அம்மான்னா சும்மாவா?

Monday, November 19, 2007

மக்களின் மனதில் உயர்ந்த கமலம்

ஹிந்துஸ்தானத்தின் பாரம்பரியத்தை காப்பதை தன் லட்சியமாக கொண்ட ஒரே கட்சியாக பா.ஜ.க விளங்கி வருகின்றது. அதன் முன்னணி தலைவர்கள் தேசபற்று மிக்க சேவை ஸ்தாபனமான ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்போடு தொடர்பு உடையவர்கள். அதன் காரணமாக தேச சேவை என்ற லட்சிய குறிக்கோள் பா.ஜ.க தலைவர்களிடம் அதிகம் உண்டு.


இன்று அரசியல் என்பது சாக்கடையாக மாறிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் மெய்னோவின் காங்கிரஸ் கட்சியும், சீன ஏஜண்டுகளின் கம்யூனிஸ்டு கட்சியும் ஆகும். இந்த சாக்கடையை சுத்தம் செய்ய முன்வந்தனர் பா.ஜ.கவினர். நீதி, நியாயம், நேர்மை, தேசபக்தி, தெய்வீகம் என்ற பல கூற்றுகளின் படி ராஜதர்ம ஆட்சி நடத்துபவர்கள் பா.ஜ.கவினர். பல காலமாக அரசியல்வாந்திகளின் ஆட்சியை கண்டு வந்த மக்களுக்கு ஒரு வித்தியாசமான ஆட்சியை பா.ஜ.க வழங்கியது. உலகிலேயே ஒரு வித்தியாசமான கட்சி என்ற பெயரை பா.ஜ.க பெற்றது. மக்கள் இடையே அதன் செல்வாக்கு பல்கி பெருகியது. பதவி ஆசை என்ற வார்த்தையை அலட்சியம் செய்த ஒரே கட்சி பா.ஜ.கதான் என்பது அனைவரும் அறிந்த உண்மை.


பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் ஜனதாதளம் ஆட்சி செய்து வந்தது. தேவகவுடாவின் குடும்ப சண்டையால் அங்கே அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அதை வைத்து காங்கிரஸ் மீண்டும் ஆட்சி பொறுப்பிற்கு வரலாம் என்று பகல் கனவு கண்டது. 80 கோடி ஹிந்துக்களும் காங்கிரஸ் மற்றும் ஜனதாதள கட்சியினரின் பதவி ஆசையை கண்டு முகம் சுளித்தனர். தென்னகத்தில் ஏற்கனவே மூன்று மாநிலங்களில் காட்டாச்சி நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். நாட்டை துண்டாட கிருத்துவ மிஷினரிகளின் பணம் புகுத்து விளையாடுவதை எற்கனவே சொல்லி இருந்தேன். உலகின் நவீன சிலிக்கான் வேலி என்று அழைக்கபடும் பெங்களூரு இவர்கள் கையில் மாட்டினால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விடும் என்று மக்கள் அஞ்சி நடுங்கினர்.


இப்படிபட்ட இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாட்டை காப்பாற்ற பா.ஜ.கவால் மட்டுமே முடியும் என்று கர்நாடக மக்கள் நம்பினர். பா.ஜ.க சேவை தங்களுக்கு தேவை என்று பல கோடி கர்நாடக மக்கள் கிளர்ந்து எழுந்தனர். பொங்கி எழுந்த மக்கள் வீதிகளை நிரப்பினர். பா.ஜ.க ஆட்சி ஏற்படுவதை தடை செய்ய தன்னால் முடிந்த வரை மெய்னோ போராடினார். மக்கள் சக்தியின் முன் ரோம ராணியின் தந்திரம் எவ்வளவு நாள் தாங்கும். அரசு பதவி மேல் சிறு துளி அளவேனும் ஆசைபடாத ஸ்ரீமான் எடியூரப்பா பல கோடி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க முதல்வர் பதவி ஏற்க சம்மதம் தெரிவித்தார். வேறு வழி இல்லாமல் பா.ஜ.க ஆட்சிக்கு வருவதை மத்திய அரசு அனுமதித்தது.


