அம்மான்னா சும்மாவா?

Friday, October 12, 2007

ராமாயணம் தெரியாத அவுஸ்திரேலியர்கள்

பாரதத்தின் கல்வி முறை பல லட்சம் ஆண்டுகள் பழமையானது. ஹிந்துஸ்தானத்தில் உள்ள மாணவர்கள் நம் நாட்டின் வரலாற்றை நல்ல முறையில் கற்பதோடு பிற நாட்டு வரலாற்றையும் கற்று வருகின்றனர். அதனால்தான் உலக நாடுகளில் இருந்து மேல்படிப்பிற்காக பல கோடி மாணவர்கள் நம் நாட்டிற்கு ஆண்டுதோறும் வருகை தருகின்றனர்.

பாரதத்தின் வரலாற்றில் பல முக்கிய காலங்கள் உள்ளன. அவற்றில் அதிமுக்கியமான ஒன்று திரேதா யுகத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள். தமிழர்கள் தன் வரலாற்றை பதிவு செய்வதில்லை என்று பதிவுலகில் பலர் கூறி வருகின்றனர். ஆனால் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வசித்து வந்த தமிழர் திருமகனான ஸ்ரீராமரின் வரலாறு ஆதாரபூர்வமாக பதிவு செய்யபட்டு இருக்கிறது. அந்த நிகழ்வுகளை பற்றி பாரதத்தில் மட்டும் அல்லாமல் கிழக்கு திசைகளில் உள்ள பல நாடுகளிலும் ஆய்வுகள் செய்யபட்டு ஆதாரபூர்வமாக நிரூபிக்கபட்டுவிட்டன. அதன் பிறகு விழித்துகொண்ட மேற்கு நாடுகளும் ராமாயண காலத்தை ஆய்வு செய்தன. பல ஆய்வுகளை மேற்கொண்ட நாஸாவும் ஸ்ரீராமர் எழுப்பிய ஸ்ரீராம சேதுவை உலகின் பழமையான கடல் பாலம் என்று ஒப்புகொண்டுவிட்டது.

இவ்வாறாக எட்டு திக்குகளிலும் பரவி வரும் வரலாறு ஒரு சிறு தீவாக இருக்கும் அவுஸ்திரேலியாவை அடையாதது பெரும் வியப்பான செய்தி. ஸ்ரீராமரின் வரலாற்றை அவுஸ்திரேலியர்கள் அறிந்திருப்பின் அவர்கள் கீழ்கண்ட புகாரை அளித்திருக்கமாட்டார்கள் என்பது திண்ணம்.

வடோடராவில் நேற்று நடந்த இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 5வது ஒரு நாள் போட்டியின்போது இந்தியா பேட்டிங் செய்தபோது, சைமண்ட்ஸ் பவுண்டரி பகுதியில் பீல்டிங் செய்தார். அப்போது ரசிகர்களில் சிலர் சைமண்ட்ஸைப் பார்த்து குரங்கு போல பாவனை செய்து கிண்டலடித்ததாக ஆஸ்திரேலிய அணியின் மீடியா மேலாளர் பிலிப் போப் குற்றம் சாட்டியுள்ளார்.


இது ஒரு தவறான செய்கை அல்ல என்பது அனைவரும் அறிந்த உண்மை. ராமாயணத்தை அறியாத காரணத்தினால் இந்த புகார் எழுந்துள்ளது என்பது 80 கோடி ஹிந்துக்களுக்கும் தெரியும். உலகில் இருக்கும் சில திம்மிக்களுக்கு இதை பற்றிய ஒரு விளக்கத்தை கொடுக்க நினைக்கின்றேன்.

