அம்மான்னா சும்மாவா?

Tuesday, September 18, 2007

கொலைஞரின் கபட நாடகம்

பாரத மக்கள் எப்போதும் அஹிம்சாவாதிகள் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களை திம்மிக்கள் சீண்டினாலும் அதை எல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு தன் வழி தனி வழி என்று செல்வார்கள். அதிலும் முக்கியமாக ஹிந்து மதத்தை உலகம் எல்லாம் பரப்பி வரும் பஜ்ரங்தள், விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர். எஸ். எஸ் போன்ற அமைப்பினரின் நற்குணங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. சென்ற ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினை இந்த ஸ்தாபனங்களுக்கு வழங்க அந்த குழுவினர் தீர்மானித்து இருந்தனர். ஆனால் மெய்னோ வாடிகன் தொடர்பின் மூலம் அதை தடுத்து நிறுத்தி விட்டார்.

அமெரிக்க விண்வெளி அமைப்பு பாரதத்தையும் ஸ்ரீலங்காவையும் இணைப்பது ஸ்ரீராமர் எழுப்பிய பாலம்தான் என்று தெளிவாக சொல்லி விட்டது. இக்கருத்தை சோவியத் ரஷ்யாவும், பிரான்சும், சீனாவும் அங்கீகரித்து விட்டன. பிரிட்டீஷ் ராணி அது ஸ்ரீராமர் எழுப்பிய பாலம்தான், கிருத்துவ மிஷினரிகள் அதை ஆதம் பாலம் என்று பெயர் மாற்றிவிட்டனர் என்ற ஒப்புதல் வாக்குமூலத்தை விரைவில் அறிவிக்க இருக்கின்றார் என்று பக்கிங்காம் அரண்மனை தகவல்கள் கூறுகின்றன. அனால் இந்த திம்மிக்கள் இன்னும் அது மணல் மேடு என்று குரைத்து கொண்டு இருக்கின்றன.

இந்த விவகாரத்தில் இருக்கும் உண்மையை அறிந்து கொண்ட உச்ச நீதிமன்றம் ஸ்ரீராம சேதுவை அழிக்க கூடாது என்று தடை விதித்து விட்டது. அதை கண்டு பொறுக்க முடியாத கயவன் ராமர் இல்லை, ராமர் தொழில் கல்வி படித்தாரா என்று கேள்வி கேட்டு உள்ளான். இதற்கு இடையே பெங்களூருவில் உள்ள கயவனின் மகள் வீட்டில் கல்வீச்சும், பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதை செய்தவர்கள் ஸ்ரீராம பக்தர்கள் என்று ஒரு அபாண்டமான பொய்யை அவிழ்த்து விட்டு உள்ளனர். குண்டு வீசியது கயவனின் மதுரை மகன் என்பது அனைவருக்கும் தெரியும். இது அவர்கள் குடுமபத்தில் நடக்கும் சண்டையின் விளைவாக எழுந்தது என்பதையும் அனைவரும் அறிவர்.

அதேபோல தமிழக பஸ் ஒன்றையும் ஒரு கும்பல் கொளுத்தி உள்ளதாக செய்திகள் வருகின்றன. இதுவும் கொலைஞரின் கைவண்ணம் என்பது ஊர் அறிந்த உண்மை. ஸ்ரீராம பக்தர்கள் ஒரு போதும் இது போன்ற வன்முறையில் இறங்க மாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இதுபோன்ற வன்முறை செயல்களை தூண்டிவிடும் கயவன் கருணாநிதியையும், அவன் குடும்பத்தையும் தமிழகத்தில் இருந்து விரட்டுவோம்.

ஜெய் ஸ்ரீராம்.

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஸ்ரீ இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சிறுவயதில் இருந்து உறுப்பினராக இருக்கிறேன். எனக்கு நம்பிக்கை உண்டு. ஒரு சில செய்தி ஊடகங்களில் வருவதுபோல், ஆர்.எஸ்.எஸ். வன்முறை செயல்களில் ஈடுபடாது. அதுவும் தற்போது பெங்களூரில் நடந்த வன்முறை செயலில் ஆர்.எஸ்.எஸ்.க்கு எந்த பங்கும் இல்லை.
இதைப் போன்ற வன்முறை செயல்களில் ஆர்.எஸ்.எஸ். என்றும் ஈடுபடாது.

18 Comments:

 • Even fools will not believe your thoughts...

  By at 9/18/2007 9:31 PM  

 • naga அவர்களே,

  வருகைக்கு நன்றி. நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம். ஸ்ரீ இல. கணேசன் அவர்களின் அறிக்கையை பதிவில் சேர்த்து உள்ளேன்.

  By at 9/18/2007 10:19 PM  

 • பின்னூட்ட கயமைத்தன ஆதரவு!

