அம்மான்னா சும்மாவா?

Monday, August 27, 2007

அக்கிரமம், அநியாயம்

எனதருமை பாரத மக்களே, ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களுக்கு ஏற்பட்ட மற்றொரு கொடுமையை பாருங்கள். பேய்கள் அரசாண்டால் ... என்று சொல்வார்கள். அது உண்மைதான். மைனாரிட்டி ஆட்சி புரியும் கொலைஞரும், ரோம நாட்டின் ஆதிக்கத்தை பாரதத்தில் நிலை நாட்ட அவதாரம் எடுத்து இருக்கும் மெய்னோவும் சேர்ந்து நடத்தும் அக்கிரமத்தை பாருங்கள்.
ஸ்ரீ ராமபிரான் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் கட்டிய ஸ்ரீ ராம சேதுவை காப்பாற்ற வந்த கர சேவகர்களை ஓடும் ரயிலில் இருந்து அடித்து விரட்டி இருக்கின்றனர். அப்பாவி ஹிந்துக்களிடம் இருந்து அவர்களின் பணம், தொலைபேசி மற்றும் உடமைகளை பறித்து கொண்டு அநியாயமாக விரட்டி விட்டுள்ளனர். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? இந்த திருநாட்டில் ஹிந்துவாக பிறப்பதே ஒரு பாவமான காரியம் ஆகிவிடும் காலம் வரும் போல் இருக்கின்றது.

அப்பாவி ஹிந்துக்களை காப்பாற்றி அரவணைத்து ஆதரவு காட்டி வரும் பா.ஜ.க தொண்டர்களை நாம் அனைவரும் இரு கரம் கூப்பி வணங்குவோம்.ஜெய் ஸ்ரீராம்.இது தொடர்பான சுட்டி.

7 Comments:

 • //அப்பாவி ஹிந்துக்களை காப்பாற்றி அரவணைத்து ஆதரவு காட்டி வரும் பா.ஜ.க தொண்டர்களை நாம் அனைவரும் இரு கரம் கூப்பி வணங்குவோம்.
  //

  அப்பாவி ஹிந்துக்களை காப்பாற்றி அரவணைத்து ஆதரவு காட்டி வரும் பா.ஜ.க தொண்டர்களை நாம் '80 கோடி இந்துக்களும்' கரம் கூப்பி வணங்குவோம்.


  '' அது மிஸ்ஸிங், ஒரு பர்பக்சன் வரவேண்டாமா ?
  :)

  By at 8/27/2007 10:34 PM  

 • பாவியர் திட்டம் பொடிபடவே
  காவியர் படை திரண்டிடுவோம்
  அடியும் நல்லா வாங்கிடுவோம்.

  By at 8/27/2007 11:24 PM  

 • கோவி.கண்ணன் அவர்களே,

  வருகைக்கு நன்றி. என் பதிவுகளை பற்றி என்னை விட அதிகம் தெரிந்து வைத்துள்ளீர்கள் :-)

  ஜாலிஜம்பர் அவர்களே,

  வருகைக்கு நன்றி. கவுஜ பிரமாதம்.

  By at 8/28/2007 12:05 AM  

 • ரயிலை மறித்து என்ன பயன்
  ராமர் பாலம் இருப்பதாக சொல்லக் கூடிய இடத்தில் அதாவது கடலுக்கு நடுவில் சென்று மறியல் செய்யுங்களேன்.
  ராம பிரான் உங்களை தன்னோடு பரமபதம் அழைத்துச் செல்வான்

  By at 8/28/2007 1:28 AM  

 • ஸ்ரீசரண் அவர்களே,

  வருகைக்கு நன்றி. கடலில் இறங்கி போராட தேவை இல்லை. நாங்கள் செய்யும் யாகத்தின் விளைவுகள் அதை விட பயன் உள்ளதாக இருக்கும். தலையாட்டி பொம்மையான சிங்கின் ஆட்சி ஆட்டம் கண்டு இருப்பது ஒரு ஆரம்பம்தான்.

  By at 8/28/2007 1:45 AM  

 • மெத்தப் படித்த மேல்தாவிகள் ஆடம் பாலம் என்றாரகள் ராமசேது என்றார்கள்.நாசா படம்,ஆராய்ச்சி என்றார்கள்.இப்போது கற்பக்கிருஹமாம் உச்ச அநீதி மன்றத்திலே ஒளிந்து கொண்டிருக்கிறாரகள்.
  அங்கே நாள் கடத்தும் ரகசியம் தான் சிறந்த விளையாட்டு.
  உலகுக்கே சிறந்த அறிஞர்கள் 17லட்சத்து 50ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே கடலுக்கடியில் பாலங்கட்டி காதல் விளையாட்டு விளையாடிக் காவியம் படைத்தக் கதை சொல்லப் போகிறார்கள்.

  By at 9/02/2007 8:31 PM  

 • Thamizhan அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  By at 9/02/2007 9:39 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za