முதலாவதாக ஆட்டம் நிகழ்ந்த இடம் ஸ்ரீமான் மோடி அவர்கள் ராஜதர்மத்துடன் நீதி பரிபாலிக்கும் ஹிந்துஸ்தானத்தின் புண்ணிய இடங்களில் ஒன்றான மோடிஸ்தானம் ஆகும். அவரின் நீதி வழுவா ஆட்சியில் மகிழ்ந்து இருக்கும் ஹிந்துக்கள் அனைவரும் எல்லா நேரங்களிலும் ஸ்ரீராமரையும், அவருக்கு பிரதம சீடராக விளங்கி வந்த ஸ்ரீஆஞ்சநேயரை பற்றியும் நினைவில் வைத்து இருப்பவர். சில நேரங்களில் அவர்கள் ஸ்ரீராமரை மறந்து இருப்பது உண்டு. தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் திம்மியின் நாவில் இருந்து வெளிபடும் விஷவார்த்தைகளால் அந்த மயக்கம் தெளிந்து எல்லா ஹிந்துக்களும் மீண்டும் ஸ்ரீராமரை வணங்க தொடங்கி விடுவார்கள். இப்போது அகில உலகமே பற்றி எரியும் விஷயமான ஸ்ரீராம சேதுவின் விளைவாக 80 கோடி ஹிந்துக்களும் சதா சர்வ காலமும் ஸ்ரீராமரை பற்றியே யோசித்து வருகின்றனர்.

அடுத்ததாக ஸ்ரீமான் சைமண்ட்ஸ் அவர்களை பற்றி பார்போம். ஸ்ரீமான் சைமண்ட்ஸ் அவர்கள் அவுஸ்திரேலிய அணியின் முக்கிய ஆட்டகாரர். அணியின் தலைவராக விளங்கும் ஸ்ரீமான் பாண்டிங் அவர்களின் பிரதம சீடராகவும் இருந்து வருகின்றார். ஸ்ரீமான் சைமண்ட்ஸ் அவர்களின் செய்கைகள் அனைத்தும் ஹிந்துக்களின் மனத்தில் ஸ்ரீஆஞ்சநேயரின் உருவத்தையும் செய்கைகளையும் நினைவு படுத்துவதாக இருக்கின்றது என்று நான் நினைக்கின்றேன்.

ஸ்ரீஆஞ்சநேயர் இக்கட்டான சூழ்நிலையில் சஞ்சீவி பர்வதத்தினை எடுத்து வந்து ஸ்ரீராமரையும் அவரின் சேனையையும் காப்பாற்றியதை போல அவுஸ்திரேலிய அணி இக்கட்டில் மாட்டிகொள்ளும் போது ஸ்ரீமான் சைமண்ட்ஸ் அவர்கள் தன் பிரமாதமான ஆட்டத்தின் மூலம் அணிக்கு வெற்றி வாகையை அளித்து வருபவர். மேலும் ஸ்ரீமான் சைமண்ட்ஸ் அவர்கள் எப்போதும் தன் முகத்தில் வெள்ளை நிறத்தில் பூச்சு வேலை செய்து இருப்பார். அது ஹிந்துக்களின் கண்களுக்கு நாமகட்டியினை குழைத்து தடவியது போல் தெரிந்து இருக்கின்றது. எனவே அவர் ஸ்ரீஆஞ்சநேயரின் மறுபிறப்பு என்று நினைத்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

எனவே ஆட்டம் நடைபெற்ற திடலில் இருந்தவர்களின் செய்கைகள் அனைத்தும் அவரை போற்றும் விதமாகதான் செய்யபட்டது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இந்த குழப்பத்தினை தீர்த்து வைக்க டாக்டர் ஸ்ரீவேதாந்தி அவர்கள் அவுஸ்திரேலிய அணியை சந்தித்து ராமாயணத்தை பற்றி ஒரு விளக்க உரை ஆற்ற இருப்பதாக புதுதில்லி தகவல்கள் கூறுகின்றன.