கோடானு கோடி மக்களின் ஆதரவோடு ஸ்ரீமான் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவி ஏற்றார். கர்நாடகம் மட்டுமன்றி பாரதமே அதை கொண்டாடியது. தமிழக மக்களும் காவிரி பிரச்சனை இனிமேல் ஏற்படாது என்று மகிழ்ந்தனர். தமிழ் புலவர்கள் திருவள்ளுவரின் சிலையானது பெங்களூருவில் விரைவில் திறக்கபடும் என்று உவகை அடைந்தனர். வலைபதிவர்களும் தங்களின் மகிழ்ச்சியை பதிவுகளின் மூலம் வெளியிட்டனர்.


ஆனால் இந்த மகிழ்ச்சி சில நாட்களே நீடித்தது. பாரதம் வல்லரசாக உயர்ந்து வருவதை கண்டு பொறுக்க முடியாத கிருத்துவ மிஷினரிகளும், முகமதியர்களும் பா.ஜ.க அரசுக்கு ஆதரவு அளித்து வந்த ஜனதாதள கட்சியினரை விலைக்கு வாங்கினர். ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்க வைத்தனர். இதனால் பா.ஜ.க ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. பதவி என்பது தன் ..ருக்கு சமானம் என்று வீர முழக்கமிட்டார் ஸ்ரீமான் எடியூரப்பா. போடா ஜாட்டான்களே என்று கூக்குரலிட்டு தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். 80 கோடி ஹிந்துக்களும் அவரின் உன்னத செயலால் தலை நிமிர்ந்து நடை போடலாம்.


ஸ்ரீமான் எடியூரப்பாவின் உயிரை குறி வைத்து பில்லி, சூன்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாக ஹிந்து நாளிதழ் தெரிவித்து உள்ளது. அவரின் உயிரை காப்பாற்ற 80 கோடி ஹிந்துக்களும் ஆங்காங்கே "சோம வாஜபேயி" யாகம் செய்வோம்.


வாழ்க எடியூரப்பா. வீழ்க திம்மிக்கள்.

Sunday, November 11, 2007

ஹிந்துஸ்தானத்தை பிரிக்க முயலும் கயவர்கள்

ஒற்றுமையாக வாழ்ந்து வந்த பாரத மக்கள் இடையே "ஜாதி" என்ற கொடுமையான நோயை பரப்பியவர்கள் கிருத்துவ மிஷினரிகள் என்று பல முறை சொல்லி உள்ளேன். ஹிந்துஸ்தானத்தின் வெற்றியை கிருத்துவர்களாலும், முகமதியர்களாலும் தாங்க முடியவில்லை என்று எழுதி வந்தேன். நான் சிலரை கிண்டல் செய்து எழுதும் காமெடி பதிவர் என்று சில திம்மிகள் கருதி வந்தனர். காந்திய வழியில் பீடு நடை போடும் ஒரே நடுநிலை பத்திரிக்கையான தினமலரில் வந்து இருக்கும் செய்தியை படியுங்கள்.

இந்தியா ஒரு வல்லரசாக உருவாகி வருவது அமெரிக்காவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு இந்தியா; இயற்கை வளம் அதிகம்; மனித சக்தி ஏராளம்! அணுகுண்டு செய்துவிட்டோம்! உலகின் நான்காவது பெரிய ராணுவ பலம் பெற்ற நாடாகி விட்டோம் நாம்! எரிவாயு - பெட்ரோல் கிடைக்க ஆரம்பித்து விட்டது; உணவு தானியங்களுக்கு முன்பு போல் திருவோட்டை ஏந்தி வெளிநாடுகளிடம் செல்லும் நிலை இப்போது இல்லை நம்மிடம். இவை எல்லாம் அமெரிக்காவின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளன!

இந்தியா ஒரே நாடாக இருந்தால், இன்னும் சில வருடங்களில் தனக்கு சமமாகவோ, தனக்குப் போட்டியாகவோ வந்துவிடக் கூடும்; இதன் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதை புரிந்துகொண்ட அமெரிக்க அரசு, இந்தியாவைத் துண்டாட பல வழிகளிலும் முயன்று வருகிறது. அவற்றில் ஒன்றாக நான் சமீபத்தில் கேள்விப்பட்டது.

