அம்மான்னா சும்மாவா?

Friday, January 20, 2012

அநியாய‌ம் அக்கிர‌ம‌ம்

பார‌த‌ மாதாவின் த‌லைம‌க‌ளாகிய‌ உல‌கின் ஒரே த‌ங்க‌தார‌கையான‌ ந‌ம் அம்மா அவ‌ர்க‌ள் த‌மிழக‌ ம‌க்க‌ளின் வாழ்வாதார‌த்தினை உய‌ர்த்த‌ அல்லும் ப‌க‌லும் அரும்பாடுப‌ட்டு வ‌ருகின்றார். அதை க‌ண்டு பொறுக்காத‌ திம்மிக்க‌ள் ஏதாவ‌து த‌டைக‌ளை ஏற்ப‌டுத்தி வ‌ருகின்ற‌ன‌ர்.

மைனாரிட்டி ஆட்சி புரிந்த‌ க‌ருணாநிதி ச‌ட்ட‌ம‌ன்ற‌த்திற்காக‌ ஒரு பிர‌ம்மாண்ட‌ மாளிகையை ம‌த‌ராஸ் ப‌ட்டின‌த்தில் க‌ட்டினார். ஈழ‌த்தில் ப‌ல‌ ம‌க்க‌ள் வீடு வாச‌ல் இன்றி த‌விக்கும் போது இது போன்ற‌ மாளிகை அவ‌சிய‌மா என்று அப்போதே ந‌ம் ஈழ‌த்தாய் அதை எதிர்த்தார். ஆனால் அதை க‌ண்டு கொள்ளாம‌ல் அந்த‌ மாளிகை க‌ட்ட‌ப‌ட்டுவிட்ட‌து.

த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் ஏகோபித்த‌ ஆத‌ர‌வுட‌ன் ஆட்சிக்கு வ‌ந்த‌ ந‌ம் நிர‌ந்த‌ர‌ முத‌ல்வ‌ர் அந்த‌ மாளிகையை ஒரு ம‌ருத்துவ‌ ம‌னையாக‌ மாற்ற‌ம் செய்ய‌ உத்த‌ர‌வு போட்டார். அந்த‌ செய்தியை க‌ண்டு உல‌கெங்கும் இருக்கும் ப‌ல‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் பெரு ம‌கிழ்ச்சி அடைந்த‌ன‌ர். அமெரிக்காவில் வ‌சிக்கும் ப‌ல‌ பார‌த‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் ம‌த‌ராஸ் ம‌ருத்துவ‌ம‌னையில் சேர்ந்து ப‌ணியாற்ற‌ விருப்ப‌ம் தெரிவித்து உள்ள‌ன‌ர். 80 கோடி ஹிந்துக்க‌ளும் ந‌ம‌க்காக‌ அம்மா ஒரு பெரிய‌ ம‌ருத்துவ‌ ம‌னையை ப‌ரிசு அளித்து இருக்கிறார் என்று ஆன‌ந்த‌ ந‌ட‌ன‌மாடின‌ர்.

அம்மாவின் இந்த‌ ஒப்பு உய‌ர்வு இல்லா சாத‌னையை க‌ண்டு வ‌யிறு எரிந்த‌ சில‌ திம்மிக்க‌ள் நீதிம‌ன்ற‌ம் சென்று ஒரு தடை ஆணையை பெற்றுவிட்ட‌ன‌ர். இத‌ற்காக‌தான் நாம் நீதிப‌திக‌ள் நிய‌ம‌ன‌த்தில் த‌குதி திற‌மையை ம‌ட்டுமே க‌ருத்தில் கொள்ள‌ வேண்டும் என்று போராடி வ‌ருகின்றோம். த‌குதி திற‌மைய‌ற்ற‌ இவ‌ர்க‌ள் குண்ட‌ர் ச‌ட்ட‌த்தில் அடைக்க‌ ப‌ட்ட‌வ‌ர்க‌ள் குண்டாக‌ இல்லை என்ற‌ கார‌ண‌த்தினால் சில‌ரை விடுவித்து வ‌ருவ‌தையும் நான் இங்கே சுட்டி காட்ட‌ விரும்புகின்றேன். த‌குதியும் திற‌மையும் வாய்ந்த‌ ந‌ம்ம‌வ‌ர்க‌ள் இப்ப‌டி ஒரு தீர்ப்பை வெளியிடுவார்க‌ளா?.

