அம்மான்னா சும்மாவா?

Monday, October 22, 2007

அம்மாவின் கரத்துடன் புதிய 2 ரூபாய் நாணயம்

மத்திய அரசால் இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள புதிய 2 ரூபாய் நாணயத்தில் வளைக் கரத்தோடு இரட்டை விரல்கள் காணப்படுவதால் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். 2 ரூபாய் நாணயத்தை சேகரித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு 1 ரூபாய் நாணய அளவிலேயே 2 ரூபாய் நாணயத்தையும் மத்திய அரசு வெளியிட்டது. இதனால் வியாபாரிகள், பஸ் கண்டக்டர்கள், பொதுமக்களுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது. இரு நாணயங்களுக்கும் இடையில் வித்தியாசம் இல்லாததால் இந்தக் குழப்பம்.

இதையடுத்து இந்த இரண்டு நாணயங்களுக்கும் வித்தியாசம் இருக்கும் வகையில் புதிய நாணயங்களை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய இரண்டு ரூபாய் நாணயம் தற்போது புழக்கத்தில் வந்துள்ளது. இதில் ஒரு பக்கம் ரூ.2 என்ற எழுத்து பெரிதாக பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பக்கத்தில் ஒரு பெண் இரட்டை விரல்களைக் காட்டுவது போல உள்ளது.

இந்த நாணயங்கள் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகம் முழுவதும் அதிக அளவில் புழக்கத்திற்கு வந்துள்ளது. இதைப் பார்த்து பொதுமக்களுக்கு வித்தியாசம் தெரிகிறதோ இல்லையோ, அதிமுகவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

'அம்மா'வே இரட்டை விரல்களைக் காட்டுவது போல இருப்பதாக அவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அந்த நாணயங்களை வாங்கிக் குவிக்க ஆரம்பித்துள்ளனர். செலவழிக்காமல் வீடுகளில் பத்திரப்படுத்தியும் வருகின்றனர்.
(நன்றி - தட்ஸ்தமிழ்) நாணயத்தின் படத்தை பார்க்க இங்கே செல்லவும்.

வாழ்க அம்மா.

45 Comments:

 • ஜகதீசன்,

  நான் முந்திக்கொண்டேன். வாழ்க அம்மா நாமம் !

  By at 10/22/2007 9:21 PM  

 • உடனடியாக கோவில் கட்டி, அந்த கோவிலில் அந்த நாணயத்தை பிரதிஷ்டை செய்து வழிபடுவோம். அம்மா கரத்துடன் வந்த நாணயம் என்றால் சும்மாவா? அந்த நாணயங்கள் திராவிட திம்மிகளின் கையில் கிடைக்காமல் பார்த்து கொள்வதே நமது தலயாய கடமை.

  By at 10/22/2007 9:50 PM  

 • அந்த நாணயத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.... விரைவில் புகைப்படம் எடுத்துப் பதிவிடவும். நன்றி

  By at 10/22/2007 9:54 PM  

 • பின்னூட்ட இலைக்காரத்தனம்!

  By at 10/22/2007 9:57 PM  

 • பின்னூட்ட இரண்டு ரூபாத்தனம்!

  By at 10/22/2007 10:57 PM  

 • அந்த நாணயம் ஒன்றை எனக்கு குரியர் மூலம் அனுப்பி வைக்கவும் சகோதரர் இலைக்காரரே.

  உங்களுக்கு இராம பகவான் அருள் புரிவார்.

  அம்மா காசு எல்லாவற்றையும் போட்டு வைக்க ஆயா கால இடுப்பில் செருகும் சுறுக்கு பை ஒன்றையும் அனுப்பு வைக்கவும்.

  எங்கள் அம்மா ஆதரவாக இவரின் சின்னங்கள் போட்டு அகில இந்தியாவிலும் இவர் புகழ் பரப்பும் நியாயமான செயல் செய்துவரும் நடுவன் அரசாங்கத்தை இராம பகவான் காப்பாற்றுவார். இப்போதாவது திம்மிகள் நடுவன் அரசின் உண்மை முகத்தை புரிந்து கொண்டிருப்பர் என நம்புவோம்.

  திம்மிகளே இது உங்களுக்கு ஒரு செக்!

  By at 10/22/2007 10:58 PM  

 • வாழ்க அம்மா!

  வாழ்க ரெண்டு ரூபா!!

