அம்மான்னா சும்மாவா?

Tuesday, February 20, 2007

கள்ள ஓட்டு போட்ட தே.மு.தி.க?

சமீபத்தில் நடந்த சென்னை மாநகராட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திருடர்கள் கழகம் 5 இடங்களில் வெற்றி பெற்றது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த வெற்றி பெருவாரியான கள்ள ஓட்டுக்கள் மூலம் கிடைத்ததா?

நாட்டின் ஒரே நடுநிலை நாளேடான தினமலர் செய்தி
"மாநகராட்சி 19வது வார்டில் தே.மு.தி.க., வெற்றி பெறும் சூழல் இருந்தும், கடைசி நேரத்தில் 915 ஓட்டுகள் போலி ஓட்டு சீட்டுகள் என ஒதுக்கப் பட்டதால் வெற்றி வாய்ப்பு கைநழுவிப் போனது.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 67 வார்டுகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மறு தேர்தல் நடத்தப்பட்டது. இவ்வாறு நடத்தப்பட்ட 19வது வார்டில் பா.ம.க., தரப்பில் ராஜேந்திரன், தே.மு.தி.க.,வில் சவுந்திரபாண்டியன் உள்ளிட்ட 9 பேர் போட்டியிட்டனர். இந்த வார்டில் பா.ம.க.,வை விட தே.மு.தி.க., வெற்றி பெறும் சூழல் இருந்தது.

எனினும், தேர்தல் நாளன்று தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சகட்டு மேனிக்கு கள்ள ஓட்டுகளை போட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஓட்டு எண்ணிக்கையின் போது தேர்தல் அதிகாரி கையெழுத்து போடாத ஓட்டு சீட்டுகள் அதிகமாக இருந்தன. இதை பார்த்த தே.மு.தி.க.,வினர் அனைத்து ஓட்டு சீட்டுகளையும் சரிபார்த்த பின்பே எண்ண வேண்டும் என்று கூச்சல் போட்டனர். உடனடியாக மாநகராட்சி கமிஷனர், தேர்தல் பார்வையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், ஓட்டு சீட்டுகளை சரிபார்த்த போது 915 ஓட்டு சீட்டில் தேர்தல் அதிகாரியின் போலி கையெழுத்து இருப்பதை கண்டனர். அந்த ஓட்டுகளை செல்லாத ஓட்டுகளாக அறிவிக்கப்பட்டன. இதனால், தே.மு.தி.க., வேட்பாளர் வெற்றி வாய்ப்பை இழந்தார். இச்சம்பவத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எண்ணும் பணி நிறுத்தப்பட்டது."

தி.மு.க, பா.ம.க சகட்டு மேனிக்கு கள்ள ஓட்டு போட்டார்கள் என்கிறது தினமலர். ஆனால் 915 கள்ள ஓட்டால் தே.மு.தி.க வின் வெற்றி பாதிக்கப்பட்டது என்கிறது அதே பத்திரிக்கை. அப்படி என்றால் தி.மு.க, பா.ம.கவினர் தே.மு.தி.கவிற்கு கள்ள ஓட்டு போட்டார்களா (அ) தே.மு.தி.கவினர் கள்ள ஓட்டு போட்டதை தி.மு.க, பா.ம.க போட்டதாக எழுதியதா?

என்னமோ நடக்குது. மர்மமா இருக்குது.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za