இந்த‌ அநியாய‌மான‌ தீர்ப்பை நாம் அனைவ‌ரும் எதிர்க்க‌ வேண்டும். இந்த‌ வ‌ழ‌க்கை உச்ச‌ நீதிம‌ன்ற‌த்திற்கு கொண்டு செல்ல‌வேண்டும். அங்கும் நீதி கிட்டாவிட்டால் உல‌க‌ நீதிம‌ன்ற‌த்திற்கு கொண்டு செல்வோம் என்று 80 கோடி ஹிந்துக்க‌ளின் சார்பில் தெரிவித்து கொள்கின்றேன்.

வாழ்க‌ அம்மா. வீழ்க‌ நீதிப‌திக‌ள்.

Wednesday, January 18, 2012

"சீ"மான் ஒழிக‌

பார‌த‌ ம‌க்க‌ள் ஒற்றுமையாக‌ ப‌ல‌ கோடி ஆண்டுக‌ள் ச‌கோத‌ர‌பாச‌த்துட‌ன் வாழ்ந்து வ‌ருகின்ற‌ன‌ர் என்ப‌தை நான் ப‌ல‌ ப‌திவுக‌ளில் சுட்டி காட்டி இருக்கின்றேன். பார‌த‌த்தாயை கூறு போட்டு விற்க‌ கிருஸ்துவ‌ மிஷின‌ரிக‌ளும், ஜிகாதிக‌ளும், திராவிட‌ திம்மிக்க‌ளும் முய‌ன்று வ‌ருவ‌து உள்ள‌ங்கை நெல்லிக்க‌னி. ச‌மீப‌த்தில் ந‌ம் ஸ்ரீமான் அர‌விந்த‌ன் இந்த‌ முய‌ற்சிக‌ளை ப‌ற்றி ஒரு புத்த‌க‌த்தினை வெளியிட்டு உள்ளார். அதை 80 கோடி ஹிந்துக்க‌ளும் வாங்கி ப‌டிக்க‌ வேண்டும்.

ஒற்றுமையாக‌ வாழும் ஹிந்துக்க‌ள் இடையே முல்ல‌ பெரிய‌ ஆறு என்று ஒரு பிர‌ச்ச‌னையை இந்த‌ க‌ய‌வ‌ர் கூட்ட‌ம் கிள‌ப்பி விட்ட‌து. தீய‌ச‌க்தியும் கேர‌ள‌த்தின் சில‌ ப‌குதிக‌ளை த‌மிழ்நாட்டோடு இணைக்க‌ வேண்டும் என்று உள‌றினான். இப்போது மீண்டும் ஒரு பிரிவினைவாதி ஒரு வெடியை கொளுத்தி போட்டு உள்ளான்.

Simon என்ற‌ சீமான் ந‌ம் சாஸ்தாவை புற‌க்க‌ணிக்க‌ வேண்டும் என்று கூவியுள்ளான். ப‌ல‌ நாட்க‌ள் க‌டும் விர‌த‌ம் இருந்து சாஸ்தாவை வ‌ழிப‌ட‌ "க‌ல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை" என்று அவ‌ர் புக‌ழ் பாடி செல்லும் ஹிந்துக்க‌ளை த‌டுக்க‌ இந்த‌ சீமான் யார்?

த‌ன் ப‌க்த‌ர்க‌ளுக்கு ஒரு வேத‌னை என்றால் அதை த‌டுக்க‌ ந‌ம் சாஸ்தா வ‌ர‌மாட்டாரா என்ன‌? அப்ப‌டி வ‌ராவிட்டால் அது அந்த‌ ப‌க்த‌னின் ஊழ்வினை என்ப‌து ந‌ம் அனைவ‌ருக்கும் தெரியும். மேலும் அந்த‌ ப‌க்தன் த‌ன் விர‌த‌ங்க‌ளை ஒழுங்காக‌ க‌டைபிடித்து இருக்க‌மாட்டான் என்ப‌தும் ந‌ம‌க்கு புரியும்.

