அம்மான்னா சும்மாவா?

Monday, April 23, 2007

வருங்கால பிரதமர் அம்மா வாழ்க


வடமாநில தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்கப்பட்டதன் மூலம் பாரதத்தின் தலைசிறந்த அரசியல் அறிஞர்களில் ஒருவர் அம்மா என்பது புரிகின்றது.

கொளுத்தும் 45 சென்டிகிரேட் வெப்பத்திலும் அவரின் உரைவீச்சு நடைபெற்று இருப்பது எதையும் தாங்கும் இதயம் கொண்டவர் என்பதை சுட்டிக்காட்டுகின்றது.

தொடர்ந்து தங்கு தடையின்றி தேசிய மொழியான ஹிந்தியில் பேசியது அவரது தேசபக்திக்கு எடுத்துக்காட்டு.

தகுதியும் திறமையும் கொண்ட ஒரு மூத்த அரசியல்வாதி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் அம்மா.

பாரதத்தை வல்லரசாக உயர்த்த அம்மா ஒருவரால்தான் முடியும். எனவே மூன்றாவது அணிக்கு தலைமை ஏற்கும் அம்மாவை பிரதமராக்க 80 கோடி இந்துக்களும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம்.

வாழ்க அம்மா. ஜெய்ஹிந்த்.

Friday, April 20, 2007

தமிழ்மணத்தின் தேச விரோத போக்கு

முதலாவதாக எனது பதிவை உங்கள் திரட்டியிலிருந்து தயவு செய்து நீக்காதீர்கள் என்று கடுமையாக எச்சரிக்கின்றேன். அப்படி நீக்கினால் அம்மாவின் தொண்டர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்வார்கள் என நம்புகின்றேன். முடிந்தால் அமெரிக்காவிற்கு ஆட்டோ வரும் என்றும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கின்றேன்.

சமீபத்தில் உங்களுடைய நடவடிக்கை இந்திய இறையான்மையை கீழறுக்கும் விதமாக நடைபெறுகின்றது. உங்களை கேள்வி கேட்ட காரணத்தினால் இரண்டு பதிவர்களின் குடும்பங்கள் கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறது என அம்மாவின் சீடர்கள் தகவல் அனுப்பி உள்ளனர். உடனே என்னிடம் ஆதாரம் எல்லாம் கேட்காதீர்கள். அதெல்லாம் என்னால் கொடுக்க முடியாது என்பதை இங்கே பதிவு செய்கின்றேன். எனக்கு வந்த தகவல்களை மனதில் பூட்டி வைக்காமல் வெளிப்படையாக உங்களிடம் கேட்கின்றேன்.

சென்னை நகரில் வசிக்கும் ஒரு பதிவர் தமிழ்மணத்தின் பாசிச போக்கை கண்டித்ததால் அவரின் ஐ.பி முகவரியை பேட்டை ரவுடிகளிடம் நீங்கள் அளித்துள்ளதாக தெரிகின்றது. அதை வாங்கிய வலை உலக தாதாக்கள், ஆட்சியில் உள்ள கட்சியின் அடிவருடிகள் மூலம் அவர் வீட்டின் தண்ணீர் இணைப்பை துண்டித்து உள்ளார்கள். கடந்த இரண்டு, மூன்று நாட்களாக அவரின் குடும்பம் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றது. இந்த கொடுமைக்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

