அம்மான்னா சும்மாவா?

Monday, October 29, 2007

ஹிந்துக்களை விரட்டும் சாமுவேல்

ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களின் நிலை பரிதாபமாக உள்ளது. பாரதத்தின் ஆதி குடிமக்களாகிய ஹிந்துக்கள் கிருத்துவ மிஷினரிகளாலும், ஜிகாதிகளாலும், திராவிட திம்மிகளாலும் நாள் தோறும் பல தொல்லைகளுக்கு ஆளாகி உயிர் இழந்து வருகின்றார்கள்.

மைனாரிட்டி ஆட்சி நடக்கும் தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்றால், சாமுவேல் ஆட்சி செய்யும் ஆந்திராவில் இதை விட கொடுமையான காட்சிகள் நடை பெறுகின்றன. ஆந்திர மாநிலத்தின் பெரும் நடிகர்களில் ஸ்ரீமான் சிரஞ்சீவியும் ஒருவர். அவரின் இளைய மகள் ஒருவரை காதலித்து மணந்து கொண்டார். காதல் மணம் செய்து கொண்ட திருமகளை மிரட்டி இருக்கின்றனர் சாமுவேலின் அடியாட்கள். பயந்து நடுங்கிய அப்பாவி பெண் தன் காதல் கணவரோடு உயிர் பிழைத்து புதுதில்லிக்கு சென்றார். அங்கும் துரத்தி வந்தனர் திம்மிக்கள்.

கடைசி முயற்சியாக தங்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர். நீதிமன்றமும் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. பாதுகாப்புடன் தங்களின் வீடு திரும்பலாம் என்று இருந்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஆந்திராவில் பாதுகாப்பு வழங்க சாமுவேல் அரசு மறுத்து விட்டது. கடும் அதிர்ச்சிக்கு உள்ளான தம்பதிகள் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டனர். மேலும் இரண்டு வாரங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

ஆந்திராவில், நாடறிந்த ஒரு பெரிய நடிகரின் மகளே பாதுகாப்பாக வாழ முடியவில்லை என்கிற போது அப்பாவி பொது மக்கள் எவ்வளவு கஷ்டபடுவார்கள் என்று யோசியுங்கள். ஹிந்து விரோத கொள்கையை கடைபிடிக்கும் சாமுவேலையும் அவனின் தலைவியான மெய்னோவையும் உடனே ஆட்சியை விட்டு விரட்ட ஏற்பாடு செய்வோம். 80 கோடி ஹிந்துக்களும் இது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கை பதிவு செய்வோம்.

வாழ்க புதுமண தம்பதிகள். வீழ்க சாமுவேல்.

8 Comments:

 • இலைக்காரன் வாழ்க!!!!!!!!

  By at 10/29/2007 1:42 AM  

 • ஜெகதீசன் அவர்களே,

  கட்சி பணிகளுக்கு இடையே என் பதிவிற்கு வந்தமைக்கு மிக்க நன்றி.

  By at 10/29/2007 1:47 AM  

 • 80 கோடி பேரும் சேர்ந்து ஒரு போது நல வழக்கு போடணுமா அல்லது 80 கோடி பொது நல வழக்கு போடணுமா என்ற எனது ஐயத்தை விரைவில் தீர்த்து வைக்குமாறு இலைகாரரை கேட்டுக்கொள்கிறேன்.

  வாழ்க இலைக்காரன்!!
  வாழ்க புதுமணத் தம்பதிகள்!!
  வீழ்க பழையமணத் தம்பதிகள்...... மன்னிக்கவும்.... வீழ்க சாமுவேல்!!!!!!!!!!!!!!.

  By at 10/29/2007 2:23 AM  

 • great அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  ஒரு வழக்கு போதும். ஹிந்துக்களுக்கு ஆபத்து என்றால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சும்மா இருப்பார்களா. அம்மா போட்ட ஒரு வழக்கினால் மைனாரிட்டி ஆட்சி புரியும் கொலைஞருக்கு இன்று நோட்டீஸ் வந்துள்ளது. விரைவில் தமிழகத்தில் அம்மாவின் பொற்கால ஆட்சி மலரும்.

  By at 10/29/2007 2:32 AM  

 • அந்த ஒரு வழக்கை 80 கோடி பேரில் யார் போடுவது???
  வாழ்க இலைக்காரன்!!
  வாழ்க புதுமணத் தம்பதிகள்!!
  வீழ்க சாமுவேல்!!!!!!!!!!!!!!.

  By at 10/29/2007 2:37 AM  

 • அம்மாவின் வழியில் ஒரு ரூபாய் இல்லை... ஒரு பைசாவினை மட்டுமே ஒவ்வொருவரிடமும் பெற்றுக் கொண்டு 80 கோடி பேருக்கும் வழக்கு தாக்கல் செய்ய நான் ரெடி!

  By at 10/29/2007 11:03 AM  

 • great அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  பிரபல வழக்கறிஞர் பிரபு ராஜதுரை அவர்கள் வழக்கு பதிவு செய்ய தயாராக இருப்பதாக அறிவித்து உள்ளார். அவரை உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்.

  By at 10/29/2007 9:47 PM  

 • பிரபு ராஜதுரை அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  ஹிந்துக்களுக்காக வழக்காட முன் வந்தமைக்கு உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். அம்மாவின் பொற்கால ஆட்சியில் உங்களுக்கு நீதிபதி பதவி கட்டாயம் உண்டு.

  By at 10/29/2007 9:47 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za