  இந்த திராவிட திம்மி டி.ஆர்.பாலு மொய்னோவிடம் புதிய 5 ரூபாய் நாணயங்களில் கருணானிதியின் 5 விரல்களை விரித்தபடி இருக்கும் கை படத்தை போடச் சொல்லி மிரட்டுவதாக ஒரு தகவல் வந்துள்ளது. இதனால் விரைவில் இந்த ஆட்சி கவிழும் இலைக்காரரே.

  By at 10/22/2007 11:11 PM  

 • கோவி.கண்ணன் அவர்களே,

  வருகைக்கு நன்றி. அம்மா வாழ்க.

  By at 10/22/2007 11:16 PM  

 • சாணக்கியன் அவர்களே,

  வருகைக்கு நன்றி. ஆலோசனைக்கு மிக்க நன்றி. உடனே அனைவரும் செயல்படுத்துவோம். ஸ்ரீராம சேதுவை காப்பதற்காக அம்மா எடுத்து வரும் முயற்சிக்கு கிடைத்த பலனாக இதை பார்க்கின்றேன்.

  By at 10/22/2007 11:20 PM  

 • ஜெகதீசன் அவர்களே,

  வருகைக்கு நன்றி. புகைபடம் தட்ஸ்தமிழ்.காம் இணைய தளத்தில் வந்துள்ளது.

  By at 10/22/2007 11:23 PM  

 • லக்கிலுக் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  By at 10/22/2007 11:23 PM  

 • great அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  By at 10/22/2007 11:23 PM  

 • மாசிலா அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  அந்த நாணயங்கள் எனக்கு கடவுள் அளித்த பிரசாதங்கள். கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் அம்மாவின் கரம் இருக்கும் நாணயத்திற்கு ஈடாகுமா? நீங்கள் வேறு யார் மூலமாவது முயற்சி செய்யுங்கள்.

  By at 10/22/2007 11:25 PM  

 • //ஜெகதீசன் அவர்களே,

  வருகைக்கு நன்றி. புகைபடம் தட்ஸ்தமிழ்.காம் இணைய தளத்தில் வந்துள்ளது.
  //
  நன்றி இலைக்காரன் அவர்களே.. அந்த செய்தியின் லின்க் அனுப்ப முடியுமா?

  By at 10/22/2007 11:36 PM  

 • தலையை சுத்துதுடா சாமி இந்த ஆட்டைக்கு நான் வரலை

  By at 10/22/2007 11:48 PM  

 • போச்சு
  தி.மு.க மத்திய அரசை மிரட்டி அந்த நாணயங்கள் வராமல் தடுத்து விடப் போகிறது.

  நுனலும் தன் வாயால் கெடும்.

  By at 10/22/2007 11:55 PM  

 • ஜெகதீசன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  தட்ஸ்தமிழ் இணையதளத்தின் முதல் பக்கத்தில் இந்த செய்தி வந்தது. இதை பற்றி நான் ஒரு பதிவு போட்டதும் திராவிட திம்மிகளின் சதியால் அந்த பக்கத்தை காணவில்லை. நல்லவேளையாக அதன் சுட்டியை சேமித்து வைத்து இருந்தேன். பதிவில் சுட்டி இணைத்துளேன். கண்டு மகிழுங்கள்.

  By at 10/23/2007 12:16 AM  

 • முரளி கண்ணன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  By at 10/23/2007 12:17 AM  

 • வெங்கட்ராமன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  திராவிட திம்மிக்கள் செய்தாலும் செய்வர். ஆனால் இந்த நாணயங்கள் மக்களிடம் சென்று சேர்ந்துவிட்டது.

  By at 10/23/2007 12:17 AM  

 • great அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  அப்படி எதுவும் நடக்க வாய்ப்பு இல்லை. ஸ்ரீராமரை எதிர்க்கும் கொலைஞரின் கை அது என்று நாம் பிரச்சாரம் செய்தால் 80 கோடி ஹிந்துக்களும் அந்த நாணயத்தை உபயோகிக்க மாட்டார்கள். ஹிந்துஸ்தானத்தின் பொருளாதாரமே அதனால் பெரும் சரிவுக்கு உள்ளாகும் என்று நான் எச்சரிக்கின்றேன்.

