அம்மான்னா சும்மாவா?

Thursday, November 01, 2007

ஹிந்துக்களை பிரிக்கும் கொலைஞர்

ஹிந்து மதம் பல லட்சம் ஆண்டுகள் பழமையானது. பாரதத்தில் ஹிந்துக்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். நமது புராணங்களிலும், வேதங்களிலும், இதிகாசங்களிலும் இதை பற்றி தெளிவாக குறிப்பிட்டு உள்ளனர். மக்கள் அனைவரும் அவர்களுக்கு என்று ஒதுக்கபட்ட கடமையை செய்து கொண்டு சுகமாக வாழ்ந்து வந்தனர். ஸ்ரீகிருஷ்ணர் இதை தெளிவாக தன் உபதேசத்தில் "கடமையை செய். பலனை எதிர்பார்காதே" என்று கூறியுள்ளார்.

இவ்வாறாக ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருப்பது வந்தேறிகளான கிருத்துவ மிஷினரிகளின் கண்களை உறுத்தியது. நம்மிடையே பிரிவுகள் ஏற்பட்டாலதான் அவர்கள் சுகமாக வாழ முடியும் என்று உணர்ந்தனர். அதன் காரணமாக "ஜாதி" என்ற கொடிய நோயை நம்மிடையே பரப்பிவிட்டனர். ஹிந்துக்களின் இடையே "நீ உயர்ந்தவன்"," நீ தாழ்ந்தவன்" என்று வெடியை கொளுத்தி போட்டனர். இந்த கடமையை செய்யும் நீ, வேறு கடமைகளை செய்தால் என்ன என்று தூண்டி விட்டனர். வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பிய அப்பாவி ஹிந்துக்கள் கிருத்துவ மிஷினரிகளின் பேச்சை நம்ப துவங்கினர்.

இந்த சூழ்ச்சி வெற்றி அடையும் என்று அடையாளம் கண்டு கொண்ட கயவர்கள் அதை நன்றாக விசிறி, தூபம் இட்டு பெரும் தீயாக உருவாக்கி விட்டனர். பிறகு வந்த தலையாய திம்மியான தாடிகிழவனும் அவனின் அல்லகைகளும் இந்த பிரித்தாளும் கலையை நன்கு உபயோகபடுத்த தொடங்கிவிட்டனர். இந்த செயல்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த ஹிந்துக்கள் இடையே பெரும் பிளவுகளை ஏற்படுத்திவிட்டது.

மக்கள் தடம் மாறுவதை கண்டு மனம் வெதும்பிய மூதறிஞர் ஸ்ரீமான் ராஜாஜி அவர்கள், ஒரு அருமையான திட்டத்தினை கொண்டு வந்தார். தங்களது கடமையில் இருந்து விலக நினைத்த ஹிந்துக்கள் அனைவரும் தங்களுக்கு என்று ஒதுக்கபட்ட கடமைகளை நன்றாக கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் அந்த திட்டம் இருந்தது. ஆனால் இந்த திம்மிக்கள் அதை குலகல்வி திட்டம் என்று பெயரிட்டு எதிர்க்க ஆரம்பித்து விட்டனர்.

இப்போது என்ன நடக்கின்றது என்று சற்று யோசியுங்கள். டாக்டர் மகன் டாக்டர் ஆகின்றார். எஞ்சினியர் மகள் எஞ்சினியர் ஆகின்றார். சினிமா சம்பந்தபட்ட நபரின் மகன் சினிமா துறையில் ஈடுபடுகின்றார். அரசியல்வாதியின் மகள் அரசியலில் நுழைகின்றார். இதைதான் மூதறிஞர் பல ஆண்டு காலம் முன்பே சொல்லி வந்தார். ஆனால் அதை யாரும் செவிமடுக்கவில்லை. அதன் பலன் என்ன?. மக்கள் தங்களின் கடமைகளை மறந்தனர். இன்று விவசாயம் செய்வதற்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இந்த விஷயத்தை பிறகு விவாதிக்கலாம்.