இதற்கு இடையே கேன்பராவில் இருக்கும் அவுஸ்திரேலிய கேப்பிடல் டெரிடரியின் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கினை பதிவு செய்ய போவதாக ஸ்ரீமான் சுப்பிரமணிய சுவாமி அவர்கள் பேட்டி அளித்துள்ளார். ஸ்ரீராமர் சீதாதேவியுடன் வனவாசம் சென்ற இடம் அவுஸ்திரேலியாதான் என்று தம்மிடம் அசைக்க முடியாத ஆதாரம் இருப்பதாக அவர் தெரிவித்து உள்ளார். துள்ளி குதித்து ஓடும் கங்காரு என்ற விலங்கினத்தைதான் ஸ்ரீவால்மீகி அவர்கள் மாயமான் என்று குறிப்பிட்டதாக அவர் கூறினார். ஸ்ரீராமர் அவுஸ்திரேலியாவிற்கு வனவாசம் செல்லும் வழியில் குறுக்கிட்ட சமுத்திரங்களை கடக்க அமைத்த பாலம்தான் அவுஸ்திரேலிய கடற்கரை ஓரம் தென்படும் கிரேட் பேரியர் ரீப் என்பதாகும் என்றும் அவர் சொல்லி உள்ளார்.

ஜெய் ஸ்ரீஆஞ்சநேயர். ஜெய் ஸ்ரீராம்.

40 Comments:

  • கலக்கறே சந்துரூ!

    (கயமை நம்பர் 1)

    By at 10/12/2007 9:13 PM  

  • ராம் ராம் ராம் ராம் ராம் ராம்

    By at 10/12/2007 9:58 PM  

  • அவுஸ்திரேலியர்களுக்கு ராமாயணம் கற்றுத்தர விருக்கும் இந்து மதத்தின் தன்னிகரில்லாத் தலைவர் ஸ்ரீவேதாந்தி வாழ்க!!!!!!!!

    ஜெய் ஸ்ரீஆஞ்சநேயர். ஜெய் ஸ்ரீராம்.
    ஜெய் ஸ்ரீஆஞ்சநேயர். ஜெய் ஸ்ரீராம்.
    ஜெய் ஸ்ரீஆஞ்சநேயர். ஜெய் ஸ்ரீராம்.
    ஜெய் ஸ்ரீஆஞ்சநேயர். ஜெய் ஸ்ரீராம்.

    By at 10/12/2007 10:32 PM  

  • This comment has been removed by the author.

    By at 10/12/2007 10:35 PM  

  • kasi arumugam - காசி அவர்களே,

    வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றிகள் பல.

    By at 10/12/2007 10:37 PM  

  • முரளி கண்ணன் அவர்களே,

    வருகைக்கு நன்றி. ஜெய் ஸ்ரீராம்.

    By at 10/12/2007 10:37 PM  

  • ஜெகதீசன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    முதலில் லக்கிலுக் முயன்றார். இப்போது நீங்கள் என் பதிவினை கைப்பற்ற முயற்சி எடுப்பதாக தெரிகின்றது. ஸ்ரீராமர் துணை இருக்கும் வரை எனக்கு பிரச்சனை இல்லை. ஜெய் ஸ்ரீராம்.

    By at 10/12/2007 11:05 PM  

  • //
    ஜெகதீசன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    முதலில் லக்கிலுக் முயன்றார். இப்போது நீங்கள் என் பதிவினை கைப்பற்ற முயற்சி எடுப்பதாக தெரிகின்றது. ஸ்ரீராமர் துணை இருக்கும் வரை எனக்கு பிரச்சனை இல்லை. ஜெய் ஸ்ரீராம்.
    //

    இலைக்காரரே,
    ஸ்ரீராமரின் அருள் பெற்ற இந்தப் பதிவை யாராலும் கைப்பற்ற முடியுமா என்ன?

