அம்மான்னா சும்மாவா?

Wednesday, October 03, 2007

தமிழச்சி அவர்களுக்கு

நீங்கள் என்னை பற்றி பதிவு போட்டு இருப்பதாக நண்பர் மூலம் அறிந்தேன். முதலில் என் பதிவுகளுக்கு வந்து படித்தமைகாக நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன். இணையம் ஒரு கட்றற்ற உலகம் என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல. எல்லோருக்கும் ஒரே கருத்து இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லையே. நீங்கள் ஈ.வே.ராவின் மதத்தை சேர்ந்தவர். ஒரு வகையில் பார்த்தால் ஈ.வே.ராவும் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்தான். எனவே நீங்களும் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்தான்.


சாராரணமாக அரசியல் விவாதமாக இருந்தால் அவருடைய கருத்தை சொல்ல அவருக்கு உரிமை உண்டு என்று விட்டுவிடலாம். ஆனால் இவரோ 80 - கோடி இந்துக்களின் ஒட்டு மொத்த குரலாக
தன்னுடைய பதிவில் http://ilaikkaran.blogspot.com/2007/09/blog-post_30.html
எடுத்து விடுகிறார். தமிழக அரசியலையோ மக்களின் உணர்வுகளையோ நான்கு வரிகளில் எழுதிவிடும் விஷயங்கள் அல்ல. மதத்தை முன் வைத்து ஒரு நாடு இருக்குமானால் அந்நாடு எப்படி உருப்படும். அப்படியென்றால் இந்தியாவில் உள்ள மற்ற மதத்தினரைப் பற்றி என்ன சொல்ல வருகிறார்? அவர்கள் இந்தியர்களில்லையா? சரி கணக்கில் மற்ற மதத்தவரை சேர்க்க வேண்டாம். ஹிந்துஸ்தானிகளையே எடுத்துக் கொள்வோம்.

ஹிந்து ஹிந்து என்கிறீர்களே! ஆண்டாண்டு காலமாய் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டும், கல்வி அறிவு
கொடுக்கப்படாமல் அடக்கி வைக்கப்பட்டும், குலத்துக்கேற்ற தொழில் கற்பிதம் செய்யப்பட்டும், தீண்டத்தகாதவர்களாகவும் நடத்தப்பட்டு வந்த 100 - க்கு 99 - சதவீத ஹிந்துக்களை உங்களுக்கு ஆதரவாக சேர்த்துக் கொள்ள என்ன யோக்கியதை இருக்கிறது?

யார் ஹிந்துக்கள்? என்னை கேட்டால் ஹிந்துஸ்தானத்தில் வசிக்கும் எல்லோரையும் ஹிந்துக்கள் என்று சொல்லமுடியாது. கிருத்துவ மிஷினரிகளையும் அவர்களின் அடிவருடிகளையும், முகமதியர்களையும், ஜிகாதிகளையும் ஹிந்துக்களின் எண்ணிக்கையில் அடக்க முடியாது. அவர்களை தவிர எல்லோரும் ஹிந்துக்கள்தான்.

சமூதாயப்பிரச்சனைகளை ஏன்யா மதப்பிரச்சனையாக்குகிறீர்கள். உங்களின் சொந்த விருப்புகளை அலசி ஆராய்ந்து சமூதாய நோக்குடன் தொலைநோக்குப் பார்வையில் பார்க்கத் தெரியாதா? 80 - கோடி ஹிந்துக்களுக்கு இருக்கும் சக்தியை
காண்பிக்கும் நேரம் வந்துவிட்டதாக பிதற்றுகிறீர்களே அதே 80 - கோடி ஹிந்துக்களுக்கு அவர்கள் எந்த அளவில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சிறு
நெருப்பு பொறியாக பகுத்தறிவை அவர்களுக்குள் விதைத்தால் உங்கள் கதை கோவிந்தா தான்!

80கோடி ஹிந்துக்களும் ஒன்று பட்டால் உங்கள் கதை என்ன ஆகும். ஒற்றுமையாக இருந்த ஹிந்துக்கள் இடையே ஜாதி என்ற நோயை பரப்பி விட்டனர் கிருத்துவ மிஷினரிகள். பிறகு வந்த ஈரோட்டு கிழவன் வகுப்புரிமை, இட ஒதுக்கீடு என்று ஹிந்துக்களை பிளவு படுத்தி விட்டான். இப்போது ஆட்சி புரியும் மெய்னோவும், கொலைஞரும் இந்த வஞ்சக செயல்களை தொடர்ந்து வருகின்றனர். வேத காலத்தில் சொல்லியபடி அவரவர் தம் கடமைகளை செய்து வரும் நாள் விரைவில் மலரும்.