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த கயவன் கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளான்.
தி.மு.க., எப்போதுமே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடுகின்ற, வாதாடுகின்ற, பாடுபடுகின்ற இயக்கம். அந்த அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், ஆதிதிராவிட மக்களுக்கும், குறிப்பாக நான்கைந்து ஆண்டுகளில் என்ன செய்தோம் என்பதை 10.8.1973 அன்று சட்டமன்றத்தில் பட்டியலிட்டுக் காட்டினேன்.
தமிழ் மாநிலத்திற்கு க்ரூப் - 1 சர்வீஸ் தேர்வு எழுதுகிறார்களே - தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் தேர்ந்தெடுக்கிறதே - அதிலே எப்படிப்பட்டவர்கள் டெபுடி கலெக்டர்களாக, டி.எஸ்.பி.,க்களாக, ஜே.சி.டி.ஓ.,க் களாக, டெபுடி ரெஜிஸ்ட்ரார்களாக யார் யார் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பேரவையிலே தெரிவித்தேன். கிட்டத்தட்ட 96 பேர்.
ஆதிதிராவிடர்கள் - தாழ்த்தப்பட்டவர்கள் - 18 பேர்.
முக்குலத்தோர் - 17 பேர்.
வன்னியர் மொத்தம் 11 பேர்.
நாடார் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மொத்தம் 8 பேர்.
பிள்ளைமார் வகுப்பைச் சேர்ந்தவர் ஒருவர்.
முஸ்லிம் மொத்தம் 7 பேர்கள்.
கவுரா மொத்தம் 3 பேர்கள்.
படகா - டெபுடி கலெக்டர் ஒருவர்.
வீரக்குடி வெள்ளாளர் - டெபுடி கலெக்டராக இரண்டு பேர்.
சலவைத் தொழிலாளி - டெபுடி கலெக்டராக 2 பேர்.
பார்கவ குல நத்தமான் டெபுடி கலெக்டர் ஒருவர், டி.எஸ்.பி., ஒருவர், ஆக இரண்டு பேர்.
துளுவ வெள்ளாளர் - டெபுடி கலெக்டராக ஒருவர்.
குரும்பர் டெபுடி கலெக்டராக ஒருவர்.
மூப்பனாரில் - டெபுடி கலெக்டர் ஒருவர்,
தொண்டமானில் - டெபுடி கலெக்டர் ஒருவர்,
வடுகரில் டெபுடி கலெக்டராக ஒருவர், டி.எஸ்.பி.,யாக ஒருவர் என்று இரண்டு பேர்.
தேவாங்கரில் டி.எஸ்.பி., ஒருவர்
வலையரில் ஜே.சி.டி.ஓ., ஒருவர்
அருந்ததியரில் ஜே.சி.டி.ஓ. ஒருவர்
யாதவரில் மொத்தம் நான்கு பேர்கள்.
சேனைத் தலைவரில் டெபுடி ரிஜிஸ்ட்ரார் ஒருவர்,
வேட்டுவக் கவுண்டரில் டெபுடி ரிஜிஸ்ட்ரார் ஒருவர்
மருத்துவரில் டெபுடி ரிஜிஸ்ட்ரார் ஒருவர்
ஒட்டரில் டிஸ்ட்ரிக்ட் ரிஜிஸ்ட்ரார் ஒருவர்
என்று இந்தப் பட்டியலை நான் பேரவையில் எடுத்துச் சொன்ன பிறகுதான், தி.மு.கழக ஆட்சிக்கே பள்ளம் தோண்டுகின்ற வேலையிலே ஒரு கூட்டத்தினர் ஈடுபட்டார்கள். அவர்கள் யார் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை.

அட முட்டாளே, நீ ஹிந்துக்களுக்கு சுமார் 80 இடங்களும், முகமதியருக்கு 7 இடமும், மீதி கிருத்துவருக்கும் என்று சொல்லி இருந்தால் யார் உனக்கு பள்ளம் வெட்ட போகின்றார்கள். ஒரு ஹிந்துவிற்கு வாய்ப்பு வந்தால் மீதம் உள்ள பல கோடி ஹிந்துக்கள் நிச்சயம் மகிழ்வார்கள். ஹிந்துக்களை நீ ஜாதியின் பெயரால் பிளவு படுத்த நினைத்தாய். ஹிந்துமதத்தின் மீது அபிமானம் கொண்டவர்கள் இதை பார்த்து கொண்டு சும்மா இருப்பார்களா? தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது போல் உன்னை எதிர்க்க ஆரம்பித்தனர். உடனே ஒரு கூட்டத்தினர் குழி வெட்டினர் என்று உளறுவதா?

