அம்மான்னா சும்மாவா?

Thursday, July 31, 2008

சூப்பர் ஸ்டாருனா சூப்பர் ஸ்டார்தான்

ஸ்ரீமான் சிவாஜிராவை மைனாரிட்டி ஆட்சி நடைபெறும் தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் என்று அழைப்பார்கள். திரைப்படங்களில் அவரின் நடிப்பு என்றுமே சூப்பர் ரகம் இல்லை. அவரின் கை கால் விரல் அசைப்புகளே அவரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்த்தியது என்று பலரும் பேசுவர். ஆனால் அப்படி பேசிய அனைவருக்கும் ஒரிஜனல் திருநெல்வேலி இருட்டுகடை அல்வா வழங்கியுள்ளார்.

நிஜ வாழ்கையில் அவர் போடும் அந்தர் பல்டிகளையும், மைக் கிடைத்தால் எடுத்து விடும் உளரல்களையும் பார்க்கும் போது அவருக்கு கொடுத்த பட்டம் சரியானதுதான் என்பது புரிகின்றது.

வாழ்க சூப்பர் ஸ்டார். வாழ்க வாட்டாள் நாகராஜ்.

Friday, July 25, 2008

பெங்களூருவில் குண்டு வெடிப்புகள்

உலகம் எங்கும் கணினி புரட்சியை ஏற்படுத்திவரும் பாரத மக்களின் மீது மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். உலகின் ஆக முக்கிய கணினி நகராக பெங்களூரு இருக்கின்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஹிந்துக்களின் இந்த முன்னேற்றம் கிருத்துவ மிஷினரிகளின் கண்களை உறுத்தி வந்தது அனைவருக்கும் தெரியும். முகமதிய ஜிகாதிகளும் சில முக்கிய ஸ்தாபனங்களை தாக்க கூடும் என்று Interpol தெரிவித்து வந்தது.

இந்த தீவிரவாத செயல்களுக்கு பொறுப்பேற்று உடனடியாக அன்டோனியோ மெய்னோவின் தலையாட்டி பொம்மையான மன்மோகன் சிங்கும், தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியும் ராஜினாமா செய்ய வேண்டும் என 80 கோடி ஹிந்துக்களும் வேண்டுவோம்.

இதுபோன்ற படுபாதக செயல்களை தடுத்து நிறுத்த தேசசேவையையும் ஆன்மீகத்தையும் இரு கண்களாக பாவிக்கும் பா.ஜ.கவினரை மத்திய அரசின் ஆட்சி பொறுப்பில் அமர்த்த சபதம் எடுப்போம்.

இறந்தவர் ஆன்மா சாந்தி அடைய ஆங்காங்கே மோட்ச தீபம் ஏற்றுங்கள்.

வாழ்க அத்வானி. வீழ்க மெய்னோ.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za