அம்மான்னா சும்மாவா?

Tuesday, November 06, 2007

விரைவில் அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் மலரும்

தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் தலையாய திம்மியான கொலைஞரின் போக்கை கண்டித்து அம்மா வெளியிட்டு உள்ள அறிக்கை.

இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் அண்மையில் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசமைப்பு சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட முதல்வர் கருணாநிதி தமிழக அரசின் செய்தித் துறை மூலமாக அதிகாரபூர்வமாக, கவிதை வடிவில் அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரிவித்து இருந்தார்.

இதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து மத்திய அரசு உடனடியாக கருணாநிதி தலைமையிலான திமுக அரசை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன்.

அதற்கு கருணாநிதி தனக்கே உரித்தான பாணியில் எனது உடலில் தமிழ் ரத்தம் ஓடுகிறது. அதனால்தான் இவ்வாறு எழுதினேன் என்கிறார். இவர் உடலில் மட்டும் தான் தமிழ் ரத்தம் ஓடுகிறதா? தான் செய்த தேசவிரோத செயலுக்கு தமிழன் என்று பெயரை இழுப்பதற்கு கருணாநிதிக்கு வெட்கம் இல்லையா?

எனது உடலிலும் தமிழ் ரத்தம்தான் ஓடுகிறது.

ஆனால் கருணாநிதிக்கு ஓடுகிற மாதிரி தேசத் துரோக ரத்தம் எனக்கு ஓடவில்லை. சிலேடையாக பதில் சொல்வதன் மூலம் கருணாநிதி தன்னுடைய தேச விரோதச் செயலை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது. ராஜீவ் காந்தியை கொன்ற விடுதலைப் புலிகளின் இயக்கத்தை வரிந்து கட்டிக்கொண்டு ஆதரிக்கின்ற கருணாநிதியின் இத்தகைய செயலை
மன்னிக்கவே முடியாது.

கருணாநிதி எந்த அர்த்தத்தில் இவ்வாறு சொல்கிறார் என்பது தெரியும். நான் மைசூரில் பிறந்ததை வைத்து இவ்வாறு சொல்கிறார். நான் மைசூரில் பிறந்தாலும் தமிழ் குடும்பத்தில் தான் பிறந்தேன்.

தமிழ் ரத்தம் தான் எனது உடலில் ஓடுகிறது. எனது தாய்மொழி தமிழ்தான். இலங்கையில் பிறந்தவர்களை தமிழர்கள் என ஏற்றுக்கொள்ளும்போது இந்தியாவில் ஒரு பகுதியாக உள்ள மைசூரில் பிறந்தவரையும் தமிழர் என ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் மீது எனக்கும் அதிமுகவுக்கும் எப்போதும் பரிவும் பாசமும் உண்டு. இலங்கைத் தமிழர்கள் அமைதியுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் கருணாநிதியோ, கடந்த 2 ஆண்டு காலமாக இலங்கைத் தமிழர்கள் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்தபோதும் பலர் உயிரிழந்த போதும் வருத்தம் தெரிவிக்கவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மறைவிற்கு மட்டும் தற்போது இரங்கல் தெரிவித்து இருக்கிறார். எனக்கும் கருணாநிதிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் நான் இலங்கைத் தமிழர்களை ஆதரிக்கிறேன். கருணாநிதி விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார்.

ஆட்சி பறிபோய்விடுமோ என்ற பயத்தில் இப்போது தமிழ், தமிழ் உணர்வு என்று திசைதிருப்ப முயல்கிறார். வைகோ இரங்கல் தெரிவித்து இருக்கிறாரே என்கிறார்
கருணாநிதி. வைகோ இந்திய அரசமைப்புச் சட்டப்படி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அரசமைப்புச் சட்டப்படி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல்வர் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இரங்கல் தெரிவித்து புகழ்வது தேசத் துரோக குற்றமாகும்.

இந்த விஷயத்தில் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதால் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அதிமுக அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தால் முடிவு என்னவாக இருக்கும் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். 80 கோடி ஹிந்துக்களும் மகிழும் வகையில் அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

வாழ்க அம்மா. வீழ்க திம்மிக்கள்.