இந்தியாவில் உள்ள ஜாதிகள், அவற்றின் உட்பிரிவுகள் பற்றியும், எந்த ஜாதிக்கு எந்த ஜாதி எதிர், யாருக்கும், யாருக்கும் நல் உறவு என்பது பற்றியும் ஆராய்ச்சி செய்ய ஏராளமாகப் பணம் ஒதுக்கி உள்ளதாம்!

இந்தப் பணத்தை உதவித் தொகையாக இங்குள்ள ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகத் தாராளமாக அளித்து ஆராய்ந்து வருகிறதாம்! இதேபோல மொழி உணர்வுள்ள இயக்கங்கள், சங்கங்கள், குழுக்கள் பற்றியும் ஆராய்ச்சி செய்ய உதவி வருகிறதாம்.

"யோவ் அந்து...இதனால அமெரிக்கக்காரனுக்கு என்னய்யா பலன்?' என்று கேட்கிறீர்களா?

இப்போ, அமெரிக்கா செலவு செய்யும் பணம் அனைத்தும் மூலதனம். யாருக்கு யார் எதிரி என்பதைத் தெரிந்து கொண்டு, அவர்களில் பலம் பெற்றவர்களுக்கு நேரடியாகவும், பலம் அதிகம் இல்லாதவர்களுக்கு மறைமுகமாகவும் உதவி, உள்நாட்டுக் கலவரத்தை ஏற்படுத்தி, பல உயிர்களை மேலுலகம் அனுப்பி, ஒரு மாநிலத்தவனை, இன்னொரு மாநிலத்தவன், ஒரு ஜாதிக்காரனை, ஒரு மதத்தவனை மற்ற ஜாதி, மத மக்கள் பகையாளியாக நோக்க வைத்து, "அல்டிமேட்டாக' நாட்டைத் துண்டாடுவதுதான் அவர்கள் நோக்கம்!

இதன் முதல் கட்டம் செயல்பட ஆரம்பித்து விட்டது. காஷ்மீரில் தீவிரவாதிகளை பாகிஸ்தான் மூலம் தூண்டிவிட்டு, காஷ்மீரில் சிறுபான்மையினராக இருப்பவர்களை காஷ்மீரை விட்டு துரத்தி அடித்துள்ளது. தமது தாய் நாட்டிலேயே அவர்கள் அகதிகளாக நாட்டின் பல பாகங்களுக்கு சிதறிச் சென்றுள்ளனர். இதே செயல்முறையைப் பயன்படுத்தி தமிழகத்திலும் வாலாட்ட திட்டம் வகுத்து வருவதாகக் கேள்விப்பட்டேன்!

இந்தியனே! நீ விழித்துக் கொள்ளும் நேரம்
நெருங்கிவிட்டது; இனியும் தூங்காதே!


(நன்றி தினமலர் - வாரமலர்)

தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக பாவிக்கும் பா.ஜ.கவின் ஆட்சி பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் இன்று மலர்கின்றது. அதுபோல நாடு முழுவதும் ஹிந்துக்களின் ஆட்சி ஏற்பட 80 கோடி ஹிந்துக்களும் ஒன்றினைந்து பாடுபடுவோம்.

வாழ்க ஹிந்துக்கள். வீழ்க திம்மிக்கள்.

Tuesday, November 06, 2007

விரைவில் அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் மலரும்

தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் தலையாய திம்மியான கொலைஞரின் போக்கை கண்டித்து அம்மா வெளியிட்டு உள்ள அறிக்கை.

இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் அண்மையில் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசமைப்பு சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட முதல்வர் கருணாநிதி தமிழக அரசின் செய்தித் துறை மூலமாக அதிகாரபூர்வமாக, கவிதை வடிவில் அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரிவித்து இருந்தார்.

இதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து மத்திய அரசு உடனடியாக கருணாநிதி தலைமையிலான திமுக அரசை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன்.

