அம்மான்னா சும்மாவா?

Saturday, October 20, 2007

மாவீரன் மோடியும் பயந்தான்கொள்ளி கருணாநிதியும்

பாரத மாதா பல மாவீரர்களயும் வீராங்கனைகளையும் பெற்று எடுத்து இருக்கின்றாள். பல லட்சம் ஆண்டு கால வரலாற்றில் ஹிந்துக்களை காக்க பல மாவீரர்கள் அவதாரம் எடுத்து உள்ளனர். அவ்வீரர்களில் முக்கியமானவர் ஸ்ரீமான் மோடி ஆவார். ஹிந்துக்களை ஜிகாதிகளிடம் இருந்து காப்பதை தன் தலையாய கடமையாக கொண்டு மோடிஸ்தானத்தில் ராஜதர்ம ஆட்சி புரிபவர் அவர்.

ஐபின் தொலைகாட்சியில் டெவில்ஸ் அட்வகேட் என்று ஒரு கேள்வி பதில் அங்கம் உள்ளது. பிரபலங்களை பேட்டி எடுத்து மடக்குவது பேட்டியாளரான கரண் தாப்பருக்கு வாடிக்கை. குதர்கமான கேள்வி கேட்பதில் அவர் மன்னர். அவரிடம் மாட்டி தவித்தவர் ஏராளம். அந்த மனிதரை சந்தித்ததில் தான் பெருமை அடையவில்லை என்று அவரின் மூக்கை முதன் முதலில் உடைத்தவர் அம்மா தான் என்பது உங்களின் நினைவில் இருக்கும் என நம்புகின்றேன்.

சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீமான் மோடி அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இசைவு தந்தார். பேட்டி துவங்கியது. கரண் தாப்பர் ஸ்ரீமான் மோடியை நோக்கி இந்த கேள்விகளை வீசினார்.

கரண் தாப்பர் : சுப்ரீம் கோர்ட் 2003ல் குஜராத் அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றது. பிறகு 2004ல் உங்களை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டு பேசியது. உங்களுக்கு கோர்ட்டிற்கும் பிரச்சனை உள்ளது போல தெரிகின்றதே?

அதற்கு சரியான பதிலடி கொடுத்தார் ஸ்ரீமான் மோடி அவர்கள். "சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் ஏதாவது குறிப்பிடபட்டு உள்ளதா" என்ற வெடியை வீசினார்.

கரண் தாப்பர்: அப்படி எதுவும் குறிப்பிடபடவில்லை. நீங்கள் சொல்வது சரிதான்.

"தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தால் அதற்கு நான் பதில் அளிப்பேன்" என்றார் மோடி.

கரண் தாப்பர்: சுப்ரீம் கோர்ட்டின் கண்டனம் ஒரு பெரிய விஷயம் இல்லையா?

யுவராஜ் சிங் மிட் விக்கெட்டில் ஸிக்சர் அடிப்பது போன்று "தீர்ப்பில் இப்படி ஏதாவது குறிப்பிடபட்டு உள்ளதா என்று சொல்லுங்கள். மக்கள் தெரிந்து கொள்ளட்டும்" என்ற ஸிக்சரை அடித்தார் ஸ்ரீமான் மோடி. அந்த அடியில் நிலை குலைந்து போனார் கரண் தாப்பர்.

உடனே பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு சிறு கலவரத்தை பற்றி கேள்விகளை வீச துவங்கினார். அந்த விஷயத்தை பற்றி நாம் எல்லோரும் அலசி, துவைத்து, காய வைத்து, அயர்ன் செய்யும் அளவிற்கு பேசி விட்டோம். அதற்கும் ஸ்ரீமான் மோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நிரூபணம் ஆகிவிட்டது. அதே நிகழ்வை பற்றி மாற்றி மாற்றி கேள்வி எழுப்பினார் கரண் தாப்பர். போடா ஜாட்டான், நீ என்ன என்னை கேள்வி கேட்பது என அரங்கத்தை விட்டு எழுந்து வீர நடை போட்டார் ஸ்ரீமான் மோடி. நாடே அதிர்ந்து விட்டது. இவ்வீர புருஷர் வாழும் காலத்தில் நாம் வாழ்கின்றோமே என்று 80 கோடி ஹிந்துக்களும் மனம் நெகிழ்ந்து போயினர்.