13 Comments:

  • வாழ்க மம்மி ! வீழ்க திம்மி !

    By at 11/06/2007 8:29 PM  

  • கோவியார் முந்திகிட்டார். அடுத்த பதிவுக்கு நான் தான் முதல் போணி....

    பிளாட்டிண தாரகை அம்மாவின் பொற்கால ஆட்சிக்கு ஏங்கும்,

    பல்லு பிச்சை

    By at 11/06/2007 9:01 PM  

  • //பிளாட்டிண தாரகை அம்மாவின் பொற்கால ஆட்சிக்கு ஏங்கும்//

    இலைக்காரரே, இதை பிளாட்டிண தாரகை அம்மாவின் பிளாட்டிணகால ஆட்சிக்கு ஏங்கும், என மாற்றி வாசிக்கவும்.

    By at 11/06/2007 9:06 PM  

  • இலைக்காரரே,
    உங்களுக்கும், உங்கள் நண்பர்கள்
    great,
    m,
    amma boy,
    சாணக்கியன்,
    பல்லு பிச்சை ஆகியோருக்கும்
    தீபாவளி வாழ்த்துக்கள்!

    By at 11/06/2007 11:52 PM  

  • மறத்தமிழச்சியாம் புரட்சிதலைவி வாழ்க. (நிஜ தமிழச்சி இந்த பதிவை படிக்காமல் இருந்தால் சரிதான்...) அம்மா புகழ் பாடும் இலைக்காரர் வாழ்க. உங்கள் பதிவில் மூன்று இலைகள் தெரிகிறதே. மூன்றாவது இலை யார்?

    By at 11/07/2007 1:27 AM  

  • அம்மா அணுக வேண்டிய இடம், உயர்நீதிமன்றம்!

    நேரடியாக உச்ச நீதிமன்றத்தினை அணுக வேண்டுமென்றால், தனது அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டதாக வாதம் வைக்கப்பட வேண்டும்.

    அடிப்படை உரிமை ஏதும் பாதிக்கப்பட்டதாக, தெரியவில்லையே!

    By at 11/07/2007 2:01 AM  

  • கோவி.கண்ணன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    அம்மா தான் ஒரு தமிழச்சி என்று சொல்லி உள்ளார். அதனால் மம்மி வாழ்க என்பதற்கு பதில் அம்மா வாழ்க என்று சொல்லுங்கள்.

    By at 11/07/2007 6:09 AM  

  • பல்லு பிச்சை அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    By at 11/07/2007 6:09 AM  

  • ஜெகதீசன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    பரம்பரை போரில் எதிரிகளை வீழ்த்த தீபாவளி நாளில் சிரங்கூன் சாலையில் உள்ள கோவிலில் வேண்டுங்கள்.

    By at 11/07/2007 6:12 AM  

  • ஜயராமன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    அம்மாவின் அதிகார்வ பூர்வ சின்னமான இரட்டை இலையை பயன்படுத்த வேண்டுகோள் விடுத்து உள்ளேன். அது கிடைத்ததும் மூன்றாவது இலை உதிர்ந்துவிடும்.

    By at 11/07/2007 6:14 AM  

  • பிரபு ராஜதுரை அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    உயர் நீதிமன்றம் இருப்பது சென்னையில். ஆட்சியாளர்களை எதிர்த்து யாராவது தீர்ப்பு சொல்ல முடியுமா?. அதனால்தான் உச்ச நீதிமன்றத்தில் முறையிட போவதாக சொல்லி உள்ளார்.

    எப்படி "நம்பிக்கை" என்று வரும்போது "ஆதாரம்" கேட்க கூடாதோ, "விடுதலை புலிகள்" என்று வரும்போது "அடிப்படை உரிமை" பற்றி பேச கூடாது.

    By at 11/07/2007 6:17 AM  

  • டூ டேய்ஸ்... நோ போஸ்டிங்ஸ்... பல்லு கண்டிச்சிங்ஸ்...

    By at 11/08/2007 8:33 PM  

  • பல்லு பிச்சை அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்று இருந்தேன். பதிவுகள் தொடர்ந்து வரும்.

    By at 11/11/2007 8:42 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za