அடுத்ததாக ஒரு பதிவரின் உறவினருக்கு ஏற்பட்ட தொல்லையினை சற்று கவனிப்போம். புகழ் பெற்ற அந்த பதிவரின் ஐ.பி முகவரியும் தமிழக முசோலினியின் சீடர்களிடம் அளித்து உள்ளதாக தெரிகிறது. ஐ.பி முகவரியை ட்ரேஸ் செய்து அவருடைய உறவினர் யார் யார் என்ற விபரங்களை அந்த அடிவருடிகள் தெரிந்து கொண்டனர். இப்படி இவர்கள் கையில் கிடைத்த அந்த விபரங்கள் இந்திய திருநாட்டின் விரோதிகளான ஜிகாதி ஆதரவாளர்கள், பிராமண வெறுப்பாளர்கள், இந்துமத வெறுப்பாளர்கள், நக்ஸல் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தனித்தமிழ்நாடு கேட்கும் தீவிரவாதிகள் ஆகியோரிடம் சென்று சேர்ந்துள்ளது. அந்த தேசவிரோத கும்பல் ஆட்டையாம்பட்டியில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இந்து சகோதரரை மிரட்டி பதிவரின் உறவினர் வீட்டில் இரண்டு, மூன்று நாட்களாக மலம் சுத்தம் செய்ய விடவில்லை. இதனால் அந்த தெருவே மணத்தில் மிதக்கிறது என்ற கொடுமையான செய்தியினை அறிய நேர்ந்தது.

இதெற்கெல்லாம் மகுடம் சூட்டும் விதமாக வர்ஜீனியா டெக்கில் பணிபுரிந்த இந்திய பேராசிரியரின் ஐ.பி முகவரி வெளியிடப்பட்டதால்தான் அவரை சுட்டு கொன்றார்கள் என்ற விபரம் இப்போது வெளிவந்து உள்ளது. ஏற்கனவே ஒருவர் நீங்கள் களி சாப்பிடுவீர்கள் என்று ஆருடம் சொல்லியுள்ளார். அமெரிக்க சிறையில் களி கிடைக்குமா என்ன? எனவே நீங்கள் எல்லாம் அமெரிக்க ஜெயிலில் சான்ட்விச் சாப்பிடும் காலம் விரைவில் வர எல்லாம் வல்ல அந்த வடிவேலனிடம் வேண்டி கேட்டுக்கொள்கின்றேன். அடுத்த முறை அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் ஹில்லாரியிடம் சொல்லி உங்கள் கைகளில் விலங்கு மாட்டப்படும்.

இப்படியாக பாசிச சிந்தனையுடன் செயல்படும் உங்களை கண்டித்து, இந்திய தேசீயத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் "தலை முதல் வால்வரை புரையோடிக்கிடக்கிற முள்காட்டில்" என் பதிவுகளை இணைக்குமாறு வன்மையாக கண்டிக்கின்றேன்.

வாழ்க பாரதம். வீழ்க தமிழ்மணம்.

Saturday, April 14, 2007

பேட்டை ரவுடிகளின் அராஜகம்

பாரத மண்ணில் அந்தணர்கள் எப்போதும் பெரும் பெயரும், புகழும் எடுத்து வருவது அனைவரும் அறிந்ததே. பில் கேட்ஸில் இருந்து லேரி எலிஸன் வரை பாரதத்தில் அலுவலகங்களை அமைப்பது இவர்களின் திறமையை உபயோகப்படுத்தி கொள்ளத்தான் என்பதும் பெரும் உண்மை. மிகுந்த அறிவும், கலாச்சார பிண்ணனியும் கொண்ட இவர்களால் பாரதத்தாய் எப்போதும் பெருமிதத்துடன் பீடு நடை போடுகின்றாள். இவர்கள் சாந்த சொரூபிகள், யாருடைய வழியிலும் குறிக்கிடாமல் தன் வழி தனி வழி என்று செல்பவர்கள். இவர்களின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்ட திம்மிக்கள் எப்போதும் இவர்களை வம்பு சண்டைக்கு இழுப்பர். Intellectual pygmies ஆன இந்த திம்மிக்களிடம் இருந்து விலகிச் செல்லும் மனதுடையவர்கள் இவர்கள்.

தமிழகத்தில் கயவன் கருணாநிதியின் மைனாரிட்டி ஆட்சி வந்ததில் இருந்து இந்த பேட்டை ரவுடிகளின் அராஜகம் தாங்க முடியவில்லை. அப்பாவி பிராமணர்களின் பூணூல் அறுப்பும், குடுமி அறுப்பும் நாள் தோறும் நடந்து வருகின்றது என்பதை நம் தொலைக்காட்சி செய்திகளின் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்த வகையாய், இப்போது வீடு புகுந்து மிரட்டும் செயல் ஆரம்பித்து உள்ளது.

