அம்மான்னா சும்மாவா?

Tuesday, October 16, 2007

5 பவுனுக்கு விலைபோன சூப்பர் ஸ்டார்

ஹிந்துஸ்தானத்தில் பலவிதமான கலைதுறை வல்லுனர்கள் இருக்கின்றனர். அவர்களை பாராட்டி ஊக்கபடுத்துவதற்காக அரசாங்கம் பல விருதுகளை அவர்களுக்கு வழங்கி கவுரவிக்கும். நல்ல பயிர்களின் இடையே சில சமயம் மோசமான புற்களும் முளைப்பது போல தகுதி இல்லா சிலருக்கு நல்ல நடிகர் விருது கிடைப்பது உண்டு. அதுபோல இம்முறை போர்வைக்குள் புகுந்து கொண்டு இரட்டை அர்த்த வசனம் பேசியவருக்கு சிறந்த நடிகர் பட்டம் கொலைஞரால் அளிக்கபட்டு உள்ளது.

விருது வழங்கும் விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் உதித்த வார்த்தைகளை பாருங்கள்.

ஒரு இந்திய குடிமகன் என்ற முறையில் நான் இங்கே ஒரு விஷயத்தை பேச விரும்புகிறேன். யாரும் தப்பாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

சேது சமுத்திர திட்டம் பற்றி பலவிதமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அதனால் லாபமாக இருக்குமா, ஆழம் இருக்குமா? என்றெல்லாம் கேட்கிறார்கள். செண்டிமெண்ட் ஆக ஒரு விஷயம் பூதாகரமாக பேசப்படுகிறது. அதன் சீரியஸ்னஸ் இன்னும் தமிழ்நாட்டுக்கு தெரியவில்லை. வட மாநிலங்களில் உள்ளவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த விஷயத்தை ஊதி, நெருப்பு மூட்டி, குளிர்காயப்பார்க்கிறார்கள். நமக்கு காரியம் நடக்கணும். வட இந்தியாவில் உள்ள தலைவர்கள் எல்லோரும் கலைஞரின் நண்பர்கள்தான். அவர்களிடம் பேசி, கலைஞர் இதற்கு ஒரு நல்ல தீர்வுகாண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


இந்த நடிகர் ஒரு சிறந்த ஆன்மீகவாதியாக கருதபடுபவர். 2000 ஆண்டுகளுக்கு முன் பிறந்த ஸ்ரீ பாபாஜியை இமயமலையில் சந்திப்பவர், அவருடன் நடந்து செல்பவர் என்று பல்வேறு செய்திகள் பத்திரிக்கைகளில் வந்துள்ளது. இப்படி ஆன்மீகவாதியாக விளங்கும் ஒருவர் சேதுசமுத்திர திட்டம் என்று சொல்லலாமா. ஸ்ரீராம சேது என்று சொல்வதில் என்ன தயக்கம்?

இந்த விஷயத்தை ஊதி, குளிர் காய நினைக்கின்றார்களாம். என்ன ஆணவம் பிடித்த பேச்சு. உலகம் எங்கும் நிறைந்து இருக்கும் ஸ்ரீராம பக்தர்கள் ஸ்ரீராம சேதுவை காப்பதற்காக தங்கள் உயிரையும் கொடுக்க இருக்கின்றனர். அப்படி இருக்கையில் இவர் இப்படி பேசலாமா?. மேலும் நமக்கு காரியம் நடக்கணும் என்று உளறி உள்ளார். காரியம் நடக்கணும் என்றால் ஸ்ரீராம சேதுவை இடிக்க வேண்டுமே. இடித்து விடலாமா?

இவர் அரசியல் தெரியாத சூன்யம் என்று ஏற்கனவே நிரூபணம் ஆகிவிட்டது. இப்போது ஆன்மீகமும் தெரியாத முழு ஞானசூன்யம் என்பதை இவர் வாயாலே நிரூபித்து விட்டார். ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் கொடுத்த ரசிகனை பற்றி பாடிய ரஜினி கேவலம் 5 பவுனுக்காக ஸ்ரீராம சேதுவை இடிக்கலாம் என்று பேசி இருப்பது 80 கோடி ஹிந்துக்களின் மனத்தை புண்படுத்திவிட்டது. உலகம் எங்கும் இருக்கும் ஹிந்துக்கள் அனைவரும் இந்த போலி ஆன்மீகவாதிக்கு நல்ல புத்தியை அளிக்க ஸ்ரீராமரிடம் வேண்டுவோம்.

