அம்மான்னா சும்மாவா?

Sunday, November 30, 2008

பம்பாய் பயங்கரம்

பாரத மாதாவின் மீது மீண்டும் ஒரு கொலை முயற்சி நடை பெற்று இருக்கின்றது. நாட்டின் உள்ளே இருந்து தாக்குதல் நடத்தும் கிருத்துவ மிஷினரிகள், முகமதிய ஜிகாதிகள், திராவிட திம்மிக்கள் போதாது என்று கடல் வழியே வந்த கயவர் கூட்டம் ஒன்று படுகொலைகள் புரிந்து உள்ளன.

இந்த பயங்கர நிகழ்விற்கு பொறுப்பு ஏற்று தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியும், அவருக்கு துணை நிற்கும் மத்திய மொம்மை அரசின் மன்மோகன் சிங்கும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

இது போன்ற சோதனை மிக்க நேரத்தில் பாரத தாயை காப்பாற்றும் முழு தகுதி மகா சக்தியான நம் அம்மாவிற்கு மட்டுமே உண்டு என்பதை நினைவு படுத்துகிறேன். 80 கோடி ஹிந்துக்களும் ஒன்று சேர்ந்து பாரத பிரதமர் பொறுப்பை ஏற்குமாறு அம்மாவை வேண்டுவோம்.

இந்த தாக்குதல்களில் தங்கள் உயிரை நீத்த ஹிந்துக்களுக்கு ஆங்காங்கே மோட்ச தீபம் ஏற்றி அவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுவோம்.

வாழ்க அம்மா. ஜெய்ஹிந்த்.

Sunday, November 16, 2008

ராஜினாமா செய்

ஒற்றுமையாக இருக்கும் ஹிந்துக்களை பிளவுபடுத்த திராவிட நஞ்சுகள் உபயோகபடுத்தும் கருவிதான் ஜாதி என்பதை நான் பல பதிவுகள் மூலம் விளக்கி இருக்கின்றேன். ஹிந்துக்கள் ஒற்றுமையாக அவரவர்க்கு விதிக்கபட்ட கடமைகளை செய்து வந்தால் தாங்கள் அரசியல் செய்ய முடியாது என்று மைனாரிட்டி ஆட்சி நடத்தும் கருணாநிதி உணர்ந்து உள்ளார். ஆகவே அமைதியாக இருக்கும் ஹிந்துக்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்கின்றனர் என்பதை போன்ற ஒரு மாய தோற்றதை உருவாக்கி இருக்கின்றார்.

சட்ட கல்லூரியில் நடந்த பிரச்சனையின் பின்புலத்தில் இருக்கும் சிலவற்றை எல்லோரும் உன்னிப்பாக பார்க்கவேண்டும். சட்ட கல்லூரி ஹிந்துவான அம்பேத்கர் பெயரில் அமைந்துள்ளது. பிரச்சனை உருவானதற்கு காரணமாக சொல்லபடும் தேவர் ஒரு ஹிந்து சாம்ராட். ஹிந்துக்கள் அமைதியானவர்கள், தீவிர அஹிம்சாவாதிகள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அப்படி இருக்கையில் ஒரு ஹிந்து மற்றொரு ஹிந்துவை தாக்குவார்களா என்று யோசித்து பாருங்கள்.

இது எல்லாம் ஒரு மாய தோற்றம். இதன் பின்புலத்தில் கிருத்துவ மிஷினரிகளும், ஜிகாதி இயக்கங்களும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனதருமை ஹிந்துக்களே அரசியல்வாதிகளின் பிரச்சாரத்திற்கு ஒருபோதும் அடிமை ஆகிவிடாதீர்கள். நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருப்போம் என்று சபதம் எடுங்கள்.

சட்ட கல்லூரி பிரச்சனைக்கு காரணமாக இருக்கும் மைனாரிட்டி ஆட்சி நடத்தும் கருணாநிதி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று 80 கோடி ஹிந்துக்களின் சார்பாக கேட்டு கொள்கின்றேன்.

(இதுவரை எத்தனை முறை உலகின் ஒரே தங்க தாரகையான அம்மா அவர்கள் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு உள்ளார் என்று சரியாக கணித்து சொல்பவர்க்கு அம்மாவின் பொற்கால ஆட்சியில் வாரியதலைவர் பதவி வழங்கபடும் என்று தெரிவிக்கின்றேன்).

வாழ்க அம்மா. வாழ்க தேவர் பெருமகனார்.

Thursday, November 06, 2008

வீர சாத்வியும் புரோஹிட்டும்

Lt Col Srikant Prasad Purohit, the main conspirator in the Malegaon blasts, has reportedly confessed to being the mastermind of the Malegaon blast. According to sources, the 37-year-old officer reportedly told police that he had mapped the conspiracy and provided RDX and weapons for the 'revenge' attack which killed six people.
(நன்றி - ibnlive)

வந்தேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ மாதரம்.

வாழ்க பாரதம். வாழ்க புரோஹிட்.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za