அம்மான்னா சும்மாவா?

Tuesday, August 07, 2007

சில கேள்விகள்

ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா மீது சுமத்தப்பட்ட வழக்கு ஒரு பொய் வழக்கு என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பொய் வழக்கினை விசாரிக்க முடியாது என்று ஒரு நீதிபதி சொல்லிவிட்டார். அதில் என்ன தவறு. அவர் சத்தியபிரமாணம் எடுத்தவர். அது சரியல்ல என்று திம்மிகள் கூச்சல் இடுகின்றார்கள். அவர் இறைவன் பெயரில் தானே பிரமாணம் எடுத்தார். அந்த இறைவனையே நிந்திக்கும் ஒரு வழக்கை எப்படி அவர் கையாள்வார்?
__________________________________________________________

நீதி நேர்மை தவறாத நீதிபதிகள் இருப்பதால்தான் நம் பாரதத்தில் இன்னும் மழை பெய்கின்றது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரசியல் சட்டத்தில் சொல்லிய படி நாட்டில் அனைத்தும் நடக்கின்றதா என்று கண்காணித்து வருகின்றனர். அதனால்தான் தகுதியும், திறமையும் உள்ள பல ஆயிரம் கோடி மாணவர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு ரோம ராஜ்ஜியத்தின் சட்ட விரோத இட ஒதுக்கீட்டினை ஒழிக்கும் உன்னத காரியத்தினில் இறங்கி இருக்கின்றனர். மேலும் வாடிகன் உத்தரவின் படி இந்து மதத்தினை ஒழிக்க ஒரு கருவியாக பயன்படுத்தப்படும் எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற ஒரு கீழான திட்டத்தினை தடுத்து வைத்து உள்ளனர்.

நாட்டை வழிநடத்தும் ஆற்றலும், தகுதியும், திறமையும் யாருக்கு இருக்கிறதோ அவர்களைதானே நீதிபதி பதவிக்கு அமர்த்த வேண்டும். அப்படி யாருக்கு தகுதி, திறமை இருக்கிறது என்று கண்டுபிடிக்கதான் கொலிஜீயம் என்ற அமைப்பு உருவாக்கபட்டு அதன் மூலம் நல்ல நீதிபதிகள் அடையாளம் காட்ட படுகின்றனர். இப்படியாக தர்ம நியாயம் பார்த்து நடந்து கொள்வோர் இருப்பதினால் தங்களின் எண்ணங்களை நிறைவேற்ற முடியாமல் திம்மிகள் கவலை படுகின்றனர். நாட்டை சூரையாடும் இந்த கயவர்கள் நீதிமன்றங்களில் சிறிதும் தகுதி இல்லாத நபர்களை நுழைக்க திட்டம் தீட்டுகின்றார்கள். அதை தடுக்க முயலும் நீதிமான்களை ஏசுகின்றனர் இப்போது. இது எந்த விதத்தில் நியாயம்?
___________________________________________________________

சஞ்சய் தத் என்ற நடிகருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை கிடைத்து விட்டதாம். உடனே நயவஞ்சகர் எல்லோரும் கூப்பாடு போடுகின்றனர். நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அளித்த அறிக்கையின் படி எத்தனை பேருக்கு தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும், பல ஆண்டு கடுங்காவல் தண்டனையும் கிடைத்தன. அப்போது எல்லாம் இவர்கள் கூச்சல் போட்டார்களா.

இந்துக்களே கண் விழியுங்கள். எல்லோரும் ஒன்று சேர்ந்து அம்மாவை பாரத பிரதமர் ஆக்குவோம். அவர் ஒருவரால்தான் தைரியமாக நம் நாட்டை வழி நடத்தி செல்ல முடியும்.

வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.

1 Comments:

 • **************************************
  வழக்கினை விசாரிக்க முடியாது என்று ஒரு நீதிபதி சொல்லிவிட்டார்.
  **************************************

  நல்ல வேளை விசாரிச்சு, அவர் மேல குற்றம் இல்லேன்னு சொல்லாம விட்டாரே.
  அதுவரைக்கும் சந்தோஷமே. . . . .?

  ****************************************
  இந்துக்களே கண் விழியுங்கள். எல்லோரும் ஒன்று சேர்ந்து அம்மாவை பாரத பிரதமர் ஆக்குவோம். அவர் ஒருவரால்தான் தைரியமாக நம் நாட்டை வழி நடத்தி செல்ல முடியும்.
  ****************************************

  காலங்காத்தாலேயே காமெடியா. . . . .?

  By at 8/07/2007 9:56 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za