அம்மான்னா சும்மாவா?

Friday, October 19, 2007

அம்மாவின் தீர்க்கதரிசனம்

ஹிந்துஸ்தானத்தின் பல லட்சம் ஆண்டு கால வரலாற்றில் பல ஆண்டுகள் பொற்கால ஆட்சி என்று குறிப்பிடபடுகின்றது. அவற்றில் வாழும் வரலாறாய் நம் முன்னே காட்சி அளித்தவை ஸ்ரீமான் மோடி அவர்களின் ராஜதர்ம ஆட்சியும், புரட்சிதலைவி அம்மாவின் தாயுள்ள ஆட்சியும் ஆகும்.

அம்மா அவர்கள் நாட்டு மக்களின் நலன் கருதி தாயுள்ளத்தோடு பொது நல சேவை ஆற்றி வந்தார். அவரின் ஆட்சிக்கு இடர் விளைவிக்க எண்ணிய சிலரை செலக்டிவ் அம்னீசியா என்ற வார்த்தையின் மூலம் தாக்கி அழித்தார் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இந்த அஸ்திரத்தை பாரத சரித்திரத்தில் முதன் முதலாக பிரயோகித்தவர் அம்மாதான். அவருக்கு எத்தகயை தீர்க்கதரிசனம் இருந்தது என்று நேற்று நடந்த நிகழ்வுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ரோம ராஜ்ஜியம் நடத்தி வரும் மெய்னோவின் முக்கிய தலையாட்டி பொம்மையான மன்மோகன் சிங்கை ஹிந்துஸ்தானத்தின் பாரம்பரிய கட்சியான பா.ஜ.க கடுமையாக தாக்கி உள்ளது. அதற்கு அவர்கள் பயன்படுத்திய அஸ்திரம் செலக்டிவ் அம்னீசியா. அம்மா அவர்கள் எடுத்தாண்ட அந்த அஸ்திரத்தை இன்று பா.ஜ.கவும் உபயோகபடுத்தி உள்ளதன் மூலம் அம்மாவின் பெருமையை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

வாழ்க அம்மா. வீழ்க திம்மிக்கள்.

5 Comments:

 • எனக்கு வேலை அதிகமாக இருப்பதால் இந்தப் பதிவிலும் என்னால் பின்னூட்டங்கள் இடமுடியாது எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.....
  அம்மா நாமம் வாழ்க!!!!

  By at 10/19/2007 9:10 PM  

 • அம்மாவின் அறிவியல் மற்றும் மருத்துவ அறிவை கண்டு அகில உலகமே அதிசயிக்கிறது

  By at 10/19/2007 9:33 PM  

 • ஜெகதீசன் அவர்களே,

  வருகைக்கும், ஆதரவிற்கும் நன்றி.

  By at 10/19/2007 10:28 PM  

 • சாணக்கியன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  அம்மாவின் தகுதியும், திறமையும் உலக பிரசித்தி பெற்றது. அதை கண்டு மைனாரிட்டி ஆட்சி புரியும் கயவர்கள் கலங்கி நிற்கின்றனர்.

  By at 10/19/2007 10:29 PM  

 • அம்மா நாமம் வாழ்க!!!!
  அம்மா நாமம் வாழ்க!!!!
  அம்மா நாமம் வாழ்க!!!!

  By at 10/19/2007 11:34 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za