இந்த விஷயத்தில் கருணாநிதிக்கு என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கலாம். சமீபத்தில் மைனாரிட்டி ஆட்சி நடக்கும் தமிழகத்தில் சட்ட விரோத பந்த் ஏற்பாடு செய்யபட்டது. கயவன் கருணாநிதியும் அவனின் அல்லகைகளும் இதில் ஈடுபட்டனர். கொதித்து எழுந்த அம்மாவின் முயற்சியால் இது சட்ட விரோதம் என்று சுப்ரீம் கோர்ட் மீண்டும் ஒரு முறை அறிவித்தது. இந்த நிகழ்வுக்காக ஏன் மைனாரிட்டி அரசை கலைக்க கூடாது என்று கேள்வி எழுப்பியது. உடனே நடுங்கிய கருணாநிதி, அய்யோ நான் நீதிபதிகளை மதிப்பவன், நீதியை மதிப்பவன் என்று அலறி அடித்து கொண்டு தலைமை செயலகத்தை நோக்கி ஓடினான்.

இந்த இரு நிகழ்வுகளையும் ஒப்பிட்டு பாருங்கள். சுப்ரீம் கோர்ட் வாய் வழியே சொல்லும் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை என்று முழங்கிய வீர புருஷர் ஸ்ரீமான் மோடி எங்கே, வாய் வழி சொல்லை கேட்டு பயந்து ஓடிய கருணாநிதி எங்கே. மாவீரன் ஸ்ரீமான் மோடி மீண்டும் மோடிஸ்தானத்தின் முதல்வர் பதவியில் அமரவேண்டி 80 கோடி ஹிந்துக்களும் ஸ்ரீராமரிடம் வேண்டுவோம்.

வாழ்க மாவீரன் மோடி. வீழ்க பயந்தான்கொள்ளி திம்மி.

35 Comments:

  • //மாவீரன் ஸ்ரீமான் மோடி மீண்டும் மோடிஸ்தானத்தின் முதல்வர் பதவியில் அமரவேண்டி 80 கோடி ஹிந்துக்களும் ஸ்ரீராமரிடம் வேண்டுவோம்.//

    இலையாரே,
    அன்பு வேண்டுகோள், மோடி அவர்களுக்கு முதல்வர் ஸ்தானம் ? ... பிரதமர் ஸ்தானம் என்று மாற்றுங்கள் !
    :)

    By at 10/20/2007 9:21 PM  

  • அம்மாவின் ஆசியும் துணையும் இருக்கும் வரை மோடிக்கு தைரியம் இருக்கும்

    By at 10/20/2007 9:23 PM  

  • கோவி.கண்ணன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    தேர்தல் நடக்க இருப்பது மோடிஸ்தானத்திற்குதான். மத்திய அரசிற்கு தேர்தல் வரும்போது ஸ்ரீமான் மோடியை பிரதமர் ஆக்க முயற்சிகள் மேற்கொள்ள படும்.

    By at 10/20/2007 9:40 PM  

  • சாணக்கியன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    நீங்கள் சொல்வதும் ஒரு வகையில் சரிதான். மகா சக்தியின் துணை இருந்தால் யாருக்குதான் தைரியம் வராது.

    By at 10/20/2007 9:41 PM  

  • //
    இலையாரே,
    அன்பு வேண்டுகோள், மோடி அவர்களுக்கு முதல்வர் ஸ்தானம் ? ... பிரதமர் ஸ்தானம் என்று மாற்றுங்கள் !
    :)
    //
    ஸ்ரீமான் கோவி.கண்ணன் அவர்களே,
    எங்களால் பிரதமர் ஸ்தானத்தில் திருவாட்டி அம்மா அவர்களைத் தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியாது...

    அம்மா வழியில் நல்லாட்சி செய்யும் மோடி, மோடிஸ்தானத்தின் முதல்வர் பதவியில் மீண்டும் அமர ஸ்ரீராமர் அருள் புரிவார்...

    இதற்க்காக சிங்கை ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    வாழ்க அம்மா நாமம்...
    வாழ்க மாவீரன் மோடி...