அதற்கு கருணாநிதி தனக்கே உரித்தான பாணியில் எனது உடலில் தமிழ் ரத்தம் ஓடுகிறது. அதனால்தான் இவ்வாறு எழுதினேன் என்கிறார். இவர் உடலில் மட்டும் தான் தமிழ் ரத்தம் ஓடுகிறதா? தான் செய்த தேசவிரோத செயலுக்கு தமிழன் என்று பெயரை இழுப்பதற்கு கருணாநிதிக்கு வெட்கம் இல்லையா?

எனது உடலிலும் தமிழ் ரத்தம்தான் ஓடுகிறது.

ஆனால் கருணாநிதிக்கு ஓடுகிற மாதிரி தேசத் துரோக ரத்தம் எனக்கு ஓடவில்லை. சிலேடையாக பதில் சொல்வதன் மூலம் கருணாநிதி தன்னுடைய தேச விரோதச் செயலை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது. ராஜீவ் காந்தியை கொன்ற விடுதலைப் புலிகளின் இயக்கத்தை வரிந்து கட்டிக்கொண்டு ஆதரிக்கின்ற கருணாநிதியின் இத்தகைய செயலை
மன்னிக்கவே முடியாது.

கருணாநிதி எந்த அர்த்தத்தில் இவ்வாறு சொல்கிறார் என்பது தெரியும். நான் மைசூரில் பிறந்ததை வைத்து இவ்வாறு சொல்கிறார். நான் மைசூரில் பிறந்தாலும் தமிழ் குடும்பத்தில் தான் பிறந்தேன்.

தமிழ் ரத்தம் தான் எனது உடலில் ஓடுகிறது. எனது தாய்மொழி தமிழ்தான். இலங்கையில் பிறந்தவர்களை தமிழர்கள் என ஏற்றுக்கொள்ளும்போது இந்தியாவில் ஒரு பகுதியாக உள்ள மைசூரில் பிறந்தவரையும் தமிழர் என ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் மீது எனக்கும் அதிமுகவுக்கும் எப்போதும் பரிவும் பாசமும் உண்டு. இலங்கைத் தமிழர்கள் அமைதியுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் கருணாநிதியோ, கடந்த 2 ஆண்டு காலமாக இலங்கைத் தமிழர்கள் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்தபோதும் பலர் உயிரிழந்த போதும் வருத்தம் தெரிவிக்கவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மறைவிற்கு மட்டும் தற்போது இரங்கல் தெரிவித்து இருக்கிறார். எனக்கும் கருணாநிதிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் நான் இலங்கைத் தமிழர்களை ஆதரிக்கிறேன். கருணாநிதி விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார்.

ஆட்சி பறிபோய்விடுமோ என்ற பயத்தில் இப்போது தமிழ், தமிழ் உணர்வு என்று திசைதிருப்ப முயல்கிறார். வைகோ இரங்கல் தெரிவித்து இருக்கிறாரே என்கிறார்
கருணாநிதி. வைகோ இந்திய அரசமைப்புச் சட்டப்படி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அரசமைப்புச் சட்டப்படி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல்வர் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இரங்கல் தெரிவித்து புகழ்வது தேசத் துரோக குற்றமாகும்.

இந்த விஷயத்தில் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதால் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அதிமுக அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தால் முடிவு என்னவாக இருக்கும் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். 80 கோடி ஹிந்துக்களும் மகிழும் வகையில் அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

வாழ்க அம்மா. வீழ்க திம்மிக்கள்.

Monday, November 05, 2007

பூனேவில் இளம் ஹிந்து பெண் ....த்து படுகொலை

ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்கள் நாள்தோறும் படுகொலை செய்யபட்டு வரும் செய்தியை நாம் அனைவரும் அறிவோம். முதலில் மைனாரிட்டி ஆட்சி நடக்கும் தமிழகத்தில் இந்த படுகொலைகள் அரங்கேறின. பிறகு சீன ஏஜண்டுகள் ஆட்சி புரியும் மேற்கு வங்காளத்தில் நடைபெற துவங்கின. இப்போது மெய்னோவின் கட்சி ஆட்சி புரியும் மஹாராஷ்டிரத்திலும் படுகொலைகள் நடக்க துவங்கிவிட்டன.