  By at 10/23/2007 12:21 AM  

 • பின்னூட்ட BBI- த்தனம்

  By at 10/23/2007 12:25 AM  

 • //அந்த நாணயங்கள் எனக்கு கடவுள் அளித்த பிரசாதங்கள். கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் அம்மாவின் கரம் இருக்கும் நாணயத்திற்கு ஈடாகுமா? நீங்கள் வேறு யார் மூலமாவது முயற்சி செய்யுங்கள்.//

  ஹிந்து சகோதரா! என்ன இது? நமது ஹிந்து ராஜ்ய பண்பாட்டுக்கு உகந்ததல்லாததாக இருக்கிறது உங்களில் குணம்? நமது பாரம்பரிய இராமாயணத்தில் இப்படியெல்லாம் கூறி இருக்கவில்லையே. சகோதர ஹிந்துவிடம் அனைத்தையும் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும் என்றல்லவா நாம் கற்று வளர்ந்து வந்தோம்?
  இலைக்கார ஹிந்து சகோதரா, உங்களது முடிவினை பகவான் இராமனை மனதில் நினைத்து கொண்டு மறுபர்சீலனை செய்யுங்கள். நிச்சயம் அனைத்து ஹிந்துக்களின் நன்மைக்கும் அவர் நல்வழி காட்டுவார். இந்த உலகத்துக்கே விளக்கு பிடித்து வெளிச்சம் காட்டும் தொழிலில் கைதேர்ந்த அவரிடம் கேளுங்கள்.

  ஹிந்து சாம்ராஜ்யம் வாழ்க!
  பகவான் இராம கோடி வாழ்க!
  அம்மா வாழ்க!

  By at 10/23/2007 12:33 AM  

 • //அந்த நாணயங்கள் எனக்கு கடவுள் அளித்த பிரசாதங்கள். கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் அம்மாவின் கரம் இருக்கும் நாணயத்திற்கு ஈடாகுமா? நீங்கள் வேறு யார் மூலமாவது முயற்சி செய்யுங்கள்.//

  உங்களைப்போலவே எனக்கும் அம்மாவின் அருள் கிடைக்கவேண்டும் என்பதில் உங்களுக்கு விருப்பம் இல்லையா ஹிந்து சகோதரா? ஏனிந்த இந்த ஒருதலை பட்சமான தீர்வு? கருணை காட்டுங்கள் ஹிந்து நண்பா!

  நீங்கள் நான் கேட்பதை செய்தால், பாரீஸ் ஐபில் டவர் கீழ் இராம பஹ்வான் நாமத்தை ஹொல்லி 1001 தேங்காய் உடைப்பேன். இராமன் மேல் சத்தியமாக ஷொல்லுகிறேன்.

  ஜெய் இராம ஜெயம்!

  By at 10/23/2007 12:43 AM  

 • இலைக்காரன் அவர்களே,
  சுட்டி தந்ததற்கு நன்றி. அந்த நாணயத்தைப் ப்ரிண்ட் அவுட் எடுத்து என் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடுகிறேன்.

  By at 10/23/2007 12:49 AM  

 • இந்த பிரம்ஹத்தை ஆள பிறந்த நம்ம ஆதம ஜோதி மாதா ஷெல்வி ஜெயா நேற்று என கனாவில் ஷோ காட்டியபோதே நினைத்தேன், ஏதோ புதிதாக இப்பூவுலகில் அதிசயம் ஒன்று வரப்போகிறது என்று. அது இது தானா?

  வாழ்க ஸ்ரீராம ஜெயம்.
  வாழ்க ஷெல்வி ஜெயா!

  By at 10/23/2007 1:01 AM  

 • பாரீசில் குவிந்த அனைத்து ஹிந்து சாம்ராஜிய அமைதி விரும்பும் மக்களுக்கு அருள் பெற சில நாணயங்களை அனுப்பி வைக்கவும் சகோதரா.

  ஹிந்து மத 1008 சாமிகளும் உங்களுக்கு துணை இருப்பார்.
  கக்கூசுக்கு போகும்போது கூட!!!

  By at 10/23/2007 1:04 AM  

 • //
  Great said...

  பின்னூட்ட BBI- த்தனம்
  //
  Great அவர்களே,
  BBI என்பது காப்புரிமை பெறப்பட்ட வார்த்தை. அதைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் BBI யிடம் அனுமதி பெற வேண்டும். contact@BBI.net என்னும் முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பி அனுமதி பெற்றுக்கொள்ளவும்

  By at 10/23/2007 1:22 AM  

 • லக்கிலுக் எனும் திம்மி எனக்கு திருட்டுத்தனமாக அனுப்பிய மின்னஞ்சலில் : அவரது கக்கூஸ் கதவில் மாட்டுவதற்கு அம்மாவின் படம் வேண்டுமென்று என்னிடம் கேட்டு என் மனதினை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்திவிட்டார்.

