அம்மான்னா சும்மாவா?

Sunday, August 12, 2007

இது உண்மையா

நமது பாரதம் திம்மிகளாளும், ஜிகாதி ஆதரவாளர்களாளும், பிராமண/இந்துமத வெறுப்பாளர்களாளும், நக்ஸல் அமைப்புகளைச் சேர்ந்தவர்களாளும், தனித்தமிழ்நாடு கேட்கும் தீவிரவாதிகளாளும் பலவீனப்பட்டு இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்த கயவர்களால் ஏற்படும் புண்களை எப்போதும் சரி செய்யும் கடமையை கொண்ட ஸ்தாபனம் ஒன்று உள்ளது. நமது பாரதத்தின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் அந்த ஸ்தாபனம் உச்ச நீதிமன்றம் ஆகும். தகுதியும் திறமையும் வாய்ந்த பல நீதிபதிகள் அங்கே கொலு வீற்றிருந்து எப்போதும் நல்ல செய்தியினை நமக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

அப்படிப்பட்ட பாரம்பரிய ஸ்தாபனத்தில் பொது சேவை ஆற்றி வந்த ஒருவரை பற்றி வந்த கட்டுரை இது. இதை படித்தவுடன் பாரதம் சரியான பாதையில்தான் செல்கின்றதா என்ற பெரும் கவலை எனக்கு ஏற்பட்டு விட்டது.

6 Comments:

 • பெரும் கல்வி கற்றவர்களும், வழக்கறிஞர்களும், பாரதத்தினை எப்போதும் நேசிப்பவர்களும் நிறைந்து இருக்கும் இந்த பதிவு உலகில் யாரும் இதை பற்றி பதிவு எழுதாதது வருத்தம் அளிக்கின்றது.

  By at 8/12/2007 10:33 PM  

 • வழக்கம்போல இந்த பதிவுக்கும் என்னுடைய பின்னூட்ட கயமை ஆதரவு உண்டு.

  By at 8/12/2007 11:25 PM  

 • அந்த நீதிபதி தனது ஓய்வு பெற்றவுடன், சேகர் கபூரின் ‘வாக் த டாக்’ நிகழ்சியில் பேட்டியளிக்கும் பொழுது, மிகவும் காஷுவலாக, ‘டெல்லி ஸீலிங் பிரச்னையில் தனது உறவினர்களும் பாதிக்கப்பட்டதாகவும் அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு உறவினர் அந்த வழக்கில் சற்று மெத்தனமாக இருக்கும்படி வேண்டியதாகவும், தான் அவ்வாறு நடந்து கொள்ளாதலால் அவர்கள் தன்னுடன் பேசவில்லையென்றும்’ குறிப்பிட்டார்.

  ஆனால், எனக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது. இந்திய தலைமை நீதிபதியாக பணிபுரியும் ஒரு நீதிபதியிடம் வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் வழக்கு சம்பந்தமாக பேச தைரியம் கொள்ளுவதே நமது நீதிபதிகளின் வளைந்து கொடுக்கும் குணத்திற்கு ஒரு சான்றுதான் என்று நண்பரிடம் கூறியது ஞாபகத்திற்கு வருகிறது!

  சே! ஒரு நகைச்சுவை மாமேதை (!) யுடன் என்ன சீரியஸான பேச்சு!!

  By at 8/24/2007 11:33 AM  

 • பிரபு ராஜதுரை அவர்களே,

  வருகைக்கு நன்றி. நான் உங்களிடம் இதை பற்றி ஒரு விரிவான பதிவிடுங்கள் என்ற கோரிக்கை வைக்க எண்ணி இருந்தேன். முடிந்தால் இதை பற்றியும் கொலீஜியம் பற்றியும் சற்று விளக்கமாக பதிவர்களுக்கு விளக்குங்கள்.

  By at 8/24/2007 5:38 PM  

 • கொலீஜியம் பற்றி மூச்!

  நீதிபதி நியமனம் குறித்த எனது நேற்றைய பதிவு, தமிழ்மணத்திலும், தேன்கூட்டிலும் வரவில்லை...

  ஏன் என்று புரியவில்லை

  http://marchoflaw.blogspot.com/2007/08/blog-post_24.html

  By at 8/24/2007 7:06 PM  

 • பிரபு ராஜதுரை அவர்களே,

  தங்களின் பதிவினை பார்த்தேன். மிக்க நன்றி.

  By at 8/25/2007 6:04 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za