அம்மான்னா சும்மாவா?

Monday, November 19, 2007

மக்களின் மனதில் உயர்ந்த கமலம்

ஹிந்துஸ்தானத்தின் பாரம்பரியத்தை காப்பதை தன் லட்சியமாக கொண்ட ஒரே கட்சியாக பா.ஜ.க விளங்கி வருகின்றது. அதன் முன்னணி தலைவர்கள் தேசபற்று மிக்க சேவை ஸ்தாபனமான ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்போடு தொடர்பு உடையவர்கள். அதன் காரணமாக தேச சேவை என்ற லட்சிய குறிக்கோள் பா.ஜ.க தலைவர்களிடம் அதிகம் உண்டு.


இன்று அரசியல் என்பது சாக்கடையாக மாறிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் மெய்னோவின் காங்கிரஸ் கட்சியும், சீன ஏஜண்டுகளின் கம்யூனிஸ்டு கட்சியும் ஆகும். இந்த சாக்கடையை சுத்தம் செய்ய முன்வந்தனர் பா.ஜ.கவினர். நீதி, நியாயம், நேர்மை, தேசபக்தி, தெய்வீகம் என்ற பல கூற்றுகளின் படி ராஜதர்ம ஆட்சி நடத்துபவர்கள் பா.ஜ.கவினர். பல காலமாக அரசியல்வாந்திகளின் ஆட்சியை கண்டு வந்த மக்களுக்கு ஒரு வித்தியாசமான ஆட்சியை பா.ஜ.க வழங்கியது. உலகிலேயே ஒரு வித்தியாசமான கட்சி என்ற பெயரை பா.ஜ.க பெற்றது. மக்கள் இடையே அதன் செல்வாக்கு பல்கி பெருகியது. பதவி ஆசை என்ற வார்த்தையை அலட்சியம் செய்த ஒரே கட்சி பா.ஜ.கதான் என்பது அனைவரும் அறிந்த உண்மை.


பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் ஜனதாதளம் ஆட்சி செய்து வந்தது. தேவகவுடாவின் குடும்ப சண்டையால் அங்கே அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அதை வைத்து காங்கிரஸ் மீண்டும் ஆட்சி பொறுப்பிற்கு வரலாம் என்று பகல் கனவு கண்டது. 80 கோடி ஹிந்துக்களும் காங்கிரஸ் மற்றும் ஜனதாதள கட்சியினரின் பதவி ஆசையை கண்டு முகம் சுளித்தனர். தென்னகத்தில் ஏற்கனவே மூன்று மாநிலங்களில் காட்டாச்சி நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். நாட்டை துண்டாட கிருத்துவ மிஷினரிகளின் பணம் புகுத்து விளையாடுவதை எற்கனவே சொல்லி இருந்தேன். உலகின் நவீன சிலிக்கான் வேலி என்று அழைக்கபடும் பெங்களூரு இவர்கள் கையில் மாட்டினால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விடும் என்று மக்கள் அஞ்சி நடுங்கினர்.


இப்படிபட்ட இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாட்டை காப்பாற்ற பா.ஜ.கவால் மட்டுமே முடியும் என்று கர்நாடக மக்கள் நம்பினர். பா.ஜ.க சேவை தங்களுக்கு தேவை என்று பல கோடி கர்நாடக மக்கள் கிளர்ந்து எழுந்தனர். பொங்கி எழுந்த மக்கள் வீதிகளை நிரப்பினர். பா.ஜ.க ஆட்சி ஏற்படுவதை தடை செய்ய தன்னால் முடிந்த வரை மெய்னோ போராடினார். மக்கள் சக்தியின் முன் ரோம ராணியின் தந்திரம் எவ்வளவு நாள் தாங்கும். அரசு பதவி மேல் சிறு துளி அளவேனும் ஆசைபடாத ஸ்ரீமான் எடியூரப்பா பல கோடி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க முதல்வர் பதவி ஏற்க சம்மதம் தெரிவித்தார். வேறு வழி இல்லாமல் பா.ஜ.க ஆட்சிக்கு வருவதை மத்திய அரசு அனுமதித்தது.