பல லட்சம் ஆண்டுகாலத்திற்கு முன்பே நாம் கணித துறையில் முன்னோடிகளாக விளங்கி வந்தோம். நம் பாரம்பரிய மொழியான சமஸ்கிருதம்தான் கணினி துறைக்கு சிறந்த மொழி என்று வல்லுனர்களால் அடையாளம் காட்டபட்டு உள்ளது. இதன் பலனாக பாரதம் கணினி துறையில் பெரும் வளர்ச்சி அடைந்து வருகின்றது. மேலை நாட்டு கிருத்துவர்களுக்கு பயனீட்டாளர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்பது சரியாக தெரியாது. அதனால்தான் விருந்தோம்பலுக்கு புகழ் பெற்ற ஹிந்துக்களிடம் கால் சென்டர் போன்ற வேலைகள் ஒப்படைக்க படுகின்றது. இதை கண்டு கிருத்துவர்களும், முகமதியர்களும் பொறாமை படுகின்றனர். நம் வளர்ச்சியை தடுக்க வேலைக்கு வரும் இளம் ஹிந்து பெண்களை படுகொலை செய்து வருகின்றனர்.

பூனேவில் இரவு நேர வேலைக்கு சென்ற ஒரு இளம் ஹிந்து பெண் மானபங்க படுத்தபட்டு படுகொலை செய்யபட்டுள்ளார். ஹிந்துஸ்தானத்தில் ஒரு இளம் ஹிந்துவிற்கு ஏற்பட்ட கொடுமையை பாருங்கள். மஹாராஷ்டிரத்தின் வீர வேங்கையான ஸ்ரீமான் பால் தாக்கரேவின் ஆட்சி நடைபெற்று இருந்தால் இதுபோன்ற கொடுமை நிகழ்ந்து இருக்குமா? சற்று யோசித்து பாருங்கள். சீரழிந்து வரும் ஹிந்துக்களின் நிலையை மேம்படுத்த 80 கோடி ஹிந்துக்களும் ஒன்றினைந்து பாடுபடுவோம். அம்மா போன்ற நாடு போற்றும் நல்லவர்களை ஆட்சி பொறுப்பில் அமர்த்துவோம் என்று சபதம் எடுப்போம்.

வாழ்க ஹிந்துக்கள். வீழ்க திம்மிக்கள்.

பின்குறிப்பு: போலி பதிவுகளை கண்டு ஏமாறவேண்டாம். நான் யாருக்கும் மின்னஞ்சல் அனுப்பி பதிவு இடுமாறு கேட்கவில்லை. தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் கொலைஞரின் பூத் ஏஜண்ட ஆன லக்கிலுக் என்ற பதிவரின் விவேகம் அற்ற செயலை வன்மையாக கண்டிக்கின்றேன்.

Thursday, November 01, 2007

ஹிந்துக்களை பிரிக்கும் கொலைஞர்

ஹிந்து மதம் பல லட்சம் ஆண்டுகள் பழமையானது. பாரதத்தில் ஹிந்துக்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். நமது புராணங்களிலும், வேதங்களிலும், இதிகாசங்களிலும் இதை பற்றி தெளிவாக குறிப்பிட்டு உள்ளனர். மக்கள் அனைவரும் அவர்களுக்கு என்று ஒதுக்கபட்ட கடமையை செய்து கொண்டு சுகமாக வாழ்ந்து வந்தனர். ஸ்ரீகிருஷ்ணர் இதை தெளிவாக தன் உபதேசத்தில் "கடமையை செய். பலனை எதிர்பார்காதே" என்று கூறியுள்ளார்.