ஸ்ரீராம சேதுவை காப்போம். போலி ஆன்மீகவாதிகளை களை எடுப்போம்.

31 Comments:

 • பாபா படம் தோல்வி அடைந்த போது உண்மையான மனிதனாக மாறிய ரஜினி, சிவாஜி படம் வெற்றி அடைந்தவுடன் வெற்றி அவரது கண்ணை மறைக்கிறது. புகழின் உச்சியில் தலை கால் தெரியாமல் ஆடுகிறார். அஷ்ட்ட லட்சுமி அனனை ஜெயலலைதாவை மீண்டும் 1008 போற்றி போட்டு பொது கூட்டத்தில் வாழ்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை தோழரே.

  By at 10/16/2007 10:50 PM  

 • //அதன் சீரியஸ்னஸ் இன்னும் தமிழ்நாட்டுக்கு தெரியவில்லை. //

  தமிழ் நாடு கொந்தளிக்கும் எரிமலையாக இந்த பிரச்சனையில் இருப்பது Superstarக்கு தெரியவில்லை போலும்.

  By at 10/16/2007 10:55 PM  

 • :))))))))))))

  By at 10/16/2007 10:57 PM  

 • சாணக்கியன் அவர்களே,

  வருகைக்கு நன்றி. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் அம்மாவை தைரிய லட்சுமி என்று பாராட்டி காலில் விழுந்துவிட்டார். எனவே அந்த விவகாரத்தை தோண்ட வேண்டாம்.

  By at 10/16/2007 10:58 PM  

 • செந்தழல் ரவி அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  By at 10/16/2007 11:24 PM  

 • நல்ல பதிவு லக்கிலுக்

  By at 10/16/2007 11:45 PM  

 • LuckyLook = Ilaikaran

  Lucky look and Ilaikaaran are one and the same :)
  but please tell whom you are supporitng ? kalainjar or jayalalitha?

  By at 10/17/2007 12:23 AM  

 • சரியான பச்சோந்தி வாழ்க்கை ரஜினி போன்ற சந்தர்ப்பவாத மனிதர்களை இந்த ராமர் பூமி இன்னும் எவ்வளவு காலம்தான் தாங்கிக்கொள்ள போகிறதோ?
  அட ராமா! நீ எங்கே போனாய்? இந்த கயவர்களிடம் இருந்து எங்களை காப்பாற்று! எங்களது தானகத் தலைவி, தங்கத்தாரகை, மின்மினி மேனி அழகு ஜெயாவை மறுபடியும் ஆட்சிக்கு கொண்டு வா! நான் சாராயமும் கள்ளும் வைத்து படைக்கிறேன்.

  ஓடி வா ராமா, ஓடி வா!

  By at 10/17/2007 12:26 AM  

 • முரளி கண்ணன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  கஷ்டபட்டு பதிவுகள் எழுதுவது இலைக்காரன் ஆகிய நான். ஆனால் ஏன் எல்லோரும் லக்கிலுக்தான் எழுதுகிறார் என்று சொல்கின்றீர்கள். தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் கொலைஞரின் பூத் ஏஜண்ட் ஆன லக்கிலுக் நான் இல்லை. இதை பற்றி சில பதிவுகளும் எழுதி உள்ளேன். அவற்றை படியுங்கள்.

  By at 10/17/2007 12:28 AM  

 • கொலைஞரே, எங்கள் ரஜினிக்கு குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து பிள்ளைகளை சாக்கு பையில் போட்டு திருடிக்கொண்டு போகும் பிள்ளை திருடர்கள் கணக்காக, ஒன்றும் அறியா குழந்தை மனது ரஜினி மனோ வசியம் செய்து உங்கள் சாய வைத்து விட்டதாக நினைத்து கொள்ளாதீர்கள். குழந்தை ரஜினி என்றாவதாக இருந்தாலும் தன் தாய் இல்லத்திற்கு திரும்பி வந்தே தீரும். தமிழக தாய்குலத்தின் ஒரே அடையாளமாக விளங்கும் எங்கள் அம்மாவின் மனதை நோகடித்த பாவத்திற்கு ராமர் உங்களை தண்டிக்காமல் விடமாட்டார்.
  ஜெய் ஸ்ரீராம்!
  ஆமேன்.