    By at 10/20/2007 10:03 PM  

  • //
    தேர்தல் நடக்க இருப்பது மோடிஸ்தானத்திற்குதான். மத்திய அரசிற்கு தேர்தல் வரும்போது ஸ்ரீமான் மோடியை பிரதமர் ஆக்க முயற்சிகள் மேற்கொள்ள படும்.
    //
    இலைக்காரரே, உங்களின் இந்த வரிகளுக்கு என் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்...

    80 கோடி இந்துக்களும் அம்மா பிரதமராகும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கும் போது, மோடி அவர்கள் பிரதமர் ஆக முயற்சி மேற்கொள்ளப் படும் என்று கூறுவது என்ன நியாயம்?

    By at 10/20/2007 10:54 PM  

  • ஜெகதீசன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    என் மீது கோபம் கொள்ள வேண்டாம். அம்மா தமிழகத்தில் இருப்பவர்களுக்கு தாயுள்ளத்தோடு நேரடியாக சேவை செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான். அவரின் வழிகாட்டுதலோடு ஸ்ரீமான் மோடி மத்தியில் ஆட்சி புரியட்டுமே.

    By at 10/20/2007 11:10 PM  

  • ராமர் இப்போது பிசியாக இருப்பதால் நாம் 80 கோடி இந்துக்களும் முருக பெருமானை வேண்டுவோம்.

    By at 10/20/2007 11:51 PM  

  • மோசடி

    By at 10/20/2007 11:52 PM  

  • பின்னூட்ட மோசடித்தனம்

    By at 10/20/2007 11:53 PM  

  • பின்னூட்ட மோ(ச)டித்தனம்

    By at 10/20/2007 11:54 PM  

  • great அவர்களே,

    வருகைக்கும், பின்னூட்ட கயமைகளுக்கும் நன்றி.

    தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் கொலைஞரின் பூத் ஏஜண்ட்டின் சாயல் உங்களின் பின்னூட்டங்களில் தெரிகின்றது.

    By at 10/21/2007 12:16 AM  

  • அப்படியா?
    அப்படின்ன இதப் போடுங்க.

    அம்மா வாழ்க!
    அம்மா வாழ்க!!
    அம்மா வாழ்க!!!

    மோடி வாழ்க!
    மோடி வாழ்க!!
    மோடி வாழ்க!!!

    By at 10/21/2007 12:42 AM  

  • //
    என் மீது கோபம் கொள்ள வேண்டாம். அம்மா தமிழகத்தில் இருப்பவர்களுக்கு தாயுள்ளத்தோடு நேரடியாக சேவை செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான். அவரின் வழிகாட்டுதலோடு ஸ்ரீமான் மோடி மத்தியில் ஆட்சி புரியட்டுமே.
    //
    நீங்கள் இப்படி நினைக்கிறீர்கள். ஆனால் ஸ்ரீராமர் வேறுமாதிரியல்லவா நினைக்கிறார்....
    "ஜால்ரா" போடுகிறார் என்று எல்லாரும் தூற்றினாலும் அதை எல்லாம் சட்டை செய்யாமல் ராமர் சேது உட்பட எல்லா விசயங்களிலும் அம்மாவுடன் இருக்கும் இனமானத் தலைவர் வைக்கோ அவர்கள் அல்லது இல.கணேசன் ஆகியோரில் ஒருவரை முதல்வராக்கவே ஸ்ரீராமர் விரும்புகிறார்.....

    நமது சுயநலத்திற்க்காக 80கோடி இந்துக்களின் தலைவர் அம்மா அவர்களை தமிழகத்திற்குள் மட்டும் கட்டுப்படுத்தி வைக்கக் கூடாதல்லவா?

    வருங்கால பிரதமர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலுடன் தமிழகத்தில் இவர்களும், மோடிஸ்தானத்தில் மோடியும் நல்லாட்சி புரிவார்கள்....

    ஜெய் ஸ்ரீராம்!!!!!
    அம்மா நாமம் வாழ்க!!!!!

    By at 10/21/2007 1:28 AM  

  • இதை கவனித்தீர்களா
    உங்கள் மாவீரை பற்றி மற்றவரின் கருத்தை:


    http://kaartz.blogspot.com/2007/10/blog-post_20.html

    By at 10/21/2007 1:40 AM  

  • great அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    அம்மா வாழ்க.
    மோடி வாழ்க.
    ஜெய் ஸ்ரீராம்.