இவ்வாறாக ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருப்பது வந்தேறிகளான கிருத்துவ மிஷினரிகளின் கண்களை உறுத்தியது. நம்மிடையே பிரிவுகள் ஏற்பட்டாலதான் அவர்கள் சுகமாக வாழ முடியும் என்று உணர்ந்தனர். அதன் காரணமாக "ஜாதி" என்ற கொடிய நோயை நம்மிடையே பரப்பிவிட்டனர். ஹிந்துக்களின் இடையே "நீ உயர்ந்தவன்"," நீ தாழ்ந்தவன்" என்று வெடியை கொளுத்தி போட்டனர். இந்த கடமையை செய்யும் நீ, வேறு கடமைகளை செய்தால் என்ன என்று தூண்டி விட்டனர். வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பிய அப்பாவி ஹிந்துக்கள் கிருத்துவ மிஷினரிகளின் பேச்சை நம்ப துவங்கினர்.

இந்த சூழ்ச்சி வெற்றி அடையும் என்று அடையாளம் கண்டு கொண்ட கயவர்கள் அதை நன்றாக விசிறி, தூபம் இட்டு பெரும் தீயாக உருவாக்கி விட்டனர். பிறகு வந்த தலையாய திம்மியான தாடிகிழவனும் அவனின் அல்லகைகளும் இந்த பிரித்தாளும் கலையை நன்கு உபயோகபடுத்த தொடங்கிவிட்டனர். இந்த செயல்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த ஹிந்துக்கள் இடையே பெரும் பிளவுகளை ஏற்படுத்திவிட்டது.

மக்கள் தடம் மாறுவதை கண்டு மனம் வெதும்பிய மூதறிஞர் ஸ்ரீமான் ராஜாஜி அவர்கள், ஒரு அருமையான திட்டத்தினை கொண்டு வந்தார். தங்களது கடமையில் இருந்து விலக நினைத்த ஹிந்துக்கள் அனைவரும் தங்களுக்கு என்று ஒதுக்கபட்ட கடமைகளை நன்றாக கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் அந்த திட்டம் இருந்தது. ஆனால் இந்த திம்மிக்கள் அதை குலகல்வி திட்டம் என்று பெயரிட்டு எதிர்க்க ஆரம்பித்து விட்டனர்.

இப்போது என்ன நடக்கின்றது என்று சற்று யோசியுங்கள். டாக்டர் மகன் டாக்டர் ஆகின்றார். எஞ்சினியர் மகள் எஞ்சினியர் ஆகின்றார். சினிமா சம்பந்தபட்ட நபரின் மகன் சினிமா துறையில் ஈடுபடுகின்றார். அரசியல்வாதியின் மகள் அரசியலில் நுழைகின்றார். இதைதான் மூதறிஞர் பல ஆண்டு காலம் முன்பே சொல்லி வந்தார். ஆனால் அதை யாரும் செவிமடுக்கவில்லை. அதன் பலன் என்ன?. மக்கள் தங்களின் கடமைகளை மறந்தனர். இன்று விவசாயம் செய்வதற்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இந்த விஷயத்தை பிறகு விவாதிக்கலாம்.