    பின்னூட்டங்களுக்கு பதில் தர உங்களுக்கு நேரமில்லை என்பதால் இந்தச் சிறுவன் உங்களுக்கு உதவுகிறேன். ஸ்ரீராமருக்கு அனில் உதவியது போல...(சில நாட்களுக்கு முன் ஸ்ரீராமர் என் கனவில் வந்து உங்கள் பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு பதில் தருமாறு கட்டளையிட்டுள்ளார்... அவர் கட்டளையை மீற முடியுமா???).
    ஜெய் ஸ்ரீராம்.ஜெய் ஸ்ரீராம்.ஜெய் ஸ்ரீராம்.

    By at 10/12/2007 11:44 PM  

  • //ஸ்ரீராமர் அவுஸ்திரேலியாவிற்கு வனவாசம் செல்லும் வழியில் குறுக்கிட்ட சமுத்திரங்களை கடக்க அமைத்த பாலம்தான் அவுஸ்திரேலிய கடற்கரை ஓரம் தென்படும் கிரேட் பேரியர் ரீப் என்பதாகும் என்றும் அவர் சொல்லி உள்ளார்.ஜெய் ஸ்ரீஆஞ்சநேயர். ஜெய் ஸ்ரீராம்.//

    பொருட்குற்றம் உள்ளது யுவரானர். இந்த உணமையை முன்பே அறிந்ததால் தான் கிரேட் பேரியர் ரீப்பில் மீன் பிடிக்கக்கூடத தடை உள்ளது. மேலும் அது யுனெஸ்கோவின் இயற்கை புராதனச் சின்னமாகவும் பாதுகாக்கப்பட்டு வருகிற்து.

    click here

    By at 10/13/2007 12:23 AM  

  • பின்னூட்ட அனுமார்த்தனம்

    By at 10/13/2007 12:23 AM  

  • ஜெகதீசன் அவர்களே,

    வருகைக்கும், உதவிக்கும் நன்றி. அணில் என்றீர்கள். முதுகில் கோடு வந்துவிட போகிறது. ஜாக்கிரதையாக இருக்கவும். ஜெய் ஸ்ரீராம்.

    By at 10/13/2007 12:30 AM  

  • pot"tea" kadai அவர்களே,

    வருகைக்கு நன்றி. என் பதிவில் பொருட் குற்றமா? உங்களின் பின்னூட்டத்தில்தான் குற்றம். கிரேட் பேரியர் ரீப் ஸ்ரீராமர் எழுப்பிய பாலம் என்கின்றேன் நான். நீங்களோ அது இயற்கை என்று சொல்கின்றீர்கள். நீங்கள் அவுஸ்திரேலியாவில் இருப்பதால் உங்களின் மீதும் வழக்கு வரலாம்.

    By at 10/13/2007 12:32 AM  

  • ஸ்ரீராமர் எழுப்பிய கிரேட் பேரியர் ரீப் சேதுவைப் பாதுகாக்கும் அவுஸ்திரேலிய அரசைப் பார்த்தாவது ராமர் சேதுவை இடிக்க நினைக்கும் இந்திய அரசு திருந்த வேண்டாமா???
    ஸ்ரீராமர் விரைவில் இவர்களுக்கு நல்ல புத்தியைத் தருவார் என நம்புவோம்....

    //
    வருகைக்கும், உதவிக்கும் நன்றி. அணில் என்றீர்கள். முதுகில் கோடு வந்துவிட போகிறது. ஜாக்கிரதையாக இருக்கவும்.
    //
    ஸ்ரீராமர் இருக்கும்வரை என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.

    By at 10/13/2007 12:56 AM  

  • //. நீங்கள் அவுஸ்திரேலியாவில் இருப்பதால் உங்களின் மீதும் வழக்கு வரலாம்.//

    அடுத்த வருடம் போடச் சொல்லுங்கள். வருட இறுதியில் நிறைய வேலைகள் உள்ளது.

    By at 10/13/2007 1:48 AM  

  • தலித்பான் உங்க அனைவருக்கும் வணக்கம் சொல்றாருங்க.