ஆக‌வே சீமானே நீ உன் வேலையை பார்த்து கொண்டு செல். அநாவ‌சிய‌மாக‌ ஹிந்துக்க‌ள் சீண்டாதே என்று 80 கோடி ஹிந்துக‌ளின் சார்பில் க‌டுமையாக‌ எச்ச‌ரிக்கின்றேன். நீ திருந்தாவிட்டால் புழ‌லில் க‌ளி சாப்பிட‌ நேரிடும் என்ப‌தை புரிந்துகொள்.


வாழ்க‌ ஹிந்துக்க‌ள். சாமியே ச‌ர‌ண‌ம்.

Thursday, January 12, 2012

உடைக்கும் க‌ருணாநிதி

பார‌த‌ ம‌க்க‌ளின் எழுச்சியினால் வீட்டிற்கு அனுப்ப‌ப‌ட்ட‌ மைனாரிட்டி ஆட்சி ந‌ட‌த்திய‌ க‌ருணாநிதி இப்போது ந‌ம‌து நாட்டை கூறுபோட்டு விற்க‌ முடிவெடுத்துவிட்டார். ப‌ல‌ கோடி ஆண்டுக‌ளாக‌ ஒற்றுமையுட‌ன் ந‌ம‌து பார‌த‌ ம‌க்கள் வ‌சித்து வ‌ருகின்ற‌ன‌ர். அவ்வ‌ப்போது கிருஸ்துவ‌ மிஷின‌ரிக‌ளாலும், ஜிகாதிக‌ளாலும், திராவிட‌ குண்ட‌ர்க‌ளாலும் ச‌ண்டை ச‌ச்ச‌ர‌வு ஏற்ப‌டுவ‌து உண்டு. நாட்டின் முன்னேற்ற‌த்தையே குறிக்கோளாக‌ கொண்ட‌ ந‌ம்ம‌வ‌ர்க‌ளின் முய‌ற்சியினால் இந்த‌ தொந்த‌ர‌வுக‌ள் அட‌ங்கிவிடும். ந‌ம் பார‌த‌ம் எப்ப‌டி இவ‌ர்க‌ளால் துண்டாட‌படுகிற‌து என்ப‌தை ஸ்ரீமான் அர‌விந்த‌ன் அழ‌காக‌ விள‌க்கி உள்ளார்.

த‌மிழ‌க‌ கேர‌ள‌ எல்லையில் உள்ள‌ முல்ல‌ பெரிய ஆற்றை ப‌ற்றி தனி நாடு கோரும் சில‌ தீவிர‌வாதிக‌ள் ஒரு பிர‌ச்ச‌னையை கிள‌ப்பி விட்ட‌ன‌ர். அந்த‌ பிர‌ச்ச‌னையை மிக‌ லாவ‌க‌மாக‌ த‌ன‌க்கே உரிய‌ பேராற்ற‌லினால் உல‌கின் ஒரே த‌ங்க‌ தார‌கையான‌ ந‌ம் அம்மா அவ‌ர்க‌ள் தீர்த்து வைத்து விட்டார்.

த‌மிழ‌க‌ கேர‌ள‌ ம‌க்கள் முல்ல‌ பெரிய‌ ஆற்றின் பிர‌ச்ச‌னையை ம‌ற‌ந்து ஒற்றுமையாக‌ வாழ்ந்து வ‌ருகின்ற‌ன‌ர். அதை க‌ண்டு பொறுக்க‌ முடியாத‌ மைனாரிட்டி ஆட்சி புரிந்த‌ க‌ருணாநிதி கேர‌ள‌த்தின் சில‌ ப‌குதிக‌ளை த‌மிழ்நாட்டோடு சேர்க்க‌ வேண்டும் என்று ஒரு புதிய‌ பிர‌ச்ச‌னையை கிள‌ப்பி விட்டு உள்ளார். இது இப்போது தேவையா?