வெற்றி அடைந்த பெருமக்களின் புகழை அழிக்க திம்மிக்கள் எடுக்கும் ஆயுதம் பெண்கள். நாடு போற்றும் நல்லவர்களின் செயலினை கண்டு கலங்கும் திம்மிக்கள் அவர்களை பெண்களோடு தொடர்புபடுத்தி இழி செயல்களை கதை கட்டி விடுவார்கள். ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி பெரியவாள் அவர்களுக்கு நடந்த கொடுமையான செயல்களை நாம் அனைவரும் அறிவோம். தனது பதிவுகளின் மூலம் ஆன்மீக கருத்துக்களை பரப்பி வந்தார் ஒரு பதிவர். கருத்தினை மறுக்க முடியாத பேட்டை ரவுடிகள் அவரின் புகழை கெடுக்க முடிவு செய்து ஒரு நாடகத்தினை அரங்கேற்றி உள்ளனர்.

சென்னை மாநகரில் இருந்த பதிவரின் வீட்டிற்கு சென்று கத்தி முனையில் அவரை பியட் யூனோவில் கடத்தி சென்றுள்ளனர். அது மட்டும் அல்லாமல் சினிமாவில் வருவது போல இரண்டு, மூன்று திராவிட நஞ்சுக்கள் பட்டாக்கத்தியோடு சுற்றி நின்று வெற்றுத்தாளில் கைநாட்டு வாங்கி உள்ளனர். கடத்தப் பட்ட போது அவரின் செல்போனையும் பிடுங்கி வைத்துள்ளனர் அந்த திம்மிக்கள். அதனால் அவர் அமெரிக்காவிலும், கனடாவிலும், இஸ்ரேலிலும் உள்ள தன் நண்பர்களிடம் தொடர்பு கொண்டு உதவி கேட்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

செல்போனில் உள்ள அவரின் நண்பர்களுக்கு அடையாளம் தெரியாத தொலைபேசிகளில் இருந்து மிரட்டல் வருவதாக தகவல்கள் வந்துள்ளன. தன் உயிருக்கும், தன் குடும்பத்தாரின் உயிருக்கும் பயந்த அந்த பண்பாளரின் அமைதியான குணத்தினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி உள்ளதாக தெரிகிறது. திக்குத் தெரியாத சென்னை மாநகரில் தனியாக மாட்டிக்கொண்ட அந்த பதிவாளரை யாரும் காப்பாற்ற முடியவில்லை. வஞ்சகரின் வலை விரிப்பில் ஏதும் அறியா அந்த அப்பாவி மாட்டிக் கொண்டார்.

லஞ்ச ஊழலில் முதலிடம் வகிக்கும் காவல் துறையிடம் கட்டு கட்டாக பெட்ரோல் டாலரை கொடுத்து அவரின் மீது பொய் வழக்கு பதிவு செய்ய யோசித்து கொண்டு இருக்கிறார்களாம். இதற்கு பிண்ணனியில் ஆளும் கட்சியின் அடிவருடிகள் இருப்பதாக தெரிகின்றது. அந்த நல்ல உள்ளம் படைத்த ஆன்மீக செம்மலை காப்பாற்ற 80 கோடி இந்துக்களும் ஒன்று சேர்ந்து போராடுவோம். அனைவரும் அருகே உள்ள நீதி மன்றங்களை அணுகி அந்த பதிவரை காப்பாற்ற மனு செய்யுங்கள்.

வாழ்க வைதிகஸ்ரீ. வளர்க அவர் புகழ்.

தொடர்புடைய சுட்டிகள்
ஒன்று
இரண்டு

Tuesday, April 10, 2007

தேசிய கீதம் யாருக்காக?

பாரதத்தாயின் புதல்வர்களே, புதல்விகளே கீழ்க்காணும் செய்தியினை படிக்கும் போது என் ரத்தம் கொதிக்கின்றது.