ஹிந்துக்களே ஒன்று படுங்கள். ஜாதியின் பெயரால் நம்மை பிளவு படுத்த நினைக்கும் திம்மிகளை விரட்டி அடிங்கள். பதிவுலக வாரியாராகிய ஸ்ரீ உண்மை தமிழன் அவர்கள் சொன்னது போல தொகுதி, வேலை, கல்வி போன்றவற்றில் "ஜாதி" என்ற விஷ கிருமியை பரப்ப வேண்டாம். நமக்கு என்று வகுக்கபட்ட கடமைகளை தொடர்ந்து செய்யுங்கள். நாம் அனைவரும் ஹிந்துக்கள் என்ற உணர்வை ஊட்டி வளர்போம்.

வாழ்க ஹிந்துக்கள். வீழ்க திம்மிகள்.

45 Comments:

 • அல்லக்கைன்னா என்னன்னு நீங்க இன்னும் சொல்லவே இல்லை????

  By at 11/01/2007 11:08 PM  

 • இலைக்காரன் அவர்களே,
  நல்ல பதிவு.பதிவுக்கு நன்றி.
  ஹிந்துக்களைப் பிரிக்கும் கொலைஞர் ஒழிக!

  By at 11/01/2007 11:09 PM  

 • அட்டென்டஸ் எடுக்குறதா இருந்தா முன்னக்கூடியே சொல்லனும்...அப்பத் தான் சரியா வர முடியும்...ராமர் வந்தாச்சா..உயிரோட...அதை பார்க்கத் தான் நான் வந்தேன்...மத்தபடி..கொலைக்காரன் அவர்களே..சீ சீ..இலைக்காரன் அவர்களே...கொலைஞர் பட்டம் நல்லா இருக்கே...அரசுத்துறையிலே ஒரு சமுகத்தின் ஆதிக்கத்தை கொலை செய்தவர் என்பதால் அவரை இனி கொலைஞர் என்று அழைப்போமாக...

  By at 11/01/2007 11:19 PM  

 • /// "நீ உயர்ந்தவன்"," நீ தாழ்ந்தவன் //

  என்னங்கண்ணா இது புது கதை..  நீங்க ரொம்ம தான் ஹிந்துயிசத்தை கிண்டல் பன்றீங்க இலையாரே.,... இது டூ மச்.. பாவம் இந்துக்கள்.. வலிக்கும்.. பாவம்.. விட்டுடுங்க... மீன்டும் ஒரு கிச்சு பதிவு போட்டு வயிறு வலிக்க சிரிக்க வைத்தமைக்கு நன்றி இலை என்ற பெயரில் இருக்கும் சூரிய சாரே..

  By at 11/01/2007 11:23 PM  

 • ஏனுங்கண்ணா... 80 கோடி மிஸ்ஸிங் இந்த பதிவுல.... கணக்கெடுக்க ஆரம்பிச்சிட்டீங்களா??? சீக்கிரம் முடிச்சு சரியான என்னிலக்கை போடுங்க இலையாரே...

  By at 11/01/2007 11:26 PM  

 • ஜெகதீசன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  உங்களின் பின்னூட்ட வேகத்தினை கண்டு ஆச்சர்யபடுகின்றேன். இறைவனை பின்பற்றுபவர்கள் அடியார்கள் என்று அழைக்கபடுவர். திம்மிக்களை பின்பற்றுபவர்கள் அல்லக்கைகள் என்று அழைக்கபடுவர்.

  By at 11/01/2007 11:37 PM  

 • tbcd அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  கொலைஞர் என்ற பட்டம் அளித்தது ஸ்ரீ அரவிந்தன் நீலகண்டன் அவர்கள். நான் அதை அவ்வபோது உபயோகிக்கின்றேன்.

  By at 11/01/2007 11:37 PM  

 • thsiandthat அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  80கோடி என்ற வார்த்தைகள் உபயோகிக்கபடவில்லை என்னும் அளவிற்கு எனது பதிவினை ஊன்றி படித்தமைக்கு மிக்க நன்றி.