  By at 10/17/2007 12:32 AM  

 • இந்த உலகத்தில் உண்மைக்கு நியாயமே கிடையாதா?

  ராமா, எங்களை இந்த கயவர்களிடம் இருந்து காப்பாற்றுவாயா?

  அம்மாவின் ஆட்சி மீண்டும் மலர அருள் புரிவாயா?

  கொலைஞரே, உங்களை எங்கள் சாபங்கள் சும்மா விடாது.

  ராமர் உங்களை மேலிருந்து கவனித்துக் கொண்டே இருக்கிறார்.

  அவர் உங்களையும் உங்களை சுற்றி இருக்கும் அனைத்து கும்பலையும் சுற்றி வட்டமிட்டு கொண்டே இருக்கிறார். நீங்கள் அவருடைய பாலத்தை அழிக்க நடத்தும் சதிகளை அவர் கவனித்து கொண்டுதான் வருகிறார். கடைசி முடிவு எங்கள் பகவான் ராமபிரானனுடையதே என்பதை மறந்துவிடாதீர்கள்.

  ஹிந்து மக்களை விழித்தெழுங்கள்!
  கிளர்ச்சி செய்யுங்கள். ராமருக்கு நிறைய பூஜைகளை செய்யுங்கள். யாகம் வளர்த்து அனைத்து திராவிட திம்மிகளையும் ஓரம் கட்டுங்கள்!

  ஜெய ஜெய ஸ்ரீராம நாமம் வாழ்க!

  By at 10/17/2007 12:40 AM  

 • //"5 பவுனுக்கு விலைபோன சூப்பர் ஸ்டார்"//

  அந்தோ பரிதாபமே!

  ஏய் ரஜினியே! எங்கம்மாவிடம் கேட்டிருப்படாதா? ஆயிரம் கணக்கில் உனக்கு தங்கப் பரிசுகளை அள்ளி அள்ளி இரைத்திருப்பாரே! ஏன் ரஜினி உன் அம்மாவிற்கு இப்படி துரோகம் செய்தாய்?

  By at 10/17/2007 12:43 AM  

 • அகில இந்திய அரசியல் நிலவரங்களை அதிலும் முக்கியமாக, வட மாநில நிலவரங்களை சரிபட புரிந்து வைத்திருக்கும் ரஜினி போன்ற இராஜ தந்திரிகளை சாதாரன பவுன் பரிசுகளை காட்டி வசியம் செய்து தன் பக்கம் இழுத்துக்கொண்ட திராவிட குஞ்சுகளை அம்மா சும்மா விடமாட்டார். இது சத்தியம்.
  ஜெய் ஸ்ரீராம்.

  By at 10/17/2007 12:46 AM  

 • நேற்று எங்கள் குரு சாயி பாபாவை உன் வலையில் விழ வைத்தாய், இன்று எங்களைது குருவான ரஜினியையும் கவிழ்த்துவிட்டாயா கொலைஞரே? இது ரொம்பவும் அநியாயம். தமிழம் பொறுக்காது. நமது தமிழர்களின் பெருமைக்கே களங்கம் விளைவித்துவீட்டீர் கொலைஞரே!

  ராமர் உங்களை தண்டிப்பார்!

  By at 10/17/2007 12:49 AM  

 • krishnan அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  ஆஹா!!! இன்னோருத்தர் கிளம்பிட்டாருப்பா. எத்தனை பேர்தான் இப்படி நான்தான் லக்கிலுக் என்று சொல்வீர்களோ.

  இலைக்காரன் ஆகிய நான் அம்மாவின் புகழ் பாடும் ஒர் சிற்றிலை. தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் கொலைஞரின் பூத் ஏஜண்ட் லக்கிலுக். எப்படி இருவரும் ஒன்றாக முடியும்?