    By at 10/21/2007 2:13 AM  

  • ஜெகதீசன் அவர்களே,

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    ஸ்ரீராமரை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கும் வேலையின் இடையே நீண்ட பின்னூட்டம் இட்டு உற்சாக படுத்துவது மிக்க மகிழ்வை தருகின்றது.

    By at 10/21/2007 2:14 AM  

  • புதுப்பாலம் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    எல்லோருக்கும் ஒரே கருத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லையே.

    By at 10/21/2007 2:17 AM  

  • //
    புதுப்பாலம் said...
    இதை கவனித்தீர்களா
    உங்கள் மாவீரை பற்றி மற்றவரின் கருத்தை:


    http://kaartz.blogspot.com/2007/10/blog-post_20.html
    //
    புதுப்பாலம் அவர்களே,
    எந்த ஓரு செய்தியையும் அவர்களுக்கு ஆதரவாகத் திரித்து வெளியிடுவது தானே இந்தத் திம்மிகளின் வேலை. அப்பாவி இந்தியனும் அதைத் தான் செய்துள்ளார்.
    ஏன், ஸ்ரீராமர் கட்டிய சேதுவையே இயற்கை மனல் திட்டுக்கள் என்று திரித்து செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்களே...

    அப்படி என்ன சொல்லிவிட்டார் அப்பாவி இந்தியன் அவர்கள்? மோடியை "குரங்கு" என்று தானே சொல்லியுள்ளார்? இதற்காகக் கோவப்படுவத்ற்கு நாங்கள் என்ன வரலாறு தெரியாத அவுஸ்திரேலிய வீரர்களா?

    By at 10/21/2007 2:19 AM  

  • ஜெகதீசன் அவர்களே,

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    By at 10/21/2007 2:30 AM  

  • //
    ஜெகதீசன் அவர்களே,

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    ஸ்ரீராமரை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கும் வேலையின் இடையே நீண்ட பின்னூட்டம் இட்டு உற்சாக படுத்துவது மிக்க மகிழ்வை தருகின்றது.
    //
    எல்லாம் ஸ்ரீராமரின் அருள் தான்...

    By at 10/21/2007 10:34 PM  

  • ஜெகதீசன் அவர்களே,
    முதல்வராகும் தகுதி இல.கனேசன் மற்றும் வைகோ-விற்கு தான் உண்டென்று கூறுவதன் மூலம் இலைக்காரருக்கு அந்த தகுதி இல்லை என்பது போல் ஒரு மாய தோற்றத்தை உருவாக்க முயல்வதை வன்மையாக கண்டிக்கிரேன்.

    By at 10/22/2007 12:09 AM  

  • great அவர்களே,
    புரியாமல் பேசாதீர்கள்...
    அம்மா பிரதமர் ஆனதும் அவர் செய்யப் போகும் முதல் வேலையே இலைக்காரரை ராஸ்ட்டிரபதி ஆக்கப் போவது தானே?
    ஜனாதிபதி ஆகப்போகிறவரை எப்படி முதல்வர் பதவியில் நினைத்துப் பார்க்கமுடியும்?
    வருங்கால ஜனாதிபதி இலைக்காரர் வாழ்க!!!!!!

    By at 10/22/2007 12:51 AM  

  • great அவர்களே,

    வருகைக்கு நன்றி. என்னை வைத்து காமெடி எதுவும் செய்யவில்லை என்று நம்புகின்றேன். அம்மாவின் புகழ் பாடும் சிற்றிலையான நான் முதல்வரா!!!. அப்படி நடந்தால் முதல்வரின் நாற்காலியில் அம்மாவின் புனித பாதங்கள் பட்ட காலணியை வைத்துவிட்டு நான் கீழே தரையில் அமர்ந்து ஆட்சி செய்வேன் என்று ஸ்ரீராமரின் பெயரால் உறுதிமொழி எடுக்கின்றேன்.