  By at 11/01/2007 11:39 PM  

 • //
  இறைவனை பின்பற்றுபவர்கள் அடியார்கள் என்று அழைக்கபடுவர். திம்மிக்களை பின்பற்றுபவர்கள் அல்லக்கைகள் என்று அழைக்கபடுவர்.
  //
  உங்களையும், ஸ்ரீராமரையும் பின்பற்றும் எனக்கு "இலைக்காரனின் அல்லக்கை" என்று பட்டம் தருகிறாரே டிபிசிடி?
  அப்ப நீங்களும் ராமரும் திம்மிகளா?

  By at 11/01/2007 11:41 PM  

 • ஜெகதீசன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  ஹிந்துமதத்தை, ஹிந்துக்களை, நமது தெய்வங்களை எதிர்ப்பவர் எல்லோரும் திம்மிக்கள். உலகின் ஒரே தங்க தாரகையான அம்மாவை வணங்கும் நான் எப்படி அல்லக்கை ஆவேன். அதுபோல ஸ்ரீராமரை பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கும் நீங்கள் அவரின் அடியாரே தவிர ஒருபோதும் அல்லக்கை ஆகமாட்டீர்கள்.

  By at 11/01/2007 11:49 PM  

 • மம்மிக்கு பின் போனா திம்மியில்லையாம்...

  ராமர்க்கு பின்னாடி போய் அவருக்கு உயிர் வருமான்னு கேட்டா..என்ன சொல்லுவீங்க...அல்லக்கையா திம்மியா...

  By at 11/02/2007 12:05 AM  

 • இந்துக்களுக்கு 80 இடம் என்று சொல்லிவிட்டு உண்மையான இந்துக்களுக்கு 1 இடம் கூட இல்லை போலிருக்கிறது. அவாஅவா வேலையை அவாஅவா செய்யாமல், இப்படி அடுத்தவா வேலையை எல்லாம் செய்தால் லோகத்துல எப்படி மழை பெய்யும்? இதை தடுக்க நீதிபதி அகர்வால் அய்யாவை பார்க்க வேண்டியதுதான் போலிருக்கு.

  //குறிப்பாக நான்கைந்து ஆண்டுகளில் என்ன செய்தோம் என்பதை 10.8.1973 அன்று சட்டமன்றத்தில் பட்டியலிட்டுக் காட்டினேன்.//

  Is it 1973 year அறிக்கை?

  By at 11/02/2007 12:15 AM  

 • tbcd அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  ஹிந்துஸ்தானத்தில் கரசேவை நடந்த போது அதை வெளிபடையாக ஆதரித்தவர் அம்மா. மேலும் ராஜதர்ம ஆட்சி நடத்தும் ஸ்ரீமான் மோடியின் பதவிஏற்பு விழாவிற்கு நேரடியாக சென்றவர். அப்படிபட்ட அம்மாவை பின்பற்றினால் எப்படி திம்மியாக முடியும்.

  ஈரேழு லோகங்களிலும் நிறைந்து இருக்கும் எம்பெருமானுக்கு உயிர் வருமா என்று முட்டாள்தனமாக கேள்வி கேட்க திம்மிகளால் மட்டுமே முடியும்.

  By at 11/02/2007 12:18 AM  

 • நிறைந்து இருக்கும் ராமனை வந்து நான் கட்டிய பாலம் என்று சொல்லச் சொல்லுங்களேன் அய்யா...

  By at 11/02/2007 12:24 AM  

 • சாணக்கியன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  "ஜாதி"வாரியாக பிரிக்காமல் ஹிந்துக்களுக்கு மொத்தமாக 80 இடங்கள் என்று சொல்லியிருந்தால் கொலைஞரை பாராட்டலாம்.

  பாரதம் லஞ்சம், கொலை, கொள்ளை என்று சீரழிந்து இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று நம்புகின்றேன். எல்லோரும் அவரவர் கடமைகளை செய்து கொண்டு இருந்தால் நாடு சுபிட்சம் அடையும்.

  By at 11/02/2007 12:26 AM  

 • tbcd அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  ஸ்ரீராமர் சொன்னால் என்ன, அவரின் மறு உருவமாக திகழும் ஸ்ரீவேதாந்தி சொன்னால் என்ன. எல்லாம் அவன் செயலே. அது உங்களை போன்ற திம்மிக்களுக்கு புரியாது. ஸ்ரீராமரை முழுமையாக நம்பி மனம் உருக பிரார்த்தனை செய்யுங்கள். அவர் நிச்சயம் உங்களின் கண்களுக்கு தெரிவார்.

