அம்மான்னா சும்மாவா?

Sunday, September 16, 2007

இன்ப அதிர்ச்சி தந்த அம்மா

உலகத்தின் ஒரே தங்க தாரகையான அம்மாவை பற்றி அவ்வப்போது திம்மிகள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அம்மாவை யாரும் சென்று பார்க்க முடியாது, சென்றால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று பலவகை பொய்களை அவிழ்த்து விடுவர். இந்த பொய் முகங்களை அடியோடு வேர் அறுத்து விட்டார் அம்மா.

ஓய்வு எடுக்க நீலகிரி கொடநாடு எஸ்டேட் இல்லத்திற்கு செல்ல, சென்னை விமான நிலையம் வந்த அம்மா அவர்கள், அங்கு நின்றிருந்த சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி தந்தார்.

சென்னை விமான நிலையத்திற்கு நேற்று மதியம் 1.55 மணிக்கு வந்த அம்மா அவர்கள், பாரமவுன்ட் விமானத்தில் கோவைக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் சசிகலா, இளவரசி, பாதுகாப்பு அதிகாரி முத்துமாணிக்கம், உதவியாளர்கள் லட்சுமி, தேவி ஆகியோர் சென்றனர். கோவை செல்லும் அம்மா அங்கிருந்து கார் மூலம் நீலகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட் இல்லத்திற்கு செல்கிறார். அங்கு, 10 முதல் 15 நாட்கள் வரை ஓய்வு எடுப்பார் என்று தெரிகிறது.சென்னை விமான நிலையத்தில் அம்மாவின் கார் வந்தபோது அங்கு அ.தி.மு.க., கட்சி உறுப்பினர் ஆதிகேசவனுடன் அவரது பேத்தி ஜெயஸ்ரீ என்ற சிறுமி கையில், "பொக்கே'வுடன் நின்று கொண்டிருந்தாள். கார் அவர்கள் அருகே வந்தவுடன் நின்றது. கண்ணாடியை இறக்கிய அம்மா அந்த சிறுமியை அருகில் அழைத்தார். சிறுமியிடம் பெயரை கேட்டார். தன் பெயரை கூறிய அச்சிறுமி, "நானும் சர்ச் பார்க் கான்வென்டில் தான் படிக்கிறேன்,' என்றார். அதைக்கேட்டவுடன் அம்மா கலகலவென சிரித்து விட்டார். பின்னர், பொக்கேயை வாங்கிக் கொண்டு விமான நிலையத்திற்குள் நுழைந்தார்.

சிறுமியுடன் நின்றிருந்த ஆதிகேசவன் கூறுகையில், "தற்செயலாக பேத்தியுடன் விமான நிலையம் வந்தோம். அம்மா வருவது தெரிந்ததும், "பொக்கே' உடன் விமான நிலைய வழியில் நின்றோம். அம்மா எங்கள் அருகே காரை நிறுத்தி, "பொக்கே' வாங்குவார் என்று எதிர்பார்க்கவில்லை. அவர், எங்களுடன் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.

ஏழை எளிய மக்களை அவரே அழைத்து உரையாடி மகிழ்ந்ததை கண்ட பிறகாவது அந்த திம்மிக்களுக்கு சித்தம் தெளியும் என்று நம்புவோம்.

வாழ்க அம்மா. வளர்க அவரின் புகழ்.

6 Comments:

 • //கண்ணாடியை இறக்கிய அம்மா அந்த சிறுமியை அருகில் அழைத்தார். சிறுமியிடம் பெயரை கேட்டார். தன் பெயரை கூறிய அச்சிறுமி, "நானும் சர்ச் பார்க் கான்வென்டில் தான் படிக்கிறேன்,' என்றார். அதைக்கேட்டவுடன் அம்மா கலகலவென சிரித்து விட்டார். பின்னர், பொக்கேயை வாங்கிக் கொண்டு விமான நிலையத்திற்குள் நுழைந்தார்.//

  அம்மான்னா சும்மா இல்லடா!

  By at 9/16/2007 10:21 PM  

 • பதிவுக்கு நன்றி.

  By at 9/17/2007 7:05 AM  

 • பின்னூட்ட வெறித்தனம்!

  By at 9/17/2007 9:51 PM  

 • லக்கிலுக் அவர்களே,

  உங்களின் ஆதரவிற்கு நன்றி.

  By at 9/18/2007 8:50 PM  

 • லக்கிலுக் = இலைக்காரன்.

  ஹீஹிஹிஹி..

  By at 9/18/2007 11:45 PM  

 • பூக்குட்டி அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  நான் அவர் இல்லை. "இது நியாயமா லக்கிலுக் அவர்களே" என்ற பதிவை படிக்கவும்.

  By at 9/19/2007 12:27 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za