  By at 10/17/2007 1:30 AM  

 • மாசிலா அவர்களே,

  வருகைக்கு நன்றி. ஒரே அடியாக பல பின்னூட்டங்கள் வந்து இருக்கின்றன. இதை வைத்தே ஒரு பதிவு எழுதலாம் போல் இருக்கின்றது.

  By at 10/17/2007 1:30 AM  

 • rajini-i-திட்டி ஒருத்தற் எழுதி இருகறதை படிச்சேன்
  test the link

  http://rasigan111.blogspot.com/2007/10/blog-post_9724.html

  By at 10/17/2007 1:49 AM  

 • பிரியமுடன் பிரித்தி அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  By at 10/17/2007 2:11 AM  

 • //ஸ்ரீராம சேது என்று சொல்வதில் என்ன தயக்கம்?//

  ராமர் பாலம் கேள்விப்பட்டிருக்கின்றேன்..

  சேது சமுத்திரத்திட்டம் கேள்விப்பட்டிருக்கின்றேன்..

  இதுவென்ன "ஸ்ரீராம சேது" புதிதாக இருக்கிறதே..? யார் வைத்தது..? புதிய திட்டமா?

  //ஸ்ரீராம பக்தர்கள் ஸ்ரீராம சேதுவை காப்பதற்காக தங்கள் உயிரையும் கொடுக்க இருக்கின்றனர்//

  ஆமாம் உண்மைதான் நண்பா...அயோத்தியில் 1992 ம் மாதம் டிசம்பர் 26ம் தேதி அப்படிப்பட்ட பக்கதர்கள் பலர் இடிக்கச் செல்லும்பொழுது இடிபாடுகளுக்குள் சிக்கி பலருக்கு காயம் ஏற்பட்டது உங்களின் தியாகங்கள் பாராட்டுக்குரியதுதான்

  By at 10/17/2007 2:49 AM  

 • //மாசிலா,வருகைக்கு நன்றி. ஒரே அடியாக பல பின்னூட்டங்கள் வந்து இருக்கின்றன. இதை வைத்தே ஒரு பதிவு எழுதலாம் போல் இருக்கின்றது.//

  என் மனம் பொறுக்கவில்லை இலைக்கார சகோதரரே! என்ன அநியாயம் பாருங்கள் இந்த கொலைஞர் செய்யும் சூழ்ச்சிகளை. இதையும் பார்த்துக்கொண்டு சும்மா இருந்தால், நாம் அம்மாவின் பெயரை சொல்ல கூட இலாயக்கு இல்லாத மனிதர்கள்.

  எங்கள் அம்மாவின் மானத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் யாரையும் கண்டிக்க வேண்டியது ஒவ்வொரு ஹிந்துக்களின் கடமை. இதுதான் ராம பூமியில் நாம் வாழ்வதற்கு காட்டும் நன்றிக்கடன்.

  ஸ்ரீ ராம ஜெயம்!

  By at 10/17/2007 3:08 AM  

 • //rajini-i-திட்டி ஒருத்தற் எழுதி இருகறதை படிச்சேன்
  By பிரியமுடன் பிரித்தி//

  இனிமேல் ரஜினியை திட்டி யார் எழுதினாலும் அவர்கள் எங்கள் நன்பர்களே! இராம பகவான் பகைவர்கள் அவர்களை தண்டிப்பார். தைரியமுடன் இருங்கள் பிரியமுடன் பிரித்தி. அம்மா வாழ்க. அவர் புகழ் வாழ்க. வருங்கால இந்திய பிரதமர் அம்மா வாழ்க. ஐக்கிய நாடுகள் சபை தலைவராகும் தகுதி படைத்த அம்மா வாழ்க.

  திராவிர திம்மிகள் ஒழிக!

  ஸ்ரீ ராம ஜெயம்!

  By at 10/17/2007 3:15 AM  

 • 80 கோடி ஹிந்துக்களே! ஒன்று கூடுங்கள். கட்சி மாறிய பச்சோந்தி ரஜினி எதிர்த்து போரிட வாருங்கள்.

  இது போன்ற திம்மிகளை ஒழிக்க, போர் ஒன்றே இறுதி தீர்ப்பு. எடுங்கள் உங்கள் திரிசூளங்களை. கிளம்புங்கள் கயவர்களை அழிக்க!