  By at 11/02/2007 12:30 AM  

 • பின்னூட்ட அழகிரித்தனம்!

  By at 11/02/2007 12:57 AM  

 • லக்கிலுக் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  ஸ்ரீராமர் எங்கே இருக்கின்றார் என்று கேட்ட உடன்பிறப்புகள் இப்போது ஸ்டாலின் எங்கே இருக்கின்றார் என்று கேட்கின்றார்களாமே!!!

  By at 11/02/2007 1:14 AM  

 • பின்னூட்ட கொலைஞர்த்தனம்

  By at 11/02/2007 1:17 AM  

 • இலைக்காரனை திம்மிகள் இந்த பாடுபடுத்தும் போதும் வந்து ஒரு பின்னூட்டமாவது போட்டு காப்பாற்றமல் இருக்கும் ராமனின் இலாகாவை அம்மாவிடம் சொல்லி மாற்ற வேண்டியது தான்.
  வாழ்க இலைக்காரன்.. வாழ்க அம்மா....

  By at 11/02/2007 1:32 AM  

 • இப்போதெல்லாம் ராமர் பின்னால் செல்பவர்கள் அடியார் இல்லை அடியாள் என்று ஒரு சிலர் சொல்கிறார்களே இலைக்காரரே..........
  வாழ்க இலைக்காரன்.. வாழ்க அம்மா....

  By at 11/02/2007 1:37 AM  

 • //இந்த கடமையை செய்யும் நீ, வேறு கடமைகளை செய்தால் என்ன என்று தூண்டி விட்டனர்//

  அடப் பாவிங்களா, இப்பிடிப் பண்ணிப்புட்டாங்கிளே !!

  By at 11/02/2007 1:49 AM  

 • ஜெகதீசன் அவர்களே,

  வருகைக்கும், பின்னூட்ட கயமைக்கும் நன்றி.

  By at 11/02/2007 2:01 AM  

 • great அவர்களே,

  வருகைக்கும், ஆதரவிற்கும் நன்றி.

  திம்மிக்கள் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்.

  By at 11/02/2007 2:02 AM  

 • m அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  By at 11/02/2007 2:02 AM  

 • அம்மா மேட்டர் இல்லாமல் தொடர்ந்து 3 பதிவுகள் போட்டுவிட்ட இலைக்காரனை அம்மாப்பேட்டையிலுள்ள அம்மா கார் டயரை தொட்டு வணங்குவோர் சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

  By at 11/02/2007 3:28 AM  

 • அம்மா வாழ்க!!!!!!!

  இலைக்காரனுக்குத் தொடர் ஆதரவு தரும் great, m போன்ற நண்பர்களுக்கு நன்றி!!!

  great அவர்களே, உங்கள் நண்பர்களான amma boy, பல்லு பிச்சை ஆகியோரை விரைவில் வந்து பின்னூட்டமிடச் சொல்லவும்,......

  By at 11/02/2007 10:03 PM  

 • தமிழ்செல்வனுக்கு இரங்கல் கவிதை - கலைஞர்

  முன்னாள் நடிகை / முதல்வர்.. செல்வி செயலலிதா.. === ஆ ஐயோ அம்மா... ஆட்சி கவிழ்க்கனும்...


  தமிழர் வாழும் இடமெல்லாம், தமிழ்செல்வன் புகழ் பாடுவோம்... வை கோ

  இதுக்கு என்ன சொல்லப்போது உங்க அம்மா..

  By at 11/04/2007 4:07 AM  

 • great அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  கொலைஞரை எதிர்த்து பதிவுகள் போடுவது அம்மாவை போற்றுவதற்கு ஒப்பாகும். தேவருக்கு தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என்பதை போல் எனக்கு அம்மாவும், ஹிந்துக்களும் இரு கண்கள்.

  By at 11/04/2007 8:47 PM  

 • ஜெகதீசன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  நீங்கள் குறிப்பிடுவதை பார்த்தால் எல்லோரும் ஒரே நபர்தான் என்று தோன்றுகிறது.

