனசு சங்கடப் படும், தேசிய கீதம் பாட வேண்டாம் என்பார் போல. வெட்கம்.

    By at 4/10/2007 11:02 PM  

  • சிவபாலன் அவர்களே,
    வருகைக்கும், கண்டனத்திற்கும் நன்றி.

    capital அவர்களே,
    வருகைக்கு நன்றி.

    வெட்டிப்பயல் அவர்களே,
    வருகைக்கு நன்றி.

    காளீஸ்வரன்.கரு அவர்களே,
    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    சப்தரிஷி அவர்களே,
    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    By at 4/11/2007 12:49 AM  

  • அது என்ன ? //80 கோடி இந்துக்களும் நமது தேசிய கீதத்தினை உரக்க பாடி உங்களின் எதிர்ப்பை காட்டுங்கள்//

    எதுவும் உள்குத்து?

    தேசிய கீதம், அனைவருக்கும் பொதுவானது.

    தேசிய கீதத்தில் தவறு இருப்பதாகவும், அது ஆங்கிலேயரைய் புகழ பயன் படுத்திய தாகவும்,
    செய்தி உண்டு.

    என் தாய், எப்படி இருந்தாலும் அவள் என்னுடைய தாய் தான் - மதிக்கப்பட வேண்டியவளே - அது போலவே நமது தேசிய கீதமும்.

    கண்டனம் - அந்த பெரிய மனுசனுக்கு.

    By at 4/11/2007 3:13 AM  

  • amar அவர்களே,
    வருகைக்கும், கண்டனத்திற்கும் நன்றி.

    By at 4/11/2007 5:22 AM  

  • வெட்கம்!!!வெட்கம்!!!

    By at 4/11/2007 5:53 AM  

  • செஞ்சது தப்பு! இதுல இன்போசிஸ்ல இருக்கும் வெளிநாட்டாருக்குன்னு சமாளிப்புகேஷன் ஷேம் ஷேம்!

    நாரயண மூர்த்தி ரேஞ்சுக்குப் போனாலும் ஊறிப்போயிருக்கும் "ரெசிடியுவல் கலோனியலிஸம்" குரோமோசோமை வளைத்தது முழுசா நிமிரலை!!

    பாடாதது கூடப் பொறுத்துக்குவேன். அதுக்கு இப்படியா கலோனியல் மெண்டாலிட்டியை எக்ஸ்பிலிசிட்டாக எக்ஸ்போசிங் செய்யும் எக்ஸ்பிளனேசன் இன்போசிஸ் சீஃப் தருவது?? மிக மிக வருத்தம் தரும் செய்கை இது! :-((

    என் கண்டனங்களைப் பதிகிறேன்!

    By at 4/11/2007 6:15 AM  

  • நாராயண மூர்த்தியின் இந்த செய்கைக்கு கருணாநிதியின் சதியே
    காரணம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    By at 4/11/2007 6:21 AM  

  • indian அவர்களே,
    வருகைக்கு நன்றி.

    Hariharan # 03985177737685368452 அவர்களே,
    வருகைக்கும், கண்டனத்திற்கும் நன்றி.

    விஞ்ஞானி "முருகன்" அவர்களே,
    வருகைக்கு நன்றி.

    By at 4/11/2007 8:09 PM  

  • pinnootta kayamai

    By at 4/11/2007 9:10 PM  

  • இலைக்காரரே,
    நான் பாட்டு பாடிவிட்டேன்.

    திம்மிகளின் சதியாக இருக்குமோ?

    By at 4/12/2007 6:11 AM  

  • தங்கள் உணர்வுகள் நியாயமானவை. எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் தாய்நாட்டை மதிக்கத்தெரிய வேண்டும்.

    By at 4/13/2007 9:49 PM  

  • லக்கிலுக் அவர்களே,
    வருகைக்கு நன்றி.

    aathirai அவர்களே,
    வருகைக்கும், தேசிய கீதத்தினை பாடியதற்கும் நன்றி. திம்மிக்களின் சதி? இருக்கலாம். திம்மிக்கள் எதையும் செய்வார்கள். பாருங்கள் ஒரு நல்ல பதிவரை இப்படி மிரட்டுகின்றார்களே?

    ராசுக்குட்டி அவர்களே,
    வருகைக்கு நன்றி.

    By at 4/14/2007 5:07 AM  

  • இன்போசிஸ் விழாவில் பாட மறுத்ததும், கூறப் பட்ட தர்மசங்கடம் என்பதான காரணமும் தவறு தான். இந்த செய்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    ஆனால் இது நடந்த 2-3 நாட்களிலேயே தன் தவறை உணர்ந்து மூர்த்தி வெளிப்படையாக மன்னிப்பும் கேட்டிருக்கிறார் - மூர்த்தியைப் பற்றி அறிந்தவர்கள் இது ஸ்டண்ட் அல்ல, மனதார சொன்னது என்று தான் நம்புகிறோம்.

    இன்போசிஸ் ஒரு இந்திய நிறுவனம் என்பதை மிகவும் பெருமையோடு சொல்லிக் கொண்டு வந்திருக்கிறது. அதன் நிறுவனரும் நாட்டின் எத்தனையோ இளைஞர்களுக்கு ஒரு ரோல் மாடலாக இருந்து வருகிறார்.

    எனவே இந்த ஒரு நிகழ்வை வைத்து மட்டுமே மூர்த்தியின் தேசபக்தி பற்றி யாரும் விமரிசனம் செய்வதும், முத்திரை குத்துவதும் நியாயம் அல்ல. குறிப்பாக பிராந்திய உணர்வுகளைத் தூண்டி தேசியத்தை பலவீனம் செய்யும் வட்டாள் நாகராஜ் போன்ற அரசியல்வாதிகள்.

    By at 4/18/2007 3:32 AM  

  • ஜடாயு அவர்களே,

    வருகைக்கும், கண்டனத்திற்கும் நன்றி.

    By at 4/20/2007 11:10 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za