நியாயமான உணர்வுகளுடன் நான் எழுதுவதால் என் போட்டோவை போட்டு எழுதுகிறேன். இலைக்காரரே 80 - கோடி உணர்வுகளின் உணர்வாக பேசும் உங்களால் ஏன் முகத்தை காட்ட முடியாமல் இலையை போட்டு எழுதுகிறீர்கள். நீங்கள் அம்மா கட்சியாகவோ அல்லது ஏதாவது ஒரு கட்சியாகவோ இருக்கலாம். ஆனால் நியாயமான உணர்வுகள் என்பது ஒருதலைப்பட்சமாக இருக்கக்கூடாது. உண்மையின் முன்னால் நடுநிலை என்பது இல்லை என்பார்கள்.


போட்டோவை இணையத்தில் எப்படி எல்லாம் பயன் படுத்துகின்றனர் என்பது எல்லோருக்கும் தெரியும். என் பதிவுகளை காப்பி அடித்து சில பதிவுகள் ஒரு தளத்தில் தோன்றின. அவ்வளவு ஏன், இவ்வார தமிழ்மண நட்சத்திரம் என் பதிவினை ஆக்கிரமிக்க முயற்சி எடுக்கின்றார். போட்டோவை போட்டால் ஆட்டோ வரும் என்பதால்தான் நான் யார் என்பதை அறிவிக்கவில்லை. அம்மாவின் ஆட்சி விரைவில் தமிழகத்தில் மலரும். அப்போது என் பதிவுக்கு வந்து பாருங்கள்.

இதில் ஜெய் ஸ்ரீ ராம் வேறு. நீர் என்ன ஹிட்லரோ. ஆல்டாப் ஹிட்லர் சொல்லுவான். "எந்தப் பொய்யும் திரும்பத் திரும்ப சொல்லப்படும் போது அது
உண்மையாகிவிடுகிறது" என்று. அப்படி சொன்னவன் தான் கடைசியில் மண்ணையும் கவ்விக் கொண்டான்.
ஜெய் ஸ்ரீ ராம்! என்று கோஷம் போடுவதை நிறுத்திவிட்டு போய் வேறு வேலை பாரும்.


ஜெய் ஸ்ரீராம் என்ன அவ்வளவு கெட்ட வார்த்தையா. எம் குலம் வாழ என் கடவுளை நான் வேண்ட கூடாதா. புண்ணிய பாரதத்தில் தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த நிலை.

ஜெய் ஸ்ரீராம். ஜெய் ஸ்ரீராம். ஜெய் ஸ்ரீராம்.

24 Comments:

 • ஊழியே வந்தாலும் சரி... நண்பர் இலைக்காரனுக்கு நான் தரும் பின்னூட்ட ஆதரவு கயமையை எந்த பன்னாடையும் தடுக்க முடியாது.

  பின்னூட்ட கயமை ஆதரவு நெ.1

  By at 10/03/2007 1:00 AM  

 • என்னுடைய பின்னூட்டக் கயமையை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  By at 10/03/2007 1:16 AM  

 • ஹிந்து ராம் ஆட்சி செய்த நாட்டில் ஒருவர் தன் கருத்துக்களை சொல்ல உரிமை உள்ளது.

  அது இலைக்காரனாயிருந்தாலும் சரி தமிலச்சியாயிருந்தாலும் சரி.

  ஜெய் சீதாராம்
  ஓம் சாந்தி
  ஜெய்கிந்த்

  By at 10/03/2007 1:17 AM  

 • லக்கிலுக் அவர்களே,

  வருகைக்கும், ஆதரவிற்கும் நன்றி.

  By at 10/03/2007 1:27 AM  

 • pot"tea"kadai அவர்களே,

  வருகைக்கும், ஆதரவிற்கும் நன்றி.

  By at 10/03/2007 1:27 AM  

 • பின்னூட்ட கயமை ஆதரவு

  By at 10/03/2007 1:47 AM  

 • ஜெய் ஸ்ரீராம். ஜெய் ஸ்ரீராம். ஜெய் ஸ்ரீராம்.

  By at 10/03/2007 1:57 AM  

 • ஜெகதீசன் அவர்களே,

  வருகைக்கும், ஆதரவிற்கும் நன்றி.

  By at 10/03/2007 1:57 AM  

 • இலைக்காரரை கலாய்த்த தோழியர் தமிழச்சிக்கு கண்டனங்கள் !

  அம்மா புகழ் ஓங்குக !
  இலைக்காரர் சேவை வளர்க !
  :)

  By at 10/03/2007 2:22 AM  

 • கோவியார்! அசத்துறீங்க :-))))))))

  By at 10/03/2007 5:34 AM  

 • //அம்மான்னா சும்மாவா?//

  யோவ்! எலைகாரரே!

  நீ புகழறது தமிழச்சி அம்மாவையா?

  By at 10/03/2007 5:38 AM  

 • :-))

  By at 10/03/2007 5:43 AM  

 • லக்கிலுக் அவர்களே,
  வருகைக்கு நன்றி.