கோடானு கோடி மக்களின் ஆதரவோடு ஸ்ரீமான் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவி ஏற்றார். கர்நாடகம் மட்டுமன்றி பாரதமே அதை கொண்டாடியது. தமிழக மக்களும் காவிரி பிரச்சனை இனிமேல் ஏற்படாது என்று மகிழ்ந்தனர். தமிழ் புலவர்கள் திருவள்ளுவரின் சிலையானது பெங்களூருவில் விரைவில் திறக்கபடும் என்று உவகை அடைந்தனர். வலைபதிவர்களும் தங்களின் மகிழ்ச்சியை பதிவுகளின் மூலம் வெளியிட்டனர்.


ஆனால் இந்த மகிழ்ச்சி சில நாட்களே நீடித்தது. பாரதம் வல்லரசாக உயர்ந்து வருவதை கண்டு பொறுக்க முடியாத கிருத்துவ மிஷினரிகளும், முகமதியர்களும் பா.ஜ.க அரசுக்கு ஆதரவு அளித்து வந்த ஜனதாதள கட்சியினரை விலைக்கு வாங்கினர். ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்க வைத்தனர். இதனால் பா.ஜ.க ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. பதவி என்பது தன் ..ருக்கு சமானம் என்று வீர முழக்கமிட்டார் ஸ்ரீமான் எடியூரப்பா. போடா ஜாட்டான்களே என்று கூக்குரலிட்டு தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். 80 கோடி ஹிந்துக்களும் அவரின் உன்னத செயலால் தலை நிமிர்ந்து நடை போடலாம்.


ஸ்ரீமான் எடியூரப்பாவின் உயிரை குறி வைத்து பில்லி, சூன்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாக ஹிந்து நாளிதழ் தெரிவித்து உள்ளது. அவரின் உயிரை காப்பாற்ற 80 கோடி ஹிந்துக்களும் ஆங்காங்கே "சோம வாஜபேயி" யாகம் செய்வோம்.


வாழ்க எடியூரப்பா. வீழ்க திம்மிக்கள்.

15 Comments:

 • இப்படியெல்லாம் கொஞ்சம் கூட கூசாம ரீல் விட இலைகாரகளுக்கு தான் வரும் சார்.. சூப்பர்.
  வாழ்க 80 கோடி இந்துக்கள்

  By at 11/19/2007 10:17 PM  

 • //80 கோடி ஹிந்துக்களும் ஆங்காங்கே "சோம வாஜபேயி" யாகம் செய்வோம்.
  //

  கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் வெளி இட்டு இருந்த யாகம் தானே ?

  குதிரை வாங்க யாரிடம் பணம் இருக்கு ?

  நான் வெறும் பூஜை பண்ணுகிறேன். பட்ஜெட் அதனால் நோ யாகம் !

  By at 11/19/2007 10:21 PM  

 • rina அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  சிக்குலர் பத்திரிக்கை செய்திகளை நம்ப வேண்டாம். உண்மை செய்திகளை அறிய தமிழ்பாரதி வலைபக்கதிற்கு செல்லவும்.

  By at 11/19/2007 10:44 PM  

 • கோவி.கண்ணன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  அதே யாகம்தான். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. சிங்கப்பூரில் உங்களால் நடத்த முடியாது. மலேசியாவிற்கு வேண்டுமானால் சென்று முயற்சித்து பாருங்கள்.

  By at 11/19/2007 10:46 PM  

 • வணக்கம்... வந்தனம்... நமோஸ்கார்...

  By at 11/19/2007 10:48 PM  

 • எனது முதல் பின்னூட்டத்தில் வாழ்க அம்மா.... வீழ்க திம்மி... விடுபட்டு விட்டது.

  By at 11/19/2007 10:53 PM  

 • பல்லு பிச்சை அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  வாழ்க அம்மா. அம்மாவின் ஆசியும், அருளும் இருப்பதால்தான் என்னால் நூறு பதிவுகள் இட முடிந்தது. இது என்னுடைய நூறாவது பதிவு என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.

  By at 11/19/2007 11:16 PM  

 • //அதே யாகம்தான். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. சிங்கப்பூரில் உங்களால் நடத்த முடியாது. மலேசியாவிற்கு வேண்டுமானால் சென்று முயற்சித்து பாருங்கள்.//

  ம் சரி, உண்டியல் குலுக்கி அந்த பணத்தை அனுப்பி வையுங்க.