  By at 9/18/2007 10:21 PM  

 • ராமர் எந்த கல்லூரியில் படித்து பாலம் கட்டினார் என்று கேட்கும் முன் கருணாநிதி எந்தக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்று இன்று ஆட்சி செய்கிறார்? இவர் என்ன IAS படித்து இருக்கிறாறா? இல்லை MBA படித்து இருக்கிறாறா? தலைமைக்கு ஏற்ற முதிர்ச்சி இன்மையினை காட்டும் மற்றொரு உதாரணமே ராமர் பால விசயத்தில் கருணாநிதியின் கருத்து.

  By at 9/18/2007 10:38 PM  

 • லக்கிலுக் அவர்களே,

  உங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி.

  raja அவர்களே,

  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  By at 9/18/2007 11:39 PM  

 • Kolaingar. Perfect title for a person who obtained doctorate by killing a person.

  //தலைமைக்கு ஏற்ற முதிர்ச்சி இன்மையினை காட்டும் மற்றொரு உதாரணமே ராமர் பால விசயத்தில் கருணாநிதியின் கருத்து.
  //

  Raja, when has he had this to expect it now.

  p.s. Kummi's are allowed here.

  By at 9/18/2007 11:40 PM  

 • எப்படிங்க ?
  :)))

  By at 9/19/2007 12:16 AM  

 • நன்மனம் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  கொலைஞர் பட்டம் அளித்தது ஸ்ரீ அரவிந்தன் அவர்கள். நான் அதை பயன்படுத்துகிறேன்.

  By at 9/19/2007 12:32 AM  

 • கோவி. கண்ணன் அவர்களே,

  வருகைக்கு நன்றி. எல்லாம் அவன் செயல்.

  By at 9/19/2007 12:32 AM  

 • நன்மனம் என்ற நாட்டாமை என்ற கண்ணம்மா என்ற பஜ்ஜி என்ற ஹாரிபாட்டர் என்ற முரளிமனோகரை இங்கே நீண்ட நாட்கள் கழித்து சந்திக்க முடிந்தது மகிழ்ச்சி.

  வாழ்க பாரதம்
  ஒழிக திம்மி
  வளர்க மம்மி

  By at 9/19/2007 12:56 AM  

 • லக்கிலுக் அவர்களே,

  உங்களின் கருத்து தனிநபர் தாக்குதலில் அடங்குமா என்பது சந்தேகமாக இருக்கின்றது. எனவே அதை இங்கு வெளியிடுகின்றேன்.

  போலியும் போண்டாவும் இங்கே வேண்டாமே :-)

  By at 9/19/2007 1:12 AM  

 • பின்னூட்ட மொள்ளமாரித்தனம்.

  உங்கள் பதிவு எதுக்காவது குறைந்தது 50 பின்னூட்டங்கள் வரவேண்டும் என்று எனக்கு நெடுநாள் ஆசை. என்று நிறைவேறுமோ என் கனவு?

  By at 9/19/2007 1:34 AM  

 • //நன்மனம் என்ற நாட்டாமை என்ற கண்ணம்மா என்ற பஜ்ஜி என்ற ஹாரிபாட்டர் என்ற முரளிமனோகரை இங்கே நீண்ட நாட்கள் கழித்து சந்திக்க முடிந்தது மகிழ்ச்சி.//

  :-)

  Dear LL,

  have u not seen my kondai....

  By at 9/19/2007 1:44 AM  

 • செந்தழல் ரவி அவர்களே, (நீங்க உண்மையான செந்தழல்தானா?)

  வருகைக்கு நன்றி. உங்களின் பின்னூட்டத்தை வெளியிடமுடியாமைக்கு வருந்துகிறேன்.

  By at 9/19/2007 1:45 AM  

 • லக்கிலுக் அவர்களே,

  எப்படிதான் சலிக்காமல் பின்னூட்டம் போடுகின்றீர்களோ தெரியவில்லை. இதற்கு என்ன கைமாறு செய்ய போகின்றேன் என்றுதான் புரியவில்லை.

  By at 9/19/2007 1:48 AM  

 • நன்மனம் அவர்களே,

  இது என் பதிவு. கொண்டைக்கு இங்கே இடம் இல்லை.

  By at 9/19/2007 2:05 AM  

 • //எப்படிதான் சலிக்காமல் பின்னூட்டம் போடுகின்றீர்களோ தெரியவில்லை. இதற்கு என்ன கைமாறு செய்ய போகின்றேன் என்றுதான் புரியவில்லை.//

  தங்கத்தாரகையிடம் சொல்லி என்னை அவரது பூத் ஏஜெண்டாக சேர்த்துக் கொள்ள சொல்லவும்.

  By at 9/19/2007 2:37 AM  

 • :-))

  By at 9/22/2007 7:52 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za