  மாசிலா அவர்களே,
  வருகைக்கு நன்றி.

  By at 10/03/2007 7:11 AM  

 • பிரபு ராஜதுரை அவர்களே,

  வருகைக்கு நன்றி. தலைமை நீதிமன்ற நீதிபதியின் சமீபத்திய கருத்துகளை பற்றிய பதிவை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன்.

  By at 10/03/2007 7:14 AM  

 • எல்லாரும் களத்துல குதிச்சுட்டாங்க. நம்ம பங்கையும் அள்ளி விட வேண்டியது தான்.

  விடுங்க இலைகாரரே, பெண்ணறிவு, பிதற்றலறிவுன்னு சும்மாவா சொன்னாங்க! நான் தமிழச்சி அம்மாவைத் தான் சொன்னேன்;-)

  By at 10/03/2007 8:53 AM  

 • கலக்கிட்டீங்க அய்யா...! மதச்சார்பு வேசம் தேவை படாதவர்கள் இந்தியாவில் ரொம்ப கம்மி! வாழ்த்துக்களுடன்...

  By at 10/03/2007 11:06 AM  

 • இலைக்கார அம்பி!
  கதையக் கேட்டேளா?நம்ம ராஜ்நாத்தம் சிங்கர் சொல்லியிருக்கார். சோனியா "காந்தி" பெயரை மாத்தனுமாம்.காந்தின்னு சொல்லப் படாதாம்.ராமர் கோவிச்சுண்டுருவாராம்.ஒங்க அம்மா சொல்லிக் கொடுத்திருப்பாளோ!அவாதான் இப்படியெல்லாம் பேசுவா,இந்த மனுஷாளுக்குப் புத்தி வேண்டாமோ!

  ஆமா,அவா இந்தியாவிலே பொறக்கலே!நம்ம அத்வானி மாமா பாகிஸ்தான்லே தானே பொறந்தார்,அங்கே அனுப்பிச் சடலாமா?

  ஆமாம் சிலர் யாருக்குப் பொறந்தோம்னு தெரியாமலே அலையறாளே அவாள என்ன செய்யலாம்,ஜலத்தைத் தெளிச்சு ஆர்.எஸ்.எஸ்.லே சேத்துப் பாளா?

  By at 10/03/2007 12:27 PM  

 • மீண்டும் ஒருபின்னூட்ட கயமை ஆதரவு.

  ஜெய் ஸ்ரீராம். ஜெய் ஸ்ரீராம். ஜெய் ஸ்ரீராம்.........

  By at 10/03/2007 9:22 PM  

 • முகவை மைந்தன் அவர்களே,
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  சிவாஜி - the boss! அவர்களே,
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ஜெகதீசன் அவர்களே,
  உங்களின் ஆதரவிற்கு நன்றி.

  By at 10/03/2007 9:53 PM  

 • thamizhan அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  அன்டோனியோ மெய்னோ என்ற உண்மை பெயரை மறைத்து காந்தி பெயரால் ஓட்டு பிச்சை எடுப்பவர் என்பது உலகம் அறிந்த விஷயம். அம்மாதான் இந்த விஷயத்தினை உலகிற்கு முதலில் எடுத்து சொல்லியவர். இப்போது அது ஐ.நா சபைவரை சென்று இருக்கிறது.

  உலக தலைவர்களின் முன்னிலையில் ஐ.நா சபையில் அம்மா உரையாற்றும் காலம் வெகு தொலைவில் இல்லை.

  By at 10/03/2007 9:58 PM  

 • பின்னூட்ட மொள்ளமாரித் தனம்!

  By at 10/03/2007 10:15 PM  

 • //போட்டோவை போட்டால் ஆட்டோ வரும் என்பதால்தான் நான் யார் என்பதை அறிவிக்கவில்லை.//

  ஒரு தமிழச்சிக்கு இருக்கும் தைரியம் இலைக்கரருக்கு இல்லமல் போய்விட்டதே ... காரணம் நீங்கள் சார்ந்திருக்கும் இலையின் மகிமையா?

  By at 10/04/2007 10:44 AM  

 • யாழினி சுந்தர் அவர்களே,

  வருகைக்கு நன்றி. தமிழச்சி தமிழ்நாட்டில் இல்லை. எனவே அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர் இருக்கும் இடத்திற்கு ஆட்டோ வராது. ஆனால் என்னை போன்றவர்களின் நிலை அப்படியா. தமிழ்நாட்டில் அம்மாவின் ஆட்சியில்தான் எங்களால் நிம்மதியாக வெளியில் உலவ முடியும்.

  By at 10/04/2007 8:28 PM  

 • ஜெய் ஸ்ரீராம். ஜெய் ஸ்ரீராம். ஜெய் ஸ்ரீராம்.

  By at 10/05/2007 7:49 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za