அம்மான்னா சும்மாவா?

Tuesday, September 04, 2007

மதிமூடனின் மடத்தனம்

பாரத மக்களின் அறிவியல் ஆற்றல் உலக புகழ் பெற்றது என்பதை அனைவரும் அறிவோம். பல யுகங்களுக்கு (பல லட்சம் ஆண்டுகளுக்கு) முன்பே பாரத மக்கள் நல்ல வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். உலக புகழ் பெற்ற பல பொறியாளர்கள் கடலின் மீது பாலம் கட்டிய வரலாறு நமக்கு உண்டு. மேலும் உடல் உறுப்புகளை மாற்றி அமைத்து மருத்துவ சாதனை புரிந்தவர் நம்மவர். இப்படி பாரம்பரிய வைத்திய சாஸ்திரத்தில் பெரும் புலமை பெற்ற நம்மிடையே கரையான்கள் போல கிருத்துவ மெஷினிரிகள் புகுந்தனர். ஏதோ அவர்களுக்கு மட்டும்தான் அறிவு இருக்கிறது போல காட்டுவதற்காக ஆங்காங்கே மருத்துவமனைகளை ஆரம்பித்து மக்களை மதமாற்றம் செய்ய முற்பட்டனர்.

அதை கடுமையாக நம்மவர் எதிர்த்ததால், ஜாதி என்ற கொடிய விஷநோயை நம்மிடையே அந்த பரங்கியர் பரப்பி விட்டனர். மேலும் நல்ல தகுதி பெற்ற நம்மவர் மருத்துவ உலகில் முன்னேறுவதை தடை செய்ய முற்பட்டனர். முதல் காரியமாக நம் இறைவன் நமக்கு அருளிய சமஸ்கிருதத்தினை மருத்துவ உலகில் இருந்து அகற்றினர். அவர்களுக்கு பிறகு ஆட்சியில் அமர்ந்த திம்மிக்கள் படிப்படியாக இட ஒதுக்கீடு என்ற கொடிய நோயை புகுத்திவிட்டனர். இதனால் தகுதி, திறமை சற்றும் இல்லாத மனிதர்கள் கூட மருத்துவர்களாக ஆகும் வாய்ப்பு உருவாகி விட்டது.

அப்படி பின்புறமாக நுழைந்து மருத்துவம் படித்த ஒரு மதிமூடன் வாடிகன் ஆசியுடன் மத்திய மந்திரி ஆகிவிட்டான். சரி போகட்டும் என்று பார்த்தால் உலக புகழ் பெற்ற மருத்துவ மாமேதையாக ஸ்ரீ வேணுகோபாலுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டான். அதை கண்டு பொறுக்க முடியாத நம் நீதிமான்கள் அவனின் கைகளை கட்டி போட்டு உள்ளனர். கை கட்டி இருப்பினும் தன் வாலை ஆட்ட ஆரம்பித்து விட்டான் இந்த கயவன்.

கிராமப்புர மக்கள் பல தலைமுறைகளாக நாட்டு வைத்தியம் என்ற பாரம்பரிய கலையின் மூலம் பயன் அடைந்து வந்தனர். இப்போது அதை ஒழிக்கும் செயலாக மருத்துவம் படித்த மருத்துவர்கள் ஒரு ஆண்டு கிராமங்களுக்கு சென்று சேவை ஆற்ற வேண்டும் என்று ஒரு புதிய சட்டம் கொண்டு வந்து விட்டான். மருத்துவ சேவை என்பது ஒரு மாயத் தோற்றம். பல யுகங்களாக நம்மிடையே புகழ் பெற்ற வேப்பிலை மருத்துவம், பால் குட மருத்துவம், அலகு குத்தும் (acupuncture) மருத்துவம் போன்றவற்றை அழிக்கும் செயல் இது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் பல லட்சம் செலவு செய்து மருத்துவம் படிக்கும் நம் மாமணிகள் ரூ எட்டாயிரம் வாங்கிக் கொண்டு சேவை செய்ய வேண்டுமாம். இது என்ன அநியாயம் பாருங்கள். நல்ல மாணவ மணிகள் மருத்துவ படிப்பை படிப்பது இல்லை என்று வேதனை பட்டு வலைஉலக கிருபானந்த வாரியார் ஆகிய ஸ்ரீ உண்மை தமிழன் அவர்கள் ஒரு பதிவு போட்டு உள்ளார். இப்படி படிப்படியாக மருத்துவர்களை விரட்டினால் நாடு எந்த நிலைமைக்கு போகும் என்பதை யோசியுங்கள். எனவே 80 கோடி ஹிந்துக்களும் போராடும் நம் கண்மணிகளுக்கு அதரவு தெரிவிப்போம்.

வாழ்க மருத்துவர்கள். வீழ்க மதிமூடன்கள்.

3 Comments:

 • //முதல் காரியமாக நம் இறைவன் நமக்கு அருளிய சமஸ்கிருதத்தினை மருத்துவ உலகில் இருந்து அகற்றினர்.//

  அது சரி, சமஸ்கிரதத்தில் மருத்துவம் படிச்சுட்டு நோய்வராத கடவுளுக்கு கைவைத்தியமா பார்க்க முடியும் ?

  By at 9/04/2007 9:27 PM  

 • கோவி.கண்ணன் அவர்களே,

  வருகைக்கு நன்றி. நம் முன்னோர்கள் சமஸ்கிருதத்தில் பல அரிய நூல்கள் எழுதி உள்ளனர். அதை கைப்பற்றிய கிருத்துவ மெஷினிரிகள் அதையெல்லாம் தாங்கள் தான் கண்டுபிடித்தாக வெளியிட்டு நோபல் பரிசுகளை வாங்கி குவிக்கின்றனர்.

  By at 9/04/2007 11:00 PM  

 • ராமர் பாலம் என்பது புராணிகர்களின் கூற்று;பொறியாளர்களின் படைப்பு அல்ல என்பதே தலைவரின் விளக்கம்.

  By at 9/05/2007 12:05 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za