    By at 10/13/2007 1:51 AM  

  • //முதுகில் கோடு வந்துவிட போகிறது. ஜாக்கிரதையாக இருக்கவும். ஜெய் ஸ்ரீராம்.//

    இதில் ஜாக்கிரதை எதுக்கு, 'முக்கோட்டானந்தாஜி' என்று ஆசிரமம் தொடங்க ஸ்ரீராமர்பிரானே கட்டளையிட்டதாக எண்ணிக்கொள்ள வேண்டியதுதானே! சட்டையைக் கழட்டி, கண்ணாடியொன்றைப் பின்னால் வைத்து பத்மாசனத்தில் அமர்ந்து தீபாவளிக்குள் தொடங்கினால் நல்ல வசூலும் பார்க்கலாம்!

    By at 10/13/2007 2:22 AM  

  • ஜெகதீசன் அவர்களே,

    வருகைக்கு நன்றி. ஜெய் ஸ்ரீராம்.

    By at 10/13/2007 2:41 AM  

  • pot"tea" kadai அவர்களே,

    வருகைக்கு நன்றி. ஸ்ரீமான் சுவாமியிடம் உங்களின் விருப்பத்தை தெரிவிக்க ஆவன செய்கின்றேன்.

    By at 10/13/2007 2:42 AM  

  • தலித்பான் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    By at 10/13/2007 2:43 AM  

  • Kasi Arumugam - காசி அவர்களே,

    வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி. ஆசிரமத்தை குளிர்ச்சியாக இருக்கும் கோவை பகுதியில் அமைக்கலாம்தானே.

    ஜெய் ஸ்ரீராம். ஜெய் 'முக்கோட்டானந்தாஜி'.

    By at 10/13/2007 2:45 AM  

  • பின்னூட்ட கும்மி - 1

    By at 10/13/2007 2:58 AM  

  • லக்கிலுக் அவர்களே,

    வருகைக்கு நன்றி. உங்களின் சீரியசான பதிவு வலைஉலக வாரியாரின் பதிவு போல நீளமாக இருக்கின்றது.

    By at 10/13/2007 3:07 AM  

  • ஸ்ரீலஸ்ரீ முக்கோட்டானந்தாஜி கோவைப்பகுதியில் பாதம் பதிக்க அவன் அனுக்ரஹம் இருந்தால் மானிடப்பதர்கள் நாமெல்லாம் அதைத் தடுக்க இயலுமா இலைக்காரரே? எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்!

    By at 10/13/2007 4:17 AM  

  • //வருகைக்கு நன்றி. உங்களின் சீரியசான பதிவு வலைஉலக வாரியாரின் பதிவு போல நீளமாக இருக்கின்றது.//

    என் பதிவுக்கு வருகை தந்து சிறப்பித்தமைக்கு நன்றி இலைக்காரன் அவர்களே!

    BTW, யார் அந்த வாரியார்?

    பின்னூட்ட கும்மி-2

    By at 10/13/2007 4:51 AM  

  • kasi arumugam - காசி அவர்களே,

    வருகைக்கு நன்றி. நீங்கள் சொல்வது சரிதான். அவன் இன்றி ஒர் அணுவும் அசையாது.

    By at 10/13/2007 5:58 AM  

  • லக்கிலுக் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    வலைஉலக வாரியாரை தெரியாதா? அவரின் இன்னொரு நாமம் உண்மைத் தமிழன் ஆகும்.

    By at 10/13/2007 5:59 AM  

  • மிகவும் ரசித்தேன்..!!!!

    By at 10/13/2007 9:25 AM  

  • செந்தழல் ரவி அவர்களே,

    வருகைக்கு நன்றி. பாராட்டியதற்கு மிக்க நன்றி.

    By at 10/13/2007 8:19 PM  

  • //மேல்படிப்பிற்காக பல கோடி மாணவர்கள் நம் நாட்டிற்கு ஆண்டுதோறும் வருகை தருகின்றனர்.//

    என்ன கொடுமையிது....இது கொஞ்சம் ஓவரா தெரியலை!