    By at 10/22/2007 12:54 AM  

  • இல்லை இலைக்காரரே,
    எதற்கு காலணியை வைத்து ஆட்சி செய்ய வேண்டும். அவர் என்ன வன வாசமா போகிறார். பிரதமராகத் தானே போகிறார்.
    ஓ.பன்னீர் செல்வம் போல் நாற்காலியில் ஒரு ஓரமாக பதுங்கி உட்கார்ந்து கொண்டு கூட நீங்கள் ஆட்சி செய்யலாம்.

    By at 10/22/2007 1:05 AM  

  • ஜெகதீசன் அவர்களே,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நான் அம்மாவின் புகழ் பாடும் சிற்றிலையாகவே இருக்க விரும்புகின்றேன்.

    கடைசியில் நீங்களுமா? நீங்கள் எழுதிய பதிவுகளையா நான் வெளியிடுகின்றேன்? ஸ்ரீராமர் உங்களுக்கு அருள் புரியட்டும்.

    By at 10/22/2007 1:34 AM  

  • great அவர்களே,

    வருகைக்கும், ஆலோசனைக்கும் நன்றி.

    நான் ஸ்ரீராம பக்தன். ஸ்ரீராமரின் காலணிகளை வைத்து பரதன் ஆட்சி செய்தது போல நான் அம்மாவின் புனித பாதங்கள் பட்ட காலணிகளை வைத்து ஆட்சி செய்வேன்.

    By at 10/22/2007 1:37 AM  

  • //
    ஜெகதீசன் அவர்களே,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நான் அம்மாவின் புகழ் பாடும் சிற்றிலையாகவே இருக்க விரும்புகின்றேன்.

    கடைசியில் நீங்களுமா? நீங்கள் எழுதிய பதிவுகளையா நான் வெளியிடுகின்றேன்? ஸ்ரீராமர் உங்களுக்கு அருள் புரியட்டும்.
    //
    இலைக்காரரே,
    அந்தப் பின்னூட்டத்தில் "நீங்கள் லக்கிலுக்" இல்லை என்பது மட்டுமே நான் தெரிவித்தது...
    ஏதோ ஃபிராடுத்தனம் செய்து கொலைஞரின் பூத் ஏஜெண்ட் மற்ற வரிகளைச் சேர்த்துள்ளார்.
    நம் இருவருக்கு இடையில் இருக்கும் நட்பைப் பிரிப்பதற்காக நடக்கும் சூழ்ச்சி இது.. இதை நம்பவேண்டாம்.
    அவர் திருந்துவதற்காக நாம் ஸ்ரீராமரை வேண்டுவோம். ஸ்ரீராமர் அவரை மன்னிப்பாராக.

    By at 10/22/2007 1:45 AM  

  • This comment has been removed by the author.

    By at 10/22/2007 2:10 AM  

  • ஜெகதீசன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    உடனடியாக தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் கொலைஞரின் பூத் ஏஜண்ட் ஆன லக்கிலுக் பதிவில் இதை பற்றி விளக்கமாக ஒரு பின்னூட்டம் போடுங்கள்.

    By at 10/22/2007 2:19 AM  

  • great அவர்களே,

    உங்களின் ஆதரவிற்கு நன்றி.

    By at 10/22/2007 2:19 AM  

  • //
    உடனடியாக தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் கொலைஞரின் பூத் ஏஜண்ட் ஆன லக்கிலுக் பதிவில் இதை பற்றி விளக்கமாக ஒரு பின்னூட்டம் போடுங்கள்.
    //
    உங்கள் ஆலோசனைக்கு நன்றி. ஆனால் அதையும் எடிட் செய்து, வெளியிட்டு விடுவாரோ எனப் பயமாக உள்ளது.

    By at 10/22/2007 2:23 AM  

  • ஜெகதீசன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    "இலைக்காரன் எந்த பதிவிலும் பின்னூட்டம் இடுவதில்லை. மேலே இருப்பது போலி" என்று ஆணித்தரமாக வாதாடியதற்கு மிக்க நன்றி.

    By at 10/23/2007 12:26 AM  

  • //நாடே அதிர்ந்து விட்டது. இவ்வீர புருஷர் வாழும் காலத்தில் நாம் வாழ்கின்றோமே என்று 80 கோடி ஹிந்துக்களும் மனம் நெகிழ்ந்து போயினர்.//

    :)))

    By at 10/23/2007 9:08 AM  

  • m அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    By at 10/23/2007 10:03 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za