உடையும் பார‌த‌ம் என்ற‌ ஒரு சிற‌ந்த‌ நூலை எழுதிய‌ ந‌ம் ஸ்ரீமான் அர‌விந்த‌ன் பார‌த‌த்தை உடைக்கும் க‌ருணாநிதியை ப‌ற்றி "உடைக்கும் க‌ருணாநிதி" என்று ஒரு நூலை எழுதுமாறு 80 கோடி ஹிந்துக்க‌ளின் சார்பில் வேண்டுகின்றேன்.

வாழ்க‌ பார‌த‌ம். வீழ்க‌ க‌ருணாநிதி.

Monday, January 09, 2012

அந்த‌ண‌ர் புக‌ழ் பாடும் வீர‌ம‌ணி

பார‌த‌ தேச‌மான‌து எப்ப‌டி கிருஸ்துவ‌ மிஷின‌ரிக‌ளாலும், ஜிகாத்துக‌ளினாலும், ஈவேராவின் குண்ட‌ர்ப‌டையாலும் அல்ல‌ல்ப‌டுகின்ற‌து என்ப‌தை ஸ்ரீமான் அர‌விந்த‌ன் அற்புத‌மாக‌ ஒரு புத்த‌க‌த்தின் மூல‌ம் மீண்டும் விள‌க்கி உள்ளார். பார் புக‌ழும் அந்த‌ண‌ர், ம‌த‌ராஸ் மாகாண‌த்தில் அய்ரோப்பிய‌ யூத‌ர்க‌ள் போல‌ அக‌திக‌ள் ஆகின‌ர் என்ப‌து உள்ள‌ங்கை நெல்லிக்க‌னி. யார் இந்த‌ ச‌திசெய‌லுக்கு கார‌ண‌ம் என்ப‌தை இந்த‌ புத்த‌க‌ம் அழ‌காக‌ விள‌க்குகிற‌து.

இந்த‌ புத்த‌க‌த்திற்கு கிடைத்த‌ வ‌ர‌வேற்பை க‌ண்டு ச‌கிக்க‌ முடியாத‌ ஈவேரா கும்ப‌ல் வ‌ழ‌க்க‌ம் போல‌ த‌ன் இட‌த்தில் கூட்ட‌ம் கூட்டி ஏதேதோ பித‌ற்றின‌ர். நேற்று ந‌ட‌ந்த‌ கூட்ட‌த்திற்கு ந‌ண்ப‌ருட‌ன் சென்று இருந்தேன். வீர‌ம‌ணி பேசினார். அவ‌ர் ஈவேராவை மேற்கோள் காட்டி பேசுவார், ம‌த‌துவேஷிக‌ளை மேற்கோள் காட்டி பேசுவார் என்று நினைத்தால் அது புஸ்வான‌மாகிவிட்ட‌து.

நாள் தோறும் ந‌ட‌க்கும் எல்லா கெட்ட‌ காரிய‌ங்க‌ளுக்கு அந்த‌ண‌ர்தான் கார‌ண‌ம் என்று பேசும் ஈவேரா கும்ப‌ல் இந்த‌ கூட்ட‌த்தில் ந‌ம்ம‌வ‌ரின் புத்த‌க‌ங்க‌ளைதான் மேற்கோள் காட்ட‌ வேண்டிய‌ நிலைமைக்கு த‌ள்ளபட்ட‌ன‌ர். மேலும் வீர‌ம‌ணி அவ‌ரின் ஆசிரிய‌ரான‌ ந‌ம்ம‌வ‌ரை புக‌ழோ புக‌ழ் என்று புக‌ழ்ந்து விட்டார். என்னடா இது நாம் இருக்கும் இட‌ம் க‌பாலீஸ்வ‌ர‌ர் கோவிலா அல்ல‌து ஈவேரா திட‌லா என்று ஒரு நிமிட‌ம் திகைத்துவிட்டேன். அய்யோ பாவ‌ம் ந‌ம்மவ‌ரை தூற்ற‌ கூட‌ ந‌ம்ம‌வ‌ரின் புத்த‌க‌ங்க‌ளைதான் உப‌யோக‌ப‌டுத்த‌ வேண்டிய‌ நிலைக்கு ஈவேரா கும்ப‌ல் வ‌ந்து விட்ட‌து.

வாழ்க‌ அந்த‌ண‌ர். வீழ்க‌ ஈவேரா.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za