    By at 10/13/2007 10:27 PM  

  • //ஆனால் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வசித்து வந்த தமிழர் திருமகனான ஸ்ரீராமரின் வரலாறு ஆதாரபூர்வமாக பதிவு செய்யபட்டு இருக்கிறது. அந்த நிகழ்வுகளை பற்றி பாரதத்தில் மட்டும் அல்லாமல் கிழக்கு திசைகளில் உள்ள பல நாடுகளிலும் ஆய்வுகள் செய்யபட்டு ஆதாரபூர்வமாக நிரூபிக்கபட்டுவிட்டன//.

    சரியாக சொன்னீர்கள்.இந்த செய்தியையும் பாருங்கள்
    http://newaryan.blogspot.com/2007/10/blog-post_3744.html

    By at 10/13/2007 11:29 PM  

  • paisapower அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    By at 10/13/2007 11:29 PM  

  • சாணக்கியன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    By at 10/14/2007 12:10 AM  

  • நான் இதற்கு முன் வெளியிட்ட பின்னூட்டத்தையும் இந்தப் பின்னூட்டத்தையும் விரைவில் வெளியிடா விட்டால் உங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப் படும்...

    By at 10/14/2007 8:10 PM  

  • ஜெகதீசன் அவர்களே,

    வருகைக்கு நன்றி. உங்களின் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி. மற்ற இரண்டு பின்னூட்டங்களை வெளியிடாமைக்கு வருந்துகிறேன். உங்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்று நம்புகின்றேன்.

    By at 10/14/2007 11:02 PM  

  • எனது ஆதரவு உங்களுக்குத் தொடரும்..
    ஆனால் உங்களை எதிர்த்து போராட்டங்களும் நடத்துவேன்..

    By at 10/14/2007 11:06 PM  

  • ஜெகதீசன் அவர்களே,

    வருகைக்கு நன்றி. உங்களின் ஆதரவிற்கும் நன்றி. போராட்டம் எங்கே என்பதை முன்கூட்டியே தகவல் அளித்தால் அம்மா டி.வி. நிருபர்களை அனுப்ப வசதியாக இருக்கும்.

    By at 10/14/2007 11:44 PM  

  • ஹாஹா.... சூப்பரு.... :))

    By at 10/15/2007 12:49 AM  

  • இராம்/raam அவர்களே,

    வருகைக்கு நன்றி. உங்களின் வருகை ஸ்ரீராமரே என் பதிவிற்கு வந்தது போல் உள்ளது. ஜெய் ஸ்ரீராம்.

    By at 10/17/2007 1:22 AM  

  • //ராமாயணம் தெரியாத அவுஸ்திரேலியர்கள்//

    எங்களது அம்மா தமிழ்நாட்டை ஆண்டபோதே அவுஸ்திரேலியாவை இந்தியாவின் ஒரு மாநிலமாக அறிவிக்காததின் பலனை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

    இருந்தாலும் பரவாயில்லை. இராம பகவான் இந்த முறை தங்கத்தாரகை தீர்க்கதரிசியை மன்னித்து விடுவார்.

    இராமர் பாலத்தை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் டி.ஆர்.பாலு மற்றும் கொலைஞர் ஆட்சி இராம பகவானின் கோபத்திற்கு ஆளான இவர்களின் ஆட்சி இன்னும் சீக்கிரத்தில் கவிழ்ந்ததும் அம்மா ஆட்சியை மறுபடியும் பிடித்து சென்ற முறை மறந்துபோன அவுஸ்திரேலியாவை இந்த முறை கட்டாயம் இந்தியாவின் இன்னொரு மாநிலமா இணைத்து அறிவித்து இராம மதமான ஹிந்து மதத்தை அகிலம் முழுதும் பரவச்செய்வார்.

    ஸ்ரீராம ஜெயம்!

    By at 10/17/2007 2:59 AM  

  • மாசிலா அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    By at 10/17/2007 5:47 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za