  இராம பஹவான் அவரை தண்டிப்பாரென நம்புவோம்!

  By at 10/23/2007 1:24 AM  

 • இலைக்கார ஹிந்து சகோதரா!
  உங்களிடம் ஒரு கேள்வி.
  யாகங்களில் வளர்ந்த நம் பஹவான்களுக்கு அனைத்துவகை புகை நாற்றங்களில் பழகிப்போன நம் பஹவான்களுக்கு கக்கூஸ் நாற்றம் ஏதும் தெரியுமா? இதனால், இவர்களுக்கு தொந்தரவு இருக்குமா?

  இராமாயண்ம், மஹாபாரதம், கீதை இது எதிலும் நாம் இதைப்பற்றி கற்றுக்கொள்ளவே இல்லையே. அதனால்தான் இந்த கேள்வி.

  உங்கள் மனதை இந்த கேள்வி புண்படுத்துவதாக இருந்தால், கக்கூஸை மலம் ஜலம் கழிவிடம் என்று மாற்றி படித்துக்கொள்ளுங்கள்.

  சிவசிவா!
  ஸ்ரீராம ஜெயம்!
  அம்மா வாழ்க!!!

  By at 10/23/2007 1:29 AM  

 • என்னிடம் 5000 அம்மா கை போட்ட நாணனய்ங்கள் உள்ளது வேண்டியவ்ர்கள் பெற்றுக்கொள்ளலாம் ஆனால் வி.பி.பி யில் தான் அனுப்புவேண் ஒரு இரண்டு ரூபாய் நாணனயம் 100 ரூபாய் மட்டும் தான் என்ன அம்மான்னா சும்மாவா?

  By at 10/23/2007 1:36 AM  

 • மாசிலா அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  போட்டு தாக்கி விட்டீர்கள். பின்னூட்டங்களை படிப்பதற்கே பல மணி நேரம் ஆகும் போல் இருக்கின்றது.

  பாரீசிலும் ஹிந்துமதத்தை பரப்ப உறுதி எடுத்து உள்ளதால் நாணயத்தை உங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்கின்றேன்.

  நீங்கள் இப்படி பின்னூட்டம் இடுவது உங்கள் நண்பரான தமிழச்சி அவர்களுக்கு தெரியுமா?

  By at 10/23/2007 1:36 AM  

 • ஜெகதீசன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  அம்மாவின் மீது நீங்கள் காட்டும் மரியாதையை கண்டு மகிழ்ந்தேன். உங்களுக்கும் ஒரு நாணயத்தை அனுப்ப ஏற்பாடு செய்கின்றேன்.

  By at 10/23/2007 1:37 AM  

 • மொய்னோ எதுக்கு இப்படி ஒரு நாணயம் விடணும். யோசிக்க வேண்டிய விசயம் இலைக்காரரே. ஜாக்கிரதை

  By at 10/23/2007 2:03 AM  

 • அடுத்து அம்மாவின் உருவத்தை 1000 ரூபாய் நோட்டில் போட வேண்டும் (நோட்டில் இடம் பத்துமா என்று தெரியவில்லை). இதற்காக நாம் 80 கோடி இந்துக்களும் ராமபிரானை வேண்டிக்கொள்ள இலைக்காரர் அனுமதி தர வேன்டும்.

  By at 10/23/2007 2:58 AM  

 • மாசிலா அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  உங்களுடைய கேள்வி ஒரு நல்ல கேள்வி. ராமாயணம், கீதை, பாரதம் போன்றவற்றில் கக்கூஸை பற்றி எழுதவில்லை. ஆனால் நம்மிடையே வாழும் கடவுளான ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா அவர்கள் கடவுளின் திருவிளையாடலால் சில காலம் சிறையில் இருந்த போது நடந்த சம்பவங்களை பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்கும். அதனால் நம் பஹவான்களுக்கு கக்கூஸ் நாற்றம் பற்றி நன்றாக தெரியும் என்று நம்புகின்றேன்.

  By at 10/23/2007 10:20 PM  

 • ஜெயம் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  அம்மாவின் ஆசியினால் உங்களுக்கு எவ்வளவு வருமானம் பார்த்தீர்களா. அம்மான்னா சும்மாவா.