  By at 11/04/2007 8:48 PM  

 • rina அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  சகோதரன் என்றும் பாராமல் வை.கோ அவர்களை சிறையில் இட்டவர் அம்மா. அவருக்கு எப்போழுதும் நீதி, நேர்மை, நியாயம் போன்றவைதான் முக்கியமானது.

  By at 11/04/2007 8:48 PM  

 • //சகோதரன் என்றும் பாராமல் வை.கோ அவர்களை சிறையில் இட்டவர் அம்மா. அவருக்கு எப்போழுதும் நீதி, நேர்மை, நியாயம் போன்றவைதான் முக்கியமானது.//

  இந்த மாதிரி புதுசு புதுசா எதுனா கொளுத்திப் போட்டுக் கொண்டே இரு! அப்பத்தான் அம்மா ஆட்சி அடுத்து வரும் ;-)

  By at 11/04/2007 9:55 PM  

 • ஜெகதீசன் அவர்களே நன்றி மேலும் Amma Boy, பல்லு பிச்சை எல்லாம் என் நண்பர்கள் அல்ல. நான் ஏதோ அம்மா புகழ் பாடும் சிற்றிலையான இலைக்காரனின் புகழ் பாடும் சிற்றுசிற்றிலை.

  By at 11/04/2007 10:08 PM  

 • இலைக்காரன் அவர்களே என்னையே சந்தேகப்பட்டுவிட்டீர்களே. உங்கள் பதிவுகளைப் படித்து நான் எவ்வளவு தான் விழுந்து விழுந்து சிரித்திருந்தாலும் என்றாவது தமாஷாக எழுதுகிறீர்கள் என்று வெளிப்படையாய் comment அடித்திருக்கிறேனா? அவ்வாறு வெளிப்படையாக எழுதியவர்களும் நானும் ஒன்று என்று சொல்லி என்னை மிகவும் புண்படுத்தி விட்டீர்களே.

  By at 11/04/2007 10:23 PM  

 • பகுத்தறிவின் லீலைகள் வியந்தோதாய் உடன்பிறப்பே…
  ஏய்! சாயிபாபா
  வெறுங்கையிலிருந்து விபூதியும் பூச்செண்டும்
  வரவழைத்தாயே! அதுவா அற்புதம்?
  வெயிலறியா உன் தலைமுடியிலிருந்து
  விதவிதமாய் கடிகாரங்களை வரவழைத்தாயே!
  அதுவா அற்புதம்?

  பசியறியா உன் வயிற்றியிலிருந்து
  பலப்பல லிங்கங்களை வரவழைத்தாயே!
  அதுவா அற்புதம்?
  அடே! சாயிபாபா
  வழியறியா உன் காவிக் கஜானாவிலிருந்து
  கடைசியில் கருணாநிதியை
  வெளியே வரவழைத்தாயே!
  அதுவன்றோ அற்புதம்!!
  வீழ்ந்திற்றோ கொள்கைக் குன்று என்று
  விளங்காத உடன்பிறப்பே...
  இருநூறு கோடி எதிரே வருகையில்
  பெரியார் பார்வையா பார்க்க முடியும்?

  கொஞ்சம் பகுத்தறிவோடு பார்!
  யாருக்கும் தலைவணங்காத சுருள்முடியையே
  கோபாலபுரம் தன் காலடிக்கு வரவழைத்தது
  ஆன்மீகத்திற்கே பேரடி அல்லவா?
  அதிசயம் அல்லவா?

  அற்புதத்தில் விஞ்சி நிற்பது
  பாபாவா? கலைஞரா? பார்!
  வெறுங்கையிலிருந்து நோக்கியாவை
  வரவழைத்தார்!

  இதோ... ஊமைகள் பேசுகிறார்கள்!
  காலிக் கஜானாவிலிருந்து
  கலர் டி.வி.யை வரவழைத்தார்!
  அதோ... குருடர்கள் பார்க்கிறார்கள்;
  வாயிலிருந்தே இரண்டு ஏக்கர் நிலத்தை
  வரவழைத்தார்!
  அதோ முடவர்கள் நடக்கிறார்கள்.
  அது மட்டுமா...?