National anthem could make foreigners at Infy uneasy: NRN

பெயரும், புகழும், பணமும் சம்பாதிக்க இந்தியா தேவை. ஆனால் வெளிநாட்டினர் சங்கடப்படுவார்கள் என்று தேசிய கீதத்தினை பாடாமல் விட்ட இந்த பெரிய மனிதரை என்ன செய்யலாம்? இதில் இந்த ஆளை அடுத்த ராஷ்ட்டிரபதியாக தேர்ந்து எடுக்க வேண்டுமாம். இந்த நேரத்தில் தேசிய உணர்வு கொண்ட கர்நாடக மாநில சட்டசபை அங்கத்தினர்களை பாராட்ட கடமைபட்டுள்ளேன்.

அவர் ஆகா, ஓஹோ, இந்திரன், சந்திரன் என்று ஜல்லியடிப்போர் உங்கள் வேலையை ஆரம்பிக்கலாம். தேசிய சிந்தனை கொண்ட பல பதிவர்கள் இருந்தும் ஒருவர் கூட இந்த நிகழ்ச்சியை பற்றி எழுதாதது வேதனை அளிக்கின்றது. 80 கோடி இந்துக்களும் நமது தேசிய கீதத்தினை உரக்க பாடி உங்களின் எதிர்ப்பை காட்டுங்கள்.

வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.

Monday, April 09, 2007

கருணாநிதியும் கார் குண்டும்

சென்ற வருடத்தில் தினமலரை பாராட்டி ஒரு பதிவினை எழுதினேன். அதில் குறிப்பிட்டு இருந்த வரிகள் இவை "சமீபத்தில் நடந்த தேர்தலில் கலவரத்தின் மூலம் ஆட்சி பொறுப்பில் கருணாநிதி அமர்ந்தவுடன் தமிழகத்தில் வன்முறை பல்கி பெருகி ஆறாக ஓடுகின்றது. உலகின் பல பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகளுக்கு தமிழகத்தில் இருந்து ஆயுத சப்ளை நடைபெறுகின்றது. சமீபத்தில் ஆந்திராவில் பிடிபட்ட ராக்கெட் குண்டுகள் பற்றி அனைவருக்கும் தெரியும். அதே போல அல்கொயிதாவிற்கும் ஆயுதங்கள் தமிழகத்தில் இருந்து கடத்தப்படுவதாக அமெரிக்க உளவு ஸ்தாபனம் ஒன்று சந்தேகப்படுகின்றது."

நான் சந்தேகப்பட்டது சரியாகிவிட்டது பதிவுலக நண்பர்களே. உலகம் முழுவதும் தீவிரவாத தாக்குதல் நடத்தும் முகமதியர்களுக்கு வெடிமருந்து தமிழகத்தில் இருந்துதான் ஏற்றுமதி ஆகின்றது என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. அப்படி ஏற்றுமதி செய்ய இருந்த ஒரு கார் வெடிகுண்டுதான் திண்டிவனம் அருகே வெடித்ததாக தகவல்கள் வருகின்றன. வெடிகுண்டினை எடுத்து சென்ற தீவிரவாத முகமதியர்கள் பா.ஜ.க தன் தேர்தல் பிரச்சார சி.டி.யில் குறிப்பிட்டதை போன்று தங்கள் சுய அடையாளத்தினை மறைத்து, நம் சகோதரர்கள் போல பெயரை வைத்து உள்ளனர் என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் தான் தீவிரவாதிகள் கொழும்பு மீது விமான தாக்குதல் நடத்தினர் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

தமிழகத்தில் இலவசங்களின் மூலம் மக்களை ஏமாற்றி மைனாரிட்டி ஆட்சி புரியும் திம்மி பதவிக்கு வந்தவுடன் நம் மாநிலம் தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாடும் ஒர் இடமாக மாறிவிட்டது. இந்த கயவனிடம் இருந்து நாட்டை காப்பாற்ற 80 கோடி இந்துக்களும் ஒன்று சேர்ந்து போராடுவோம்.

வாழ்க தலைநகர மக்கள். வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za