  By at 11/19/2007 11:25 PM  

 • கோவி.கண்ணன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  உண்டியலா? அபசாரம். அபசாரம். சீன ஏஜண்டுகள்தான் உண்டியல் குலுக்குவார்கள். நாங்கள் "உண்டியல்" மூலம் டாலரை பணமாக மாற்றும் சக்தி படைத்தவர்கள்.

  By at 11/19/2007 11:56 PM  

 • எங்கேயப்பா சென்று விட்டாய்...சரித்திரத்தின் ஒரு பக்கம் புரட்டப்படும் போது காணாமல் போய் விட்டாயே என்று நேற்று தானே..பின்னுட்டமிட்டேன்...

  உனக்கு பின்னுட்டமிடாமல், ஜெகதீசனுக்கு கை நடுங்க ஆரம்பித்து விட்டதாம்...

  நல்ல வேளை பதிவு போட்டாய் இன்று...

  யாரங்கே...ஜெகதீசனுக்கு தகவல் சொல்லியனுப்புங்கள்...

  குதிரையை, மாடு, ஆடு இதெல்லாம் , போடுறதை விட பெரிய ஒரு விசயம் இருக்கு..அதைப் போட்டா, எல்லாருக்குமே சாப விமோசனம்...கீழ் கண்ட இரண்டில் எதை வேண்டுமானாலும் போடலாம்..

  1. சுப்பிரமணி
  2. ஆமா கூத்தணி தலைவி

  By at 11/20/2007 12:00 AM  

 • tbcd அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  எனக்கு நேற்று பின்னூட்டம் இட்டீர்களா!. நீங்கள் யாரையோ நினைத்து கொண்டு இங்கே எழுதி இருக்கின்றீர்கள் போல் தெரிகின்றது.

  By at 11/20/2007 12:25 AM  

 • அதை பிடிச்சிக்கிட்டீங்களா...

  உனக்கு கொடி பிடிக்கும் ஜெகதீசனின் பதிவிலே பின்னுட்டமிட்டேன்..

  அதை விடுங்க..
  நான் கொடுத்த சாய்ஸ்ல,...உங்க சாய்ஸ் எது..?

  //*இலைக்காரன் said...
  tbcd அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  எனக்கு நேற்று பின்னூட்டம் இட்டீர்களா!. நீங்கள் யாரையோ நினைத்து கொண்டு இங்கே எழுதி இருக்கின்றீர்கள் போல் தெரிகின்றது.*//

  By at 11/20/2007 12:37 AM  

 • tbcd அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  அம்மாவும், ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாவும் தங்களின் இறப்பு நாட்டிற்கு நன்மை தரும் என்று கருதினால் தானாகவே இறைவனின் காலடிக்கு சென்று விடுவார்கள்.

  By at 11/20/2007 12:48 AM  

 • இது உங்களுக்கே கொஞம் ஓவரா தெரியல..???

  அது எப்படி சார் உங்களை வைத்து நீங்களே இப்படி காமெடி கீமெடி எல்லாம் பண்ணுரீங்க..?? என்னமோ போங்க..!!

  By at 11/20/2007 9:04 PM  

 • My old mail :

  Lord Rama & L.K.Advani

  To : Mr.Rajinder Puri,

  Dear Sir,

  I belive in karma and dharma. Advani has been punished partlyfor his past sins in using the Ram templefanatics of VHP, etc tofurther his political career since 1980s.VHP and Co are alteast sincere andconsistent in their fanatisism.They are genuine communalists and facisits, who do not belive indemocracy. but they are honest and forthright. neverdouble dealingnor political animals. But Advaniis a crafty and cynical politician,and a'pseudo-communalist'. VHP is right in being disillusioned withhim, who carefully used thieragenda (Ram temple) to whip up apopulist mass base and votes. And due topolitical expediancy, heabandoned Ram temple later. Advani, whose ratha yatra (whichdirectly resulted inthe murder of 1000s of innocents in 1990)would have become PM, but for the Jain hawala case. (thanksto your PIL) ; and now he stands discredited and powerlesswithin his own group. Lord Rama has done justice. And Advaniwill neverbe PM in India.

  Om tat Sat.

  Regards
  Athiyaman
  Chennai

  By at 12/07/2007 11:58 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za