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த கயவன் கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளான்.
தி.மு.க., எப்போதுமே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடுகின்ற, வாதாடுகின்ற, பாடுபடுகின்ற இயக்கம். அந்த அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், ஆதிதிராவிட மக்களுக்கும், குறிப்பாக நான்கைந்து ஆண்டுகளில் என்ன செய்தோம் என்பதை 10.8.1973 அன்று சட்டமன்றத்தில் பட்டியலிட்டுக் காட்டினேன்.
தமிழ் மாநிலத்திற்கு க்ரூப் - 1 சர்வீஸ் தேர்வு எழுதுகிறார்களே - தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் தேர்ந்தெடுக்கிறதே - அதிலே எப்படிப்பட்டவர்கள் டெபுடி கலெக்டர்களாக, டி.எஸ்.பி.,க்களாக, ஜே.சி.டி.ஓ.,க் களாக, டெபுடி ரெஜிஸ்ட்ரார்களாக யார் யார் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பேரவையிலே தெரிவித்தேன். கிட்டத்தட்ட 96 பேர்.
ஆதிதிராவிடர்கள் - தாழ்த்தப்பட்டவர்கள் - 18 பேர்.
முக்குலத்தோர் - 17 பேர்.
வன்னியர் மொத்தம் 11 பேர்.
நாடார் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மொத்தம் 8 பேர்.
பிள்ளைமார் வகுப்பைச் சேர்ந்தவர் ஒருவர்.
முஸ்லிம் மொத்தம் 7 பேர்கள்.
கவுரா மொத்தம் 3 பேர்கள்.
படகா - டெபுடி கலெக்டர் ஒருவர்.
வீரக்குடி வெள்ளாளர் - டெபுடி கலெக்டராக இரண்டு பேர்.
சலவைத் தொழிலாளி - டெபுடி கலெக்டராக 2 பேர்.
பார்கவ குல நத்தமான் டெபுடி கலெக்டர் ஒருவர், டி.எஸ்.பி., ஒருவர், ஆக இரண்டு பேர்.
துளுவ வெள்ளாளர் - டெபுடி கலெக்டராக ஒருவர்.
குரும்பர் டெபுடி கலெக்டராக ஒருவர்.
மூப்பனாரில் - டெபுடி கலெக்டர் ஒருவர்,
தொண்டமானில் - டெபுடி கலெக்டர் ஒருவர்,
வடுகரில் டெபுடி கலெக்டராக ஒருவர், டி.எஸ்.பி.,யாக ஒருவர் என்று இரண்டு பேர்.
தேவாங்கரில் டி.எஸ்.பி., ஒருவர்
வலையரில் ஜே.சி.டி.ஓ., ஒருவர்
அருந்ததியரில் ஜே.சி.டி.ஓ. ஒருவர்
யாதவரில் மொத்தம் நான்கு பேர்கள்.
சேனைத் தலைவரில் டெபுடி ரிஜிஸ்ட்ரார் ஒருவர்,
வேட்டுவக் கவுண்டரில் டெபுடி ரிஜிஸ்ட்ரார் ஒருவர்
மருத்துவரில் டெபுடி ரிஜிஸ்ட்ரார் ஒருவர்
ஒட்டரில் டிஸ்ட்ரிக்ட் ரிஜிஸ்ட்ரார் ஒருவர்
என்று இந்தப் பட்டியலை நான் பேரவையில் எடுத்துச் சொன்ன பிறகுதான், தி.மு.கழக ஆட்சிக்கே பள்ளம் தோண்டுகின்ற வேலையிலே ஒரு கூட்டத்தினர் ஈடுபட்டார்கள். அவர்கள் யார் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை.

அட முட்டாளே, நீ ஹிந்துக்களுக்கு சுமார் 80 இடங்களும், முகமதியருக்கு 7 இடமும், மீதி கிருத்துவருக்கும் என்று சொல்லி இருந்தால் யார் உனக்கு பள்ளம் வெட்ட போகின்றார்கள். ஒரு ஹிந்துவிற்கு வாய்ப்பு வந்தால் மீதம் உள்ள பல கோடி ஹிந்துக்கள் நிச்சயம் மகிழ்வார்கள். ஹிந்துக்களை நீ ஜாதியின் பெயரால் பிளவு படுத்த நினைத்தாய். ஹிந்துமதத்தின் மீது அபிமானம் கொண்டவர்கள் இதை பார்த்து கொண்டு சும்மா இருப்பார்களா? தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது போல் உன்னை எதிர்க்க ஆரம்பித்தனர். உடனே ஒரு கூட்டத்தினர் குழி வெட்டினர் என்று உளறுவதா?

ஹிந்துக்களே ஒன்று படுங்கள். ஜாதியின் பெயரால் நம்மை பிளவு படுத்த நினைக்கும் திம்மிகளை விரட்டி அடிங்கள். பதிவுலக வாரியாராகிய ஸ்ரீ உண்மை தமிழன் அவர்கள் சொன்னது போல தொகுதி, வேலை, கல்வி போன்றவற்றில் "ஜாதி" என்ற விஷ கிருமியை பரப்ப வேண்டாம். நமக்கு என்று வகுக்கபட்ட கடமைகளை தொடர்ந்து செய்யுங்கள். நாம் அனைவரும் ஹிந்துக்கள் என்ற உணர்வை ஊட்டி வளர்போம்.

வாழ்க ஹிந்துக்கள். வீழ்க திம்மிகள்.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za