  ராம பகவான் நமக்கு துணை இருப்பார்.

  அம்மா நமக்கு கருணை காட்டுவார். வாழ்க ஹிந்து சாம்ராம்ஜியம்!!!

  By at 10/17/2007 3:20 AM  

 • நிலவு நண்பன் அவர்களே,

  வருகைக்கு நன்றி. ஸ்ரீராம சேதுவை பற்றி தெரியாதா. அதைதான் இந்த திம்மிக்கள் ஆதம் பாலம் என்று அழைக்கின்றனர். ஆங்கில பத்திரிக்கைகளை படியுங்கள்.ரீடிப், ஐபின் போன்ற தளங்களை படியுங்கள்.

  By at 10/17/2007 5:50 AM  

 • மாசிலா அவர்களே,

  வருகைக்கு நன்றி. புல் பார்மில் இருப்பது தெரிகின்றது. தமிழச்சி அவர்களுக்கு நீங்கள் என் பதிவில் பின்னூட்டம் இடுவது தெரியுமா?

  By at 10/17/2007 5:50 AM  

 • //மாசிலா said...
  80 கோடி ஹிந்துக்களே! ஒன்று கூடுங்கள். கட்சி மாறிய பச்சோந்தி ரஜினி எதிர்த்து போரிட வாருங்கள்.

  இது போன்ற திம்மிகளை ஒழிக்க, போர் ஒன்றே இறுதி தீர்ப்பு. எடுங்கள் உங்கள் திரிசூளங்களை. கிளம்புங்கள் கயவர்களை அழிக்க! //

  இது வன்முறையைத் தூண்டுவது போல இல்லையா..?

  அது என்ன மாசிலா ஆனா ஊனான்னா திரிகூலங்களை எடுக்குறீங்க..? குஜராத்திற்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு கிளம்பிட்டீங்களா?

  இராமருக்கு அமைதிதானே பிடிக்கும்

  By at 10/17/2007 6:44 AM  

 • வருத்தப்படாதீர்கள். இந்த திம்மியின் ஆட்சி முடிந்து அம்மாவின்
  ராஜ்யம் வரும்போது மீண்டும் ப்ளேட்டை மாத்துவார்.

  By at 10/17/2007 8:24 AM  

 • ராம பக்தர் ரஜினி அவர்களைப் பற்றி அவதூறாகப் பேசும் இந்த இடுகைக்கு ஆதரவு தராதே என ஸ்ரீராமர் என் கனவில் வந்து கட்டளை இட்டுள்ளார். எனவே இப் பதிவிற்கு ஆதரவளிக்க முடியாததற்கு வருந்துகிறேன்.

  By at 10/17/2007 8:14 PM  

 • நிலவு நண்பன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  திரிசூலத்தை எடுப்பது தவறா?. திரிசூலத்தின் ஒரு முனை கிருத்துவ மிஷினரிகளையும், ஒரு முனை ஜிகாதிகளையும், ஒரு முனை திம்மிக்களையும் தாக்க என்று ஸ்ரீமான் தொக்காடியா எங்களுக்கு அறிவுரை கூறி உள்ளார். 80 கோடி ஹிந்துக்களும் அவரின் வேதவாக்கிற்கு கட்டுபட்டவர்கள்.

  By at 10/17/2007 8:44 PM  

 • aathirai அவர்களே,

  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  By at 10/17/2007 8:45 PM  

 • ஜெகதீசன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  ஸ்ரீராமர் பக்தராக இருந்த சூப்பர் ஸ்டார் ஈ.வெ.ராவின் திரைபடத்தை பார்த்த பிறகு ராமசாமி பக்தன் ஆகிவிட்டார் என்று நினைக்கின்றேன். அதனால்தான் இப்படி உளறி உள்ளார் என்று நம்புகின்றேன்.

  By at 10/17/2007 8:46 PM  

 • Hi Mr.Ilaikaran,
  I am a overseas PIO living in South east asia.
  I am happy that there is some one like you who raises the voices for the Hindus.
  I wish that your voice will be raised against the "terror Monks" who want to destroy the Hindus and hindu temples in srilanka.

  By at 10/29/2007 10:11 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za