  By at 10/23/2007 10:20 PM  

 • great அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  எல்லாம் அரசியல்தான். ஸ்ரீராம சேது பிரச்சனையால் தமிழ்நாட்டில் கொலைஞருக்கு ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்காது என்ற காரணத்தினால் அம்மாவை காக்கா பிடிக்க இப்படி ஒர் ஏற்பாடு.

  By at 10/23/2007 10:22 PM  

 • great அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  1000 ரூபாய் நோட்டில் மட்டும் அல்ல. இங்கிலாந்து நாட்டில் இருக்கும் எல்லா நோட்டிலும் எலிசபெத் ராணியின் படம் இருப்பது போல ஹிந்துஸ்தானத்தின் அனைத்து நோட்டுகளிலும் அம்மாவின் திரு உருவத்தை பதிக்க ஏற்பாடு செய்வோம்.

  By at 10/23/2007 10:23 PM  

 • இலைக்காரரே சரியான யோசனை. ஹிந்துஸ்தானத்தின் அனைத்து நோட்டுகளிலும் அம்மாவின் திரு உருவத்தை பதிக்க ஏற்பாடு செய்தால் எளிதில் நாம் அமேரிக்க பொருளாதாரத்தை வீழ்த்தி மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடையலாம். அம்மான்னா சும்மாவா? வெயிட்டு இல்ல...!!!!! அம்மா வெயிட்டுல அமெரிக்க பொருளாதாரம் மூழ்கி விடும்.

  //BBI என்பது காப்புரிமை பெறப்பட்ட வார்த்தை. அதைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் BBI யிடம் அனுமதி பெற வேண்டும். contact@BBI.net என்னும் முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பி அனுமதி பெற்றுக்கொள்ளவும்
  //
  ஜெகதீசன் அவர்களே தாங்கள் அறிவுறித்தியபடி BBI-யை தொடர்பு கொண்டேன். இலைக்காரர் பதிவில் இதை உபயோகிக்க எந்த தடையும் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். நன்றி

  By at 10/23/2007 11:52 PM  

 • அம்மாவின் திரு உருவம் பதித்த நோட்டுக்கள் எல்லாம் அம்மாவுக்கே சொந்தம் என்று அம்மாவிடம் சொல்லி விட்டால் அவரும் ஊழல் பண்ண மாட்டார். இந்தியா பல மடங்கு முன்னேறி விடும்

  By at 10/24/2007 12:03 AM  

 • great அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  அம்மா ஊழல் செய்தார்களா!. இது என்ன புதுகதை. அது எந்த கோர்ட்டிலாவது நிரூபிக்கபட்டு உள்ளதா?.

  அம்மாவிற்கு வழிவழியாக வந்த சொத்துகளை கணக்கு எடுக்கவே பல வருடங்கள் ஆகும். மைசூர் அரசர் ஏராளமான வைர வைடூரியங்களை அம்மாவின் மூதாதையருக்கு அளித்து உள்ளார்.

  அதுமட்டும் அல்லாமல் அம்மா அவர்கள் ஒரு பெரிய விவசாயி. வெங்காயம் மற்றும் திராட்சை ஏற்றுமதிகள் மூலம் கோடிகணக்கான டாலர்களை அவர் ஒரு மாதத்தில் பெறுகின்றார்.

  அவரின் திரு உருவத்தை பதிப்பதால் ஹிந்துஸ்தானத்தின் நோட்டுகள் உலக அளவில் பெருமை அடையும்.

  By at 10/24/2007 1:35 AM  

 • வாழ்க அம்மா!

  வாழ்க ரெண்டு ரூபா!!

  By at 10/24/2007 2:03 AM  

 • 80 கோடி இந்துக்களின் புனித தெய்வமாம் அம்மாவின் கரத்தை 1000 ரூபாய் நோட்டில் போடாமல் 2 ரூபாய் நாணயத்தில் போட்டு கேவலப்படுத்திய சதிகாரி மொய்னோவை வன்மையாக கண்டிக்கிறேன்.

  இலைக்கார சகோதரா இந்த சதியை அம்பலப்படுத்தி ஒரு இடுகை இடுமாறு வேண்டுகிறேன்.

  வாழ்க அம்மா!!!
  வீழ்க சதிகாரி மொய்னோ!!!

  By at 10/24/2007 3:08 PM  

 • great அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  வாழ்க அம்மா.

  By at 10/24/2007 9:14 PM  

 • பல்லு பிச்சை அவர்களே,

  வருகைக்கும், ஆதரவிற்கும் நன்றி.

  வாழ்க அம்மா.

  By at 10/24/2007 9:15 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za