  அணுவைத் துளைத்து, மலைகள் விழுங்கி,
  ஆழ்கடல் குடித்து ஆயிரமாய் விளைநிலங்கள் செரித்து
  குறுகத் தறிக்கும் உலகமயப் பொதுமறையை
  ஓவியமாய்த் தீட்டும் அற்புதம்
  அந்த பாபாவுக்கு வருமா?
  அவரா, இவரா?

  அற்புதத்தைத் தெரிவு செய்ய முடியாமல்
  திக்குமுக்காடி நெளிகிறது தெலுங்கு கங்கை.
  ஆசீர்வாதத்திற்குப் பயந்து
  ஓடி ஒளிகிறது கூவம்!

  துரை. சண்முகம்

  By at 11/05/2007 6:33 AM  

 • //உலகின் ஒரே தங்க தாரகையான அம்மாவை வணங்கும் நான் எப்படி அல்லக்கை ஆவேன்.//

  இலைக்காரரே, தங்க தாரகை என்ற பட்டம் வந்தேறி கிறிஸ்துவ மிசினரிகளின் சூழ்ச்சி. பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியான அம்மாவை கேவலப்படுத்தும் பட்டம் அது. இனிமேல் அம்மாவை பிளாட்டிண தாரகை என அழைத்து அவர்களின் முகத்தில் கரி பூசுவோம்.

  வாழ்க பிளாட்டிண தாரகை அம்மா,
  வாழ்க பிளாட்டிண தாரகை அம்மா,
  வாழ்க பிளாட்டிண தாரகை அம்மா,

  By at 11/05/2007 11:28 AM  

 • //இலைக்காரன் said...
  ஜெகதீசன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  நீங்கள் குறிப்பிடுவதை பார்த்தால் எல்லோரும் ஒரே நபர்தான் என்று தோன்றுகிறது.//

  இலைக்காரரே, மற்றவர்களைப் பற்றி எனக்கு தெறியாது. நான் பல்லு பிச்சை மட்டுமே.

  வாழ்க பிளாட்டிண தாரகை அம்மா,
  வாழ்க பிளாட்டிண தாரகை அம்மா,
  வாழ்க பிளாட்டிண தாரகை அம்மா,

  By at 11/05/2007 12:15 PM  

 • மஹாத்மா காந்தியாண்ட ஒரு இன்ஞினீயர் அம்பி போய் நேக்கு வேலை தரமாட்டேங்குறா என்று சொன்னானாம்.அவரோ நீ ஓம் கர்மாவைச் செய்யாமல் ஏன் இஞ்சினீயருக்குப் படிச்சே போய் பூஜை,புனஷ்காரத்தைச் செய் என்று சொன்னாராம்.
  3% ஒழுங்கா பூஜை புனஷ்காரம் பண்ணிண்டு இருந்தா இந்த வம்பெல்லாம் ஏண்டா அம்பி வருது?

  By at 11/05/2007 5:24 PM  

 • ╬அதி. அழகு╬ அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  கொலைஞரின் கவிதையால் தமிழக ஆட்சி விரைவில் கவிழும். அடுத்தது அம்மாவின் பொற்கால ஆட்சிதான்.

  By at 11/05/2007 9:02 PM  

 • great அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  நான் யாரையும் புண்படுத்தவில்லை. தவறு இருந்தால் மன்னியுங்கள்.

  By at 11/05/2007 9:04 PM  

 • காஞ்சி பிலிம்ஸ் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  By at 11/05/2007 9:04 PM  

 • பல்லு பிச்சை அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  உங்களை பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி. தக தக என்று ஜொலிக்கும் அம்மா என்றும் தங்க தாரகைதான்.

  By at 11/05/2007 9:06 PM  

 • Thamizhan அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  எல்லோரும் அவரவர் கடமையை செய்து கொண்டு இருந்தால் நாடு சுபிட்சம் அடையும்.

  By at 11/05/2007 9:08 PM  

 • தக தக என்று ஜொலிக்கும்..??????????????
  ஆகா.!!!!!!! இலைக்காரன் பார்வையே சரியில்லையே

  By at 11/05/2007 10:48 PM  

 • great அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  என் பார்வை சரியில்லையா!!. அம்மா எனும் தெய்வத்தை தினமும் தொழும் ஒரு சிற்றிலை நான்.

  By at 11/05/2007 11:14 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za